
பேசும் தெய்வம். — நங்கநல்லூர் J K SIVAN –
நாலு அனுஷம் குறையும் –
இன்று அனுஷம் மஹா பெரியவா நினைவு வராமல் போகுமா?
நிர்வேதம் निर्वेद, என்றால் சாந்தமாக எதிலும் விருப்பற்ற நிலை என்று ஒரு அர்த்தம். வைராக்கியத்தோடு இணைந்தது. மோக்ஷ சாதனம். ஸம்ஸ்காரத்தில் ஒரே வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு என்பதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன். ஆன்ம விசாரத்தில், இந்த நிர்வேதம் விவேகம், ரெண்டும் படிக்கட்டுகள்.இதைத் தாண்டி ல் அடுத்ததாக மூன்றாவது படிக்கட்டு வைராக்கியம்.ரெண்டு பேர் பேசுகிறார்கள்:
”வைராக்கியம் என்றால் என்ன ஐயா? ‘எல்லாவற்றையும் விட்டு விடுவது தான்”
‘இப்போது நீர் என்ன பண்ணிக் கொண்டு இருக்கிறீர்?
‘ இப்போதெல்லாம் எதுக்கும் நான் போறதில்லை. யாரோடும் நான் பேசுவதில்லை. எல்லாவற்றையும் விட்டு விட்டேன்.’
‘விட்டு விட்டு என்ன பண்ணுகிறீர்?’
‘வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன். ஒண்ணுமே பண்ணுவதில்லை.’
சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பது வைராக்கியம் ஆகாது. ”விட்டவுடன் நீ என்ன பண்ணுகிறாய் என்றால் ‘ அவன் திருவடியைப் பற்றினேன்’ என்று சொன்னால் அது வைராக்கியம்.
அகங்கார மமகாரங்கள் ஒழிய வேண்டும். இந்தப் பிரபஞ்சம், வாழ்க்கை என்பது மழை பெய்யும்போது ஏற்படும் ஒரு நீர்க்குமிழி போல. ஜோ என்று மழை பெய்து, ஓடும் நீரிலே தோன்றும் ‘நீர்க்குமிழி’ எப்படி துளிக்கூட சாஸ்வதமில்லையோ அப்படித்தான் இந்த லோகமும் வாழ்க்கையும். இந்த வைராக்கியம் நமக்கு எல்லாம் இருக்கிற போதே வர வேண்டும். நம்மை விட்டு எல்லாம் போன பின்பு வைராக்கியம் எதற்கு அவசியம்?
ஒருமுறை மன்னார்குடி ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஸ்ரீ ஜெயந்தி, விசேஷமாக நடந்த சமயம் பெருமாளுக்கு எல்லா பக்ஷணங்களும் நைவேத்யம் பண் ணி அனைவருக்கும் விநியோகமானது. ஒரு பக்தர் அருகே வந்து ஸ்ரீமத் அழகிய சிங்கரை தெண்டன் சமர்ப்பித்தார். அழகிய சிங்கர் பிரசாதம் கொடுத்த போது அந்த பக்தர் வேண்டாம் என்கிறார்.’ நான் சீடையே சாப்பிடறதில்லை’. ‘ பெருமாளே சீடை சாப்பிடுகிறானே! எல்லோருடைய ஆத்திலேயும் இன்றைக்கு சீடை பண்ணி பெருமாளுக்கு நிவேதனம் பண்ணி சாப்பிடுவார்களே! அப்படி இருக்கும் போது சீடையின் மேல் உமக்கு என்ன வெறுப்பு ஸ்வாமி?’
” வெறுப்பெல்லாம் ஒண்ணுமில்லை. நிறைய சாப்பிட்டுக் கொண்டு தான் இருந்தேன். இப்போது பல்லெல்லாம் கொட்டிப் போய் விட்டது. அதனாலே சாப்பிடுவதில்லை’
ஒரு பொருளை அனுபவிக்க முடியாமையால் வெறுப்பு வந்தால் அது வைராக்கியமாகாது. எல்லாம் அனுபவிக்கும் சக்தியும் பலமும் தெம்பும் உடம்பில் இருக்கும்போதே அனைத்தையும் விட்டுவிட்டால் அது தான் வைராக்கியம். விட்ட தருணத்திலே அவன் திருவடியை நாம் கெட்டியாக பற்றிக் கொள்ள வேண்டும். ”பற்றுக இப்பற்று விடற்கு” அது தான்.
தாமரை இலையிலே தண்ணீரானது எப்படி ஒட்டிக் கொள்ளாமல் இருக்கிறதோ அப்படி நாமும் உலக வஸ்துக்களிடம் நாட்டமில்லாமல் இருக்க வேண்டும்.
அது சரி ஒட்டுதல் இல்லையென்றால் லோகத்தில் வாழ்வது எப்படி? வாழ்வதற்கு ஒட்டுதல் வேண்டாமா!
உலகத்திலே நாம் நன்றாக,பூரணமாக வாழ வேண்டும் என்று சாஸ்திரம்,மந்த்ரங்கள் எல்லாம் சொல்கிறது.அதற்கு அர்த்தம் நாம் இந்த உலகத்திலே நித்ய கர்மானுஷ்டானங்களைப் பண்ண வேண்டும். அதற்கு பூரணமாக வாழ வேண்டும் என்பது. உலக வஸ்துக்களிலே நாட்டமில்லாமல் எத்தனை ஆயுட்காலம் வேண்டுமானாலும் இருக்கமுடியும் என்கிறது வேதசாஸ்திரம்.ஒரு கப்பல் இருக்கிறது. அது கடலில் போகலாமா என்றால் கண்டிப்பாகப் போகத் தான் வேண்டும். அப்போது தான் வாணிபம் பெருகும். ஆகவே கப்பல் சமுத்திரத்திலே நன்றாகப் போகலாம். ஆனால் சமுத்ர ஜலம் கப்பலுக்குள் நுழையக்கூடாது. வந்தால் கப்பல் கடலில் மூழ்கும். அது மாதிரி தான் நம்முடைய வாழ்க்கையும். உலக சுகங்களிலே நாம் மூழ்கினால் கரையேற முடியாது.
ஒரு சமயம் ராமானுஜர் தொடர்ந்து 18 நாள் கீதை உபன்யாசம் பண்ணினார். ஒரு க்ரஹஸ்தர் இதெல்லாம் கேட்டு முடிவில் ராமானுஜர் கிளம்பும்போது கூடவே வந்தார்.’அடியேனும் உங்களோடு வருகிறேன். என்னையும் அழைத்துக் கொண்டு போங்கோ””நான் 18 நாள் கீதை சொல்லியும் பலன் இல்லாமல் போய் விட்டதே? நான் சந்நியாசி. எல்லாவற்றையும் விட்டவன். எங்கு வேண்டுமானாலும் காலக்ஷேபத்திற்காக போகலாம். நீர் க்ரஹஸ்தர் ஆயிற்றே? உமக்குப் பொறுப்பு இருக்கிறதே? என்னோடு எப்படி வரமுடியும்?’ நான் ஜலத்தில் நின்றுகொண்டு சூர்யனைப் பார்த்து:” ஐஸ்வர்யத்தை விட்டேன்”,”பூமியிலே இருக்கிற பற்றை விட்டேன்” “ஸ்திரீ சம்பந்தத்தை விட்டேன்” என சத்தியப் பிரதிக்ஞை பண்ணி காஷாயம் அணிந்தவன். நீர் பத்னி, குழந்தைகள் எல்லாம் உடையவர். உமக்குக் கடமைகள் உள்ளன. கீதை என்ன சொல்லுகிறது? உனக்கு விதித்த தர்மங்களை எல்லாம் நீ முடித்தால் தான் பகவானுடைய திருவடியை அடைய முடியும்.கடமையினூடே பகவத் சரனாரவிந்தங்களைத் தேடினாலும் உன்னுடைய கடமைகளை நீ விடலாகாது. பகவான் திருவடிகளை நீ பற்ற வேண்டும் தான். ஆனால் உன்னுடைய கடமைகளை விட்டுவிட்டு அவற்றைப் பற்றுவது தர்மமில்லை” என்று சொன்னார்.
கிரஹஸ்தாஸ்ரமத்திலேயே இருந்து கொண்டே பரம வைராக்கிய நிதியாக விளங்கியவர் ஸ்வாமி தேசிகன். தினமும் உஞ்ச வ்ருத்தி பண்ணி வாழ்க்கை நடத்தியவர்.”அடாடா, இவர் இவ்வளவு கஷ்டப் படுகிறாரே என்று அஞ்ஞானிகள் சிலர் தங்கத்தினாலே அரிசி பண்ணி பிக்ஷை இட்டபோது தேசிகன் என்ன பண்ணினார் தெரியுமா? ” நிவேதனம் பண்ண வேண்டிய அரிசியிலே புழு இருக்கிறதே” என்று மொத்த தங்க அரிசியையும் ஸ்வாமி தேசிகன் அங்கேயே கொட்டி விட்டார். பிக்ஷா பாத்திரத்திலே எப்படியோ ஒரே ஒரு தங்க அரிசி ஒட்டிக் கொண்டு இருந்தது. அவர் மனைவி அதைப் பார்த்துவிட்டு ”இது என்னது ஸ்வாமி?” என்று ஆச்சர்யமாக கேட்கிறாள். அவளுக்கு பொன் எப்படியிருக்கும் என்று கூட தெரியாது, அதன் மேல் பற்றும் கிடையாது. இல்லத்தாருக்கும் இந்த வைராக்கியம் சாத்தியம் என்று வாழ்ந்து காட்டியவர் ஸ்வாமி தேசிகன்.
ஸ்ரீ ஸ்துதி பண்ணிய ஸ்வாமி தேசிகனோ , கனதாரா ஸ்தோத்ரம் பாடிய ஆதிசங்கரரோ, ஸ்ரீஸ்தவம் இயற்றிய வித்யாரண்யரோ, மற்றவர்களுக்காகத்தான் மஹாலக்ஷ்மியைத் துதித்து ஐஸ்வர்யத்தை வேண்டினார்களே தவிர அவர்கள் அதில் துளியூண்டு கூடத் தொடவில்லை . அது வைராக்கியம்.
மஹா பெரியவா மேலே முக்கூர் ஸ்வாமிக்கு பரம பக்தி. டயரியில் மஹா பெரியவா பற்றி என்ன எழுதி வைத்தார் தெரியுமா?
”………..வித்வத் ஸதஸ் நடந்தது. பெரிய பெரிய வித்வான்கள் எல்லாம் வந்திருக்கா. பண்டிதாள் எல்லாம் வந்திருக்கா. அதிலே ஆந்திரால இருந்தும் நிறைய பேர். அதிலே ராஜமுந்திரி ல இருந்து ஒரு வித்வான் வந்திருக்கார். அந்த தெலுங்கு வித்வானுக்கு பாவம் கால்கள் இல்லை. அவரை எப்படியோ காஞ்சிபுரத்துக்கு அவர் சம்சாரம் அழைச்சிண்டு வந்திருக்கா. பெரிய கூடையிலே , அவரை தூக்கி தலைல வெச்சி, கூட்டிண்டு வந்திருக்கா. புராணத்திலே வருமே கற்புக்கரசி நளாயினி ன்னு. அவளுடை கதைமாதிரி தான் இருக்கு சம்பவம். மஹா பெரியவா கூட்டியிருந்த வித்வத் சத்சலே பங்கு கொள்ள அந்த வந்துட்டார். மஹா பெரியவாளுக்கும் ஆச்சிரியம் . கார்த்தால சதஸ் க்கு இவர் வரும்போது அந்த அம்மா கூடைல வெச்சு தூக்கிண்டு வர வேண்டியது. அப்புறம் முடிஞ்சாப்புறம் கூடைல வெச்சு தூக்கிண்டு போக வேண்டியது. சதஸ் முடிஞ்சது. மஹா பெரியவா ”அந்த அம்மாவை கூப்பிடுங்கோ” என்றார் அந்த அம்மாவிடம்:
“நளாயினி ன்னு கதை எல்லாம் தான் சொல்லுவா. இந்த காலத்திலேயும், இந்த இருபதாம் நூற்றாண்டிலேயும் கால் இல்லாத புருஷனை கல்யாணம் பண்ணிண்டு, குடித்தனம் பண்ணினது மட்டும் இல்லே. அவர் இங்கே போகணும், அங்கே போகணும் ன்னா, தூக்கி தலைல வெச்சுண்டு வர்றா. எப்பேர்ப்பட்ட பதிவ்ரதை. இந்த காலத்திலேயே இருக்கேன்னா, அந்த காலத்திலே ஏன் இருந்திருக்க முடியாது? நீ வந்தது ரொம்ப ஆச்சரியமா இருக்கு. ரொம்ப சந்தோஷம்.”
“ஒன் வாயால ரெண்டு வார்த்தை என்னைப் பத்தி ஏதான சொல்லு. ஒன் வாயால கேக்கணும் போல இருக்கு. நான் எப்பேர்ப்பட்டவன்?” னு சொல்லும்மா.
“ஒங்களைப் பத்தி நான் என்ன சொல்லறதுக்கு இருக்கு? நீங்க தான் ஈஸ்வரன். பெரிய அவதாரம். ஒங்களால தான் வேதமும் தர்மமும் இருக்கு.””
“இதெல்லாம் என்ன? எல்லாரும் தான் இதை சொல்லிண்டு இருக்காளே, தெரிஞ்ச கதை, வேறே எதுவும் புதுசா சொல்லு”
“நீங்க நூறு வயசு இருப்பேள். ஆனா நாலு நக்ஷத்ரம் கொறையும்.” என்றாள் அந்த பெண்மணி.
உடனே மஹா பெரியவா முழிச்சிண்டுட்டா. இதுக்கு மேலே விட்டா இன்னும் எல்லா அவதார ரகசியம் எல்லாம் வெளிலே வரும் என்று பிரசாதம் கொடுத்தா. அனுப்பிச்சு வெச்சா0”
அந்த பெண்மணி சொன்னது நடந்தது நமக்கு தெரியும்;
1994 ஜனவரி 8 அனுஷம் மஹா பெரியவா சித்தி அடைந்தார். மே 1994 ல நூறு வயசு பூர்த்தி ஆகி, நூற்றி ஒன்று பிறக்க போறது.
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே – நாலு அனுஷம் நக்ஷத்ரம் குறைந்து போய்விட்டது அல்லவா?.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


