LORD SANEESWARA – J K SIVAN

சனீஸ்வர பகவான் – நங்கநல்லூர் J K SIVAN

இன்று சனிக்கிழமை சனீஸ்வர பகவான் நினைவு வருவது சகஜம் தானே. சனீஸ்வரனிடம் நமக்கு பக்தி ஜாஸ்தியா பயம் ஜாஸ்தியா என்றால் என்ன பதில்? பயம் தான். ஏன். அவர் ரொம்ப படுத்துவார் நம்மை என்று வெகுகாலமாக எல்லோரும் சொல்லி நமக்கு அவரைப் பற்றி அப்படி ஒரு அபிப்ராயம். சனீஸ்வரன் பெயர் உண்மையில் சனைச்சரன் மெதவாக நடப்பவன். மற்ற கிரஹங்கள் ஒரு ராசியில் இருக்கும் காலத்தை விட சனைஸ்சரன் வந்து தங்கி கிளம்பி போக ரொம்ப காலம் எடுத்துக் கொள்வான். ரெண்டரை வருஷம். ஒவ்வொருவருக்கும் மூன்று முறை இப்படி ரெண்டரை வருஷங்கள் வரும் என்பதால் அதனால் அவனுக்கு ஏழரை நாட்டான் என்று பெயர் பெயர். ஒருவரை பிடிக்கவில்லையென்றால் அவர் வந்து விட்டால், ”சனி வந்து தொலைந்து விட்டது. சரியான ஏழரை நாட்டான்” என்று முணுமுணுக்கிறோம் அல்லது நெருங்கியவர்களிடம் சொல்கிறேன். அல்லது மனதிலேயே திட்டுகிறோம். சனைஸ்சரன் வந்து போவதை சனிப்பெயர்ச்சி என்று கொண்டாடுவதன் காரணம் என்ன? அவனைத் திருப்தி படுத்தினால் நம்மை ரொம்பப்படுத்த மாட்டான் என்பதற்காக. இது ஒரு வித ஆன்மீக லஞ்சம். அவன் பார்வையால் காரியங்கள் சரியாக நடக்காது, மனக்கிலேசம்,நிம்மதியின்மை, வியாதி, போன்ற பல துன்பங்கள் நேரும் என்று ஒரு பயம். பரிஹார ஸ்தலங்கள் என்று பல கோவில்கள் உள்ளன.எல்லா கோவில்களும் சைவர்கள் விஜயம் செய்பவை. சிவன் மூல விக்ரஹம். சனி நம்மை பிடிப்பதற்குள் நாம் அவனைப் பிடித்து அவன் நல்லது செய்ய வேண்டிக் கொள்ளவேண்டும் என்று தான் பரிகார ஸ்தலங்களுக்கு செல்கிறோம்.

ஆனால் சனீஸ்வரனை நினைப்பதில் ஒரு சங்கடம். பக்தியை விட பயம் அதிகம் பலர் முகத்தில் தெரிகிறது. சனீஸ்வரன் நவக்கிரகங்களில் ஒருவன். நல்லது செய்பவன் என்று ஏனோ ஞாபகம் வருவதில்லை. சனிபெயர்ச்சி அன்று எல்லா கோவில்களிலும் அதிக கூட்டம் ஏன்? சனிதோஷம் விலக பரிஹாரம் தேடத்தானே . நமது தேசம் முழுதும் சனி பகவான் கோவில்கள் சில முக்கியமானவை. எனக்கு எல்லா சனி பகவான் கோவில்களுக்கும் செல்லும் வாய்ப்பு இது வரை கிடைக்க வில்லை. சனீஸ்வரன் நியாயவாதி. நேர்மையானவன். நல்லவன். நல்லதே செய்பவன். வீட்டில் அவன் படத்தை, விக் ரஹத்தை வைத்து வணங்குபவர்களை இதை எழுதும் வரை 85 வருஷங்களாக பார்க்கவில்லை.

சூர்ய பகவானுக்கு ரெண்டு பிள்ளைகள் பெரியவன் யமன். சின்னவன் சநைஸ் சரன். பெரியவன் ஆயுளை முடிப்பவன். சின்னவன் நீண்ட ஆயுளைக் கொடுப்பவன். எல்லா கோவில்களிலும் நவகிரஹ சந்நிதியில் சனி பகவான் இருந்தாலும் சில கோவில்களில் பிரதான தெய்வமாக இருக்கிறார். சனிபகவான் சந்நிதியில் யாரும் நேரே அவரை நின்று பார்ப்பதில்லை. நம் பார்வை தான் அவர் மேல் படவேண்டும். அவர் பார்வை படவேண்டாம் என்பார்கள்.

சனீஸ்வரன் பிறந்த நாள் புராட்டாசி சனிக்கிழமை ரோஹிணி நக்ஷத்ரம். காஸ்யப கோத்ரம். அம்மா சாயா தேவி.அப்பா சூர்யன். காக்கை வாஹனம். கருப்பு நிறம். ரொம்ப நீதி நியாயவான்.

வடக்கே மஹாராஷ்டிராவில் சனி சிங்கணாப்பூர் என்ற இடத்தில் ரொம்ப பெரிய கோவில். அஹ்மத் நகரில் தேவாஸா எங்கிற கிராமத்தில் 5 1/2 அடி உயர கருப்பு கல் ரூபத்தில் அருள் பாலிக்கிறார். மேலே கூரை இல்லாத கோவில். உலகப்ரஸித்த சனி பகவான் கோவில். ஏக்கர் கணக்கான பரப்பளவு கொண்ட கோவில். சென்று பார்த்து அதிசயித்தேன்.

பம்பாயில் தியோனார் அருகே ஒரு சனீஸ்வரன் கோவில். 7 அடி உயர சனி பகவான் கருப்பாக நிற்கிறார். சனிக்கிழமைகளில் பூஜை முடிந்து அர்ச்சகருக்கு சாமி வந்து சனீஸ்வரன் அருள் வாக்கு சொல்கிறாராம்.

மஹாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் தித்வாலா எனும் ஊரிலும் ஒரு சனி பகவான் இருக்கிறார். புராதன கோவில்.

தெற்கே தமிழ்நாட்டின் அருகே புதுச்சேரி காரைக்கால் பக்கம் திருநள்ளாறு க்ஷேத்ரத்தில் அற்புதமான தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனி பகவான் தனி சந்நிதியோடு இருக்கிறார். தரிசிக்காத ஹிந்துக்களே இல்லை எனலாம். அங்கே நள தீர்த்தத்தில் நீராடியோ அல்லது ஜலத்தை ப்ரோக்ஷணம் பண்ணிக்கொண்டூ சனீஸ்வர பகவானை வணங்கினால், ஏழரை சனி போன்ற பிரச்னைகள் தீரும். திருஞான சம்மந்தர், சுந்தரர், அப்பர் என மூவராலும் பாடல்பெற்ற இந்தத் திருத்தலம், காவிரி தென்கரையில் 52-வது சிவ ஸ்தலம்.

டில்லியில் சனி தாம் என்று சந்தர்பூர் சாலையில் ஒரு சனீஸ்வரன் கோவில் இருக்கிறது. நான் இன்னும் சென்று தரிசிக்கவில்லை. பதேபூர் பெரி அருகே அசோலோ பக்கமாம். சக்தி பீடமாக சனீஸ்வர ஆலயம் திகழ்கிறது. உலகத்திலேயே ரொம்ப பெரிய சனி பகவான் இங்கே தான். பக்தர்களே சனிபகவானை தொட்டு பூஜை பண்ணுகிறார்கள். கடுகு எண்ணெய் அபிஷேகம். நம் ஊரில் நல்லெண்ணெய் தான் பிரதானம்.
மத்திய பிரதேசத்தில் சனி சாரா கோவில் ஒன்று சனி பர்வதம் என்ற பகுதியில் இருக்கிறது. குவாலியரிலிருந்து 25 கி.மீ. ஹனுமான் லங்கையை வாலால் எரித்த பின் சனி பகவான் அவரை சந்தித்த இடம். விக்ரமாதித்யன் கட்டிய கோயில் என்கிறார்கள்.
இந்தூரில் ஒரு சனி பகவான் இருக்கிறார். மராத்தி ராணி ஹோல்கர் வம்சத்தவள் அஹல்யா பாய் கட்டிய கோவில். அதற்கு முன்னாலே யும் புராண காலத்து கோவில் தான். கோபால் தாஸ் திவாரி என்ற கண் தெரியாதவர் கனவில் சனி பகவான் வந்து மலையில் ஒரு இடத்தில் தோண்டி எடுத்த கோவில் என்று சொல்கிறார்கள்.

”எனக்கு கண் தெரியாதே நான் எப்படி உன்னை கண்டுபிடிப்பேன்?”
“கண்ணை திறந்து பார் தெரியும்” என்றான் சனீஸ்வரன்.
திவாரிக்கு கண் திறந்து மலையைத் தோண்டி சனீஸ்வரன் சிலை அகப்பட்டது என்று கதை செல்கிறது. சனைஸ்சரன் சனீஸ்வரன் ஆகி நவகிரஹங்களில் சனி ஒருவருக்கே ஈஸ்வரன் பட்டம் தானாகவே கிடைத்துவிட்டது.

ஆந்திர தேசத்தில் தெலுங்கானாவில் மேடக் மாவட்டத்தில் எர்டானுர் என்ற கிராமத்தில் ஒரு சனீஸ்வரன் கோவில் இல்லிறது. சனிபகவான் 20 அடி உயரம். அண்ணாந்து பார்த்து வேண்டிக்கொள்ள வசதி. யார் தலையும் மறைக்காது.
ஆந்திராவிலேயே இன்னொரு இடத்தில் மண்டபள்ளி என்கிற ஊரில் மாண்டேஸ்வர சுவாமி கோயில் சனி பகவான் சந்நிதி ரொம்ப விசேஷம்..
கர்நாடகாவில் உடுப்பிக்கு பக்கத்திலேயே பன்னஞ்சே என்ற ஊரில் ஒரு சனி க்ஷேத்திரம் உள்ளது. 23 அடி உயர சனி பகவான் பக்தர்களை ரக்ஷிக்கிறார்.
நம் தமிழகத்தில் தேனீ பக்கத்தில் குச்சனுரில் உள்ள ஸ்வயம்பு சனீஸ்வரன் பிரபலமானவர். சனிப் பெயற்சியின் போது நிற்க இடம் தேடவேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் கோரி மெட்டுக்கு அருகே மொரட்டாண்டி என்ற கிராமம். அங்கே வெட்டவெளியில் 27 அடி உயரத்தில் சனி பகவான் நிற்கிறார். நான் பார்த்திருக்கிறேன். “பக்தானுக்ரஹ ஸ்ரீவிஸ்வரூப மகாசனீஸ்வரர்’ என நீளமான பெயர். பஞ்சலோக விக்ரஹம். பீடத்தையும் சேர்த்தால் 33 அடி . ரொம்ப பெரியவர். இங்கே அவர் வாஹனம் காக்கை இல்லை கழுகு. ஆகமம் அப்படி தான் சொல்கிறதாம். நான்கு கரங்கள். மேல் வலதுகரத்தில் அம்பும், இடது கரத்தில் வில்.கீழ் வலது, இடது கரங்கள் அபயம், வரத ஹஸ்தங்கள். நல்ல கூட்டம் எப்போதும்
சனியை பொங்கு சனி மங்கு சனி என்று அழைப்பது வழக்கம். சனி தசையின் பொது கஷ்டங்கள் மேலேமேலே வந்தால் மங்குசனி. அதிர்ஷ்டங்கள் நிறைய அடித்து எதிர்பார்க்காத நன்மை,சுகம் கிடைத்தால் அந்த சனிதசை பொங்கு சனி. வாரியும் கொடுப்பான், வாரியும் விடுபவன் சனி.

பொங்கு சனி பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2569

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;