
ஆண்டாளம்மாவின் கிளி – நங்கநல்லூர் J K SIVAN
பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் ஆண்டாள். ரங்கனையே விரும்பி அவனையே வென்றடைந் தவள். ஸ்ரீரங்கம் ஆண்டாளின் புகுந்த வீடாகும். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளின் பிறந்தகம். தாய் வீடு.
வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் 196அடி உயரம். கருங்கல் கோவில். தமிழக அரசு சின்னம்.மணி மண்டபத்தின் தூணில் ஆண்டாள் தனது முகம் பார்த்த வெண்கலத்தட்டு (கண்ணாடி) பார்க்கலாம். ”தட்டொளி” இது தான். இன்னொரு முக்கிய விஷயம் அர்த்த மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பெற்ற மஞ்சத்தில் இடக்கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் ரங்கநாதர் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியிருப்பது .
தினமும் விடியற்காலையில் ஆண்டாள் முன்னால் சந்நிதியில் காராம்பசு ஒன்று வந்து நிற்கும். அவள் பார்வை காராம்பசுவின் பின்புறம் விழும். கோ தர்ஸனத்தோடு தான் கண்விழிப்பாள். தினகமும் அப்பா தொடுத்து கட்டிய புது பூமாலையை கழுத்தில் அணிந்து, கிணற்று நீரில் அழகு பார்ப்பாள் . இன்றும் அந்த ‘கண்ணாடிக் கிணறு’ இருக்கிறது.
இது தெரிந்த விஷயம். கொஞ்சம் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறதே.
ஆண்டாளின் இடது தோளில் ஒரு கிளி இருக்குமே அதைப் பற்றி தெரியுமா? நான் ஏன் இப்படி கேட்டேன்?
மனித மனது எப்போதும் புதிது புதிதாக ஏதாவது தெரிந்து கொள்ள ரொம்ப ஆசைப்படுகிறது. அது குழந்தைப் பருவத்திலிருந்தே நமக்கு ஏதாவது புதிதாக அறிவதில் ஆர்வம் வளர்கிறது. மனதின் கொள்ளளவு பல உலகங்களை உள்ளே அடக்கிக் கொள்ளும் அளவு பெரியது. நாம் அதை வேண்டாத விஷயங்களை போட்டு திணிக்கிறோம். தடுமாறுகிறோம்.
ஆண்டாளின் கிளி ஒரு சின்ன விஷயம் தான். எத்தனை பேருக்கு அதைப் பற்றி தெரியும்? நிறைய பேருக்கு தெரிந்து எனக்கு மட்டும் இன்று தான் தெரிந்ததென்றால் நான் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியதற்குபல ஜென்மம் எனக்கு தேவைப்படும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் தோளில் உள்ள கிளி , கல் சிலை அல்ல. உலோகம் அல்ல, பிளாஸ்டிக் பொம்மை இல்லை, பஞ்சு உருவம் இல்லை. தினமும் ஒரு புது கிளி. உயிரோடு அல்ல. இலை ,நார் ,மூங்கில் மட்டுமே உபயோகித்து செய்வது.
ஆண்டாள் சுகப்பிரம்ம ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பி, அது சென்று வந்ததும் ”உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டாள் .
சுகப்பிரம்ம ரிஷியின் பதில்: ” நான் இதே கிளி ரூபத்தில் உன் கையில் தினமும் இருக்கணும் ‘.
ஸ்ரீ வில்லிப்புத்தூரில் இந்த ஆண்டாள் கிளியை ராமர் என்ற பூக்கட்டும் குடும்பத்தில் ஒருவரின் தலைமுறை பல வருஷங்களாக தினமும் பண்ணி கொடுக்கிறார்களாம். எவ்வளவு பெரிய கைங்கர்யம் இது. ஏன் ஒருவரும் இதை பெரிசாக எடுத்து சொல்லவில்லை.
இப்போது தினமும் செய்து கொடுப்பது ராமருடைய ஐந்தாவது தலைமுறையாம் ? இனி அந்த கிளி எப்படி செய்கிறார்கள் தெரியுமா ?
முதலில் வாழையிலை சருகுகளை வைத்து கிளி உருவம் வர்ற மாதிரி நாரால் சுத்தி கட்டி, மரவள்ளிக் கிழங்கு செடியின் இலைகளை , சருகை சுற்றி கட்டி, கிளி உடல் நிறத்துக்கு பொருத்தமா தத்ரூபமாக பண்ணுவார்கள்.கிளியின் மூக்கு பண்ண மாதுளம்பூவைப் பிரிச்சு மூக்கு மாதிரி செக்கசெவேல்ன்னு வைப்பார்கள். கிளி கண்ணுக்கு ஜிகினா, ‘ காக்காப்பொன் ‘ (மைக்கா ) வைப்பார் .அதை எங்கேயும் கடையில் வாங்குவது இல்லை. கிணறு வெட்டும் இடத்தில் பூமியை தோண்டும் போது கிடைக்கும். தேடி எடுத்து வைத்துக் கொள்வார்கள்.
கிளிக்கு ரெக்கை தானே அழகு. அதை எப்படி செய்வது? இருக்கவே இருக்கிறது நந்தியாவட்டை இலை. அதையும் செவ்வரளி இலையும் வைத்து சேர்த்து காட்டுவார்கள். அப்போ கிளியின் வாலுக்கு என்ன வழி?அதே இலை பனை ஒலையை கொஞ்சம் சேர்த்து. நம்மால் பண்ண முடியுமா? இப்படிப் பண்ண தான் தோணுமா? அதுவும் தலை முறை தலைமுறையா, தினமும்!.
நான் இன்னும் கிளி கதை பூரா சொல்லி முடிக்கவில்லை . கிளியின் கால் எப்படி செயவது? 2 மூங்கில் குச்சிகளை பென்சில் மாதிரி கூர்மையாக சீவி கட்டுவார் . அதை குத்தி வைக்க நந்தியாவட்டைப் பூசெவ்வரளிப்பூ ரெண்டையும் வச்சு செண்டு தயார் பண்ணி ,அதுலே மூங்கில் கால்களோடு இருக்கும் கிளியை குத்தி நிற்க வைப்பார்கள். இதுக்கெல்லாம் எவ்வளவு நேரம் ஆகும் என்று ஒரு ஐடியா இருக்கா?.
காலம்பர எட்டு மணிக்கு ஆரம்பித்தா ,மத்தியானம் 3 மணி ஆயிடும் ஒரு கிளி செய்து முடிக்க.
சாயந்திரம் ஆண்டாள் பூஜைக்கு ரெடியாக. என்ன ஒரு பக்தி, என்ன ஈடுபாடு, இதுவும் ஒரு யாக யஞம் மாதிரி தான். குளித்து விட்டு புத்தகத்தை ஒரு மணி பாராயணம் பண்ணுகிறேன் என்று மனதை எதிலோ செலுத்திக் கொண்டு வாய் மட்டும் மொணமொண வென்று படிப்பதை விட இதில் ஸ்ரத்தை ரொம்ப அவசியம். கொஞ்சம் தவறினாலும் கிளி தேறாது. ஆண்டாள் கிளி இல்லாமல் நிக்க வேண்டி வரும். ஆண்டாளை ஏமாற்றாமல் எத்தனை தலைமுறையாக இந்த கைங்கர்யம் தினமும் சத்தம் போடாமல் நடந்து வருகிறதே. இது அந்த வில்லிப்புத்தூர் காரர்களுக்கு தினமும் கோவிலுக்கு போகிறவர்களுக்கு தெரியுமாமே , ஏன் இதை பற்றி ஒருவரும் எடுத்து சொல்லவில்லை. ஆண்டாளை விட அழகில் எத்தனை ஆயிரம் மடங்கு குறைந்த நடிகைகளை பற்றிய சகல சமாச்சாரமும் நிறைய நம்மை வெள்ளத்தில் ஆழ்த்துகிறதே. அதுவும் ஆண்டாள் ரஹஸ்யம் தான். அவளுக்கு பப்ளீசிடி பிடிக்காதே. ஊர் உலகம் அறிஞ்ச குட்டி ஆண்டாளுக்கு விளம்பரம் எதற்கு? எல்லோர் மனசிலே எத்தனை நூற்றாண்டுகள் குடி கொண்டிருக்கிறாளே!
கிளி செய்ய இலை, நார், பூ, மூங்கில் குச்சி தேவை. வாழை இலைச் சருகுகளை வைத்துக் கிளி உருவம் வருவதுபோல், நார் கொண்டு சுற்றுவது முதல் வேலை. அப்போது கிளி உருவம் தோன்றுகிறது. அப்புறம் மரவள்ளி செடியின் இலை, சருகைக் கட்டுவார்கள். இப்போது கிளியின் தோற்றம் முழுமைபெறும். அப்படியே மூக்கு வைக்கப்படும்.
கிணறு வெட்டும் இடங்களில் கிடைக்கும் காக்காபொன் கற்சில்லுகளை வைத்துக் கிளியின் கண் தயாராகும். பனை ஓலை, நந்தியாவட்டை இலை, செவ்வரளி இலை வைத்து இறக்கை கட்டப்படும். அவற்றையே பயன்படுத்தி வால் தயாராகும். கால்களுக்கு மூங்கில் குச்சிகள்; கிளியை நிற்க வைக்க பூச்செண்டு. நந்தியாவட்டை பூ, செவ்வரளி பூக்களைக் கொண்டு ஒரு பூச்செண்டு. இப்போது கிளி தயார்.
சாயரட்சை பூஜையின் போது இந்தக் கிளி சென்று ஆண்டாள் தோளில் அமரும். அர்த்தஜாமப் பூஜை வரை அங்கு அமர்ந்துவிட்டு, பூமாலை முதலியவை களையப்படும்போது அகற்றப்பட்டு, மறுநாள் கோயிலுக்கு வரும் ஒருவருக்கு கொடுக்கப்படும்.
என்று யார் கையில் சென்று அமருமோ… அந்தக் கிளிப்பிள்ளை….? அவர் நிச்சயம் பாக்கியசாலி தான் இல்லையா?
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

