கைவல்ய நவநீதம் 2 J K SIVAN

கைவல்ய நவநீதம்..-  நங்கநல்லூர்   ஜே .கே. சிவன் 
 
தாண்டவராய ஸ்வாமிகளின்  அற்புதமான  வேதாந்த சார வெண்ணையை, ஒரு  பத்து  ஸ்பூன் இன்று பிரசாதமாகப்  பெற்று பயனுறுவோம்.
1. ஈன்றளித் தழிக்குஞ் செய்கைக் கேதுவா மயனாய் மாலாம்,
ஆன்றவீ சனுமாய்த் தானே யநந்தமூர்த்தியுமாய் நிற்கும்,
பூன்றமுத் தனுமா யின்பப் புணரியா தவனாய் நாளும்,
தோன்றிய விமல போத சொரூபத்தைப் பணிகின் றேனே!

உலகத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய செயல்களுக்கு பிரம்மா, விஷ்ணு, ஈசன்  ஆகிய  மும்மூர்த்திகள் பொறுப்பானவர்கள் . இறைவன்  அழிவற்றவன்; அளவற்ற ஆனந்த ஸ்வரூபன்.  பூர்ண  ஞான வடிவம். இறைவனை ஒரு குறிப்பிட்ட வடிவத்திற்குள் அடக்க முடியாது. எல்லா வடிவங்களுக்கும் அடிப்படையாகவும், அவற்றைக் கடந்து நிற்கும்  அந்த பரம்பொருளை  வணங்குகிறேன். ஆத்மா  நமது  உடலோ மனமோ இல்லை. தூய அறிவு, நமது உணர்வின் அடிப்படை. 

 
2 பொன்னில மாத ராசை பொருந்தினர் பொருந்தா ருள்ளந்,
தன்னிலந் தரத்திற் சீவ சாட்சிமாத் திரமாய் நிற்கும்,
எந்நிலங் களினு மிக்க வெழுநில மவற்றின் மேலாம்,
நன்னில மருவு மேக நாயகன் பதங்கள் போற்றி!

மண், பெண், பொன்  இந்த மூன்று  ஆசைகள் தான் மனிதனை துன்பத்தில் ஆழ்த்துபவை.  ஞானிகள் ஆனந்தமாக இருப்பதற்கு கரணம் இவை இல்லாமை . ஆசை கொண்ட மனத்திலும் ஆசையற்ற மனத்திலும் ஆத்மா வெறும் சாக்ஷியாக  பார்த்துக் கொண்டு மட்டும் இருக்கிறது.  மனத்தில் எழும் ஆசைகளையும் நிதானமாக நாம் ஒவ்வொரு  எண்ணத்தையும்  கவனித்தால்  அவற்றை அறியும் விழிப்புணர்வு வளரும். 

3.எவருடை அருளால் யானே எங்குமாம் பிரம்மம் என்பால்,
கவருடைப் புவனம் எல்லாம் கற்பிதம் என்ற றிந்து,
சுவரிடை வெளிபோல் நான் என் சொரூபசு பாவம் ஆனேன்,
அவருடைப் பதும பாதம் அநுதினம் பணிகின் றேனே.

எந்தக் குருவின் அருளால், நானே தான்  எங்கும் நிறைந்த பிரம்த்தின் அம்சம் என்பதை உணர்ந்தேனோ, எப்போது 

மாற்றங்கள் நிறைந்த  இந்த உலகம் பிரம்மத்தின் மீது கற்பிக்கப்பட்ட தோற்றம் என்பதை அறிந்தேனோ, எப்போது நான் என்பது என் உடல் அல்ல, என் ஆத்மா என உண்மையை  உணர்ந்தேனோ, அந்த குருவின் தாமரைத்  திருவடிகளை  வணங்குகிறேன்.

4 என்னுடை மனது புத்தி இந்திரிய சரீரம் எல்லாம்,
என்னுடை அறிவி னாலே இரவிமுன் இமமே ஆக்கி,
என்னுடை நீயும் நானும் ஏகமென்று ஐக்கியம் செய்ய,
என்னுடைக் குருவாய்த் தோன்றும் ஈசனை இறைஞ்சி னேனே.


ஆத்ம ஞானம்  நமக்குள்ளே பிரகாசிப்பதை உணர்ந்த போது நமது  மனம், புத்தி, புலன்கள் ஆகியவை  சூரியன் முன் பனி மாதிரி மறைந்து விடும்.   ”நீயும் நானும் ஒன்றே” என்பதை உணர்த்திய, எனது குருவே, உன்னை வணங்குகிறேன். 

5.அந்தமு நடுவு மின்றி யாதியு மின்றி வான்போல்,
சந்தத மொளிரு ஞான சற்குரு பாதம் போற்றிப்,
பந்தமும் வீடுங் காட்டப் பரந்த நூல் பார்க்க மாட்டா,
மந்தரும் உணரு மாறு வத்து தத் துவஞ்சொல் வேனே.

ஆகாசத்துக்கு  ஆரம்பமோ, நடுவோ, முடிவோ  இல்லை. எப்போதும் உள்ளது. அதையே  என்  ஞான குருவின் திருவடிகளாக வணங்குகிறேன். 


ஆழமான வேதாந்தக் கருத்துகளை எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ள  முடியவில்லை. ஆகவே  எளிமையாக இந்த நூலில் அவற்றை  அறிவோம்.  நமது இயற்கை இயல்பு அறியாமையால்  மறைக்கப்பட்டிருக்கிறது. அதை விலக்கி  உணர்வது தான் 
; முக்தி எனப்படும்  ”அறியாமை நீக்கம்” என்பது அந்த ​ அஞ்ஞானம்,அறியாமை நீங்குதல்.

ஞானம் என்பது ஏதோ நம்மால் பெற முடியாத கடினமான ஒன்று என்ற எண்ணம் வேண்டாம்.  நம்முடைய வாழ்க்கையிலும் அனுபவங்களிலும்   அந்த உண்மையைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.  இந்த நூல் அதற்கு உதவும். 

6. படர்ந்தவே தாந்த மென்னும் பாற்கடல் மொண்டு முன்னூல்,
குடங்கலில் நிறைத்து வைத்தார் குரவர்க ளெல்லாங் காய்ச்சிக்,
கடைந்தெடுத்து அளித்தேன் இந்தக் கைவல்ய நவநீதத்தை,
அடைந்தவர் விடய மண்தின்று அலைவரோ பசியி லாரே.

”வேதாந்தம்‘  ஒரு விரிந்து பரந்த சமுத்திரம்.  அதன் சாரத்தை நமது பெரியோர்கள்  பல  நூல்களில் நிரப்பி வைத்துள்ளார்கள். நம்மால் எளிதில் புரிந்து கொள்ளமுடியாத அதை  எத்தனையோ  ஆச்சார்யர்கள், குருமார்கள்  தயிரை க்கடைந்து வெண்ணை எடுப்பதைப் போல்  நமக்கு அளித்த ஒரு நூல் இந்த  கைவல்ய நவநீதம்.

இந்த உலகில் நாம் செல்வம், புகழ், பதவி  இவற்றால் மகிழ்கிறோம். நிரந்தரமான மனநிறைவை இவற்றால் தர முடியாது.
 
7. முத்தனை வேங்கடேச முகுந்தனை யெனையாட் கொண்ட,
கர்த்தனை வணங்கிச் சொல்லும் கைவல்ய நவநீ தத்தைத்,
தத்துவ விளக்க மென்றும் சந்தேகந் தெளித லென்றும்,
வைத்திரு படல மாக வகுத்துரை செய்கின் றேனே.

ஒருவனை அடையாளம் காட்டுகிறேன். பந்தங்களிலிருந்து விடுபட்டவன்  வேங்கட மலையில் நிற்பவனான  வெங்கடேசன் தான் முகுந்தனின்  அம்சம். அவனை வணங்குகிறேன். 

 
இதுவரை நான் மேலே சொன்னவை என்ன? இறைவன் எங்கும் உள்ளான். வெளிப்புற  மாற்றங்களை  கடந்த நிரந்தர உண்மை ஒன்று உள்ளது. அதை உணரவேண்டும்.  தூய அறிவு  தான் ஞானம் என்பது.   நமது எல்லா அனுபவங்களுக்கும் ஆதாரமாக  உள்ள  அந்த  ஆத்ம ஞானம் எனும் விழிப்புணர்வை கொஞ்சம் கொஞ்சமாக  தொடர்ந்து ஆராயவேண்டும்.உடல், மனம் ஆகியவற்றைக் கடந்து உண்மையான ‘நான்’ யார் என ஆராய்தல் இது தான்.
​8. நித்திய அநித்தி யங்கள் நிண்ணயம் தெரிவி வேகம்,
மத்திய இகப ரங்கள் வருபோகங் களில்நி ராசை,
சத்தியம் உரைக்க வேண்டும் சமாதிஎன் றாறு கூட்டம்,
முத்தியை விரும்பும் இச்சை மொழிவார்சா தனம்இந்நான்கே.

நிலையானது எது, நிலையற்றது எது என்று பகுத்தறி​வது அவசியம்.  இவ்வுலக மற்றும் மறுவுலக இன்பங்களின் மீது பற்றின்மை; மனவடக்கம் முதலான ஆறு நற்குணங்கள்; முக்தியை அடைய வேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பம் — இவை ஆத்ம ஞானத்தை அடைவதற்கான நான்கு தகுதிகளாகும்.

விவேகம்: உடலும் உலகப் பொருட்களும் மாறுகின்றன என்பதை உணர்ந்து, மாறாத உண்மையை ஆராய்தல்.
வைராக்கியம்: நிலையற்ற இன்பங்களே வாழ்க்கையின் இறுதி இலக்கு என்று கருதாமல் இருத்தல். 

ஆறு நற்குணங்கள்​:  மனவடக்கம், புலனடக்கம், பற்றின்மை, பொறுமை, மன ஒருமைப்பாடு, குரு மற்றும் சாஸ்திரங்களில் நம்பிக்கை.
முமுக்ஷுத்துவம்​: அறியாமையிலிருந்து விடுபட்டு உண்மையை அறிய வேண்டும் என்ற தீவிர விருப்பம்.

ஞானப் பயணம் தொடங்குவதற்கு முன், எது உண்மையில் நிலையானது என்பதை ஆராயும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான்  பிரயாணம் துரிதமாக முன்னேறும்.

​9. சமம் தமம் விடல்ச கித்தல் சமாதானம் சிரத்தை ஆறாம்,
சமம்அகக் கரண தண்டம் தமம்புறக் கரண தண்டம்,
அமர்தரு கருமம் பற்றா தறுத்தலே விடல்என் றாகும்,
மமர்செயும் காமம் ஆதி வரின் அடக் குதல்ச கித்தல்.

சமம், தமம், விடல், சகித்தல், சமாதானம், சிரத்தை ஆகிய ஆறும் ஆத்ம ஞானத்திற்குத் தேவையான குணங்கள்.
இவை யாவை?    சமம்: மனத்தைக் கட்டுப்படுத்துதல்.    தமம்: புலன்களைக் கட்டுப்படுத்துதல்.விடல்: பற்றுதல்களைத் துறத்தல்.​   சகித்தல்: இன்ப​  துன்பங்களை​ சமமாக  ஏற்று  பொறுத்துக்கொள்ளுதல்.​ சமாதானம்: மனத்தை உண்மையை ஆராய்வதில் நிலைநிறுத்துதல்.​ சிரத்தை: குருவின் உபதேசத்திலும் வேதாந்தக் கருத்துகளிலும் உண்மையான நம்பிக்கை வைத்தல்.

மனம் விரும்பிய அனைத்தையும் உடனே அடைய முயன்றால் அமைதி குலையும். புலன்கள் விரும்பும் அனைத்தையும் அனுபவிக்க வேண்டியதில்லை. ஆசை எழும்போது அதை உணர்ந்து, அறிவுடன் செயல்படுவதே பக்குவம்.

மனதில் தோன்றும் ஒவ்வொரு எண்ணத்தையும் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை. எண்ணத்திற்கும் செயலுக்கும் இடையில் சிறிது இடைவெளி ஏற்படுத்துங்கள்.

​10. ”சிரவணப் பொருளைத் தானே சித்தம் சிந்திக்கு மாறு,
சரதமா வைக்கும் இத்தைச் சமாதானம் என்பர் மேலோர்,
பரமசற் குருநூல் அன்பு பற்றலே சிரத்தை யாகும்,
வரமிகு சமாதி ஆறு வகையின்சொற் பொருள் இதாமே.

குருவிடமிருந்து கேட்ட வேதாந்த உண்மைகளை மனம் தொடர்ந்து சிந்தித்து, அவற்றில் நிலைத்திருப்பதே சமாதானம் எனப்படும். குருவின் உபதேசத்திலும் ஞான நூல்களிலும் உறுதியான நம்பிக்கையுடன் இருப்பதே சிரத்தை. இவையே ஆறு நற்குணங்களின் பொருளாகும்.

வேதாந்தத்தில் மூன்று முக்கியமான பயிற்சிகள் கூறப்படுகின்றன:
சிரவணம்: குருவிடமிருந்து உண்மையைக் கேட்டறிதல்.
மனனம்: கேட்டவற்றில் எழும் சந்தேகங்களை ஆராய்ந்து தெளிவடைதல்.
நிதித்யாசனம்: உணர்ந்த உண்மையில் மனத்தை மீண்டும் மீண்டும் நிலைநிறுத்துதல்.

கேட்பது மட்டும் போதாது; கேட்டதைச் சிந்தித்துத் தெளிந்து, வாழ்க்கையில் அதன் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.​   நல்ல ​விஷயங்களை  ஆர்வமாக கவனித்து கேட்பது முதல் படி. அதைச் சிந்தித்து, சந்தேகங்களைத் தீர்த்து, வாழ்க்கையில் கடைப்பிடிப்பதே உண்மையான பயிற்சி.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;