
பாதி வழி நன்றி நமஸ்காரம். நங்கநல்லூர் J K SIVAN
ஹிந்து சனாதன வழக்கத்தில் ஒவ்வொருவரும் நூற்று இருபது வருஷம் வாழ்வது என்பது பூர்ணாயுசு, தீர்க்காயுசு என்று கருதப்பட்டது. அதில் பாதி வாழ்ந்ததை ஒரு நன்றி வேண்டுகோளாக பகவானுக்கு அளிப்பதை பிறந்த நாள் முதல் அறுபது வருஷங்கள் முடிந்த பிறகு ஒரு வைபவமாக கொண்டாடுதுவது தான் ஷஷ்டி அப்த பூர்த்தி. ராமானுஜர் 120 வாழ்ந்தார் என்று படிக்கிறோம். நூறு வயது வாழவேண்டும் வாழ்த்துவது தான் ”சதமானம் பவதி” மந்திரம். ஷஷ்டி என்பது ஆறு, அறுபது எண்களைக் குறிக்கிறது. தமிழ் வருஷங்கள் 60. அதில் ஏதாவதொன்றில் பிறந்தால் அடுத்த 60 வருஷங்கள் முடிந்து, பக்ஷம், நக்ஷத்ரம் வரும் நாள் ஷஷ்டி அப்த பூர்த்தி. தம்பதிகளாக இதை கொண்டாட கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதுவும் பிள்ளை பெண், புத்ர பௌத்ராதிகளோடு அவர்கள் ஏற்பாடு செய்து கொண்டாடுவது எல்லோருக்கும் அமைவதில்லை. புத்ரன், புத்ரி, மாப்பிள்ளை மற்றும் உடன் பிறந்தோர் ஜல்லடை பிடிக்க அபிஷேகம் கொடுத்துவைத்தவர்கள் பாக்கியசாலிகள். தம்பதிகள் இந்த விழாவில் கொண்டாடும் போது மீண்டும் கணவனால் அந்த சுமங்கலி மாங்கல்ய தாரணம் பெறுகிறாள். புது வாழ்வு துவங்குகிறது. இந்த கல்யாணம் பிள்ளை பெண்,பேரன் பேத்திகளுடன் நடப்பது ஒரு சந்தோஷமான விஷயம் இல்லையா?
க்ரஹஸ்தாஸ்ரமத்துக்கும் வானப்ரஸ்தத்துக்கும் ஒரு பாலம் இந்த ஷஷ்டியப்த பூர்த்தி. வாழ்க்கையில் பாதி வழி திருப்தியாக க்ஷேமமாக கடந்ததற்கு நன்றி பகவானுக்கு தேவதைகளுக்கு ஹோமம் பூஜைகள், மந்த்ர உச்சாடனம் மூலம் தெரிவிக்கிறோம்.
வழக்கமாக இதில் யமுனா பூஜை, கங்காபூஜை, இஷ்ட தேவதை பூஜை, சபா வந்தனம், புண்யாஹ வாசனம். நாந்தி பூஜை, ரித்விக் ஏகாதச ருத்ர பாராயணம்,கலச ஸ்தாபனம் எல்லாம் உண்டு. இப்போதெல்லாம் முதல் நாளே ஆரம்பித்து விடுகிறார்கள். முதலில் விக்னேஸ்வர பூஜையோடு துவங்கும். பிறகு நவகிரஹங்கள், ம்ருத்யுஞ்ஜய ஜபம், ஸம்வத்சர அயன,ருது, மாச, பக்ஷ, யோகா தேவதா, காரண தேவதா, ராசியாதிபதி, நவதுர்கா, சப்த மாத்ரு தேவதா, துவாதச ஆதித்யா, அர்யமா, மித்ரா, வருண, இந்திர, விவஸ்வான், த்வஷ்டா, விஷ்ணு, அனுமன், பாக, புஷன் , பர்ஜன்ய, ஆயுள் தேவதை, இஷ்ட தேவதா, குல தேவதா , ஆவாஹன பிராண பிரதிஷ்டை , ஷோடசோபசார பூஜை , மங்கள ஆரத்தி, சூக்த மந்த்ரங்கள் ஜபம் எல்லாம் வாத்தியார்கள் கோஷ்டியாக சொல்வார்கள். ஹோமங்கள் நவகிரஹங்கள் , கணபதிக்கு திவ்யமாக நடக்கும். பிராமணர்களுக்கு பல தானம் கொடுப்பார்கள்.
எனது முகநூல் நண்பர் சேதுமாதவன் அவருடைய ஷஷ்டி அப்த பூர்த்திக்கு என்னை அழைத்திருந்தார். ஜூன் 28 அன்று நங்கநல்லூர் தில்லைகங்காநகர் அக்ஷய மஹாலில் நல்ல கூட்டம். நண்பர்கள் உறவினர்கள் குழுமி இருந்தனர். சேதுமாதவன் ஒரு அற்புதமான ஏற்பாடு செய்திருந்தார். 61 கலச தானம். அதில் ஒன்று எனக்கு அளிக்களிப்பட்டது.
. கால மாற்றத்துக்கு ஏற்ப, மாங்கல்ய தாரணம் ஸ்வர்ணமாலை காரணமாக தர்மபத்னிக்கு அணிவித்தார். வைதீக கார்யங்கள் முடிந்தபின் ஷஷ்டி அப்த பூர்த்தி நிறைவேறிய தம்பதிகள் மாலையும் கழுத்துமாக பெரியோர்களிடம் ஆசி பெற்று சிறியோர்க்கு வாழ்த்து, ஆசிர்வாதம் மங்களாக்ஷதையோடு அளித்தார்கள். அனைவருக்கும் விருந்து. வலது கை கட்டோடு நான் சாப்பிடாமல் திரும்பிய ஒரே கல்யாணம் இது தான்.
மன திருப்தியோடு வீட்டுக்கு திரும்பினேன். சேது மாதவன் நேற்று நாங்கள் அவருக்கு ஆசிர்வாதம் பண்ணி போட்டோ எடுத்துக்கொண்டதை காபி அனுப்பி மேற்கண்ட நிகழ்ச்சியை நினைவூட்டினார். நான் முகநூலில் வாட்ஸாப்பில் BLOG ல் எழுதுவதால் எவருக்கும் எந்த பயனும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதனால் நிறைய நண்பர்களை பெற்றதில் எனக்கு தான் லாபம்.அதிர்ஷ்டம்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


