
ப்ரம்மஸூத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN
முதல் அத்யாயம் ஜிஜ்ஞாஸ – சமன்வய அதிகரணம்
ஸூத்ரங்கள். 1.1.6 – 1.1.11
ॐ गौणश्चेन्नात्मशब्दात् ॐ ॥ १.१.६॥
Gaunaschet na Atmasabdat I.1.6 (6)
ஓம் கௌணச்சேத்னாத்ம சப்தாத் ஓம்
ஆத்மா எனும் சப்தமும் அதற்கு பிரயோகிக்கப்படுவதால் ஜடத்துக்கு ஏது ஆத்மா? பிரபஞ்சமே ஆத்மா தான் என்றபோது அதல்லவோ பிரதானம். பிரதானம் போல காணப்படுவது, தோற்றமளிப்பது மாயை,அநித்யமானது. ஸத்யம் இல்லாதது. பஞ்ச பூதங்களை நாம் பிரதானமாக கருதுகிறோம், அவற்றின் விளைவு தானே இந்த தேகம். இந்த தேகமே ஆத்மா ஆகாத போது மற்றவை எப்படி பிரதானமாகும். ஆத்மா அனைத்தையும் தோற்றுவித்தபோது பஞ்சபூதமும் பிரபஞ்சமும் அதில் அடக்கம் தானே. அது எப்படி ஆத்மாவாகும்?
ॐ तन्निष्ठस्य मोक्षोपदेशात् ॐ ॥ १.१.७॥
thannishthasya mokshopadesat I.1.7 (7)
ஓம் தன்னிஷ்டஸ்ய மோக்ஷ உபதேசாத் ஓம்.
மோக்ஷத்தை எதாலும் தரமுடியாது. அதற்கு சத்யம் எனும் ப்ரம்மம், அறியப்படவேண்டும். அதை பின்பற்றவேண்டும். திட மனசும் வைராக்கியமும் வேண்டாமா? எத்தனை ரிஷிகள் எத்தனை காலம் நிஷ்டையில் இருந்து அதை பெற்றிருக்கிறார்கள். ”நீ தான் அது” என்ற உபநிஷத மஹா வாக்கியம் ஒன்று இருக்கிறதே. அதில் ”அது” என்பது ஆத்மா,ப்ரம்மம். ஸத்யம் . ஸத்யம் இல்லாத ஒன்றை நீதான் அது என்று சொல்வது எப்படி பொருந்தும்? எது பிராதனமாக தோன்றினாலும் அது ஸத்யத்துக்கு இணையாகாது. ஸத்யம் ஒன்று தான் மோக்ஷத்துக்கு மார்க்கம். ஸத்யம் மற்ற ஜடப்பொருள் அல்லவே. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்க முடியுமா? ஸத்யம் , ஆத்ம ஞானம், ப்ரம்மம், ஒன்று தான் மோக்ஷ மார்க்கம்.ஜடப்பொருள் அல்ல.
ॐ हेयत्वावचनाच्च ॐ ॥ १.१.८॥
Heyatvavachanaccha I.1.8 (8)
ஓம் ஹேயத்வா வசனாச்ச ஓம்
ப்ரம்மத்தைத் தவிர வேறு எதுவும் இந்த பிரபஞ்சத்தை தோற்றுவித்தது அல்ல. ப்ரதானமல்ல. ஆதார காரணம் ஒன்றைத் தெரிந்துகொள்ளாமல் விளைவைப் பற்றி அறிந்துகொள்ள முடியாது. ஸத்யம் இல்லாத ஒன்று ஸாஸ்வதத்தை எப்படி விளக்கும்?. தாழ்வான ஒன்று மேலான ஒன்றை எப்படி விளக்கமுடியும்? ஜடம் தாழ்வான வகை. ப்ரம்மம் அதி உன்னத உயர்ந்த நிலை. ஆத்மாவை ஜடத்தில் தேடினால் அகப்படுமா?
ॐ स्वाप्ययात् ॐ ॥ १.१.९॥
Svapyayat I.1.9 (9)
ஓம் ஸ்வாப்யயாத் ஓம்
நமக்கு மூன்று நிலைகள், விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம். விழிப்பு நிலையில் ஆத்மாவை உணரமுடியவில்லை, கனவிலும் அப்படியே. ஆழ்ந்த உறக்கத்தில் தேகமும் இல்லை மனமும் இல்லை, ஆத்மாவோடு ஜீவன் இணைந்த நிலை. ஆனந்தமாக தூங்கினேன் என்கிறோமே அந்தநிலை. அதை நினைத்தபோது அனுபவிப்பவர்கள் சமாதி நிலை அடைந்த மஹான்கள், ரிஷிகள். ப்ரபஞ்சம் ஆத்மாவாகாது.ப்ரம்மமாகாது.
ॐ गतिसामान्यात् ॐ ॥ १.१.१०॥
Gatisamanyat I.1.10 (10)
ஓம் கதி சாமான்யாத் ஓம்.
மற்ற உபநிஷத மஹாவாக்யங்களை சமமாகக் கொள் . அதாவது எதிலும் ப்ரம்மத்தை உணரும் பக்குவ நிலையை அடையவேண்டும். ப்ரம்மம் ஆதி காரணம். முதல் காரணம். எரியும் நெருப்பில் இருந்து சுடர்கள் உண்டாகி எல்லாப்பக்கமும் பரவுகிறது. ப்ரம்மத்திலிருந்து ப்ராணன் உருவாகிறது. அதிலிருந்து தேவதைகள், அதிலிருந்து உலகங்கள், ஆகாசம் எல்லாம் தோன்றுகிறது. எது தோற்றுவித்ததோ அந்த ப்ரம்மன் எல்லாவற்றிலும் மறைந்திருக்கிறது.
ॐ श्रुतत्वाच्च ॐ ॥ १.१.११॥
Srutatvaccha I.1.11 (11)
ஓம் ஸ்ருதத் வாச்ச ஓம்.
எல்லாம் அந்த பரமாத்மாவிடமிருந்தே உண்டாயின. அந்த பரமாத்வை தான் ப்ரம்மம் என்கிறோம்.மூலகாரணம்.HE IS NO WHERE என்று சொல்லும்போதே HE IS NOW HERE என்பது அதில் உள்ளடக்கியது தானே. அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமான ஒளி ப்ரம்மம். அதே தான் எல்லாம் ஏற்பது வேறு எதை ரெண்டாவதாக சொல்லமுடியும்? தெரிந்ததை விளக்குவதை விட தெரியாததை விளக்குவது தான் ஸ்லாக்யம் . ஆதி சங்கரர் 32 வருஷங்களில் அதைத்தான் செய்து விட்டு போயிருக்கிறார். நாம் தெரிந்ததையே மற்றொருவர் சொல்லும்போது விளக்கும்போது கை தட்டி மகிழிகிறோம். அறிந்ததையே மீண்டும் அறிவதில் ஒரு அல்ப ஆனந்தம்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



