GOVINDHAASHTAKAM SLOKAS 3 & 4 J K SIVAN

கோவிந்தாஷ்டகம் நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

ஸ்லோகம் 3 & 4

3. त्रैविष्टपरिपुवीरघ्नं क्षितिभारघ्नं भवरॊगघ्नम् । कैवल्यं नवनीताहारमनाहारं भुवनाहारम् ।
वैमल्यस्फुटचॆतॊवृत्तिविशॆषाभासमनाभासम् । शैवं कॆवलशान्तं प्रणमत गॊविन्दं परमानन्दम् ॥ 3 ॥

Trivishta paripuveeragnam, kshithi bharagnam, bhava rogagnam, Kaivalyam nava neethaa haara manaahaaram bhuvanaharam,
Vaimalya sphuta chetho vruthi viseshabhaasa manabhasam, Saivam kevala santham, pranamatha govindam paramanandham.

3 த்ரைவிஷ்ட பரிபுவீரக்னம் க்ஷிதிபாரக்னம் பவரோகக்னம் | கைவல்யம் னவனீதாஹாரமனாஹாரம் புவனாஹாரம் |
வைமல்யஸ்புடசேதோவ்றுத்திவிஶேஷாபாஸமனாபாஸம் | ஶைவம் கேவலஶாம்தம் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம் || 3 ||
வெண்ணை திருடிய கண்ணா, வெண்ணையும் மண்ணையும் ஒன்றாகவே கருதி வையகத்தையே வாயினில் காட்டியவனே. வீட்டிலே உறியிலே வைத்த வெண்ணை காணாமல் போன காரணம் நீ என்றறிந்த ஆய்ச்சியர் ஒன்று சேர்ந்து உன் வீட்டுக்கு வந்து, உன் தாய் யசோதையிடம் முறையிட வந்தபோது, உன் தாய் என்ன நினைத்தாள்?

‘ கிருஷ்ணா, மாயாஜாலக்காரா, ”ஓஹோ வழக்கம் போல என்னுடைய விஷமம் பற்றிய முறையீடு தானோ”’ என்று அறிந்து தானே, நீ அவர்கள் அத்தனை பேரும் வந்தபோதே குறிப்பறிந்து கொண்டாய். ஒன்றுமறியாத வனாக தாய் பின்னால் சென்று நின்று கொண்டு அவள் கால்களை கட்டிக்கொண்டு நின்றாய் . வந்த கோபியர்களை வரவேற்று யசோதை “வாருங்கள் என்ன விஷயம்” என்றாள். நிச்சயம் கண்ணன் பயல் மேல் ஏதோ கம்ப்ளைண்ட் என்று அவளுக்கு உள்ளூர தெரியும்.

வந்த கோபியர், யார் முன்னால் விஷயத்தை சொல்வது என்று ஒருவருக்கொருவர் பார்த்து கொண்டனர். அவர்கள் அனைவரும்

”செய்வதை யெல்லாம் செய்துவிட்டு “ஒன்றும் தெரியாத அப்பாவி” யாக அம்மா பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் அந்த வெண்ணை திருடும் பயலையும் பார்த்தனர். கண்கள் சந்தித்தன. என்ன காந்த சக்தியோ??
பெரிய வட்ட விழிகள். அவை பேசும் மொழியோ ஏராளம். இன்றெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்ற வைக்கும் கருவூலம் – அந்த கடலினும் பெரிய கண்கள்.மெதுவாக தலையை ஆட்டிக் கொண்டே அந்த விழிகள் அம்மாவின் பின்னால் ஒளிந்து கொண்டே அந்த கோபியர்கள் கண்களோடு பேசின. “ப்ளீஸ் சொல்லாதே, சொல்லாதே”

“என்ன விஷயம் சொல்லுங்கள் ஏன் எல்லாரும் பேசாமலேயே நிற்கிறீர்கள்? அமருங்கள்” என்றாள் யசோதை.
“ஒன்று மில்லையம்மா. நாம் அடிக்கடி சந்திக்க முடியாமல் நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வேலை இருக்கிறதே. அதான் எல்லாரும் ஒன்று சேர்ந்து இன்று உன்னை பார்த்து விட்டு போவோம் என்று வந்தோம்.”
அந்த விழிகள் செய்த மாயம் அல்லவா இது?
“பார்வை ஒன்றே போதுமே!!!!”-ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் இந்த காட்சியை மனக்கண்ணால் பார்த்து அனுப வித்த பரம புருஷர்.!!!
கண்டிப்பாக சுருட்டி ராகத்தில் மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் பாடிய பாட்டை முடிந்தால் கேளுங்கள். என்னை உலுக்கிய ஒரு பாட்டு அது.

பாலைக் காய்ச்சி அது ஆறினவுடன் சிறிது தயிரோ மோரோ கலந்தவுடன் அது தெளிந்து இறுகி அசை வற்று தயிராகிறது. தயிரைக் கடைந்தபின் அது வெண்ணை. இது உபமானம்.
கொந்தளிக்கும் மனதை கொஞ்சம் கொஞ்சமாக உணர்ச்சிகளினின்றும் ஆறவைத்து, அதில் தன்னலமற்ற பக்தி எண்ணம் புகுத்தி நிலை நிறுத்தினால் மனம் உறுதிபடுகிறது. மனதை நன்றாக அலசி கடைந்து தேவையற்றதை (ஆசை, மோகம்,குரோதம் லோபம், மாற்சர்யம்) நீக்கினால் எஞ்சியது, நாம் பெறுவது, நிர்மலமான தன்னலமற்ற தூய்மையான மனம். அதுவே இறைவன் ஆசையாக தேடும் வெண்ணை.

நிறைய ”மன வெண்ணை” சேகரித்து கிருஷ்ணனுக்கே அர்ப்பணம் செய்வோமே. ஆனந்தம் பெறுவோமே. பரமானந்தம் தரும் கோவிந்தா இதற்கு உன் அருள் முதலில் தேவை. கோவிந்தா, உன் அருளால் பெற்று உனதடியே பற்ற நீயே தான் அருளவேண்டும்.

4,गॊपालं प्रभुलीलाविग्रहगॊपालं कुलगॊपालम् । गॊपीखॆलनगॊवर्धनधृतिलीलालालितगॊपालम् ।
गॊभिर्निगदित गॊविन्दस्फुटनामानं बहुनामानम् । गॊपीगॊचरदूरं प्रणमत गॊविन्दं परमानन्दम् ॥ 4 ॥

4 Gopalam Leela vigraha gopalam Kula gopalam, Gopi khelana govardhana dhruthi leela laalitha gopalam,
Gopir nigaditha govinda sphuta naamaanam bahu namananam, Gopi gochara dhooram, pranamatha govindam paramanandham

கோபாலம் ப்ரபுலீலாவிக்ரஹகோபாலம் குலகோபாலம் | கோபீகேலனகோவர்தனத்றுதிலீலாலாலிதகோபாலம் |
கோபிர்னிகதித கோவிம்தஸ்புடனாமானம் பஹுனாமானம் | கோபீகோசரதூரம் ப்ரணமத கோவிம்தம் பரமானம்தம் || 4 ||

அறிய விரும்பாதவனுக்கு அந்த அரவிந்த லோசனன் அரியவன். லோக சம்ரக்ஷகனான அந்த கிருஷ்ணன் இந்திரனின் கர்வத்தை எப்படி ஒடுக்கினான் என்று கோவர்தன கிரி கதையை சுருக்கமாக சொல்கிறேன்.

பசுக்கள் பால் வழங்கி அவற்றின் மூலம் கிடைக்கும் வெண்ணை தயிர் ஆகியவற்றை உண்டு மீதியை விற்று காசாக்கி வாழ்ந்த ஆயர்குடி மக்கள் அந்த பசுக்களை தெய்வமாக கொண்டாடி அவற்றுக்கு பூஜை செய்யும் திருநாளாக வருஷத்தில் ஒருநாள் கொண்டாடுவது தான் கோவர்தன பூஜா (கோ என்றால் பசு, வர்தனம் என்றால் சிறந்த பராமரிப்பு). இதை ‘அன்னகுட் ‘பண்டிகை என்று நிறைய தானியங்களை மலை போல் குவித்து அவற்றை கோவர்தன மலையாக்கி, பசும் சாணத்தை மலைபோல் குவித்தும் பல இடங்களில் கொண்டாடினாலும் இது தீபாவளி பண்டிகையின் ஒரு பகுதியேயாகும். இதை கிருஷ்ணன் வழக்கத்தில் கொண்டு வந்தான். கிருஷ்ணன் நரகாசுரனை வதம் செய்த தீபாவளி நாள் இந்த பூஜைக்கு ஏற்ற நாளா யிற்று.
ஆயர்பாடி பிருந்தாவனத்திலிருந்த கோபர் கோபியர் காலம் காலமாக மழை தரும் கடவுளாக, சூல் கொண்ட
கருமேகங்களின் அதிபதியாக இந்திரனை வழிபட்டு நன்றி செலுத்துவதற்காக வருடமொரு முறை
இந்திரனுக்கு விழா எடுத்து வந்தனர்.
அன்று கண்ணன், அப்பா நந்தகோபனுடன் வாசலில் அமர்ந்திருந்தான் மேலே கருமேக கூட்டங்கள். அவற்றினிடையே கஷ்டப்பட்டு சூரியன் வெளியே கொஞ்சம் கொஞ்சம் அப்பப்போ தலையை காட்டிக் கொண்டிருந்தான். எங்கும் கோலாகலம். தோரணம், மாலைகளோடு இனிப்பு வகைகளோடு மக்கள் புத்தாடை அணிந்து உலவுவதை பார்த்த கிருஷ்ணன்
“அப்பா இன்று என்ன விசேஷம்?” என்றான்.
இன்று “இந்திர விழா”‘
” அப்படின்னா என்ன?”
“மழை கொடுக்கிற இந்திரனாலே தான் நாமெல்லாம் சந்தோஷமா இருக்கோம் இல்லையா அதற்காக
இந்திரனுக்கு இன்று பூஜை”
“அதோ இருக்கிறதே அந்த கோவர்தன மலை தானே நமக்கு காற்று, தண்ணீர் எல்லாம் தருகிறது. நீ சொல்கிற கருப்பு மேகங்களைஎல்லாம் தடுத்து இங்கே மழை பெய்ய வைக்கிறது அந்த மலையிலிருந்து தானே நமக்கு மூலிகை எல்லாம் கிடைத்து நமக்கு நோய் வராமல் இருக்கிறது..அந்த மலையிலே தானே நம்முடைய ஆடு மாடு எல்லாம் நிறைய மேச்சலுக்கு போகிறது. நிறைய பழம் காய் எல்லாம் இருக்கிற செடி கொடி, மரம் எல்லாம் அந்த மலை மேலே தானே நமக்காக இருக்கிறது நமக்கு அந்த மலை தானே ரொம்ப முக்கியம். அதுக்கு தானே நாமெல்லாம் நன்றி சொல்லணும், பூஜை பண்ணனும்”.

”இந்திரன் கடவுள் அவனுக்கு தான் நாம் பூஜை செய்யணும்” என்றான் நந்தகோபன்.
”எப்படி அப்பா அது சரியாகும். கண்ணுக்கு நேரே இருக்கிற இந்த கோவர்தன மலை தான் கடவுள். இதைவிட்டு எங்கேயோ கண்ணுக்கு தெரியாத மேலே இருக்கிற இந்திரன் எப்படி இந்த பூஜைக்கு தகுதி?. நீங்களே யோசித்து பாருங்களேன்” என்றான் கிருஷ்ணன்.

சிறுவனாக இருந்தாலும் கிருஷ்ணன் சொல்வதில் உள்ள உண்மை, கருத்து கோபாலர்களுக்கு புரிந்து ஆச்சர்யபட்டார்கள். இந்த வருஷம் கோவர்தன மலைக்கு பூஜை செய்வது என்று முடிவெடுத்தனர்.

இந்திரனுக்கு கடும் கோபம் வந்தது இதைக் கண்டு. யாரோ ஒரு சிறுவன் பேச்சை கேட்டு நன்றி மறந்த இந்த வ்ரஜபூமி பிருந்தாவன மக்களுக்கு பாடம் புகட்ட நிறைய கருமேகங்களை அனுப்பி பிருந்தாவன கிராமம் முழுதும் விடாத மழை வெள்ளத்தில் மூழ்கி அனைவரும் அழிய உத்தரவிட்டான். மேகங்கள் சூழ்ந்தன. சூரியனின்றி பகல் இரவாகியது. மழை கொட்டியது.

“கிருஷ்ணா, பார்த்தாயா நான் சொன்னதை நீ கேட்காததால் வந்த விளைவை ?
”இந்திரனுக்கு வந்த கோபத்தால் இந்த மழை வெள்ளம் என்கிறீர்களா?.அவன் நமக்கு பாடம் கற்பிக்கி றானா?கொஞ்சம் பொறுங்கள்”.
கண்ணன் வெளியே சென்றான். இதற்குள் மழை வெள்ளம் இடுப்பளவு ஊரில் வந்துவிட்டது. உரக்க கூவி அனைவரையும் கோவர்தன மலைக்கருகே வர சொன்னான் கிருஷ்ணன். அவன் குரல் கேட்டு அனைவரும், ஆடு மாடு அனைத்தும் பின் தொடர நேரே கோவர்தன மலை யருகே சென்றான். கண் இமைக்கும் நேரத்தில் இடது கை சிறுவிரலால் கோவர்தன மலையை தூக்கினான். குடையாக அது மேலே நின்று அனைவரையும் மழையினின்று காத்தது.
இந்திரன் அசந்து போனான். சிறுவன் சாதாரணன் அல்லன் என்று புரிந்து கொண்டான். மழை நின்றது. வெள்ளம் வடிந்தது. இந்திரன் நீரோடு நீராக கலந்து கண்ணன் கால்களை அலம்புவதுபோல் வணங்கி கிருஷ்ணன் ஆசியை பெற்று அகம்பாவம் நீங்க பெற்றான். கிருஷ்ணன் இருந்த 5000 ஆண்டுகளாக இன்றும் கோவர்தன பூஜை நாடெங்கும் நடப்பது இந்த கதை நிஜமாக நடந்ததற்கு ஒரு சான்றாகுமல்லவா?”

கோவிந்தா நீ பசுக்களை மட்டுமா நீ காப்பவன். ஆநிரை போன்று மானிடர்களையும் அல்லவா நீ காத்த ருள்கிறாய் மாதவா. பரமா உன்னை நினைத்தால் உன் ஆனந்தம் – பரமானந்தம் – பெறுகிறோமே. கோவிந்தா உனக்கு நமஸ்காரம்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;