தாமோதர மாதம் 14

தாமோதர மாதம் – நங்கநல்லூர் ஜே கே. சிவன்

14. தீப மங்கள ஜோதி நமோ நம;

அம்மா யசோதையால்  பால கிருஷ்ணனை தனது அன்பினால்   கயிற்றினால் அவன் வயிற்றை உரலோடு சேர்த்து கட்ட முடிந்தது.   நாமும் அத்தகைய பரிபூர்ண அன்பு, பக்தி கண்ணனிடம் இருந்தால் அவனை நெருங்க முடியும்.  தீபத்தை ஏன் நாடுகிறோம் என்றால்  எப்படி  நிர்மலமான தீப ஒளி நமது வீட்டை ஒளிரச் செய்கிறதோ, அப்படி தாமோதரனின் திருநாமம் நமது உள்ளத்தை ஒளிரச் செய்யும் .விளக்கேற்றுதல் என்பது  ஞானத்தை  அணுகுவது.  ஆரத்தி நமக்கு அர்ப்பணிப்பைக் கற்றுத்தருகிறது.  கற்பூரம் ஒளியை வீசி அளிக்கும்போது தன்னையே முழுமையாக  கரைத்துக் கொள்வது போல் நமது  அஹங்காரத்தை  அழிக்கக் கற்றுத்தருகிறது.

தாமோதர தீபம் நமக்கு அன்பின் மூலம் இறைவனை அடைய வழி  காட்டுகிறது. .
யசோதையின் கயிற்றால் கட்டப்பட்டது கண்ணனின் திருமேனி மட்டுமல்ல. அவன் சக்தியையும் தான்.  பூரண பக்தியும்  அன்பும்,  இறைவனையே கட்டிப்போடும்  சக்தி கொண்டது.
ஒருவர் வாழ்க்கையில் நினைத்ததெல்லாம் நடக்கிறது. மற்றொருவர் எவ்வளவு முயற்சி செய்தாலும் தோல்விகளைச் சந்திக்கிறார்.
ஒருவர் பிறருக்குத் தீங்கு செய்துகொண்டும் சுகமாக வாழ்கிறார். இன்னொருவர் யாருக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்தும் துன்பப்படுகிறார்.
கடவுள் இருக்கிறார் என்றால், ஏன் இந்த ஏற்றத்தாழ்வுகள்? அவர் ஏன் அனைவரையும் சமமாக நடத்துவதில்லை?


​கீதை  9.29  ஸ்லோகம்; समोऽहं सर्वभूतेषु न मे द्वेष्योऽस्ति न प्रियः ।ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम् ॥ ९.२९ ॥
Samō’haṁ sarva-bhūtēṣu na mē dvēṣyō’sti na priyaḥ.Yē bhajanti tu māṁ bhaktyā mayi tē tēṣu cāpyaham.
சமோऽஹம் ஸர்வபூதேஷு​ ந மே த்வேஷ்யோऽஸ்தி ந ப்ரியஹ |யே பஜந்தி து மாம் பக்த்யா
மயி தே தேஷு சாப்யஹம் ||

​அர்ஜுனா, நான் எல்லா உயிர்களிடத்திலும் சமமாகவே இருக்கிறேன். எனக்கு யாரும் பகைவர் இல்லை; யாரும் தனிப்பட்ட முறையில் மிகவும் பிரியமானவரும் இல்லை.​ யார் என்னை உண்மையான பக்தியுடன் வழிபடுகிறார்களோ, அவர்கள் என்னுள் இருக்கிறார்கள்; நானும் அவர்களுள் இருக்கிறேன்.”

உண்மையான பக்தன் ​பகவான் வெளியே இருப்பவன் அல்ல  தன்​ ஒவ்வொரு எண்ணத்திலும், செயலிலும், வாழ்விலும் இறைவனை ​உணர்​பவன். தூய உள்ளமே  இறைவன் இருப்பிடம்.  பக்தி, எல்லா  உயிர்களிடத்திலும் அன்பு, நேசம், என்பது எல்லோருக்கும் பொதுவானது. இதில் வயது, ஆண், பெண், ஜாதி, படிப்பு , அந்தஸ்து, பணம், எந்த வித்தியாசமும் இல்லை. பகவான்  பாரபக்ஷம் அற்றவன்.

​சூரிய ஒளி எப்படி எல்லா வஸ்துக்கள் மேலும், ஜீவன்கள் மேலும் சமமாக  ஒளிர்கிறதோ அப்படி தான் பகவானின் கருணையும் அருளும்.
 
 கர்மம்​ என்பது மனம் வாக்கு காயம் மூன்றினாலும் நாம் ஒவ்வொரு பிறவியிலும்  செய்யும் காரியங்களின் மொத்த தொகுப்பு. மூன்று​ விதமாக இதை  வேதாந்தத்தில் பிரித்து வைக்கப்பட்டுள்ளது.
 
1. சஞ்சித கர்மம் (Sanchita Karma)​ — பல பிறவிகளில்​  செய்த செயல்களின் மொத்த​ சேமிப்பு  போல பிறவிகளில் சேந்த நல்ல தீய செயல்களின் விளைவு, பலன் அடங்கிய மூட்டை.
 
2. பிராரப்த கர்மம் (Prarabdha Karma)​  ஒவ்வொரு பிறவி எடுக்கும்போதும் நம் உடல், உயிரோடு ஒரு சின்ன  பகுதி மேலே சொன்ன மூட்டையிலிருந்து நம்மோடு  தொடரும்.  அந்தந்த பிறவியில் அனுபவிக்க, சந்திக்கவேண்டியவை. இதன் விளைவாகவே நாம் பிறப்பு, குடும்ப சூழ்நிலை, உடல், வாழ்க்கை அனுபவம் எல்லாம் அமைகிறது.  இதனால் தான் ஒருவர் போல் மற்றொருவர் என்றும் இல்லை.
 
3. ஆகாமிய கர்மம் (Agami Karma)
​அந்த பிறவியில் நாம்  புரிகின்ற  ”புதிய​” செயல்களால் உருவாகும் ​விளைவு, எதிர்கால கர்மம்​.இது ரொம்ப முக்கியமானது. ஏனென்றால் நமது எதிர்காலத்தை ​ தாக்கப்படியாக மாற்றும் வாய்ப்புஇதில் 
​தான் நம் கைவசம் இருக்கிறது. நல்ல எண்ணங்கள், செயல்கள் , பேச்சு ,நடத்தை இது நம் கட்டுப்பாட்டில் இருக்கிறதே.  கடந்து போனதை நம்மால் ஒன்றும் மாற்றமுடியாது. எதிர்காலமும்  நமக்கு தெரியாது. நம் வசம் இல்லை. ஆகவே இப்பிறப்பில் முடிந்ததை செய்து நல்ல பலன் பெறலாமே.
 
Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2569

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;