NADATHUR AMMAL 2 – J K SIVAN

இவர்  ஒரு  சிம்ஹாசனாதிபதி 2 –     நங்கநல்லூர்   J K  SIVAN நடாதூர் அம்மாள்
ஸ்ரீ வைஷ்ணவ ஆச்சார்யர்களில் ஒரு தூண் நடாதூர்  அம்மாள்  என்பவர்.
எங்களாழ்வான் ஸ்வாமி  என்ற  ஸ்ரீ வைஷ்ணவ  ஆசார்யன்,   ஏற்கெனவே திருக்குருகைப் பிரான் பிள்ளானிடம் நீண்ட கால பயிற்சி பெற்றவர். திருவெள்ளறையில்தங்கி தனிமையில்  பெருமாளை  தியானம் செய்து வந்தவர்.  எங்களாழ்வான்  விஷ்ணு புராணத்திற்கு  அருமையாக ‘விஷ்ணு சித்தீயம் ‘ என்ற  வியாக்யானம் எழுதியுள்ளார்.  புராணங்களில்   விஷ்ணு புராணம் பிரதானமானது.  இது ஒரு  மாணிக்கம் என சுவாமி ஆளவந்தார்  போற்றியிருக்கிறார். எங்களாழ்வான்  எழுதிய இந்த ஒரு  நூல் மட்டுமே நமக்கு தேறி இருக்கிறது. அதுவே  நாம் செய்த பாக்கியம் எனலாம்.  அவர் எழுதிய  ‘ பிரமேய சங்க்ரஹம்,சங்கதி மாலா, கதய-வியாக்யானம்’   எல்லாம்  பெயரளவில் தான்  நமக்குத் தெரிகிறது.  ஒப்புமை யில்லாத செல்வங்களை  எல்லாம்   இழப்பதில் நமக்கு நிகர்  நாம்  தான். .ஒன்றா இரண்டா?    எங்களாழ்வான்  சில சந்தர்ப்பங்களில் உரைத்த  சில  வார்த்தைகள்இன்றும்  ‘வார்த்தை மாலா’  என்ற  சில ஆச்சார் யர்களின்  சொல் முத்துகள்  கொண்ட  புத்தகத்தில்தற்போது  காண முடிகிறது.  ஒரு இடத்தில்  ஆசார்யன் என்பவனின்  அடிப்படைத்  தன்மைகளையும் , குணங்களையும் ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாய கோட்பாடுகளையும்  ”சாராதா  சதுஷ்டயம்” எனும்   நூலில்  விவரித்திருக்கிறார். எங்களாழ்வானுக்கும்  வரத குருவுக்கும் இடையே   குருவுக்கும் சிஷ்யனுக்குமான  ஒரு சம்பவம்  நிகழ்ந்தது.  ரொம்பவும்  அர்த்த புஷ்டி நிறைந்தது. திருவெள்ளறை சென்ற  வரதகுரு   அவரது விலாசத்தை   பலரிடம் விசாரித்துக் கொண்டு முதன் முதலில்  எங்களாழ்வான் வீட்டை அடைந்து கதவைத் தட்டினார்.  ”யாரப்பா  நீ ?”  ”நான்  வரதன், காஞ்சி  நடாதூர் தேவராஜ மஹா தேசிகன் புத்திரன்” ”யாராயிருந்தாலும் சரி, போ,  நான் செத்த பிறகு வா” திடுக்கிட்ட  வரதன்  அழுதுகொண்டே  வீடு திரும்பினான். என்ன நடந்தது என்று  கேட்ட  அப்பா விஷயம் அறிந்தார்.  ”எதற்காக அப்பா,  நான்  செத்தபிறகு வா”  என்று கோபமாக  என்னைப்பார்த்து அவர் கூறினார்.  நான்  என்ன செய்தேன் அப்படி?” ”மகனே   ஆழ்வார் உன்னைக்  கோபிக்கவில்லை. ‘’நான்”  என்று நீ சொன்னாயே,  அந்த  ”நான்”என்கிற  அஹங்காரம்  அழிந்தபின் என்னிடம்  வா, உபதேசிக்கிறேன் என்று  சொல்லியிருக்கிறார்.  வைஷ்ணவ சம்பிரதாயத்தில்  ”நான்” கிடையாதே.  ”அடியேன்” அல்லது  ”தாசன்” என்று  தானே  தன்னை  அறிமுகப்  படுத்திக் கொள்ளவேண்டும். வரதனுக்கு   உண்மை  விளங்கியது.  நேரே  திருவெள்ளறை  மீண்டும்  சென்று  எங்களாழ்வான் வீட்டுக் கதவைத் தட்டினான்.  ஆழ்வார் கதவைத் திறக்கு  முன்  ”யார் அது  வந்திருப்பது ?” என்றார் ”  ”அடியேன்  வரதன் வந்திருக்கிறேன் சுவாமி ‘ ஆழ்வான்  மகிழ்ந்து  அவரை  வரவேற்கிறார். வரதன்  ஆழ்வானின் திருவடிகளில்   சரணாகதி அடைந்தான். அவர் அவனை  உச்சி முகர்ந்து  புத்ரன் இல்லாத ஆழ்வான் வரதனை ஏற்று  பிள்ளையாக  வளர்த்து ஆளாக்கினார்.   ஆசார்யனோடு பல ஸ்தலங்களுக்கு, ஆலயங்களுக்கு எல்லாம்  சென்று கடைசியில்  கொல்ல  கொண்டா  என்ற வில்லிப் புத்தூர் அருகே உள்ள  ஒரு சிறு  கிராமத்தை அடைந்தார்கள். ‘எங்களாழ்வான்  விஷ்ணு  புராணத்துக்கு  உரை  எழுதின  சில  காலத்திலேயே பரமபதம் அடைந்தார்.  பிள்ளையாக  வரத சூரி அவருடைய அந்திம  கிரியைகளை  ஸ்ரத்தையாகசெய்தார். அவருடைய  அர்ச்ச விக்ரஹத்தை  திருவெள்ளறையில்பிரதிஷ்டை செய்தார். அவர் காலடியில் அமர்ந்தவாறு காட்சியளிக்கிறார்.  நடாதூர் அம்மாள் சுவாமிகள்  காஞ்சி வரதராஜனுக்கு தினமும்  பெற்ற தாய்  தனது சேய்க்கு அளிப்பது போல்  வெது வெதுப்பான பால் கைங்கர்யம் செய்து வந்தவர்.  அதனால் தானே  காஞ்சி  வரதராஜனே   அவரை ”அம்மா” என்று ஆசையோடு அழைத்தான்.   பேரருளாளனான காஞ்சி  வரதன் மேல்  கொண்ட  அளவற்ற தாயினும் சிறந்த  அன்பினால்  அவர்  ஊரான நடாதூர் என்பதுடன் அம்மாள்  என்ற பெயரும் ஒட்டிக்கொண்டு  அவர்  நடாதூர் அம்மாள் என்றே  அனைவராலும் மரியாதையோடு அழைக்கப்பட்டார்.    . நடாதூர் அம்மாள்  தத்வ சாரம்  என்கிற  த்யான  ஸ்லோகத்தில் தனது  ஆச்சார்ய  பக்தியை எழுதியுள்ளார்.  எங்களாழ்வான் மகள் குடும்பத்தார்  திருவெள்ளறையில்  அந்த  அர்ச்ச மூர்த்தியை  பாதுகாத்துவழிபாடு செய்துவருகிறார்கள்.   அம்மாளாசார்யார்  என்று  பேர் பெற்றிருக்கிறார்கள்.  தனது குருவுக்கு  தான்  இயற்ற வேண்டிய கடமைகள் முடித்து  நடதூர் அம்மாள்  காஞ்சிபுரம் திரும்பினார்.   காஞ்சியில் பெருமாளின் சந்நிதிக்கு  கிழக்கே   ‘வைத்தான்  மண்டபம்’  என்று  ஒரு  மண்டபம். அதில்  நடாதூர் அம்மாள்  ஸ்ரீ பாஷ்யம் உபன்யாசம் செய்ய ஆரம்பித்தார். இந்த இடத்தை ஏன் அம்மாள் சுவாமிகள்  தேர்ந்தெடுத்தார் என்பதற்கும் ஒரு காரணம்  சொல்கிறார்கள். இங்கு தான் திருக்கச்சி நம்பிகள்  ராமானுஜருக்கு  விடுத்த  ஸ்ரீ பாஷ்யத்தில் ஆறு கேள்விகளின் பதில்கள் பெருமாள் அருளால் விளைந்தனவாம்.  பெருமாளே  கூறிய அந்த ஆறு பதில்களை கீழே காணலாம்.
1) நான் ஸ்ரீயின்  பதி.  பிரம்மம் ஆக அறியப்படுபவன்.
2)  ஜீவர்கள்  ஒருவரில் ஒருவர்  வேறுபட்டாலும், என்னில் வேறுபட்டவரே ஆவர்.   இதுவே என் ”பேத” சித்தாந்தம் 3) என்னை அடைவதற்கு சரணாகதி ஒன்றே  சிறந்த  சுலபமான வழி.4)என்னைச் சரணடைந்தவன் தனது அந்திம காலத்தில் என்னைப் பற்றி எண்ணவேண்டிய அவசியமே இல்லை. 5) முக்தி ,மோக்ஷம்  என்பதெல்லாம்  இந்த  பஞ்ச பூதங்களாலான அழியும்  தேகத்தை விடுத்தபிறகே தான்  கிடைக்கும்.6) ஸ்ரீ  பெரிய நம்பிகள்  தான்  ஸ்ரீ  ராமனுஜரின்குரு.  நடாதூர் அம்மாள் பல க்ஷேத்ரங்களுக்கு  விஜயம் செய்தார்,  பல  வாதங்களில் சைவர்களையும்  மத்வர்களையும் வென்றார்.  சேதுவில் சிவசூலர் என்கிற சைவர், சோழ ராஜா அரண் மனையில் அனந்த மாதவாசார்யர், காசி ராஜன் முன்னிலையில் கும்பிசுதன் எனும் தீவிர சைவர்  ஆகியோர்  அவருடன் நிகழ்ந்த  வாதத்தில்  தோற்றவர்கள். ராஜா   நடாதூர் அம்மாளை,மரியாதை களோடு சாரதா பீடத்தில் அமர்த்தினான்.  க்ஷேத்ராடனம் முடிந்து அம்மாள்  காஞ்சி திரும்பினவர்   ஸ்ரீ பாஷ்ய  உபன்யாசத்தில்ஈடுபட்டார். அவருக்கு மதுரமான  குரலும்   தெளிவான உச்சரிப்பும்   இருந்ததால் கேட்பவர்கள் பரவசம் அடைந்தனர்.  ஸ்ரீ  நடாதூர் அம்மாள்  படைத்த காவியங்கள்:   1.தத்வசாரம் – –  மிகச்சிறந்த நூல். 100 ஸ்லோகங்களைக் கொண்டது. ஸ்ரீ பாஷ்யத்தை சிறப்புற விளக்குகிறது. 2.ப்ரபன்ன பாரிஜாதம்
3.பிரமேய மாலா
4.ஆஹ்னிக சூடாமணி 5 ஆராதனா கிரமம் .6. பிரமேய சாரம்
7.மங்களா ஸாஸனம்
8.ஞான சாரம்
9.ஜயந்தி நிரூபணம் 10.எதிராஜஸ்தவம்
11.ரஹஸ்ய  ஸங்க்ரஹம்
12.சதுர் லக்ஷண ஸங்க்ரஹம்
13.பர தத்வ நிர்ணயம் 14.த்ரமிடோபநிஷத்  ஸங்க்ரஹம் 15.ஸ்ரீ பாஷ்ய ஸங்க்ரஹம் 16. பரமார்த்த ஸ்லோக த்வயம்17.யதிலிங்க சமர்த்தனம்
பிற  நூல்கள்: பரத்வாதி பஞ்சகம்,  கஜேந்திர மோக்ஷ ஸ்லோக த்வயம், சரமோபாய ஸங்க்ரஹம்,  பிரதரனுசதேய ஸ்லோகம் இன்னும் பிற.  தொடரும்  

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;