
அருட்பெருஞ்சோதி வள்ளலார் – நங்கநல்லூர் ஜே.கே. சிவன்
திருவொற்றியூர் தியாகேசன் ராமலிங்கத்தை தண்டித்தானா? எதற்காக? இது நமக்கு எழும் சந்தேகம். ஆனால் வள்ளலார் என்ன காரணம் சொல்கிறார் தெரியுமா
1.கமரிடை மலநீர் கவிழ்த்தல் போல் வயிற்றுக்
கடன்கழித் திட்டனன் அல்லால்
அமரிடைப் புரமூன் றெரித்தருள் புரிந்த
ஐயனே நினைத்தொழல் மறந்தேன்
2. அருமருந் தனையாய் நின் திரு முன் போந்
தரகர எனத்தொழல் மறந்தே
இருளுறும் மனத்தேன் மலத்திலும் இழிந்த
இயல்புற உண்டனன் அதனால்
3. கண் நுதல் கரும்பே நின்முனம் நீல
கண்டம் என் றோதுதல் மறந்தே
உண்ணுதற் கிசைந்தே உண்டுபின் ஓதிபோல்
உன்முனம் நின்றனன் அதனால்
4. கற்றவர்க் கினிதாம் கதியருள் நீலகண்டம்என் றுன் திரு முன்னர்
சொற்றிடல் மறந்தேன் சோற்றினை ஊத்தைத் துருத்தியில் அடைத்தனன் அதனால்
முறைப்படி நினது முன்பு நின் றேத்தி முன்னிய பின்னர் உண்ணாமல்
சிறைப்படி வயிற்றில் பொறைப்பட ஓதிபோல் சென்று நின் முன்னர் உற் றதனால்
ஆஹா வள்ளலார் தான் செய்த குற்றம் என்ன என்பதை மேலே சொன்ன ஒரு சில பாடல்கள் மூலம் சொல்வதை நாம் அறிகிறோம்.
1.வயிற்றில் உள்ள மலத்தை அன்றாடம் காலையில் வெளியேற்றுவது போல, முதலில் வயிற்றுக் கடனை (பசியை) மட்டும் தீர்த்துக் கொண்டேன். ஆனால், மூன்று புரங்களையும் எரித்து அருள் செய்த சிவபெருமானே! உன்னை நினைத்து வணங்க வேண்டும் என்பதை மறந்துவிட்டேன்.
2.அரிய மருந்தைப் போன்றவனே! திருவொற்றியூர் தியாகேசா, உன் திருமுன் வந்து, உன்னை வணங்கி உன் திருநாமத்தைச் சொல்ல வேண்டும் என்பதை மறந்துவிட்டேன். இருளில் மூழ்கிய மனம் கொண்ட நான், மிகவும் இழிவான இயல்புடன், முதலில் உணவு உண்டேன். அதற்குப் பிறகுதான் உன்னை நினைக்க வந்தேன்.
3. நெற்றியில் கண்ணைக் கொண்ட கரும்பைப் போன்ற இனிய இறைவனே! நீலகண்டனே என்று உன்னை முதலில் அழைத்து வணங்க வேண்டும் என்பதை மறந்துவிட்டேன். உணவு உண்ண வேண்டும் என்ற ஆசையுடன் முதலில் உணவை உண்டுவிட்டு, பின்னர் உணவு உண்ட பறவை கூவுவதைப் போல, உன் முன்னால் வந்து நின்றேன்.
4. கற்றறிந்த நல்லவர்களுக்கு இனிய நற்கதியை அருள்பவனே! நீலகண்டனே என்று உன் திருமுன் நின்று உன்னைப் போற்றிப் பாட வேண்டும் என்பதை மறந்துவிட்டேன். சோற்றை ஒரு அசுத்தமான பை போன்ற வயிற்றுக்குள் அடைத்துவிட்டு, அதன் பிறகுதான் உன்னை வணங்க வந்தேன். முறைப்படி உன் முன்னால் நின்று, உன்னைப் போற்றி வணங்கி, உன் நினைவில் மனதைச் செலுத்திய பிறகுதான் உணவு உண்ண வேண்டும். ஆனால், நான் அப்படிச் செய்யவில்லை. முதலில் உணவை உண்டு வயிற்றை நிரப்பிவிட்டு, அதன் பிறகு உன்னை நினைத்து வணங்க வந்தேன். உணவு நிரம்பிய வயிற்றுடன், உணவு உண்ட பறவை கூவுவதைப் போல உன் முன்னால் வந்து நின்றேன்.
நண்பர்களே, தண்ணீர் குடிப்பதாக இருந்தாலும் கிருஷ்ணா இது உனக்கே அர்ப்பணம் என்று சொல்லிவிட்டு எதையும் வாயில் திணிக்கும் பழக்கம் எனக்குண்டு. அது பழக்கமாகி விட்டது. நம்முடைய வாழ்க்கையில் உடல் தேவைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல், நமக்கு வாழ்வளிக்கும் இறைவனை முதலில் நினைத்து நன்றி செலுத்த வேண்டும். உண்பதற்கு முன் இறைவனை வணங்கி, உணவை அவருடைய அருளாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இதைத்தான் வள்ளலார் பாடல்கள் நினைவூட்டுகிறது.
வள்ளலார் மனதில் திருவொற்றியூர் தியாகராஜனைப் போலவே சிதம்பரம் நடராஜனுக்கும் நிறைய இடம் உண்டு. அவர் பெயரே சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை.
1849 – ஆம் ஆண்டில் தொழுவூர் வேலாயுத முதலியார் என்பவர் வள்ளலாரை சந்தித்து அவரது சீடரானார். இந்த முதலியரைப் பற்றி நம்மில் அநேகர் அறிய மாட்டார்கள் என்பதால் ஒரு சிறு குறிப்பு தருகிறேன்.
1832 – 1889 – ஐம்பத்தேழு வருஷங்கள் வாழ்ந்த தொழுவூர் வேலாயுத முதலியார் ஒரு சிறந்த தமிழறிஞர், சைவசித்தாந்த அறிஞர், புலவர். வள்ளலாரின் முதன்மை மாணவர். 1832 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிறுகடல் என்னும் ஊரில் செங்கல்வராய முதலியார் – ஏலவார்குழலி அம்மையார் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் புலமை.
1889 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று தொழுவூர் வேலாயுத முதலியார் இறைவனடி சேர்ந்தார். இவரது சமாதி திருவொற்றியூரில் அமைந்துள்ளது. ஒரு சிறு சம்பவம் சொல்லி நிறுத்துகிறேன்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



