soundharya lahari 11/103 J K SIVAN

ஸௌந்தர்ய  லஹரி 11/103 –  நங்கநல்லூர்  J K  SIVAN
11. ஸ்ரீ சக்ர வர்ணனை
ஜன்ம ஸாபல்யம்

चतुर्भिः श्रीकण्ठैः शिवयुवतिभिः पञ्चभिरपि प्रभिन्नाभिः शम्भोर्नवभिरपि मूलप्रकृतिभिः ।
चतुश्चत्वारिंशद्वसुदलकलाश्रत्रिवलय-त्रिरेखाभिः सार्धं तव शरणकोणाः परिणताः ॥ 11॥

chaturbhiḥ śrīkaṇṭhaiḥ śivayuvatibhiḥ pañchabhirapi prabhinnābhiḥ śambhōrnavabhirapi mūlaprakṛtibhiḥ ।
chatuśchatvāriṃśadvasudalakalāśratrivalaya- trirēkhābhiḥ sārdhaṃ tava śaraṇakōṇāḥ pariṇatāḥ ॥ 11 ॥

சதுர்ப்பி: ஸ்ரீகண்ட்டை: ஶிவயுவதிபி: பஞ்சபிரபி ப்ரபிந்நாபி: சம்போர் நவபிரபி மூலப்ரக்ருதிபி:
சதுஶ்சத்வாரிம்ஶத் வஸுதல கலாஶ்ர த்ரிவலய: த்ரிரேகாபி: ஸார்த்தம் தவ சரணகோணா: பரிணதா:  

ஸௌந்தர்ய  லஹரி  சட்டென்று  படித்தால் புரிந்து கொள்ள  சிறுகதை இல்லை.  கொஞ்சம்  ஊன்றி  ஆழ்ந்து பொருமையாக படித்து கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ளவேண்டிய ஒன்று.  இந்த ஸ்லோகத்தில்  அம்பாளின் ஸ்ரீ சக்ரம் எப்படி அமைந்துள்ளது என்று விவரிக்கிறார்  ஆதி சங்கரர்.
மொத்தம்  44  முக்கோணங்கள்.  மேற் புறம்  நோக்கி  4 முக்கோணங்கள் . அது சிவ சக்ரம். 4 முக்கோணங்கள் கீழ் நோக்கி. அது சக்தி சக்ரம். இதை பின்னி பின்னி  மற்ற முக்கோணங்கள், மையத்தில் உள்ள  முக்கோணம் தான் பிந்து.  அதை முக்கோணமாக  எடுத்துக் கொள்ளாவிட்டால் மற்றவை 43  கோணங்கள்+1 பிந்து. இந்த  44  கோணங்களையும் சுற்றி  ரெண்டு  தாமரைகள்.  உள்ளே  இருக்கும்  தாமரை மலருக்கு  8 இதழ்கள். வெளிப்புறம் இருக்கும்  ரெண்டாவது தாமரைக்கு  16  இதழ்கள்.  இந்த  ரெண்டு  தாமரைகளுக்கும் வெளியே  3 வட்டங்கள்.  அதற்கு 4 வாசல்கள். ஸ்ரீ சக்ரத்துக்குள் நுழைய வெளியேற இவை தான்  கதவுகள். உள்ளே புகுவது தான்  ஆத்ம ஞானம்.  வெளியே  புறப்படுவது தான் பிறப்பு. உள்ளே போவது அம்பாளை அடைய . வெளியில் போவது அவளிடமிருந்து.   சக்ரங்களுக்கு வெளியே சதுரங்கள்.  த்ரை லோகாய மோஹனம் என்று அதற்கு பெயர். ஸ்ரீ சக்கரத்துக்கு  கோட்டைச் சுவர்கள்  இவை. திரிபுரா  தேவி கட்டுப்பாட்டில் உள்ளவை. ஒவ்வொரு  சுற்று சுவருக்கும்  ஆவரணம் என்று பெயர்.  ஒவ்வொரு யோகினி அதிபதி அதற்கு.  முதல் ஆவரண யோகினி  ப்ரகட யோகினி.    கோட்டையின் வெளிச்சுவர்களை பாதுகாக்கும் 10  தேவதைகள்   சித்திகளை கொண்டவர்கள். அஷ்ட மாதாக்கள், ப்ராஹ்மி  வராஹி  போன்றவர்கள்,.  அவர்களின் பதிகள்  தான்  அஷ்ட  பைரவர்கள்.  அஸிதாங்க  பைரவர், ருரு பைரவர் என்கிறோமே  அப்படிப்பட்டவர்கள். லலிதா ஸஹஸ்ரநாமத்தில்  இவர்களை பற்றி அறிகிறோம்.  ஆகவே  இதிலிருந்து முதல் சுற்றில் 10 +8+10 தேவதைகள். 28 பேர்.  இவர்களை வணங்கி  ஆசி, அனுமதி பெற்று தான் அடுத்த  சுற்றுக்கு முன்னேறவேண்டும்.
ரெண்டாவது சுற்று   ஸர்வாஸ  பரி பூரகம் . சாதகனுக்கு ஆன்மீக  நம்பிக்கையை அருள்வது.  இதற்கு அதிபதி த்ரிபுரேஸி . யோகினி குப்த யோகினி.  மூன்று வட்டங்கள், அதற்குள்  16  தாமரை இதழ்கள். 16 இதழ்களுக்கும்  ஒரு தேவதை.  அவர்களை வணங்கி விட்டு அனுமதி ஆசி பெற்று உள்ளே அடுத்த சுற்றுக்குள் நுழையலாம். மூன்றாவது சுற்று   ஸர்வ  ஸம்க்ஷோபனம் என்பது.  நமக்கு  ஆன்மீக எண்ணங்களை  அதிகரிக்க உதவுபவர்கள். இது  எட்டு இதழ் கொண்ட தாமரை. இதற்கு அதிபதி த்ரிபுர  சுந்தரி. அவள் உதவியாளி  குப்ததர யோகினி. ஒவ்வொரு இதழுக்கும் ஒரு  தேவதை.  அவர்களை வணங்கி ஆசி பெற்று   தான் ஸ்ரீ சக்ரத்தின் முதல் வரிசை முக்கோணத்துக்குள்  புகவேண்டும்.    .4வது சுற்றுக்கு  சர்வ ஸௌபாக்ய தாயகா என்று பெயர். உலக வாழ்க்கை  ஆன்மீக வாழ்க்கைக்கு   சௌகர்யங்கள் தருவது.  14 முக்கோணங்கள் கொண்டது.  அதிபதி:  த்ரிபுரவாஸினி.  அவளுக்கு  உதவியாக  சம்பிரதாய யோகினி. ஒவ்வொரு இதழுக்கும் தேவதைகள். அவர்களை வணங்கி ஆசி பெற்று உள்ளே  போகிறோம். 5வது சுற்று ஸர்வார்த்த சாதகம் என்ற பெயர் கொண்டது.  ஆன்மீகத்தில் வளர்ச்சி பெற  சுகிக்க உதவுவது. இதற்கு 10 முக்கோணங்கள். அதிபதி : த்ரிபுராஸ்ரி. அவளது யோகினி : குலோத்தீர்ண யோகினி. இதழ்களுக்கு தேவதைகள் இவர்களை வணங்கி வாழ்த்து பெற்று இன்னும் உள்ளே போகலாம்.
6வது சுற்று, ஆவரணத்துக்கு, பெயர்  ஸர்வரக்ஷாகர சக்ரம். ஸம்ஸார பந்தத்திலிருந்து  விடுவிப்பது. இதற்கு 10 முக்கோணங்கள். அதிபதி: த்ரிபுரமாலினி. யோகினி:  நிகர்ப யோகினி. இதழ்களுக்கு தேவதைகள்.  ஆசி பெற்று இவர்களிடமிருந்து இன்னும் உள்ளே செல்வோம்.
7வது ஆவரணம், கோட்டைச் சுவர், ஸர்வ ரோக ஹர சக்ரம். மனது சம்பந்தப்பட்ட  துன்பங்கள் யாவும் தீர்ப்பது.  இதற்கு 8 முக்கோணங்கள். வஸு கோணங்கள் என்று பெயர். அஷ்டவசுக்கள்:  ஆபன் : ஜலம், த்ருவன் :நக்ஷத்திரம், சோமன்: சந்திரன், தவன் : காற்று, அனலன்:  அக்னி,  ப்ரத்யுஷா:  விடியல், ப்ரபாஸன்:  ஒளி.  இந்த ப்ரபாஸன் தான் சாபத்தால் பூமியில் பீஷ்மனாக பிறந்தவன்.இந்த ஆவரண அதிபதி:  த்ரிபுராசித்தா. யோகினி: ரஹஸ்ய யோகினி. ஒவ்வொரு முக்கோணத்துக்கும் ஒரு வாக் தேவி. அவர்கள் தான் ஸஹஸ்ரநாமத்துக்கு ஆதாரம்.  இவர்களை வணங்கி ஆசி பெற்று லலிதாம்பிகையின் ஆவரண கோட்டைக்குள் இன்னும் உள்ளே செல்கிறோம். .
எட்டாவது கோட்டை சுவர், ஆவரணம், மையத்தில் இருக்கும் பிந்துவை சுற்றி இருப்பது.இங்கு தான் சாதகன் சித்தி பெறுகிறான். இந்த முக்கோணத்தின் வெளியே  லலிதாம்பாளின் ஆயுதங்கள் உள்ளன.அவற்றை வணங்கி எட்டாவது  ஆவாரணத்தில் புகலாம்.  இதற்கு ஸர்வ சித்தி ப்ரதா என்று பெயர்.  அதிபதி:  த்ரிபுராம்பா.  யோகினி:  அதி ரஹஸ்ய யோகினி.  முக்கோணத்தின் மூன்று முனைகளிலும்   மூன்று தேவதைகள் காவலர்கள். அடுத்து உள்ளே இருக்கும் மைய  முக்கோணத்தை சுற்றி 15 திதி நித்ய தேவிகள். ஒவ்வொரு  திதியும் ஒவ்வொரு சந்திர நாள்.வெளியே  மூன்று  வரிசையான கோடுகள்  குருவை குறிப்பன. உபாசகனின் குரு, அந்த குருவின்  குரு, அந்த குருவுக்கு குரு என்று மூன்று தலைமுறைகளை வணங்கவேண்டும். மற்ற  குருக்களையும் சேர்த்து வணங்கவேண்டும். ஸ்ரீ வித்யா உபாசனையில் குருவந்தனம் முக்கியம்.
நீண்ட பிரயாணத்தில் நாம் இப்போது ஒன்பதாவது ஆவரணத்துக்கு சென்று விட்டோம்,  அதன் பெயர் ஸர்வானந்த மய சக்ரம். முடிவான சதானந்தம். எங்கும் எப்போதும் உள்ள ப்ரம்மம்.  அதிபதி:  ஸ்ரீ மஹா த்ரிபுரசுந்தரி எனப்படும் லலிதாம்பிகை. ராஜராஜேஸ்வரி,  மஹா காமேஸ்வரி.  பிரபஞ்ச நாயகி. லோக மாதா. அவளுடைய  உதவி யோகினி  பராபரதி  ரஹஸ்ய யோகினி.  ஷோடசி உபாசனையில் தேறாதவர்கள் நுழைய முடியாது. உபாசகர்கள் தரிக்கண்ட முத்ரையோடு வழிபடுபவர்கள். சிவ சக்தி இருப்பிடம்.  மஹேஸ்வரனின் இடது தொடையில் அமர்ந்திருக்கிறாள். இருவரின் அருள் பெறுகிறோம்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;