

ஸௌந்தர்ய லஹரி 32/103 – நங்கநல்லூர் J K SIVAN
32. ஸ்ரீ வித்யை பஞ்சதசாக்ஷரீ/ஷோடஸாக்ஷரி மந்த்ரம்
शिवः शक्तिः कामः क्षितिरथ रविः शीतकिरणः स्मरो हंसः शक्रस्तदनु च परामारहरयः ।
अमी हृल्लेखाभिस्तिसृभिरवसानेषु घटिता भजन्ते वर्णास्ते तव जननि नामावयवताम् ॥ ३२॥
Sivah saktih kamah kshitir atha ravih sithakiranah Smaro hamsah sakrastadanu cha para-mara-harayah;
Amee hrllekhabhis tisrbhir avasanesu ghatitha Bhajante varnaste tava janani nam’avayavatham.
ஶிவ: ஶக்தி: காம: க்ஷிதி தர ரவி: சீதகிரண: ஸ்மரோ ஹம்ஸ: ஶக்ரஸ் ததனு ச பரா மார ஹரய:
அமீ ஹ்ருல்லேகாபிஸ் திஸ்ருபி ரவஸானேஷு கடிதா பஜந்தே வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம்
இந்த சிவானந்த லஹரி ஸ்லோகம் ரொம்ப விவரமானது, விசேஷமானது. ஆழமானது. சற்று கூர்ந்து மெதுவாக புரிந்து கொண்டால் சுலபமாக புரியும்.
லலிதாம்பிகை உபாசனையான குண்டலினி ஸ்ரீ சக்ர உபாசனையில் பீஜாக்ஷரங்களை விவரிப்பது.
”அம்பிகே, நீ சர்வலோக ரக்ஷகி, சிவ பீஜாக்ஷரம் ‘க’ , சக்தி பீஜம் ‘ஏ’ , மன்மத பீஜம் ‘ஈ’ , பஞ்சபூதங்களில் மண் எனப்படும் ப்ரித்வி பீஜம்: ‘ல’, சூரிய பீஜம் ‘ஹ’ , சந்திர பீஜம் ‘ஸ’ ,ஆகாச பீஜம் ‘ஹ’ , இந்திரன் பீஜம் ‘ல’ , பரா பீஜம் ‘ஸ’ , மன்மத பீஜம் ‘ல’ . இவை எல்லாம் ன்று புவனேசுவரீ பீஜமான ஹ்ரீங்காரங்களுடன் ஒவ்வொரு கூடத்தின் முடிவிலும் கலந்து உன்னுடைய மந்திரத்தின் அங்கங்களை கொண்டவள் ” என்கிறார் ஆதி சங்கரர்.
பஞ்சதஸாக்ஷரி மஹா மந்திரத்தின் பெயர் காதி வித்யை . முதல் அக்ஷரம்: ‘க’. இது இங்கே சொல்லப்படுகிறது.
ஸ்ரீ சக்ர உபாஸனையில் கூட ம் என்கிற வார்த்தையை முன்பே விளக்கி இருக்கிறேன். முதல் கூடம் எனும் சேர்க்கை: வாக்பவ கூடம் (க-ஏ-ஈ-ல-ஹ்ரீம்). இது ப்ரளயகால அக்னிபோல் ஜொலிப்பது. மூலாதார சக்கரத்திலிருந்து மேலே கிளம்பி அனாஹதத்தைத் தொடுவது.
2வது கூடம்: காமராஜ கூடம் (ஹ-ஸ-க-ஹ-ல-ஹ்ரீம்) . இது கோடி ஸூர்ய பிரகாசமாக ஒளிர்வது.
அனாஹத சக்கரத்திலிருந்து மேலே கிளம்பி ஆஞா சக்கரத்தைத் தொடுவது.
3வது கூடம்: சக்தி கூடம் (ஸ-க-ல-ஹ்ரீம்) இது கோடி சந்திர ஒளி கொண்டது. ஆஞ்ஞா சக்கரத்திலிருந்து கிளம்பி லலாட மத்தி வரை பரவுவது.
ஒரு நவரத்ன மாலையில் எண்ணற்ற மணிப் பரல்கள் உண்டோ அப்படி, மூன்று கூடங்களிலும் வித வித வர்ணங்கள் வரிசையாக ஒன்றின் மேல் ஒன்றாக இருப்பதாக வைத்துக் கொள்வோம். மூலாதாரத்தில் உதித்த நாதம் தான் மாலையை இணைக்கும் கம்பி, கயிறு. சரடு. மேலே சொன்ன மூன்று கூடங்களிலும் ஒலிக்கும் ஹ்ரீங்காரத்தில் உள்ள பிந்து கலைகள் மூன்று. அவை வஹ்னி குண்டலினீ, ஸூர்ய குண்டலினீ, ஸோமகுண்டலினீ என பெயர் கொண்டவை.
வாக்பவ கூடம் அம்பாளுடைய முகம். நடுவில் உள்ள காமராஜ கூடம் அவள் கழுத்திலிருந்து கீழே இடுப்பு வரை உள்ள தேஹ பகுதி. சக்திகூடம் தான் அவள் இடுப்பிற்குக் கீழ் பகுதி. இப்படி தான் உபாசகர்கள் த்யானிக்கிறார்கள்.
பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தில் உள்ள உயிர்மெய் எழுத்துக்கள் சாதாரணமானவை அல்ல. அதிலிருந்து தான் பஞ்ச பூதங்களும் தோன்றியது.
பஞ்ச பூதங்களுக்கும் குணம் சப்தம் என்ன என்று சொல்லி இருக்கிறார் ஆதி சங்கரர்.
ஆகாசத்தின் குணம் : சப்தம்
வாயுவின் குணம்: சப்தம், ஸ்பர்சம்
அக்னியின் குணம்: சப்தம், ஸ்பர்சம், ரூபம்
ஜலத்தின் குணம்: சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம்:
மண், ப்ரித்வியின் குணம்: சப்தம்,, ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம்
மொத்தத்தில் இந்த 15 குணங்களும் பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தின் பகுதிகள் என்று லலிதா ஸஹஸ்ரநாமம் ஆசிரியர் பாஸ்கர ராயர் – வரிவஸ்யா ரஹஸ்யத்தில் கூறுகிறார்.
மேலே மூன்று கூடங்கள் 15 மந்த்ரங்களோடு இன்னொன்றும் சேர்ந்தாள் ஷடாக்ஷரி மந்த்ரமிகிறது: அது தான் ஸ்ரீ வித்யா பஞ்சதசாக்ஷரி மந்திரத்தின் 4 வது கூடம் . சந்த்ரகூடம். ரமா பீஜமாகிய ‘ஸ்ரீம்’ மேலே சொன்ன 15 மந்த்ரங்களோடு சேர்கிறது. ஆக பதினாறு கலையுடன்.ஷோடஸாக்ஷரி என்று பரிபூர்ணம் அடைகிறது இது தான் ஸ்ரீவித்யா ரஹஸ்யம். மறைத்து வைக்கப்பட்டுள்ளது தான் ரஹஸ்யம் என்கிறார் ம் லக்ஷ்மீதரர் தனது வியாக்யானத்தில்.
ஜீவனுக்கு நான்று நிலைகள் அவை: விழிப்பு, கனவு, நீண்ட உறக்கம், பரவெளி. இதை ஸமஸ்க்ரிதத்தில் ஜாக்கிரதா (இது தான் 1வது கூடம்), ஸ்வப்னா (2ம் கூடம்) ஸுஷுப்தி (3ம் கூடம்)துரியம் (4ம் கூடம்) என பிரித்து வைத்துள்ளது
காதிவித்யா பஞ்சதசாக்ஷரீ – ஜபம் செய்யும் முறை
அஸ்யஸ்ரீ பஞ்ச தஶாக்ஷரீ மஹாமந்த்ரஸ்ய ஆனந்த பைரவ ருஷி: காயத்ரீச்சந்த: பஞ்சதஶாக்ஷர்யதிஷ்டாத்ரீ லலிதா மஹா த்ரிபுரஸுந்தரீ தேவதா || ‘கஏஈலஹ்ரீம்’ – பீஜம் | ‘ஸகலஹ்ரீம்’ ஶக்தி: | ‘ஹஸகஹலஹ்ரீம்’ – கீலகம் | ஸ்ரீ லலிதாமஹாத்ரிபுர ஸுந்தரீ ப்ரஸாதஸித்த்யர்த்தே ஜபே விநியோக:
‘கஏஈலஹ்ரீம்’, ‘ஸகலஹ்ரீம்’, ‘ஹஸகஹலஹ்ரீம்’ என்ற மூன்று கூடங்களையும் இரண்டுதடவை திருப்பி உச்சரித்துக் கர நியாஸமும் அங்க நியாஸமும் செய்க.
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:
த்யானம்
அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம் த்ருதபாஶாங்குஶ புஷ்ப பாண சாபாம்.
அணிமாதிபி ராவ்ருதாம் மயூகை ரஹமித்யேவ விபாவயே பவானீம்
லம் – இத்யாதி பஞ்ச பூஜா
மந்த்ரஜபம்
‘கஏஈலஹ்ரீம்’, ‘ஸகலஹ்ரீம்’, ‘ஹஸகஹலஹ்ரீம்’
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்விமோக:
த்யானம்: அருணாம் … பவானீம்
லம் – இத்யாதி பஞ்ச பூஜா
ஸமர்ப்பணம்:
குஹ்யாதிகுஹ்ய கோப்த்ரீ த்வம் க்ருஹாணாஸ்மத் க்ருதம் ஜபம் |
ஸித்திர்ப்பவது மே தேவி த்வத் ப்ரஸாதான் மயி ஸ்திரா ||
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



