THYAGARAJA SANGEETHAM J K SIVAN

தியாகராஜ சங்கீதம் – நங்கநல்லூர் J K SIVAN

மோக்ஷம் சும்மா கிடைக்குமா?

‘சிவா, நீ நன்றாக ஒரு பாட்டை யோசித்து எழுதி, மெட்டு போட்டு, அதை நீயே பாடு” . இப்படி ஒரு கட்டளை , அதிகாரமாகவோ அன்பாகவோ எனக்கு போட்டால் எனக்கு என்ன ஆகும்? யோசிக்கிறேன்.

முதலாவது எனது தலை உடனே, பெரிசாக கர்வத்தில் வீங்கி விடும். ஒன்று நான் எழுதும் பாட்டு அதி அற்புதமாக இருக்கவேண்டும், எல்லோரையும் கவரும் ஜனரஞ்சகமான மெட்டு, அதற்கு போடவேண்டும், பாட்டு அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும். இதை பாடினால் எனக்கு பேரும் புகழும் வரவேண்டும். காசு நிறைய கிடைக்கட்டும், இது என்னால் தான் முடியும் என்ற அகம்பாவம் கண்ணை, அறிவை மறைக்கும். ஏதோ நான் எவரெஸ்ட் மேலே நிற்பது போலவும் எல்லோரையும் கீழே அலக்ஷியமாக பார்ப்பதைப்போலவும் தோன்றும்..

இத்தனைக்கும் நான் எழுதப்போவதோ ஒரே ஒரு பாட்டு. அதற்காக பல நாள் இரவும் பகலும் யோசனை, எப்படி ஆரம்பிப் பது, முடிப்பது?” எவ்வளவு நிமிஷம் ? என்ன ராகம்? எத்தனை வார்த்தைகளில் எளிய, சந்தம் அழகாக உள்ள வார்த்தைகள். ஒருவர் தொந்தரவும் இல்லாமல் ஏதோ ஒரு ஊரில் ஓட்டல் அறையில் உட்கார்ந்து காகிதங்களை கிறுக்கி கிறுக்கி வீசி எறிந்து ….. என்னுடைய இயலாமையில் எல்லோர் மேலும் கோபம் வந்து, கடைசியில் என்னால் எழுதவே முடியாமல் பல வாரங்கள் மாதங்கள் ஆனாலும் வெளியே தலை காட்ட முடியாமல் போய்விடும்.

இப்படிப் பல பேருக்கு நடந்திருப்பதை அறிந்து தான் மேலே சொன்ன காட்சி எனக்குள் தோன்றியது.

இதெல்லாம் துளிக்கூட இல்லாமல் ஒரு மஹான் வேறே லெவலில் இருந்தவர். பிறர் சொல்லிப் பாடாதவர். தன் மனதில் ராமனைத் தவிர வேறு யாருக்கும் எதற்கும் இடம் தராதவர். உலக வாழ்வின் வசதிகள் சுகங்களை மனதாலும் நெருங்காத எளிய பக்தர். ராம நாமமே பலகோடி மூச்சாக நாம ஸ்மரணையில் உயிர் வாழ்ந்தவர். ராமனை நினைத்து மனதால் அவனோடு வாழ்ந்து ,ஒவ்வொரு கணமும் அவனுடைய உணர்வில் திளைத்து மகிழ்ந்து அவனையே ரசித்து ருசித்துப் பல்லாயிரம் பாட்டு பாடியவர். அவர் இந்த ராகம் தான் போட வேண்டும் என்று யோசித்து போடாதவர். பாடல்களில் வார்த்தைகள் மனதில் பக்தியால் உருவானவை. அதற்கான ராகமும் தானாகவே அவர் மனதில் பொருத்தமாக முளைத்தது.

ராமனே தன்னைப் பற்றிய அவர் கீர்த்தனைகளுக்கு தானாகவே தகுந்த, பொருத்த மான ராகங்களை ப்ரயோகப்படுத்தி அவர் மனதில் செலுத்தி அவரைப் பாட வைத்தான். தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகளின் பதங்கள், வார்த்தைகள் அவர் யோசித்து எழுதவில்லை. உள்ளத்தில் பொங்கிய அபரிமிதமான பக்தியில் விளைந்த ஸ்வயம்பு. ஆற்றில் வெள்ளம் நதியைக் கேட்டுக் கொண்டா, முன்னேற்பாட்டுடனா ஓடுகிறது? அது போல் ஆயிரக்கணக்கான கிருதிகள் ராமன் மேல் தானாகவே அவர் உள்ளத்திலிருந்து வெளிப்பட்டன. எதையும் எழுதி மனப்பாடம் பண்ணவில்லை, ராமன் எதிரே தீபமேற்றி அதன் ஒளியில் அவன் திருமுகத்தை பார்த்தவாறு தம்புராவை மீட்டி கண் மூடி தியானத்தில் பாவம் (bhavam ) உணர்ச்சிப் பெருக்கோடு வெள்ளப் ப்ரவாஹம். அக்ஷரங்கள் வார்த்தைகள் தானாக வரிசையாக விழுந்து ராகத்தில் நுழைந்து கீர்த்தனையாக வெளிவந்தது. 24000த்தில் நமக்கு கிடைத்ததோ ஒரு 700 -800.

தியாக ப்ரம்மமே ஒரு இசைக் கருவி.. ஹார்மோனியம், வயலின் வீணை மாதிரி. தம்புராவை மீட்டியவுடன் கண்ணை மூடிக் கொண்டு தேவகானம் புறப்பட்டது. அப்படி ஒரு பாடல் இது: பல நூறு ஆண்டுகள் ஆகியும் கேட்க திகட்டாதது. பலமுறை கேட்டிருந்தும் இன்றும் நான் கேட்டது..

ராகம் ; சாரமதி

மோக்ஷமு/ க3லதா3/ பு4விலோ/
ஜீவன்/ முக்துலு/ கானி வாரலகு/

அனுபல்லவி
ஸாக்ஷாத்கார/ நீ/ ஸத்3/-ப4க்தி/
ஸங்கீ3த/ ஞான/ விஹீனுலகு/ (மோ)

ப்ராண/-அனல/ ஸம்யோக3மு வல்ல/
ப்ரணவ/ நாத3மு/ ஸப்த/-ஸ்வரமுலை/ பரக3/
வீணா/ வாத3ன/ லோலுடௌ3/ ஸி1வ/ மனோ/- வித4மு/-எருக3ரு/ த்யாக3ராஜ/ வினுத/ (மோ)”

திருவையாற்றில் காவேரி பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் கரையில் எளிய தனது இல்லத்தில் தியாகராஜ ஸ்வாமிகள் எதிரே பட்டாபிஷேக ராம விக்ரஹத்தின் எதிரே அதற்கு பூஜை பண்ணி, நைவேத்தியம் படைத்து, ஆனந்தமாக அதை மகிழ்விக்க திடீரென்று தோன்றிய ஒரு கீர்த்தனையை மூலாதாரத்திலிருந்து வெளிப்படும் சக்தியோடு மனமுருகி கண்மூடி ராமனோடு லயித்து மனதில் அவனைக் கேட்பது போல பாடுகிறார்.

”ஹே, ஸாக்ஷாத்கார ஓம்கார நாதமே, இந்த பூமியில் ஜீவன் முக்தன் ஆகாமல் எவனாவது மோக்ஷம் அடைய முடியுமா? உன்னுடைய திவ்ய புனித சரணார விந்தங்களில் பக்தி இல்லாமல், அதை இசையோடு கலந்து உன்னை மகிழ்விக்காமல் சங்கீத ஞானம் இல்லாமல் எவராவது முக்தி பெறமுடியுமா?

சங்கீதம் ஜீவன் உள்ளது, உயிர் மூச்சுள்ளது, உடல் பக்தியால் உஷ்ணமடைந்து, உஷ்ணம் உயிரின் வெம்மையான மூச்சு கலந்தால் அல்லவோ அளவான பிரணவ நாதம் சேர்ந்த பக்தி ஓங்காரநாதம் கிடைக்கும். அதுவே ப்ரணவநாதமாக ஏழிசையாகி வீணாகான மாக நாத ஓங்காரமாக சிவனை உணர்விக்கும்.

சிவன் சாம கானப்ரியன் . ராவணேஸ்வரன் தனது இசையால் வீணை மீட்டி சிவனை மகிழ்வித்து வரம் பெற்றவன் என்று தெரியுமல்லவா?
மகாராஜபுரம் சந்தானம் அற்புதமாக சாரமதியில் இதைப்பாடி இருப்பதை கேட்போம்.

இதை  அற்புதமாக மேல்  MLV யின்  இனிய குரலில்  ஆலாபனைகளோடு   சாரமதியில்  பாடி  இருப்பதை ரசிப்போம் .
https://youtu.be/8n8E8hkvxbY?si=mC_HIOtwMa_sQDQY

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;