
ஸ்ரீமத் பாகவதம் – நங்கநல்லூர் J K SIVAN —11வது காண்டம். 18வது அத்யாயம்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நான்கு நிலைகள். சிறுவன் (பிரம்மச்சாரி) சம்சாரி ( கல்யாணமானவன்) வானப்ரஸ்தன் ( வாழ்க்கை பிடிப்பை விலக்கியவன், தியானம் செய்பவன்) சந்நியாசி (துறவி).
வானப்ரஸ்தத்தின்போது ஆன்மீகம் தலை தூக்கி, பக்தி மேலிடுகிறது. குடும்பத்தை விட்டோ, மனைவியோடு சேர்ந்தோ, ஞானம் தேடுகிறவர்கள் உண்டு. பழைய காலத்தில் காடுகளுக்கு சென்று தவமிருப்பார்கள். வடக்கிருத்தல் என்று பெயர். ராஜா ராணிகள் கூட இப்படி தவமிருந்தவர்கள். அடுத்தது சன்யாசம். சகலத்தையும் துறக்கும் மன உறுதி தேவை. உலகப்பற்றுக் களிலிருந்து முழுதும் விடுதலை.
” என் நண்பா, சிஷ்யா, உத்தவா, வானப்ரஸ்தம் மேற்கொண்டவன் வனத்திற்கு தனித்து செல்வான், அல்லது மனைவியோடு செல்பவன். ஆகாரத்தை தயார் செய்யாமல், தேடாமல், கிடைக்கும் இலை, தழை,கிழங்கு, வேர், கனிகள் மட்டுமே உண்டு ஜீவிப்பவன். மரப்பட்டைகள், தோல் ஆகியவற்றை உடுப்பவன். தலையில் சிகையை வாராதவன், நகத்தை வெட்டாதவன், மூன்று முறை ஸ்னானம் செய்பவன், வெறும் தரையில் படுப்பவன். உணவைப் பற்றி அதிகம் கவனம் செலுத்தாமல் கிடைப்பதை உண்பவன். மறுநாளைக்கென்று சேமித்து வைக்கா தவன். யாகங்கள் புரிபவன். அஹிம்சா மார்கத்தை கடைப்பிடித்து, விலங்குகளை யாகத்தில் உபயோகிக் காதவன். முக்கால் வாசி அவன் உபவாசத்தில், எளிதாக கிடைத்த உணவை மட்டும் பகவானுக்கு அர்ப்பணித்துவிட்டு அதை புசிப்பதால், அவன் எலும்பும் தோலுமாக தான் காட்சி அளிப்பவன். தவத்தில் கடின துன்பங்களை சந்திப்பவன். புலன்களை வென்றவன். மஹா லோகம் செல்வது மட்டும் அவன் குறிக்கோள் இல்லை. வயோதிகத்தால் அவன் உடல் இடம் கொடுக்கவில்லை யென்றா லும் மனதால் தவம் இருப்பவன். தியானிப்பவன். என்னை மனதில் நிறுத்தி தீயில் மூழ்குபவன். வானப்ரஸ்தம்
வாழ்க்கையின் முடிவு என்பதால் உயிர் துறக்க யாகத் தீயில் குளிப்பது ஒரு காலத்தில் வழக்கம். ”
உத்தவனுக்கு கிருஷ்ணன் மேலும் உபதேசிக்கிறான்:
இப்படி வானப்ரஸ்தமிருக்கும் சந்யாசிகள் கவனத்தை
கலைக்க தேவர்கள் கூட சோதனை செய்வார்கள். விஸ்வாமித்ரர் தவம் கலைக்க மேனகை வந்தாள் இல்லையா? கடுமையாக தவமிருக்கும் சந்யாசிகள் எந்த இடைஞ்சலையும், இடையூறுகளையும் பொருட்படுத்த மாட்டார்கள்.
ஒரு அடி எடுத்து வைக்கும் முன்பு கீழே ஏதாவது பூச்சி, ஜந்துக்கள் இருக்கிறதா, அவற்றிற்கு தனது காலடி எந்த தீங்கும் விளைவிக்க கூடாது என்று கவனமாக இருப்பவர்கள். குடிக்கும் ஜலத்தை கூட மேல் துண்டி னால் வடிகட்டி அதில் ஏதேனும் ஜந்துக்கள் இருந்தால் அவற்றுக்கு தீங்கு விளைவிக்காதவர்கள். சத்தியத்தைத் தவிர வேறு எதுவும் பேசாதவர்கள் .அனாவசிய பேச்சே இல்லை. கூடுமானவரை மௌனம். தேவையற்ற செயல்கள் கிடையாது. மூச்சு பிராணா யாமம் விடாமல் செய்பவர்கள். ஏழே கிரஹஸ்தர்களின் வீடுகளில் மட்டும் பிக்ஷை ஏற்றுக்கொள்ளும் வழக்கம் இருந்தது. அதில் என்ன கிடைக்கிறதோ அதுவே ஆகாரம். ஆகாரம் கிடைத்தபின் எங்கோ ஒரு ஏரி , நதிக்கரைக்கு சென்று ஸ்னானம் செயது வேறு எவராவது உணவு தேடுவோர் இருந்தால் அவர்களுக்கு முதலில் வழங்கிவிட்டு மீதி இருப்பதை உண்பார்கள். மறுநாளைக்கு சேமிக்கும் வழக்கம் கிடையாது. எந்த இடமும் ஒரு ராத்திரிக்கு மேல் தனக்கு இல்லை, என்று ஒவ்வொரு இடமாக கால் நடையாக செல்லும் சந்யாசிகள் உண்டு. அமைதியாக தனிமையாக ஒரு இடத்தில் எந்த இடையூறுமில்லாமல் சதா பகவானை யே நினைத்து தியானம் செய்து ஆத்மானுபவம் பெறுபவர்கள் ஞானிகள்.உத்தவன் அப்படிப்பட்டவன். சதா சர்வ காலமும் அவன் மூச்சே கிருஷ்ண பக்தி தான். க்ரிஷ்ணனில் தன்னையும், தன்னில் கிருஷ்ண னையும் கண்டு இனைந்து ஒன்றான பக்தன். உலகத்திலிருந்தும் புலன்களின் ஈர்ப்பிலிருந்தும் விடுபட்டு தனித்தவன்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


