
கோவிந்தாஷ்டகம் நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்
ஸ்லோகம் 5 & 6
5. गॊपीमण्डलगॊष्ठीभॆदं भॆदावस्थमभॆदाभम् ।शश्वद्गॊखुरनिर्धूतॊद्गत धूलीधूसरसौभाग्यम् ।
श्रद्धाभक्तिगृहीतानन्दमचिन्त्यं चिन्तितसद्भावम् । चिन्तामणिमहिमानं प्रणमत गॊविन्दं परमानन्दम् ॥ 5 ॥
Gopi mandala goshtee bedham, bhedavastha bhedhabham, Saswath gokhura nirdhathothkrutha dhooli sara soubhagyam,
Sradha bhakthi grahithananda chinthyam chinthida sadhbhavam, Chinthamani mahimanam, pranamatha govindam paramanandham.
கோபீமண்ட ல கோஷ்டீ பேதம் பேதாவஸ்தம பேதாபம் | ஶஶ்வத் கோகுர நிர்தூதோத்கத தூளீதூஸரஸௌபாக்யம் |
ஶ்ரத்தாபக்திக்றுஹீதானம்தமசிந்த்யம் சிந்திதஸத்பாவம் | சிந்தாமணிமஹிமானம் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம்
கிருஷ்ணா, உன்னை கோவிந்தன் என்று அழைக்கும்போது அதன் உள்ளர்த்தம் தெரிந்தால் அதில் கிடைக்கும் இன்பமே தனியானது. கோ என்றால் பசு. இது எல்லோருக்கும் தெரிந்ததே. இதற்கு இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. கோ என்றால் புலன்கள். இன்னொரு அர்த்தம் மண், அதாவது பூமி. ”விந்தன்” என்றால் மகிழ் விப்பவன். கோவிந்தன் என்றால் பசுக்களை மகிழ்விப்பவன், பசுக்களை ரக்ஷிப்பவன், அப்பசுக்களை பராமரிக்கும் கோபர்களின் இன்பம் அவன். இந்த புலன்களை அடக்கியாண்டு இன்பம் துய்க்கச் செய்பவன், இந்த மண்ணுக்கு, பூமிக்கே மகிழ்ச்சி அளிப்பவன். மண்ணில் பிறந்து மண்ணிலே மறையும் நாம் மனிதர்கள் என்றறிந்து நம் மீது கருணை கொண்டு நமக்கு மகிழ்வூட்டுபவன் என்றும் அர்த்தம் சொல்லலாம். இந்த பூமியையே ஆமையாக இன்னமும் கூட தனது முதுகில் சுமந்து காப்பவன் என்றும் சொல்வதுண்டு.
இந்த கோவிந்தனைப் பாடி, அவன் புகழ் பரப்பி கைகூப்பி வணங்குவதும் நா மணக்க கோவிந்தா என்றும் மனமினிக்க கோபாலா என்றும் சொல்வது நம் கடமையல்லவா? புகழ்ந்து பேசாவிட்டால் பரவாயில்லை. ஏசியாவது அவனை நினை என்கிறார் ஒரு ஆழ்வார்.
”ஏசியேயாயினும் ஈன் துழாய் மாயனையே பேசியே போக்காய் பிழை” கோவிந்தனது பெருமைகளை பேசாவிட்டாலும் அவன் செய்கைகளை இகழ்ந்தாலுமாவது பேசி அவன் அருள் பெறலாமே. இதை நிந்தாஸ்துதி என்று சொல்வார்கள். ”தந்தை தாய் இருந்தால்” என்கிற ஒரு அருமையான பாடலில் ”வில்லால் ஒருவன் அடிக்க, கல்லால் ஒருவன் அடிக்க, காலில் செருப்பால் ஒருவன் உதைக்க, பித்தா என்று ஒருவன் இகழ, பிரம்பால் ஒருவன் அடிக்க ” என்றெல்லாம் பரமசிவனின் பெருமையை திருவிளையாடல்களை இகழ்வது போல் புகழ்வதாக ரொம்ப அருமையாக எழுதியது. தமிழில் வஞ்சப் புகழ்ச்சி என்பது.
கண்ணன் சிறுவனாக இருந்தபோது அவனது நேரங்கள் கன்றுக்குட்டிகளோடு செலவழிந்தது. கொஞ்சம் பெரியவனாக கருதப்பட்டு ஆநிரைகளை அவன் தனியாகவே காலையில் அழைத்துச் சென்று மாலையில் மேய்த்தபின் வீடு கொண்டு சேர்க்கின்ற பொறுப்பு கிடைத்தது. அவனோடொத்த மற்ற கோபர்களும் இவ்வாறு தத்தம் தனிப்பொறுப் பேற்றதை ஒருமுறை எழுத வாய்ப்பு கிடைத்தது. அது சுருக்கமாக :
”நமக்கு கோகுலாஷ்டமி நன்றாக தெரியும், உப்பு வெல்ல சீடையை விட. ஆனால் கோபாஷ்டமி தெரியுமோ? கார்த்திகை சுக்ல பக்ஷம் அஷ்டமி அன்று இது எல்லா கிருஷ்ணன் கோயில்களிலும் கொண்டாடப்படும். என்ன விசேஷம் இந்த நாளுக்கு என்றால் அன்று தான் கிருஷ்ணனும் பலராமனும் அங்கீகரிக்கப்பட்ட கோபர்களாக பிருந்தாவனத்தில் நிர்ணயம் செய்யப்பட்டார்கள். அதுவரை அவர்கள் கன்றுக்குட்டிகளுக்கு தான் இன்சார்ஜ்!! கிருஷ்ணனும் பலராமனும் இனி குழந்தைகள் அல்ல. பசுக்களை தூரமான இடங்களுக்கு தனி பொறுப்பில் காட்டிலும் மேட்டிலும் கல்லிலும் முள்ளிலும் வெறும் காலில் நடந்து இட்டுச் சென்று மேய்ச்சல் காட்டி திருப்பி அழைத்து வரும் முக்ய வேலை, பசுக்களோடு திரிந்து அவற்றின் ஆகாரங்களுக்கும் பருக நீருக்கும் வழி செய்து அவற்றிற்கு தீங்கேதும் வராது பாதுகாத்து பத்திரமாக திரும்பக் கொண்டு வரும் இவர்கள் இனி குழந்தைகளா? நம்ம ஊரில் மாட்டுப் பொங்கல் போல கோபாஷ்டமி அன்று பசுக்களுக்கு கொம்புக்கு பெயிண்ட், நெற்றி உடம்பில் எல்லாம் மஞ்சள் குங்குமம், மாலைகள், பூக்கள், வஸ்த்ரங்கள். அன்று பசுக்களை சுற்றி நமஸ்காரம் பண்ணினால் ரொம்ப விசேஷம். கோ பூஜைகள் நிறைய கோயில்களில் நடைபெறும்.
ஒருநாள் இவ்வாறு நிறைய கோபர்கள் (கிருஷ்ணன் பலராமனையும் போல் கிட்ட தட்ட பத்து பனிரண்டு வயதான பையன்கள்) இன்று நாம் தாளவனம் போகலாமா. ஆனால் அங்கு ஒரு பெரிய ராக்ஷசன் இருக்கிறான் நம் அனைவரையும் அங்கு சென்றால் கொன்று விடுவானே என்ன செய்ய? என்று பலராமனிடமும் கிருஷ்ணனிடமும் சொன்னார்கள். “ இருந்துவிட்டு போகட்டுமே. நாம் தாளவனம் செல்வோம், வாருங்கள்” என்று கிருஷ்ணன் பலராமனுடன் சென்றான்.
தேனுகாசுரன் என்கிற அசுரன் கழுதை வடிவம் கொண்டவன். பின் கால்களால் உதைத்து அனைவரையும் கொன்று விடுவான். அவனைப் பார்த்து விட்டார்கள் கிருஷ்ணனும் பலராமனும்.அவர்களை அவனும் பார்த்து விட்டு மிக்க கோபத்துடன் கர்ண கடூரமாக கத்திக்கொண்டு ஓடி வந்தான். மற்ற சிறுவர்கள் ஓடிவிட்டார்கள். பலராமன் முதலில் நின்றவன் அசையவில்லை. சரியான உதை வாங்கினான் தேனுகாசுரனிடம். ஆனால் நகரவில்லை. தேனுகாசுரன் மீண்டும் ஓடிவந்து பின் கால்களை தூக்கி உதைக்க வரும்போது அந்த கால்களை பிடித்துகொண்டு இருகையாலும் தூக்கி வேகமாக சுற்றிச் சுற்றி வீசி தூர ஒரு பெரிய மரத்தின் மேல் எறிந்தான். மயங்கி உடல் நொறுங்கி தேனுகாசுரன் மாண்டான். இதற்கிடையில் அந்த அசுரனின் மற்ற அசுர நண்பர்கள் தேனுகாசுரனுக்காக கிருஷ்ணனையும் பலராமனையும் கொல்ல வந்து விட்டார்கள். பலராமன் தேனுகாசுரனை வதம் செய்த நேரத்தில் கிருஷ்ணன் தேனுகாசுரனின் நண்பர்கள் அனைவரையும் அவனோடு சேர்ந்து எமனுலகம் செல்ல வழி செய்துவிட்டான். எல்லா கோபர்களும் அன்றிரவு பிருந்தாவனம் திரும்பி ஊர் மக்களுக்கு இந்த அதிசயத்தினை சொல்ல நாளுக்கு நாளுக்கு நாள் கிருஷ்ணன் பலராமன் புகழ் வளர்பிறை போல் பெருகியது.”
பசுக்களையும் கன்றுக்குட்டிகளையும் சமாளிக்கும்போது கோவிந்தன் மேல் பசுக்கள் வாரி இறைக்கும் மண்ணும், புழுதியும், அபிஷேகமாகியது.
பரமானந்தத்தை அருளும் பரந்தாமா, கோவிந்தா உன்னை வணங்குகிறோம்.
6, स्नानव्याकुलयॊषिद्वस्त्रमुपादायागमुपारूढम् ।व्यादित्सन्तीरथ दिग्वस्त्रा दातुमुपाकर्षन्तं ताः
निर्धूतद्वयशॊकविमॊहं बुद्धं बुद्धॆरन्तस्थम् । सत्तामात्रशरीरं प्रणमत गॊविन्दं परमानन्दम् ॥ 6 ॥
Snanavya kula yoshid vasthra mupadhayaga muparoodam, Vyadhitsantheeradha digvasthradh upadathu mupakarshantham,
Nirdhootha dhwaya soka vimoham budham budheranthastham, Saththa mathra sareeram , pranamatha govindam paramanandham.
ஸ்னானவ்யாகுலயோஷித்வஸ்த்ரமுபாதாயாகமுபாரூடம் | வ்யாதித்ஸம்தீரத திக்வஸ்த்ரா தாதுமுபாகர்ஷம்தம் தாஃ
னிர்தூதத்வயஶோகவிமோஹம் புதம் புததேரம்தஸ்தம் | ஸத்தாமாத்ரஶரீரம் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம் || 6 ||
சமீப காலத்தில் ஸ்ரீ பக்தி வேதாந்த ஸ்வாமிகளை விட அதிகமாக கிருஷ்ண பக்தி கொண்டவரை நாம் காணவில்லை. அவர் கிருஷ்ண சிந்தனையே மூச்சாக கொண்டு வாழ்ந்த ஒரு மகான். யமுனையில் குளித்துக் கொண்டிருந்த மணமாகாத கோபியர் கன்னிகைகளின் ஆடைகளை ஏன் கண்ணன் எடுத்து மரத்தின் மீது ஒளித்து வைத்து விட்டு அவர்கள் நிர்வாணமாக வெளிவந்து அவனை வணங்கி வேண்டியபின் அளித்தான் என்பதை விளக்குகிறார்.
வேத காலத்திய முறைப்படி 10 முதல் 14 வரையிலான கன்னியர், சிவனையோ துர்கையையோ வேண்டி நல்ல கணவன் வாய்க்க விரதம் இருப்பது வழக்கம். பிருந்தாவனத்திலிருந்த கன்னியரோ கிருஷ்ணனையே கணவனாக வரித்தனர். ஹேமந்த ருதுவில் அவர்கள் துர்கையையும் வழிபட்டனர். இப்போதைய அக்டோபர்-நவம்பர் மாதம் தான் அக்காலத்தில் அக்ரஹாயணம் எனப்படும் குறிப்பிட்ட விரதம் அனுஷ்டிக்கும் காலம். விரத காலத்தில் ஹவிஸ்யன்னம் என்ற உணவை (பொங்கல் கிச்சடி மாதிரி, மஞ்சள், ஏலம், சோம்பு எல்லாம் இன்றி) உட்கொண்டனர். அது உடலை சுத்திகரிக்கும் சக்தி வாய்ந்தது. இந்த விரதம் துர்கையின் மற்றொரு பெயரான காத்யாயனி விரதம் என்பதாகும்.
விடியலில் நீராடி ஆற்று மணலில் பதுமை செய்து அதை வணங்குவது வழக்கம். இந்த பதுமை துர்கையாக ஆவாஹனம் செய்யப்படும். சந்தனம் குங்குமம், புஷ்பம், பூஜை நைவேத்யம் எல்லாம் அதற்கு உண்டு. நந்தகோபன் குமரன் கிருஷ்ணனே தங்களுக்கு கணவனாக வேண்டும் என விரதமிருந்து வேண்டினார்கள். ஒருமாத காலம் இந்த விரதம் தொடர்ந்தது.
விரத காலம் முழுதும் தினமும் விடியற்காலை யமுனைக்கு எல்லோரும் சேர்ந்து கை கோர்த்து கிருஷ்ணனைப் பாடிக்கொண்டு செல்வார்கள். குளிக்கும்போது ஆடைகளை நீக்கி கரையில் வைக்கும் வழக்கம் இருந்தது. ஆண்கள் வராத பெண்களுக்கான பிரத்தியேக பகுதியில் தான் அவர்கள் ஸ்நானம் செய்வார்கள். கிருஷ்ணனுக்கு இது தெரியும். அவர்கள் எண்ணமும் புரியும். அவர்கள் எண்ணத்தையும் விரத நோக்கத்தையும் பூர்த்தி செய்வது எப்படி? அத்தனைபேருக்கும் கணவனாக முடியுமா? விரதம் முடியும் போது , யோகேஸ்வரன் (கிருஷ்ணனின் ஒரு பெயர்) அனைவரின் ஆடையும் கவர்ந்தான். மரத்தின் மீது ஏறி அமர்ந்தான். ”பெண்களே ஒவ்வொருவராக வந்து கை கூப்பி வணங்கி உங்கள் ஆடைகளை பெற்றுக் கொள்ளுங்கள்” என்றான். இது விளையாட்டு அல்ல என்று தெரிந்து கொண்டார்கள். பலவாறு தங்களுக்குள் யோசித்து முடிவெடுத்து அவர்கள் வெளியேறி அவனை வணங்கி ஆடைகளை பெற்றனர்.
கணவனைத் தவிர வேறு எவர் முன்னும் ஒரு பெண் நிர்வாணமாக இருக்க முடியாது என்று உணர்ந்த அவர்கள் அவனை கணவனாக வேண்டி விரதமிருந்த ”பலன்” அடைந்ததாக இது அமைகிறது. அவர்களுக்கு ஆடைகளைத் திரும்ப அளித்த கிருஷ்ணன் ” என் அருமை பெண்களே, யமுனையில் ஆடையின்றி நிர்வாணமாக இறங்கி ஸ்நானம் செய்ததின் மூலம் குற்றம் செய்து விட்டீர்கள். யமுனையின் முக்ய தெய்வமான வருணனை அவமதித்து விட்டீர்கள். இரு கரம் கூப்பி நெற்றியில் தொட்டு வருணனிடம் மன்னிப்பு கேளுங்கள் ” என்றான். கிருஷ்ணன் வாக்கு வேதவாக்கு அவர்களுக்கு. அவ்வாறே செய்தனர். அவர்களைப் பொருத்தவரையில் வருணனிடம் மன்னிப்பு பெறுவதைவிட கிருஷ்ணன் சொல்படி நடந்து அவனை திருப்திப் படுத்துவது ஒன்றே தான் பிரதானம்.
சைதன்ய மஹா பிரபு இது பற்றிக் கூறுகையில் அப்பெண்கள் “கிருஷ்ணா, நாங்கள் உன் அடிமைகள், அணைத்தாலும் , காலடியில் மிதித்தாலும் எங்களுக்கு எதிரே தோன்றாமல் மனம் ஒடித்தாலும் எதையும் நாங்கள் ஏற்பவர்கள். உன் சித்தம் எங்கள் பாக்கியம். நீ சர்வ சுதந்திரம் கொண்டவன். எங்கள் தலைவன். நீயன்றி வேறு ஒரு தெய்வம் நாங்கள் அறியோம்” என்பது தான் கோபியர்களின் மனநிலை” என்கிறார்.
”பெண்களே, உங்கள் காத்யாயினி விரத நோக்கம் அறிவேன். நீங்கள் விரும்பியதை அடைவீர்கள். எவர் மனத்தினாலும், சிந்தனையாலும் என்னை நெருங்கியவர்களோ அவர்களது விருப்பம் பேராசையாக இருந்த பட்சத்திலும் அது நிறைவேறும். உயர்வடைவீர்கள். வெந்த விதை பயிராகாது. கர்ம பலன் உங்களுக்கு நிறைவேறும். “உங்களது காத்யாயனி விரத பலனாக என்னை நீங்கள் ஒவ்வொருவருமே கணவனாகப் பெறுவீர்கள் என்று வாக்களித்த கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் தன்னையே பலராக மாற்றிக்கொண்டு அவர்களோடு கூடி களித்து அவர்கள் விருப்பம் நிறைவேறியது. அதுவே ராசக்ரீடை ஆகியது.
ஆதி சங்கரர் இந்த அஷ்டகத்தில் கண்ணனின் லீலையை நினைவு கூர்ந்து வேண்டுகிறார்.
”கோவிந்தா நீ உடல் சிந்தனையின்றி, இந்த்ரிய மோகங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் அப்பாற்பட்டவன். துக்க நாசனன், பரமானந்தம் தருபவன். உன்னை வணங்குகிறோம்” என்கிறார்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



