
அட நம் உடம்பு பத்தி இவ்வளவோ விஷயங்களா?
நங்கநல்லூர் J K SIVAN
எத்தனையோ விஷயங்கள் நமக்கு தெரிவதில்லை, தெரிந்தாலும் பாதிக்கு மேல் புரிவதில்லை. ஏனென்றால் அதெல்லாம் பற்றி நமக்கு, ஆர்வமோ, கவலையோ ஒன்றும் கிடையாது . ஆகவே அக்கறையில்லை, அறிவதுமில்லை.
நாம் கவலைப்படாத, கவனிக்காத எத்தனையோ விஷயங்களை ராவும் பகலுமாக சிலர் யோசித்து சில அற்புதமான உண்மைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதை லட்டு மாதிரி நமக்கு கொடுத்திருப்பதில் துளி விண்டு, இப்போது கொடுக்கிறேன்.
நம்முடைய உடம்பில் தோல் ஒரே மாதிரியாக பருமன் கொண்டதில்லை. உதாரணமாக கண் இமை என்பது ரொம்ப மெலிசான தோல். அதே சமயம், உள்ளங்கை, பாதத்தின் அடிப்புறம் எல்லாம் கனமான, ஸ்ட்ராங் ஆன தோல். இதை யாரோ அளந்து பார்த்து கண்ணிமைக்கான தோலுடைய பருமன் குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர் என்றும். உள்ளங்கை, பாதத்தின் அடிப்பாகத்தின் பருமன், நிச்சயம் 4 முதல் 6 மில்லி மீட்டர் என்கிறார்கள். அடிப்பாதத்திலும் கண்ணிமை மாதிரியே மெல்லிசான தோல் இருந்தால் நமது காலில் கருவேல முள்ளோ , கண்ணாடிச் சில்லோ குத்தினால் நம் கதி என்ன என்று ஒரு கணமாவது யோசிப்போம். கிருஷ்ணனுக்கு நன்றி சொல்வோம்.
நமது உடம்பில் உள்ள அங்கங்களுக்கு எஜமானன் ஒருவன் இருக்கிறான். அவன் தான் மூளை. மூளை சகல உறுப்புகளையும் சக்கையாக வேலை வாங்குகிறது. ஆனால் விஞ்ஞானிகள், ஆராய்ச்சி செய் து, நமது .மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித உறுப்பு கட்டை விரல்கள் தான் என்கிறார்கள். ஆமாம். கட்டை விரல் செமையாக உபயோகப் படுகிறது. அதனால் தான் துரோணர் ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டிருக்கிறார் போல் இருக்கிறது .
நம் உடம்பில் ஏகப்பட்ட எலும்புகள் இருக்கிறதே அதில் ரொம்ப கடினமான எலும்பு எது தெரியுமா? முகத்தில் உள்ள தாடை எலும்பு.
மூளையைப் பற்றி மேலே சொல்லும்போது ஒரு விஷயம் மறந்து போனேன். மனித மூளை 80 முதல் 85 சதவீதம் தண்ணீரால் ஆனது. இருந்தாலும் நிறைய வேலை செய்யும்போது நாம் என்ன சொல்கிறோம்? ”நேத்து ஆபிஸில் செம வேலை. நிறைய யோசிச்சு யோசிச்சு மூளை காஞ்சு போச்சு”
நமது உடலில் அதிகமான இயக்கங்களை செய்யும் உறுப்பு எது தெரியுமா?
கல்லீரல். (LIVER )இது 500 விதமான இயக்கங்களை தினுசு தினுசாக நிகழ்த்துகிறது. இதைப் போய் ஏன் டாஸ்மாக்கிலே சாராயம் குடிச்சு கெடுத்துக்கிறேடா மாரிசாமி?
நம் உடம்பில் தசைகள் இருக்கிறதே (MUSCLES ) அது எவ்வளவு தெரியுமா? 630. அதுலே ஏதாவது ஒண்ணு சரியா வேலை செய்யலேன்னா கூட நமக்கு பாதிப்பு தான்.
உடம்பிலே ரத்தம் ஓடுதே அதைப் பற்றி ஒரு விஷயம் சொல்றேன்/ நமது உடம்பு எடை 100 கிலோ என்று வைத்துக் கொண்டால் அதிலே ஓடற ரத்தம் மொத்த எடை 12 கிலோ.
நம் தலைமுடியை யாராவது எண்ணியது உண்டா? யாரோ உட்கார்ந்து ராவும் பகலுமா எண்ணி, ஒரு தடவைக்கு பத்து தடவையா பல தலைகளை எண்ணி ஒரு உண்மையை ஊர்ஜிதப்படுத்தி இருக்கிறார்கள். நம் ஒவ்வொருத்தரின் தலையிலும் குறைந்தபக்ஷம் 1 லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை முடிகள் உள்ளனவாம். அவை 1 மாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றனவாம்.
நம் உடம்பில் வளர்ச்சியை நாம் போட்டோவில் பார்த்து தெரிந்து கொள்கிறோம். குழந்தைகள் பெரியவர்கள் ஆவதை கண்ணால் பார்க்கிறோம். தலை வளரும்போது மண்டை ஓடும் கூட வளரும் இல்லையா? ஆனால் மண்டை ஓடு நம்முடைய 80 ஆம் வயது வரை தான் வளர்கிறது என்று ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.
கடைசியா ஒரு விஷயம் சொல்லிட்டு நிறுத்திக்கிறேன். சிரிக்காதீர்கள். உலகில் உள்ள மனித முகங்கள் எத்தனை வகைகளாக பிரிக்கலாம் என்று ஒரு ஆராய்ச்சி பண்ணி எல்லா முகங்களும் சேர்த்து மொத்தம் 520 விதங்களுக்குள் அடக்கம் என்று சொல்கிறார்கள்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


