
தாமோதரா…. நங்கநல்லூர் ஜே . கே. சிவன்
”கிருஷ்ணனை ‘கண்ணன். கண்ணன்’ என்கிறோமே ஏன்? உயிர்களுக்கு ஞான ஒளி அளிக்கும் ‘ கண் ” அவன். கண் உடலுக்கு ஒளியை அளிக்கிறது. ஞானம் உயிருக்கு ஒளியை அளிக்கிறது. அந்த வகையில், உயிர்களின் அகக் கண்ணைத் திறக்கின்ற தெய்வமாகக் கண்ணனை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
கிருஷ்ணன் என்றால் நமக்கு உடனே மனக்கண்ணில் தோன்றுவது நீல நிறமாக நின்று கொண்டு கால்களை பின்னிக் கொண்டு மரத்தடியில் நின்று பசு, கன்னுக்குட்டி அருகே ஒரு புல்லாங்குழல் ஊதுபவனை….. கிருஷ்ணனுடைய
”கிருஷ்ணன் எப்படி எல்லாம் நமக்கு காட்சி தருகிறான் பாருங்கள்…விஷமக்கார குழந்தை. மாடு மேய்க்கும் இடையர் குல ஆயர்பாடி பிள்ளை..குழலூதும் நாதமூர்த்தி,.வல்லமையுள்ள மல்யுத்த வீரன். மஹா பலம் கொண்ட பயமரியாத இளம் கன்று.. ராஜ தந்திரி, அரசியல் நுணுக்கம் அறிந்த தூதுவன், சிறந்த தேரோட்டி…யாருக்கு துன்பம் நேர்ந்த போதும் கூப்பிட்ட குரலுக்கு உடனே வந்து காக்கும் ஆபத்பாந்தவன். நட்பை மறக்காதவன். ஏழை பணக்கார வித்யாசம் பாராத பக்த
கிருஷ்ணர் ஆயுதம் தாங்காமல் எல்லோருடனும் பழகியவர். ஒவ்வொருவருடைய மனப்போக்குக்கும் ஏற்றவாறு அவர்களைத் தன்பால் ஈர்த்தார் என்று அறிந்து போற்றுகிறோம்…
கோகுலம், பிருந்தாவனத்தில் கிருஷ்ணனின் பால லீலைகள் சொல்லி மாளாது.. இக்கால குழந்தைகளைக் கூட அவற்றை கதையாக சொன்னால் ‘இன்னும் சொல் என்று” ஆர்வமுடன் கேட்கின்றன. வேணுகானம் கலா ரசிகர்களுக்கு விருந்து.. வீரச் செயல்கள் எழுந்து நிமிர்ந்து உட்கார வைக்கிறது.. பகவத் கீதை ஞானத்தை விரும்புபவர்களுக்கு வழிகாட்டுகிறது. பருக பருக தாகம் தீரவே இல்லை…
கிருஷ்ணன் என்றால் ‘வெண்ணெய் திருடன்” என்ற எண்ணமே முதலில் எழுகிறது..இந்த வெண்ணெய் பால் தயிர் மூலம் வருவது மட்டும் இல்லை. நிர்மலமான நம் வெள்ளை உள்ளம். அதனால் தான் அவன் ”உள்ளம் கவர் கள்வன்” .
கோபியர்க ளுடன் ராஸலீலையில் ஈடுபட்டான் பதினாறாயிரம் மனைவியருடன் குடும்ப வாழ்க்கை நடத்தினார் என்று புராணங்கள் கூறுகின்றன. மேலெழுந்தவாரியாக இதை அறியும் போது என்ன தோன்றுகிறது? நம்மைப்போல யாரோ ஒருவன் சுக வாழ்க்கையில் ஈடுபட்ட செயல் மாதிரி தானே…வெளியில் பலவிதமான செயல்களைச் செய்தாலும், உள்ளத்தில் ஆசாபாசங்களால் கட்டுண்டு போகாமல் இருக்க முடியும் என்று வெளிக்காட்டிய திட வ்ரதன், வைராக்ய யோகி அவன்.. பிறரை மகிழ்விக்க தான் பல வேஷங்களைப் போட்டவன்….கிருஷ்ண லீலை சாதாரண மனிதனின் சாதாரண ஆசைகளுடன் ஒப்பிடக் கூடாத ஒரு ப்ரம்ம ஞானியின் பற்றற்ற நிலை .
ஒரு விஷயம் கவனித்தீர்களா?
வைராக்யம் என்றால் உலகத்தில் கிடைக்கும் பொருள்களை வேண்டாம் என்று சொல்வது, அவற்றை வைத்திருக்கக் கூடாது என்பதல்ல; எதன் மீதும் அளவுக்கு மீறிய ஆசையோ, உரிமை உணர்வோ, மன அடிமைத்தனமோ ஏற்படாமல் இருப்பது.
கிருஷ்ணரிடம் செல்வம், அரசியல் வல்லமை, குடும்பம், புகழ் ஆகிய அனைத்தும் இருந்தன. அவை அவருடைய உள்ளத்தை அடிமைப்படுத்தவில்லை….
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


