கிருஷ்ணன் — ஒரு அலசல்.

கிருஷ்ணன் — ஒரு அலசல். நங்கநல்லூர் ஜே .கே. சிவன்

ஒழுக்கம் நீதி, நேர்மை, நியாயம், தர்மம், உபதேசம், வேதம் உபநிஷத் தத்துவங்கள் பற்றி சொன்னால் நிச்சயமாக, இந்தஆள் இப்படித்தான் நம்மை கொத்து பரோட்டா ஆக்கி விடுவான் என்று என் பதிவை அப்ப டியே அழித்துவிட்டு ஏதாவது கிசுகிசு கிடைத்தால் அதை வாட்சப்பில் ரசித்து நூறு பேருக்கு அனுப்பும் கூட்டம் தான் இப்போது அதிகம்.

இருந்தும் சிலர் இதை விரும்புகிறார்கள். இதை எல்லாம் சொல்ல இப்போது யாரும் இல்லை, இருந்தாலும் சொல்ல நேரமில்லை, நேரமிருந்தால் சொல்ல விருப்ப மில்லை யாரும் படிக்கமாட்டார்களே என்று விட்டு விடுபவர்கள். இதை எல்லாம் என் அனுபவத்தில் நான் உணர்ந்ததால் பலருக்கு பிடிக்காவிட்டாலும் திரும்ப திரும்ப நல்ல விஷயங்களை எழுதிக் கொண்டே இருக்கிறேன். நானே ஒப்புக்கொள்கிறேன், இந்த மாதிரியான உயர்ந்த விஷயங்களை, கருத்தைப் புரிந்துகொள்வதும் அதன்படி வாழ்வதும் மிகவும் கடினமானது.

சாதாரண மனிதனால் கிருஷ்ணனைப் புரிந்து கொள்வது மிகவும் சிரமம். கிருஷ்ணனுக்கும் ஒழுக்கத்துக்கும் ரொம்ப தூரம் என்று வாய் கூசாமல் சொல்வார்கள். இதிகாசம், பாகவதம் படிப்பவர்கள், கிருஷ்ணனை ஒழுக்கமற்றவனாகவோ, ரொம்ப ரொம்ப நல்லவனாகவோ தீர்மானிப்பது எளிதல்ல ஏனென் றால் கிருஷ்ணனின் செயல்கள் புரிபடாதவை. என் ஒவ்வொன்றையும் அப்படி அவன் செய்தான் என்று எவராலும் விளக்கமுடியாது. ஞானிகள் யோகிகள் மட்டுமே அவனை அறிவார்கள். கிருஷ்ணன் வியப்புக்குரியவன்.

மஹா பாரதப் போர் உண்மையில் நடைபெற்ற வரலாற்றுச் சம்பவம் அல்ல; அது ஒரு நீதிக்கதை யாகவோ, கற்பனைக் கதையாகவோ இருக்க வேண்டும் என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் இன்றும் குரு க்ஷேத்ரம் இருக்கிறது. த்வாரகையில் கடலடியில் கிருஷ்ணனின் அரண்மனை ஆதாரங்கள் இருப்ப தையும் கூறுகிறார்கள். அறிவாளிகள் ஞானிகள் மஹாபாரத போர் நன்மைக்கும் தீமைக்கும் இடையே நிகழும் ஒரு உருவாகப்போராக விளக்குகிறார்கள். ஒவ்வொருவர் உள்ளேயும் மஹாபாரதப் போர் நிகழ்கி றது. நல்லது கேட்டது ரெண்டும் கலந்தது தான் மானுட வாழ்க்கை.
ஒழுக்கவியல் பார்வையில் கிருஷ்ணர் தவறான மனிதராகத் தோன்றலாம். ஆனால் மற்றொரு பார்வை யில் அவர் ஒரு தீர்த்தங்கரருக்குரிய உயர்ந்த தன்மை யைக் கொண்ட பரிசுத்த, அசாதாரண மனிதராகத் தோன்றுகிறார்.

தர்மத்தை நிலைநாட்ட அநீதி, அக்கிரமத்தை, அதர்மத் தை அழிக்க அப்பப்போ அவதரிப்பேன் என்று கீதையில் சொல்வது எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஒளியும் இருளும், நல்லதும், கெட்டதும், நன்மையும் தீமையும் கலந்தது தான் உலகம். ஒரு விஷயத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது அதன் எதிர்ப்பக்கத்தில் உள்ள உண்மையின் மற்றொரு பாதியை மறுப்பதாகும்.

நமது கைகளில் எதுவும் இல்லை. எது இருக்கிறதோ, அது இருக்கிறது. நாம் பிறப்பதற்கு முன்பும் அது இருந்தது. நமக்கு அப்புறமும் அது இருக்கும். ஆனால் ஒழுக்கத் தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட மனம் இதைப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறது. அது எப்போது ம் நல்லது, கெட்டது, பாபம், புண்யம் என்று அர்த்தம் தெரியாமல் தனக்கு தோன்றியதை வைத்து எல்லாவற்றையும் பிரித்துப் பார்த்துக்கொண்டே இருக்கிறது.

ஒரு ஒழுக்கவாதி தீமையைக் கண்டித்து மகிழ்ச்சி அடைகிறான். அப்படிக் கண்டிப்பதன் மூலம் தான் பெரிய நல்ல மனிதன் என்று நினைக்கிறான். அவனு டைய நன்மை என்பது உண்மையான நன்மை யின் மீதான அன்பிலிருந்து வருவதில்லை; தீமையைக் கண்டிப்பதிலிருந்தே வருகிறது. ஒரு புனிதன், பாவிக ளைத் தண்டிக்கப்பட வேண்டியவர்களாகக் கருதுவதி
லிருந்தே தனது பெருமையைப் பெறுகிறான். இது தான் உலக நியதி.

நரகம் என்ற ஒன்று இல்லை என்று சொர்க்கத்தில் இருப்பவர்களுக்கு தெரிந்தால் அவர்கள் மகிழ்ச்சி யடைய வாய்ப்பேயில்லை. சதா துன்பத்தில் தான் இருப்பார்கள். புண்யம் பண்ண அவர்களுடைய எல்லா முயற்சிகளும் வீணாகிவிடும்.

அதே போல் நரகம் என்ற ஒன்று இல்லையென்றால், எல்லாப் பாவிகளும், குற்றவாளிகளும் சொர்க்கத்தி ற்குச் சென்று விடுவார்கள். அப்படியானால் புனிதர் களுக்கு என்ன இடம் தனியாக இருக்கும்? புண்யம் என்றால் என்ன அர்த்தம்?

கிருஷ்ணன் எதையும் தேர்ந்தெடுக்காதவர். அவர் முழுமையானவர்; ஒருங்கிணைந்தவர்; அதனால் முழுமையும் நிறைவும் பெற்றவர். கிருஷ்ணரைத் தவிர வேறு எந்த அவதாரத்தையும் நாம் முழுமையானவர் என்று ஏற்றுக்கொள்ளவில்லையே. கிருஷ்ணன் பூர்ணாவதாரன் என்று தானே திரும்ப திரும்ப சொல்கிறோம்.எதையும் தேர்ந்தெடுக்காமல் இருப்ப வரே முழுமையானவராக இருக்க முடியும். எதையும் தேர்ந்தெடுக்காமல் இருப்பவருடைய வாழ்க்கை பல சிக்கல்களையும் முரண்பாடுகளையும் சந்திக்கும். வாழ்க்கையில் ஒளியும் நிழலும் மாறிமாறி வரும். அது ஒரே மாதிரியான, சலிப்பான வாழ்க்கையாக இருக் காது.

ஆனால் முழுமையான மனிதன் என்பவன், தனது வீட்டின் சுத்தமான பகுதிகளையும் அழுக்கான பகுதிகளையும், ஒளி நிறைந்த இடங்களையும் இருண்ட மூலைகளையும் அனைத்தையும் ஏற்றுக்கொள் கிறான்.அப்படிப்பட்ட மனிதனை ஒரு குறிப்பிட்ட வகைக்குள் அடக்க முடியாது. கிருஷ்ணனிடம் நல்லதை மட்டும் காண விரும்புபவர் நல்லதைக் காண்பார்.

தீமையை மட்டும் காண விரும்புபவர் தீமையையும் காண்பார். கிருஷ்ணனோ ரெண்டுக்கும் அப்பாற் பட்டவர்.

கிருஷ்ணனின் வாழ்க்கையில் நாம் நல்லது என்றும் தீமை என்றும் அழைக்கும் இரண்டும் ஒன்றாக இருக்கின்றன.
கிருஷ்ணனை மதிப்பிடுவதும், அவருடைய உயர்வை அளவிடுவதும் முடியாத காரியம். எல்லா மதிப்பீடுக ளையும் எல்லா தீர்ப்புகளையும் அவர் கடந்து நிற்கிறார்.

கிருஷ்ணர் ஒரு மிகப்பெரிய சமுத்ரம். அதன் முடி வற்ற கரையில் நாம் நமக்கெனச் சிறிய நீர்க்குட்டை களை உருவாக்கிக் கொள்கிறோம். இரண்டு எதிர்மறை களையும் சமமாக பாவிப்பவன் தான் யோகி, யோகத்தின் பார்வை முழுமையானது. யோகம் என்றால் முழுமை.அதனால்தான் கிருஷ்ணன் மஹா யோகி. விருப்பு வெறுப்பு அற்றவன். எல்லோரையும் பாரபக்ஷமின்றி ரக்ஷிப்பவன்.

கிருஷ்ணர் அர்ஜுனனைப் போரிடச் சொன்னதை வைத்து, எந்தவிதமான வன்முறையும் சரியானது என்று முடிவு செய்துவிடக்கூடாது. பகவத்கீதையின் தர்மம், கடமை, ஆன்மா, பற்றின்மை ஆகிய கருத்துகளையும் தனித்தனியாக ஆராய வேண்டும்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2582

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;