TO THINK AND ACT – J K SIVAN

நிதானமாக படித்து  சிந்திக்க …  நங்கநல்லூர்  J K SIVAN
கீழே கண்டவை   என்னுடைய  பொன்மொழிகள் அல்ல. நாம் ரசித்து படித்தவற்றிலிருந்து எடுத்த ரத்ன சுருக்கம் என்று தலையாட்டலாம்.  மஹா  பெரியவா போன்ற மஹான்களின் வாக்குகளிலிருந்து சேகரிக்கப்பட்டது என்பது தான் சரியான  வார்த்தை.  சுருக்கமாக இருந்தால்  ‘சுருக்’  கென  மனதில் பதியுமே என்பதற்காக  என்னால்  சுருக்கப்பட்டது. யாருமே  படிப்பதற்கு முன்னால்  எவ்வளவு நீளம் என்று தான் பார்க்கிறார்கள். சின்னதாக இருந்தால் மட்டுமே  படிக்கிறார்கள். நல்ல பல விஷயங்கள் இப்படி  அறியாமலேயே மறைந்து போகிறது.
“பாப  எண்ணங்கள், சிந்தைனகளைப்   போக்குகிற  புண்ய சிந்தனைக்கு  பேர்  —- பரோபகாரம்.  சேவை மனப்பான்மை,  தியாகம் எல்லாம்.    மொத்தத்தில் ” அன்பு”.

“தனக்கு” என்கிற  நினைப்பு,   அசூயை , வஞ்சனை  எதுவுமே  இல்லாமல்  ஒரு காரியம்  செய்கிறபோது தான் அதில்  முழு ஈடுபாடு உண்டாகிறது.  

நாம் செய்கிற கருமம் எப்படிப் பாபமாகிறது?  “நமக்காக” என்று  ஆசையோடு  இதை  அடைந்தே விடவேண்டுமென்று  ஒரு வெறியோடு அலைகிற போது தான்,   அதை  அடைய எவ்வித தவறையும் செய்யத்  தூண்டுகிறது. அதால்,  சித்தத்தில் வெறுப்பு மனப்பான்மை, துக்கம், பயம்,   போன்ற அழுக்குகள்  வண்டி வண்டியாக  சுமக்கிறோம். இது  தேவையா?

மேலை நாட்டில்  சக்தியும் ஜடப்பொருளும் ஒன்றே  என்ற  தவறான முடிவை நம்பிய  விஞ்ஞானிகள் அந்த அறிவில் தான்  அணுகுண்டு தயாரித்தார்கள்.இது ரொம்ப வருத்தப் படவேண்டியது.  இதனால்   விளைந்த நாசம் என்ன  நஷ்டம் என்ன    என்பது மறந்து விட்டதா?  ஜப்பானில் ஆடம் பாம் ATOMBOMB  ஹிரோஷிமா, நாகசாகி…!!!விஞ்ஞானம், புத்தி அளவில் நின்றதன் விபரீதம்  இது.  

நாம் கண்ணால் மட்டும்  பார்த்துவிட்டு  ரோஜா,   மல்லி,  ஊமத்தை என்று  ரகம்  பிரிக்கிறோம்?  கண்ணுக்கு  அந்த  சேதியைச்  சொல்வது  புத்தியில் விளையும்  ஞானம் அல்லவா?   புத்தி  முழுதும்  ஞானம்  வியாபித்தால்  ரோஜா,  ஊமத்தை,  ரெண்டையுமே  ஒன்றாக ஞானி அறிகிறான்.   அபேத ஞானம்  இது.  நமக்கு ஞானம் இல்லாதபடியால், வேறு வேறாக பார்க்கிறோம்.  வித்யாசங்கள்  வாழ்வில்  பங்கு  பெறுகின்றன.  உண்மை  ஏன் விளங்கவில்லை ? காரணம் நமது  சித்தம்  பூரா  நிரம்பி  இருக்கும்  ”பேதம் , வித்யாசம்,  பாரபட்சம்” என்கிற அழுக்கு. அதை முதலில் அகற்ற வேண்டும்.

அகண்டமாக இருப்பவன் ஒருவன்  தான்   சாஸ்வதம்.  உண்மை.சத்யம்.   மற்றது  எல்லாம், நம்மையும் சேர்த்து தான், நினைவு, கனவு, அநித்யமாக  தோன்றி தோன்றி மறைவது.  அழிவது. அழிவற்றது  அல்ல.
ஒருவருக்கு  சொந்தமாக  ஊரில்  கொஞ்சம்  நிலம் இருக்கிறது . அதில் வருஷாவருஷம்  விளைச்சல் அதிகமாகிறது. “இந்த வயல் என்னுைடயது” என்பதால்  விளைச்சல் அதிகமாகும் போது அவருக்கு மனம் குளிர்கிறது. ஆனந்தம் உண்டாகிறது. பிறகு விளைச்சல்  குறைகிறது.   உடனே  அதை விற்று விடுகிறார். மறுபடியும் அதே  நிலத்தில்  விளைச்சல்   கூடுகிறது. இப்பொதெல்லாம் அதை பார்க்கிறபோது  அவரது  மனம் குளிருமா?   “அடடா, போன  வருஷம் நம்மிடம் இருந்தபோது   தரிசாக  வெறும் பொட்டலாக  இருந்தது,  இப்போது  பார் அவன்  அதிர்ஷ்டத்தை” என்று வயிற்றெரிச்சல் உண்டாகிறது.   “எனது” என்ற சம்பந்தம் இருந்த போது  மட்டும்தான், அமோக விளைச்சலால்  குஷி  ஏற்பட்டது.  மற்றவனது  என்கிற   வித்யாசம் வந்தவுடன்  அதே நிலம், அதன் அமோக விளைச்சல்  விஷயம்  அடிேயாடு மாறிவிட்டது.
பைத்தியக்காரன்  ஒருவனிடம்  கொம்பைக்  கொடுத்து   ”இந்தா இதைப் பிடித்துக்கொண்டு  அரைமணி நேரம்  நில்லு”   என்றால் அவனால் முடியாது. வேறு  ஒருவனிடம்   சொன்னால் அவனால்  முடியும்.    ஆனால்  ”இதைப்பற்றியே  மட்டும் அரைமணி  நேரம்  நினைத்துக்கொண்டு  இரு”   என்றால்  எவனாலும்  முடியவில்லையே  ஏன் ?   சித்தம் நாம்  அப்படிச்  சொன்ன மறுகணமே,  ஆயிரக் கணக்கான எண்ணங்களை  மனதில் சினிமாப் படமாக  ஒட்டுகிறதே.  

கொம்பு   விஷயத்தில் நாம்   பைத்தியத்தை  பற்றி  சொன்னோமல்லவா.  அதேபோல்  ஞானிகளுக்கு ”நினைப்பு”  விஷயத்தில் நாம் பைத்தியமாகத் தெரிவோம்.  நமது மனம் எனும் குதிரை  தான்  நிறுத்த  முடியாதபடி  ஓடுகிறதே!! 

வேத அத்யயனம்,  தியானம், பூஜை  ஆகியவற்றை கஷ்டப்பட்டு அப்பியாசம் செய்வதால்  கிடைக்கும்  ஈசுவராநுபவத்தை தெய்வீக சங்கீதத்தின் மூலம், நல்ல ராக, தாள ஞானத்தின் மூலம் சுலபமாகப்  பெறலாம்.  இப்படி , தர்ம சாஸ்திரம் என்னும் ஸ்மிருதியைத் தந்திருக்கும் யாக்ஞவல்க்ய மகரிஷியே    சொல்லியிருக்கிறார்.   கடுமையான  பிரயாசை  இல்லாமல் சங்கீதத்தால்  மோக்ஷ மார்க்கத்தில் போகலாம்  என்கிறார்.    

தேக பலத்தோடு,   அஹிம்சை,  தைர்யம்,   இதோடு  சுய கஷ்ட நஷ்டம்  பாராமல்  பிறரைக்  காப்பவன்  க்ஷத்ரியன்.  தீமையிலிருந்து  பிறரைக்  காப்பதே  ”க்ஷத்ரம்”  என்ற வார்த்தைக்கு அர்த்தம்.  இதை   செய்வது  க்ஷத்ரிய  தர்மம்.  ஒவ்வொருவரும்  முடிந்தவரை  பிறர்க்கு    உதவலாமே.   தோளில்  தூக்கிக் கொண்டு  ஆஸ்பத்ரிக்கு  ஓடினால்  தான்   க்ஷத்ர தர்மம்  இல்லை.    பண உதவி,  வார்த்தையால்  உதவி,  சிறிய  உடல் உதவி,   கூட போதுமே.    

பேசும்போது  எப்போதும்  அளவாகக் கணக்காகப் பேசவேண்டும்.  வளவள வென்று பேசாமல்  சுருக்க மாக  இனிமையாக   பேசக் கற்றுக்  கொண்டால்,  புத்தியில் ஒரு   தாக்ஷண்யம் ,  வாக்கில் ஒரு பிரகாசமும் உண்டாகும். சக்தியும் வீணாகாது.  சண்டை  வராது.   தெரிந்து  தான்    வள்ளுவர்   ”நா  காக்க”  என்றார்.

சுற்றுமுற்றும்  பாருங்கள்  இப்போது  யாராவது எங்கேயாவது  சந்தோஷமாக  இருக்கிறார்களா?   ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்களா?   ஒரு  சுவருக்கு  அப்பால்   இருப்பவனை  யாரென்றே  தெரிய வில்லை.  ஒருவேளை அவனைத் தெரிந்திருந்தால் அது எதாவது  ஒரு    சண்டையின் போதாக இருக்கும். பரஸ்பர சௌஜன்யம்  போய்  விட்டது.  போட்டி,  பொறாமை,  அதன்  இடத்தை  பிடுங்கிக்  கொண்டுவிட்டது.   உறவுகள் விரிசல் கண்டு விட்டது.

 ஒருத்தன் ஆடம்பரமாக இருந்தால் மற்றவர்களுக்கும் அதில் ஆசை உண்டாகுமே!  எலலாருக்கும் எல்லா   ஆசையும் நிறைவேறுமா?  நிறைவேறாததால் ஏமாற்றம் உண்டாகிறது.   அதால்    விரோதம் முளைக் கிறது.  

அரசாங்கம் ஒழுங்காக  நன்றாக  நடந்தால் தானே,  மக்களுக்கு மானம், உயிர் இரண்டும்  காப்பாற்றப் படும்.   தினமும் பேப்பர்  விற்பதே  இது  இல்லாததால்  வரும்  விஷயங்களை  நம்பித்தானே.   பிறர்க்குச் சேவை  செய்து பாருங்கள்.  அதில்  கிடைக்கும்  சுகம்  தனி.    (என்னால் முடிந்தது  ராவும்  பகலும்  எழுதுவது  இது  ஒன்றே  என்  84+  வயதில் சேவை. நல்லவற்றைச்  சொல்லவேண்டும்.  முடிந்தால்  செய்யவும்  வேண்டும்  என்பதே.  இதில்  காசு  குறுக்கே  வரவே  கூடாது. வரவேண்டிய அவசியமே இல்லையே )

உண்மை  பேசு.  முடிந்தவரையில்  பேசு.  அதால்  விளையும்  நன்மையை நீயே   உணர்வாய்.  ஒருவன் உண்மையே பேசி  பழகிவிட்டால்  முடிவில் அவன் எது  சொன்னாலும் அது சத்தியமாகிவிடும்.  இப்படிப்பட்டவன் மனமறிந்து பொய் சொல்லமாட்டான்.  

சத்தியம்   எது?   மனமும், வாக்கும் ஓன்றுபட்டிருப்பது. மனம் சுத்தமாக இருப்பது.  வாக்கு  மிருதுவாக சாந்தமாக இருப்பது.  இதால் தனக்கும்  சித்த சுத்தி.  பிறருக்கும்  க்ஷேமம்.   என்னைப்  பொறுத்தவரை குழந்தைகளிடம் சிறு பிராயத்திலிருந்தே  ஆஸ்திக புத்தியை  வளர்க்க  வேண்டும்  என்பதற்காகவே  நிறைய   நல்ல  விஷயங்களை  குட்டி குட்டி  கதைகளாக எழுதி  புத்தம் வெளியிட்டு   இலவசமாக  கொடுக்கிறேன். புத்தகம் வெளியிட, அச்சிட  பணம் வேண்டி இருக்கிறதே?  அதற்கு அவரவர் மனம் விரும்பி நன் கொடை கொடுப்பதால் .  அச்சுக்காசு DTP  காசு  செலவழிக்க முடிகிறது. வாட்ஸாப்ப், முகநூலிலேழுத காசு தேவையே இல்லை.புத்தகம் வேண்டும் என்றால் தான்  காசு தேடவேண்டும்.
குழந்தைகள்   நமது மத அநுஷ்டானங்களை  விடாமல் பற்றி ஓழுகி, உத்தமமாக வாழ  பெரியோர்கள் பழக்க  வேண்டும்.    நமது  ஆத்ம  க்ஷேமத்துக்காகவே எண்ணற்ற  ரிஷிகள்,  எத்தனையோ  சாஸ்த்ரங் களை  நமக்கு  கொடுத்திருக்கிறார்கள்.   மஹா பெரியவா  சொன்னது  நினைவுக்கு  வருகிறதா?
” எனக்கு  கனகாபிஷேகத்துக்கு  செலவழிக்கிறதை  வேத  சம்ரக்ஷணத்துக்கு  செலவு  பண்ணுங்கள். ‘  தினம் ஒரு மணியாவது  8- 10  வயது  குழந்தைகளுக்கு  வேதம் பரிச்சயம்  பண்ணுங்கள்.  பேட்டைக்கு பேட்டை  இதில்  ஈடுபடுங்கள்  இது  தான்  எனக்கு  உண்மையான  கனகாபிஷேகம். உற்சவம்  எல்லாம் ”’

ரிஷிகள்  என்பவர்கள்  கொம்பு  முளைத்தவர்கள்  அல்ல.  மனித அறிவின்  எல்லையை  மீறி அகண்ட மாக  தன்னைப்  பரிமளித்துக் கொள்பவனே ரிஷி.   அவனால்  வேத மந்த்ரங்கள்  உலகிற்கு கிடைத்தது.    லோக க்ஷேமத்துக்காக தன்னை வருத்திக் கொள்பவன். எனவே  ரிஷிகள்  மந்திரங்களைக் கண்டவர்கள். (”மந்திர  த்ருஷ்டா’) என்று  பேர்  பெற்றவர்கள்.  

இந்து மதம் ஒன்றிலே  தான்   யார்  எந்த   சமய மார்க்கத்தில்  பிரயாணித்தாலும் முடிவில்  ஒரே  பரமாத் மா விடம் ஐக்கியமாவார்கள்   என்று  ஒப்புக்  கொள்ளும் பரந்த  விசால  மனப்பான்மை  கொண்டது. எல் லா சமயங்களுமே  பரமனை வழிபட சாதனமாகும்.

 நாம்   வாழும் இந்த  உலகம்.,   பிரபஞ்சத்தில் ஒரு  காரணம் –  விளைவு  – செயல், –  அதால் விளையும்  பிரதி  செயல்  என்ற  எல்லைக்குள் தான் கட்டுண்டிருக்கிறது.   பௌதிக சாஸ்திரம் [Physics] முழுவதும் இந்த உண்மையைத்தான்  விளக்குகிறது. ஜடப் பிரபஞ்சம்,  ஜீவப்பிரபஞ்சம் இரண்டும் ஒன்றே.  இந்த   விதிப்படி பார்த்தால்   நம்   செயல்கள்  அனைத்துக்கும்  நிச்சயமாகப் பிரதி  பலன் உண்டு. இன்று நாம் அனுபவிக்கிற சுகங்களுக்கும், துக்கங்களுக்கும் காரணம்   இதுவே.  நம் எண்ணத்தால், செயலால் விளைவது.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;