​ராவண தேச விஜயம்


​ராவண தேச விஜயம் –  நங்கநல்லூர்   ஜே. கே. சிவன்

கொழும்பு,  பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயம்

சென்ற காரியத்தில் ஈடுபடுவதிலேயே  என் முழு நேரம்  செலவானாலும் காலை வேளைகளை  கூடுமான வரையில்  எனக்கு விருப்பமான கோவில் தரிசனத்துக்கு  உபயோகித்துக்கொள்ள முடிந்தது ஆச்சர்யம்.
அதுவும் அவன் செயல் தான். நான் கொழும்புவில் பார்த்த கோவில்களில் என்னை மிகவும் கவர்ந்தது  14.11.2026 அன்று தரிசித்த ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரம்  ஆலயம் என்று சொல்வேன். ஈழ சைவ மரபின் மிக முக்கியமான சிவாலயங்களில் ஒன்று .

இந்த கோவிலின் விசேஷம் என்னவென்றால் தமிழ் நாட்டில் உள்ள  பழங்காலத்து  ஆலயங்களை போல் இதுவும் திராவிடக் கோயில் கட்டிடக்கலையைப் பின்பற்றி, பெரும்பாலும் கருங்கற்களால்  அமைக்கப்
பட்டிருப்பது தான். பக்தர்களுக்கு இந்த கோயிலின் அடையாளம்,  ” கொச்சிக்கடை  கல் கோயில்”,  ”ராமநாதன் கோயில்” என்பதே.

இந்த ஆலயம் உருவாக  காரணமானவர்  சர் .அருணாசலம் பொன்னம்பலம்  முதலியார். இவர் 1856-ஆம் ஆண்டில் கொழும்பின் கொச்சிக்கடைப் பகுதியில் சிவபெருமானுக்குத் திருக்கோயில் அமைக்க ஏற்பாடு செய்தார்.

முதலியார்  கொச்சிக்கடையில் சுமார் ஐந்து ஏக்கர் நிலத்தை வாங்கி, செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையால் சிறிய சிவன் கோயிலை அமைத்தார்.1857-ஆம் ஆண்டு முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அதாவது, 1856-இல் அருணாசலம் பொன்னம்பலம் முதலியார் நிறுவிய ஆலயத்தை, 1907–1912 காலகட்டத்தில் அவர் மகன் சர் பொன்னம்பலம் ராமநாதன் இன்றுள்ள கற்கோயிலாக உருவாக்கினார்.

அருணாசலம் பொன்னம்பலம் முதலியார் ஒரு நாள் கனவில் ஒரு மாதுளம்பழத்தைக் கண்டதாகவும், அந்த மாதுளம்பழத்தின் உள்ளே சிவலிங்கம் காட்சியளித்ததாகவும் கூறப்படுகிறது.

அந்தக் கனவைச் சிவபெருமானின் அருளாகவும், சிவாலயம் அமைக்க வேண்டும் என்ற இறைவன் கட்டளையாக கருதினார். அதன் பின்னர்  கொழும்புப் பகுதியில் வாழ்ந்த இந்து மக்களின் ஒத்துழைப்புடன் ஆலயம் அமைக்கப்பட்டது.

இந்த முயற்சியில் இளங்கோடர் முதலியார், நாணித்தம்பி முதலியார், சின்னத்தம்பி முருகேசர் முதலியார் மற்றும் சில செட்டியார் சமூகத்தினரும் பங்காற்றியதாக வரலாற்றுக் கட்டுரை குறிப்பிடுகிறது.

இந்தக் கோயில் திருவண்ணாமலை, சிதம்பரம், காசி, ராமேஸ்வரம் போன்ற தொன்மையான புராணத் தலங்களில் ஒன்று என்று வரலாற்று ஆதாரங்கள் நிறுவவில்லை. ஸ்தல புராணமோ, புஷ்கரணியோ இங்குள்ள கோவில்களை பற்றி தேடவேண்டாம்.  காரணம் இலங்கையில் சேர சோழ பாண்டிய, நாயக்க மன்னர்கள் ஆட்சி நடக்கவில்லை.

மூலவர் பொன்னம்பலவாணேஸ்வரர், ஸ்வர்ண சபேஸ்வரர்.  அம்பாள்; சிவகாமசுந்தரி.
இந்தக் கோயிலில் நடராஜரர் தனிச் சிறப்புடன் கண்ணைப் பார்க்கிறார்.  அங்கிருந்த நகர மனமே இல்லை.
சோமாஸ்கந்தர், சக்தி, கணபதி, வள்ளி தேவசேனா சமேத முருகன், ஸ்ரீதேவி, பூதேவி சமேத  மஹா விஷ்ணு, சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், நவகிரஹங்கள், ஸ்வர்ண பைரவர், ஹனுமான்,  முத்துமாரி, முனீஸ்வரரின், தக்ஷிணாமூர்த்தி,  நர்த்தன விநாயகர், லிங்கோத்பவர், ப்ரம்மா,  சூரிய சந்திரர்கள்,  துர்க்கை, சந்நிதிகள்  உள்ளடங்கிய விரிவான சைவ ஆலயம்  இது.

மூலவர்  சந்நிதி வாசலுக்கு முன்பு  கொடிமரம், அதற்கு  முன்னால்  நந்திகேஸ்வரன். பலிபீடம்.
சௌகர்யமாக  சுற்றிவர  ப்ரஹாரம்.   கருவறை, மகாமண்டபத்தின் தரைமட்டத்தைவிட சுமார் மூன்றரை அடி உயரத்தில் உள்ளது. ஸ்ரீ ஸ்வர்ண வைரவர்.
கோவில்   கிழக்கு வாயிலில்  51 அடி  உயர  ஐந்து நிலை கோபுரம்.  ரெண்டு பக்கமும் துவாரபாலர்கள்.

அர்த்த மண்டபம்: கருவறைக்கும் மகாமண்டபத்திற்கும் இடையிலான புனிதப் பகுதி.
அழகிய  தூண்களில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த  மஹா மண்டபம்.  நிறைய பேர்  உட்காரலாம்.  
நடராஜர், நடன அழகிகள் உயிருள்ள பதுமைகள், வண்ண வண்ண  கொடி டிசைன்கள்  புராண  காட்சிகள்  சைவ நாயன்மார்களின் திருவுருவங்கள். பெரிய   650 கிலோ எடையுள்ள   டாண்  டாண்  என  ஊரே அதிர  ஒலிக்கும் கண்டா மணி
இந்த  ஆலயத்தில் தான் முதன் முதலாக  தீர்த்தக்குளம் ஸ்ரீ ஸ்வர்ண புஷ்கரணி பார்த்தேன்.
ஆலய வளாகத்துக்குள்ளேயே  ஒரு  தீர்த்தக் கிணறு.  மொத்தம் ரெண்டு ப்ராஹாரம் .மூலவர் சந்நிதியைச் சுற்றி ஒன்று, வெளியில் ரெண்டாவது.
இந்த கோயிலில் ஐந்து தேர்கள் உள்ளன.  விழாக்காலங்களில் உலா வருகிறது.  தைப்பூசம்,  ஆடி வேல் விழா,  கந்த ஷஷ்டி,மஹா சிவராத்திரி பங்குனி உத்திரம், நவராத்ரி, ஆடிப்பூரம். திருவிழாக்கள் பத்து நாள் சேர்ந்தாற்போல் நடக்கும்.
 
ஒரு விஷயம் நன்றாக புரிந்து கொள்ளவேண்டும்:
 
எங்கு பக்திநிறைந்திருக்கிறதோ அங்கே  தெய்வத்தின் சக்தியை உணரமுடியும்.
பொன்னம்பல முதலியார் போன்ற யாரோ ஒரு தனி மனிதனின் பக்தியால் எண்ணற்ற பக்தர்களின்  மனதில் இறைவன் குடி கொள்வான். நமது தேசத்தில், அதுவும் நாம் வாழும் தென்னகத்தில் அநேக  ராஜாக்கள் சைவ வைணவ பக்தியில் சிறந்தவர்களாக இருந்ததால் தேசம் முழுதும் பக்தி ப்ரவாஹம் நிறைந்திருக்கிறது.  மதம், நம்பிக்கை, பக்தி, பெரியோரிடம் மரியாதை எல்லா பாரம்பரிய  பண்பாடுகளும் வளர உதவுகிறது.  ஆலயங்கள் கலைகள் வளர காரணமாக இருந்தது.
மறுநாள்  15.11.26  கந்த ஷஷ்டி  சூரா ஸம்ஹார  நிகழ்ச்சிகள் ஏறப்படுகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. தவிர  ஆறுமுகன் சந்நிதியில் அபிஷேகம் அலங்காரம் அர்ச்சனைகள் விடாது தொடர்ந்தது. சற்று நேரம் நின்று ஸ்லோகங்கள் சொல்லிக் கொண்டிருந்தேன். 
 
இந்த ஒரு ஆலயத்தில் தான் பக்தர்களுக்கு கோவிலில் பிரகாரத்தில் பிரசாதம் வழங்கிக்கொண்டிருப்பதை, நீண்ட வரிசையாக பக்தர்கள் நிற்பதை கவனித்தேன்.  நான் வெளியூர் என்று என்னைப்பார்த்ததுமே  வரிசையில் அநேகருக்கு புரிந்து விட்டது.  பிரசாதம் தருபவர்  கை  நீட்டி தலையாட்டி அருகே வரச்சொன்னார். அருகே சென்றேன். வரிசையை விட்டு விலகி எனக்கு முதலில் ஒரு தட்டு நிறைய  பஞ்சாமிர்தம்  பிரசாதம் வழங்கினார். 
 
கந்த ஷஷ்டி விசேஷ விழாவில் பஞ்சாமிர்த பிரசாதம் அதுவும் இலங்கையில் கொழும்பிலும் எனக்கு கிடைக்க  நான் பாக்யம் செய்திருக்கிறேன் என தோன்றுகிறது.
 
இந்த பதிவுடன் எனது மூன்று நான்கு நாட்கள் இலங்கை பயணத்தில் நான் தரிசித்த   ஆலயங்களைப் பற்றிய விவரங்கள் நிறைவு பெறுகிறது.
 
Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2580

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;