BALAMUKUNDHASHTAKAM – J K SIVAN

பாலமுகுந்தாஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN

உள்ளம் கொள்ளை போகுதே..

கேரளத்தில் குருவாயூரில் இன்றும் நாம் தரிசித்து மகிழும் குட்டி கிருஷ்ணன், குருவாயூரப்பனின், பக்தர்களில் ஒருவர் வில்வமங்களத்து சாமியார். எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிருஷ்ண பக்தர். அவர் எழுதிய சுவடிகளில் ஏதோ ஒன்று வங்காளத்தில் உதித்த சைதன்ய பிரபு, ஆந்திரா வந்தபோது கிடைத்தது. ஸமஸ்க்ரிதம் என்பதால் அதன் ருசி உணர்ந்து சிலரை திருவனந்தபுரம் அனுப்பினார். அப்படி கிடைத்தது தான் கிருஷ்ணகர்ணாம்ருதம்.

”டேய் என்னோடு வா” என்று பில்வமங்கள் சாமியார் ( லீலா சுகர் என்றும் பலருக்கு அவர் அறிமுகம்) கூப்பிட்டால் குருவாயூரப்பன் அவர் பின்னாலேயே போவான். இந்த சுவாமியார் எழுதியது தான் கிருஷ்ண கர்ணாம்ருதம். இன்றும் பலரால் பாடப்பட்டு வரும் ஸ்லோகங்கள் அவர் இயற்றியவை. 300க்கும் மேலே. அவரது பாடல்களில் கிருஷ்ணனை பாலக்ரிஷ்ணனாகவும் வாலிப கிருஷ்ணனாகவும் காண்கிறோம். கிருஷ்ண கர்ணாம்ருதம் பாடல்களை பின்னர் அறிவோம். அதற்கு முன் இந்த குட்டி எட்டு ஸ்லோகங்கள் கொண்ட பால முகுந்தாஷ்டகம் தெரிந்து கொள்வோம்.

करारविन्देन पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तम् ।
वटस्य पत्रस्य पुटे शयानं बालं मुकुन्दं मनसा स्मरामि ॥१॥

Kara-Aravindena Pada-Aravindam Mukha-Aravinde Vi-Niveshay-Antam |
Vattasya Patrasya Putte Shayaanam Baalam Mukundam Manasaa Smaraami ||1||

கராரவிந்தேன பதாரவிந்தம் முகாரவிந்தே விநிவேசயந்தம் |
வடஸ்ய பத்ரஸ்ய புடே சயானம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி ||

குட்டி கிருஷ்ணனை நினைத்தால் அவன் சிவந்த தாமரைப் பாதங்கள் தான் நம் முன் தோன்றுகிறது.பிஞ்சு கரங்களால் தனது கால் கட்டைவிரலை வாயில் வைத்து சுவைக்கும் ஆலிலை கிருஷ்ணன் பார்த்திருக்கிறீர்களா? வடபத்ரசாயி என்று ஸமஸ்க்ரிதத்தில் ஆலிலைகிருஷ்ணனுக்கு பெயர்.

संहृत्य लोकान् वटपत्रमध्ये शयानमाद्यन्तविहीनरूपम् ।
सर्वेश्वरं सर्वहितावतारं बालं मुकुन्दं मनसा स्मरामि ॥२॥

Samhrtya Lokaan Vatta-Patra-Madhye Shayaanam-Aady[i]-Anta-Vihiina-Ruupam |
Sarve[a-Ii]shvaram Sarva-Hita-Avataaram Baalam Mukundam Manasaa Smaraami ||2||

ஸம்ஹ்ருத்ய லோகான் வடபத்ரமத்யே சயானமாத்யந்த விஹீனரூபம் | ஸர்வேச்வரம் ஸர்வஹிதாவதாரம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி ||

மஹா பிரளயத்தின் பொது சர்வ ஜீவராசிகளும் மறைந்தபோது ஆலிலையில் மிதந்துவந்தவன் என்று சொல்வார்கள். உலகத்தையே மீண்டும் ஸ்ரிஷ்டித்தவன். அவன் ஆதி அந்தமில்லாதவன். சர்வ லோக நாயகன். எந்தனுள்ளம் கொள்ளை கொண்டவன்.

इन्दीवरश्यामलकोमलाङ्गं इन्द्रादिदेवार्चितपादपद्मम् ।
सन्तानकल्पद्रुममाश्रितानां बालं मुकुन्दं मनसा स्मरामि ॥३॥

Indiivara-Shyaamala-Komala-Anggam Indra-[A]adi-Deva-Arcita-Paada-Padmam |
Santaana-Kalpadrumam-Aashritaanaam Baalam Mukundam Manasaa Smaraami ||3||

இந்தீவரச்யாமள கோமளாங்கம் இந்த்ராதி தேவார்ச்சிதபாதபத்மம் |
ஸந்தான கல்பத்ருமமாச்ரிதானாம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி ||

இந்த குட்டிப் பையன் கருப்பன், கருநீல வர்ணன். கார்மேகவண்ணன். மெத்து மெத்து என்று இருப்பவன். இந்திராதி தேவர்கள் சரணடைந்து பணிந்து வணங்கும் அந்த சின்னஞ்சிறு பதங்கள் பார்க்கத்தான் சின்னவை. மூன்று உலகத்தையும் இரண்டு அடிகளில் அளக்க வல்லவை. கேட்ட வரம் தருபவை.

लंबालकं लंवितहारयष्टिं शृङ्गारलीलाङ्कितदन्तपङ्क्तिम् ।
बिंबाधरं चारुविशालनेत्रं बालं मुकुन्दं मनसा स्मरामि ॥४॥

Lamba-Alakam Lamvita-Haara-Yassttim Shrnggaara-Liila-Angkita-Danta-Pangktim |
Bimba-Adharam Caaru-Vishaala-Netram Baalam Mukundam Manasaa Smaraami ||4||

லம்பாலகம் லம்பிதஹாரயஷ்டிம் ச்ருங்கார லீலாங்கிததந்தபங்க்திம் |
பிம்பாதரம் சாருவிசாலநேத்ரம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி ||

உருண்டு திரண்டு, சுருண்ட மெல்லிய நீண்ட கேசங்கள் கொண்டவன் அந்த அழகன். அழகிய வனமலர்கள் தொடுத்த மாலை அணிந்தவன். முத்துப்போல பல்லழகன். கோவைக்கனி இதழ்களும் அலைபாயும் நீலோத்பல விழிகளும் கொண்டவன். இவனை மனம் நினைக்காமல் இருக்க முடியுமா?

शिक्ये निधायाद्य पयोदधीनि बहिर्गतायां व्रजनायिकायाम् ।
भुक्त्वा यथेष्टं कपटेन सुप्तं बालं मुकुन्दं मनसा स्मरामि ॥५॥

Shikye Nidhaaya-Adya Payo-Dadhiini Bahir-Gataayaam Vraja-Naayikaayaam |
Bhuktvaa Yathessttam Kapattena Suptam Baalam Mukundam Manasaa Smaraami ||5||

சிக்யே நிதாயாத்யபயோததீநி பஹிர்கதாயாம் வ்ரஜநாயிகாயாம் |
புக்த்வா யதேஷ்டம் கபடேன ஸுப்தம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி II

திருடன் அவன். மனமாகிய வெண்ணை திருடி. உறியில் சட்டியில் திருடிய வெண்ணை நம் இதயத்தை கொள்ளை கொள்வதை குறிக்கிறதோ. அதனால் தான் அவனை உள்ளங்கவர் கள்வன் என்கிறோமோ? அவனுக்கு அவன்
உடல் மட்டும் நிழல் அல்ல. வ்ரஜ பூமியில் வசித்த அனைத்து கோபியரும் தான். அவனை இணை பிரியாதவர்கள். ஆயர்பாடி மாளிகையில் தூங்குவது போல் நடிப்பவன்.

कलिन्दजान्तस्थितकालियस्य फणाग्ररङ्गे नटनप्रियन्तम् ।
तत्पुच्छहस्तं शरदिन्दुवक्त्रं बालं मुकुन्दं मनसा स्मरामि ॥६॥

Kalinda-Ja-Anta-Sthita-Kaaliyasya Phanna-Agrar-Angge Nattana-Priyantam |
Tat-Puccha-Hastam Sharad-Indu-vaktram Baalam Mukundam Manasaa Smaraami ||6||

களிந்தஜாந்தஸ்தித காளியஸ்ய பணாக்ரரங்கே நடனப்ரியந்தம் |
தத் புச்சஹஸ்தம் சரதிந்துவக்த்ரம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி ||

யமுனையில், காளிந்தி நதி பிரதேசத்தை ஆக்கிரமித்த கொடிய விஷம்கொண்ட காளிங்கன் சிரத்தில் குதித்து நடமாடி, அவன் தவறு செய்தாலும் அவனைக் கொல்லாமல் உயிர் பிச்சை அளித்து அப்புறப்படுத்தியவன். சிறிய ஒரு கையால் காளிங்கன் வால் நுனியை பிடித்துக் கொண்டு ஒரு கால் தூக்கி படமெடுத்து ஆடும் காளியன் தலையில் பால கிருஷ்ணன் நிலவொளி வீசும் வதனத்தில் ஆனந்த புன்முறுவலுடன் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் காட்சி காளீய நர்த்தனம் என்று நிறைய சிலைகளாகவும், படங்களாகவும் பார்த்ததெல்லாம் இதோ வரிசையாக கண் முன் தோன்றுகிறது.

उलुखले बद्धमुदारशौर्यं उत्तुङ्गयुग्मार्जुनमङ्गलीलम् ।
उत्फुल्लपद्मायतचारुनेत्रं बालं मुकुन्दं मनसा स्मरामि ॥७॥

Ulukhale Baddham-Udaara-Shauryam Uttungga-Yugma-Arjunam-Angga-Liilam |
Utphulla-Padma-[A]ayata-Caaru-Netram Baalam Mukundam Manasaa Smaraami ||7||

உலூகலே பத்தமுதாரசௌர்யம் உத்துங்க யுக்மார்ஜுன பங்கலீலம் |
உத்புல்ல பத்மாயத சாருநேத்ரம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி ||

விஷமம் தாங்கமுடியவில்லை என்று அன்னை யசோதை அவனை ஒரு கல் உரலோடு கயிற்றால் பிணைத்து வயிற்றில் கட்டியபோது அந்த கட்டுண்ட மாயன் கண்களில் ஜலம் ததும்ப அன்னையிடம் கட்டுண்ட காட்சி மறக்க முடியுமா? அதையே சாக்காக வைத்தல்லவோ குபேரனின் புத்திரர்கள் நளகூபன், மணிக்ரீவன் ஆகியோருக்கு சாப விமோசனம் அருளினான். இரு மருதமரமாக நின்ற அவர்களுக்கிடையே உரலோடு சென்று மரங்களை சாய்த்து அவர்களை விடுவித்து விண்ணுலகுக்கு அனுப்பினான். அடே பாலமுகுந்தா நீ படே ஆள்.

आलोक्य मातुर्मुखमादेण स्तन्यं पिबन्तं सरसीरुहाक्षम् ।
सच्चिन्मयं देवमनन्तरूपं बालं मुकुन्दं मनसा स्मरामि ॥८॥

Aalokya Maatur-Mukham-Aadenna Stanyam Pibantam Sarasii-Ruha-Akssam |
Sac[t]-Cinmayam Devam-Ananta-Ruupam Baalam Mukundam Manasaa Smaraami ||8||

ஆலோக்ய மாதுர்முகமாதரேண ஸ்தன்யம் பிபந்தம் ஸரஸீருஹாக்ஷம் |
ஸச்சின்மயம் தேவமனந்தரூபம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி II

இதோ ஒன்றுமறியாத பாலகனாக, தாய் மடியில் படுத்து அவள் பாலூட்ட சுவைத்து ருசித்து குடிப்பவனைப் பாருங்கள். தாமரைத் தடாகத்தில் மலர்போல் விழிகள். காக்கும் தெய்வமே நின்னைச் சரணடைந்தேன்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;