
ஜெயதேவர் கீத கோவிந்தம்- நங்கநல்லூர் J.K. SIVAN
”எதிரி என்று யாருமே இல்லை”-
ஜெயதேவரின் கீத கோவிந்தம் அஷ்டபதி கீர்த்தனை களை படிக்காதவர்கள், கேட்காதவர்கள், கண்ணோ செவியோ இருந்தும் அதன் பயன் அறியாதவர்கள் என்று சொல்லலாம். உண்மையான கிருஷ்ண பக்தியை
ஜெயதேவரிடமும், ஸூரதாஸிடமும் நிறைய உணர லாம். இருவரிடமும் கிருஷ்ணன் நேரில் பேசுபவன்.
ஜெயதேவரின் கிருஷ்ண கானங்களில் மனம் பறிகொடுத்த ஒரு பணக்கார வியாபாரி அவர் சிஷ்யனானான்.
ஒரு நாள், அந்த வியாபாரி ஜெயதேவரை தனது ஊருக்கு வரவழைத்து தனது இல்லத்தில் ஸ்ரீ கிருஷ்ண லீலைகளை கானம் செய்ய வைத்து எல்லா மக்களும் கேட்டு இன்புறச்செய்யுமாறு வேண்ட, ஜெயதேவரும், சிஷ்யனின் வேண்டுகோளை ஏற்று அற்புதமாக ஸ்ரீ கிருஷ்ண கான நிகழ்ச்சி நடந்தது. பக்தி இல்லாதவர்கள் கூட கீத கோவிந்த கானத்தின் மூலம் கிருஷ்ணனை லயிக்கும்படி செய்தார்.
இப்படித்தான் நானும் சமீபத்தில் ஒரு ராதா கல்யாணத் தில் ஜெயதேவரின் கீத கோவிந்த அஷ்டபதிகளில் என்னை இழந்தேன்.
ஒருநாள் ஜெயதேவர் அந்த வியாபாரியான சிஷ்ய னிடம், ”அப்பனே, நான் என் ஆஸ்ரமம் செல்கிறேன் என்று தனது ஊருக்குத் திரும்ப வணிகனிடம் விடைபெற்றார். குரு சேவையில் திளைத்த வியாபாரி பிரியா விடை கொடுக்க வெறுமே கையை மட்டும் கூப்பவில்லை. கை நிறைய பொன்னும் பொருளும், அவருக்கு தெரியாமல் ஓர் வண்டியில் ஏற்றி குரு ஜெயதேவரை அவ் வண்டியில் அமர்த்தி இரு காவலாளி களை அவரது ஊர் வரைக்கும் துணைக்குப் போகும்படி கட்டளையிட்டான். அவர்களிடம் நீங்கள் ”இப் பொருள் களை குரு ஜெயதேவர் பத்னி பத்மாவதி யிடம் பணிவுடன் ஒப்படைக்கவேண்டும் ” என்று சொன் னான். அக்காவலா ளிகள் இருவரும், அவ்வண்டியுடன் சிறிது தூரம் சென்ற பின் வேறு ஒருவனை குருவிற்கு காவல் செல்லுமாறு கூறி விட்டு, அவ்விருவரும் தம் வீடு திரும்பினர்.
சிறிது நீரம் கழித்து, அந்த வேலையாளும் ஜெயதேவரி டம் ”ஐயா எனக்கு அவசரமாக வீட்டுக்குச் செல்ல வேண்டும்” என்று அனுமதி பெற்று வீடு திரும்பினான். இதனால், ஜெயதேவர் தானே வண்டியை ஒட்டிக் கொண்டு தனது ஊருக்குச் சென்றார். அது ஒரு இருண்ட காட்டுப் பாதை. கள்வர் பயம் அதிகம். வியாபாரி ஜெய தேவரிடம் நிறைய பொன்னும் பொருளும் பரிசாக கொடுத்ததை எப்படியோ கேள்விப்பட்ட இரு திருடர்கள், தக்க சமயம் பார்த்து தனியாக வண்டியில் சென்ற ஜெயதேவரை வழி மறிக்க, அவர் அவர்களின் விருப்பம் அறிந்து வண்டியை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு வீடு நோக்கி வெறும் கையோடு நடந்தார்.
சந்தேகத்துடன் ஜெயதேவரைப் பார்த்த திருடர்களுக்கு திடீர் என ஒரு யோசனை தோன்றியது. இவரை வெளி யே விட்டால் தங்களை அடையாளம் காட்டி அரசனி டம் தண்டனை வாங்கி கொடுப்பார் என்று பயந்து , ஜெயதேவரைக் கொல்ல நினைத்தனர். அவர்களில் ஒருவனுக்கு பாவம் சாது பிராமணனாக இருக்கி றாரே இவரைக் கொல்ல வேண்டாம் என்று இரக்கம் கொண்டான். ஆகவே ஜெயதேவருடைய கை கால்களை வெட்டி, அவரை ஒரு பாழும் கிணற்றில் தள்ளிவிட்டு பொன்னும் பொருளுமெடுத்துக் கொண்டு ஓடிவிட்டார் கள்.
பூரி ஜகநாத க்ஷேத்ரத்தை ஒட்டிய சில பகுதிகள் கிரவுஞ்ச மன்னனின் ராஜ்ஜியத்தை சேர்ந்தவை. ஜெயதேவர் விழுந்திருந்த காட்டுப் பகுதி அவன் ராஜ்யத்தை சேர்ந்தது.
அந்த ராஜா அதிர்ஷ்டவசமாக என்று ஜெயதேவர் கிணற்றில் தள்ளப்பட்டாரோ அன்றைக்கு வீரர்களோடு வேட்டையாட காட்டுக்குச் சென்றான். திடீரென்று அவனுக்கு தாகம். எங்காவது நீர் கிடைக்குமா என்று தேடும்போது காட்டின் நடுவே ஒரு கிணறு தென்பட்டது. அதில் இருந்து ஏதோ கிருஷ்ணன் மேல் பாடல்கள் யாரோ பாடுவதைக் கேட்டதால் அதிசயித்து கிணற்றுக் குள் எட்டிப்பார்த்தான். ஒளிமிகுந்த தேஜஸோடு ஒரு யோகி கிணற்றில் விழுந்து கிடப்பதைக் கண்டான். ராஜா கிருஷ்ண பக்தன். யாரோ யோகி தபஸ்வி கிணற்றில் தவறி விழுந்து விட்டார் என்று பதறினான். அவனது ஆட்கள் உள்ளே இறங்கி அந்த யோகியை வெளியே கொண்டு வந்தார்கள்.
‘அடாடா இது என்ன கோரம்? அந்த யோகியின் கைகள், கால்கள் வெட்டப்பட்டு அல்லவோ இருந்தன. நான் இந்த நாட்டை நல்ல முறையில் ஆண்டு வருகிறேன். என் ஆட்சி யில் இப்படி ஒரு அக்ரமம் நடந்தால் அதற்கு நானல்லவோ பொறுப்பு.? இந்த யோகிக்கு யார் தீங்கி ழைத்தது? என்று ராஜா விசனப்பட்டான். கண்களில் நீர் பெருகியது. கிணற்றில் கிடந்தவர் ஜெயதேவர்.
வெளியே எடுத்தபோதும் அவர் சமாதி நிலையில் தான் இருந்தார். அவர் வாய் கீத கோவிந்தத்தைப் பாடிக் கொண்டிருந்தது. அப்போது கழித்து கண் விழித்த ஜெயதேவர் செவிகளில் ராஜாவின் சொற்கள் விழவே, அவர் ராஜாவைப் பார்த்து ”அரசே, கோபம் வேண்டாம், யாரையும் குறை சொல்லி பயன் இல்லை. என் ஊழ் வினையும் இறைவன் திருவுள்ளமும் அப்படி இருக்க யார் தான் என்ன செய்ய முடியும்? தவிரவும் இறைவன் பேரருளின் முன்பு இந்த உடலுக்கு ஏற்பட்ட இந்த சிறு துன்பம் அற்பமானது. கவலைப் படாதே, கோபப்படாதே, கண்ணீர் விடாதே” இது என் கர்மா. அதை நான் அனுப வித்தே ஆகவேண்டும்”என்றார்.
கோபத்தில் கொந்தளித்து கொண்டு இருந்த ராஜாவைத்
தேற்றினார் ஜெயதேவர்.
ராஜாவுக்கு ஆச்சர்யம். யார் இவர் இவ்வளவு உத்தம ஞானி? கைகால்கள் வெட்டப்பட்ட நிலையிலும் இவ்வள வு சாந்தமா? பெரியார்கள் அனைவரும் இப்படித் தான் வாழ்கின்றனர் என்று அவரைப் பணிந்து நின்றான். பின்னர் மெல்ல பல்லக்கிலே ஏற்றி ஜெயதேவரை தனது அரண்மனைக்கு அழைத்துச் சென்று தன் குருவாக ஏற்றுகொண்டான். அரசவை மருத்துவர்கள் ஜெயதேவர் காயங்களுக்கு சிகிச்சை அளித்தனர். மன்னனும் இவருக்கு பணிவிடை செய்வதே தன் வாழ்வில் முக்தி என கருதி அவருக்கு பணிவிடை செய்து கொண்டு இருந்தான்.
”மன்னா, நீ உன் கடமையில் கவனம் செலுத்து. உன் பிரஜைகளின் நலன் தான் உன் நலன். முதலில் நீ கடமை யைச் செய். ஆத்ம விசாரணை அப்பறம் நேரம் இருந்த போது செய். ஜெயதேவர் ராஜாவுக்கு ராஜரீக முறை களை, வழிகளை போதித்தார் ஜெயதேவர். அர்ஜுனன் கண்ணனின் உபதேசத்தால் கட்டுப்பட் டதைப் போல கிரவுஞ்ச ராஜாவும் ஜெயதேவர் சொல்லுக்கு பணிந் தான். சாதுக்கள், சந்யாசிகள் எல்லோருக்கும் பொன் னும் பொருளும் தானம் செய்தான்.
க்ரௌஞ்ச மன்னன், சன்யாசிகளுக்கு பொன்னும், பொருளும் தருவதை அறிந்த ஜெயதேவரை வெட்டிய ரெண்டு திருடர்கள் தாங்களும் சன்யாசி போல் வேஷம் தரித்து அரண்மனைக்குச் சென்றனர். ஆனால், அங்கு ஜெயதேவரைக் கண்டதும் திடுக்கிட்டனர். அவர்கள் மனதில் ஜெயதேவர் எங்கே தங்களை அடையாளம் கண்டு கொள்வாரோ என்ற பயம் உண்டாயிற்று.
ஜெயதேவர் அவர்களை அடையாளம் தெரிந்து கொண் டாலும் தன் சிம்மாசனத்திலிருந்து ஊர்ந்து வந்து அவர்களுக்கு வேண்டிய உபசாரங்கள் செய்து, நன்கு கவனித்து, வேண்டிய பொருட்களை ராஜாவிடமிருந்து பெற்று செல்லுமாறு செய்தார். இரு காவலாளிகளை துணையாக அவர்களோடு ராஜா அனுப்பி வைத்தான்.
பாதிவழியில் ராஜாவின் காவலாளிகளுக்கு அந்த திருடர்கள் மீது சந்தேகம் எழ, அந்த போலி சன்யாசி களை நோக்கி, “ஏன் ஜெயதேவர் தங்களிடம் இவ்வளவு கருணை என்று காரணம் கேட்க அந்த போலி சன்யா சிகள், “ஜெயதேவரும் நாங்களும் ஓர் அரசரிடம் பணி புரிந்தபோது நல்லெண்ணம் இல்லாத அந்த அரசன், ஏதோ ஒரு காரணம் சொல்லி, ஜெயதேவரைக் காட்டிற் கு கூடிச்சென்று கொன்று விடுமாறு கட்டளை இட்டான். ஆனால், நாங்கள் அவரைக் கொல்ல மனமில்லாது கை கால்களை வெட்டி உயிர்ப்பிச்சை அளித்தோம். அதனால் எங்கள் மேல் ஜெயதேவருக்கு நன்றி விஸ் வாசம் , என்று பொய் சொன்னபோது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. திடீரென்று பூமி பிளந்து அந்த ரெண்டு திருடர்களும் அக் குழியில் விழுந்து மண் மூடிக் கொண்டு மடிந்தனர்.
திகைத்த காவலர்கள் அதிர்ச்சியுடன், அரசரிடமும், ஜெயதேவரிடமும் இச்செய்தியை சொல்ல, ஜெயதேவர் கண்ணீர் விட்டு ஸ்ரீஹரியை பலவாறு துதித்து தம்மை விரோதித்தவர்களை மன்னித்து, ஸ்ரீஹரி திருவடியில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுமாறு பிராத்தித்தார்.
துஷ்டர்களையும், சத்ருக்களையும் ஸ்ரீஹரியின் பக்தர் களாகவே பார்க்கும் குணமுடைய ஜெயதேவரின் வேண்டுகோளை ஏற்று, ஸ்ரீஹரி அவருக்கு தரிசனம்தர, மன்னனும் அக்காட்சியைக் கண்டு, மனம் மகிழ்ந்து இறைவனை வணங்கினான். அந்தக் கணமே ஜெய தேவர் தாம் இழந்த கைகளும் கால்களும் கிருஷ்ணன் அருளால் திரும்ப வரப் பெற்றார்.
கிரவுஞ்ச ராஜா, அவன் ராணி, மற்றும் அனைவரும் அவரது பக்தியையும், ஸ்ரீ கிருஷ்ணனின் அருளையும் உணர்ந்து பக்தி பரவசமானார்கள்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



