
இந்த வருஷ தீபாவளி – நங்கநல்லூர் J K SIVAN
தீபாவளி இந்துக்கள் நமக்கு ரொம்ப முக்கிய பண்டிகை. பஞ்சாங்கம் சொல்கிறபடி இந்த வருஷம் தீபாவளி நவம்பர் 1, 2024 அன்று கொண்டாட வேண்டுமாம். அமாவாசை திதி அக்டோபர் 31, 2024 அன்று மாலை 3:52 மணிக்கு தொடங்கி, நவம்பவர் 1, 2024 அன்று மாலை 6:16 மணிக்கு முடிவடைகிறது. பிரதோஷ கால பூஜை நேரம் தீபாவளி மாலை 5:36 முதல் இரவு 8:11 மணி வரை இருக்கும்.
தீபாவளியின் முக்யத்வம் : கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்தபோது அவன் வேண்டிக் கொண்டபடி அவன் வதம் செய்யப்பட நாளான ஐப்பசி சதுர்தசி அன்று நரகாசுர சதுர்தசியாக கொண்டாடப் படுகிறது. அதாவது அமாவாசை தினத்திற்கு முன் வரக்கூடிய திதி சதுர்த்தசி. இதன் காரணமாக வட இந்தியாவில் இந்த சதுர்தசி திதி வரக்கூடிய நாளில் தீபாவளி கடைப்பிடிக்கப் படுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் இந்தியாவில் சதுர்தசி திதியும், அமாவாசை தினமும் சேர்ந்து வரக்கூடிய நாளில் தீபாவளி.
இந்த நாளில் தான் மஹா விஷ்ணு வாமனனாக அவதரித்து மஹாபலி யை பாதாள லோகத்துக்கு அனுப் பியது என்பார்கள்.தீபாவளி அன்று தான் ராமர் ராவணனை வென்று சீதையை மீட்டு லக்ஷ்மண னோடு 14 வருஷங்கள் வன வாசம் முடிந்து திரும்பிய நாள் என்று அயோத்தி மக்கள் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் ஏராளமான தீபங்களை ஏற்றி வரவேற்ற நாள் என்பார்கள். ராவணன் பொம்மையை எரிப்பார்கள்.
எல்லோரா கைலாச நாதர் கோயில் குகைச் சிற்பங் களில் ஒரு ஆச்சர்யமான சிலை. அதில் தத்ரூபமாக சிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடும் காட்சி. அவர்கள் ஆடிய நாள் தீபாவளியாக கொண்டாடுகி றார்கள். தீபாவளி அன்று சில குடும்பங்களில் சீட்டாட்டம் நடைபெறும். தீபாவளி அன்று சூதாட்டம் விளையாடினால் சுபிக்ஷமாக இருப்பார்களாம். நமது பங்கு சந்தை கூடை தீபாவளி அன்று சிறிது நேரம் இயங்கும். வாங்குவது விற்பது அமோகமாக நடக்கும். தீபாவளியை கணக்கு எழுதும் புது வருஷமாக கொண்டாடுபவர்கள் இன்னும் வடக்கே வாழ்கிறார்கள்.
எனக்கு தீபாவளி தீப ஆவளி பிடிக்கும் . தீபங்களை வரிசையாக ஏற்றி ஜெகஜோதியாக இருப்பது ஆத்மாவுக்கு பிடித்த காட்சி. கார்த்திகை தீபம் , கேரள கோவில்களில் லக்ஷ தீபம் எல்லாம் கண்ணுக்கு எவ்வளவு ரம்யமாக இருக்கிறது
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

