A GRAND RECITAL J K SIVAN

பரசுராம க்ஷேத்ர யாத்திரை – நங்கநல்லூர் J K J.k. Sivan
17.4.26 -22.4.26
ஒரு இனிய சங்கீத மாலைப்பொழுது
19 .4. 26 காலையிலிருந்து உச்சி வேளை ஆலய தரிச னம் முடிந்து பிற்பகல் 2 மணிக்கு மேல் நண்பர் வீட்டில் பெரும்பாவூரில் விருந்து சாப்பாடு. பாலக்காடு சமை யல் எளிதில் கிடைக்க கூடியதா? கேரளாவில் வெளியே பல இடங்களில் பூரண சைவ உணவகங்கள் நாம் எதிர் பார்க்கும் அளவுக்கு மனதுக்கு த்ருப்தியாக கிடைக்குமா
என்பது சந்தேகம் என்பது என் அபிப்ராயம். ஏதோ இது வரை எனக்கு சென்ற இடமெல்லாம் வீட்டு சாப்பாடு கிடைத்தது என் சத் கர்மபலன். அவ்வளவு தான்.
நான் சங்கீத ப்ரியன். ரசிகன். பாட ஆசை. ஆனால் பாடகன் அல்ல. என் நண்பர்களில் பலர் பாடுபவர் களாக அமைந்துள்ளது இதனால் தான். ஸ்ரீ S, R. சந்திரசேகரன் (ex BSNL ) அப்படி ஒரு கலைஞர். இதமாக, பழகும் மென்மையான பேச்சாளர். பாசமிக்கவர். அடிக்கடி அவர் பாடல்களை எனக்கு பாடி அனுப்புவார். ரசிப்பேன். நான் பாடுவது அவரோ மற்றவர்களோ கேட்கும்படியாக இருக்குமா என்பது எனக்கே சந்தேகம் தான் என்றாலும் அவர் இதுவரை என் பாட்டை குறை சொன்னது கிடையாது. குறை சொல்லவே தெரியாது அவருக்கு.
ஸ்ரீ சந்த்ரசேகரன் பேரன் உபநயனத்துக்கு முதல் நாள் 19/4/26 மாலை அவர் வீட்டில் ஒரு அற்புதமான சங்கீத கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சங்கீத குடும்பம் அல்லவா? சந்திரசேகரின் மருமகன் ஸ்ரீ C.Y. சுப்ரமணி யன் ஒரு சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட் என்றாலும் ஞானஸ்தர். சங்கீத வித்வான். கஞ்சிரா வாசிப் பவர் (குரு; ஸ்ரீ. Y.N .சாந்தாராம்) அவர் இளைய சகோதரன் ஸ்ரீ C .Y.கங்காதரன் சிறந்த சங்கீத வித்வான். இயற்கை யிலேயே நல்ல குரல்வளத்தை இறைவன் பரிசாக பெற்றவர்.
என்றுமில்லாத அதிசயமாக அந்த இல்லத்தில் அன்று மாலை இசை மழை பொழியப்போகிறது என்று அறிந்து தானோ என்னவோ கச்சேரி ஆரம்பிக்கும் முன்பே அழையா விருந்தாளியாக ஸ்ரீமான் வருணன் வந்து ஒரு தனி ஆவர்த்தனம் சில நிமிஷங்கள் நடத்தி னார். அதனால் வெளியே அமைத்திருந்த மேடையை வீட்டுக்குள்ளேயே அமைத்து வருணனை வரவேற்று மாலை கச்சேரி வர்ணத்தோடு ஆரம்ப மானது.
சங்கீத வித்வான் ஸ்ரீ C Y கங்காதரன்,பல வித்வான் களிடம் சங்கீதம் பயின்றவர். ( குருமார்கள்; வித்வான் ஸ்ரீ சைலேஷ் ராமமூர்த்தி, ஸ்ரீ நெடும்குண்ணம் வாசுதேவன் ஸ்ரீ K.V. க்ரிஷ்ணப்ரசாத் , மற்றும் மாவேலிக்காரா ஸ்ரீ P. சுப்ரமணியம்.)
மிருதங்கம் எட்டுமானூர் ஸ்ரீ பாலாஜி சுப்ரமணியன். இளைஞர். கலை ஆர்வம் மிக்கவர். ஆறுவயது சிறுவனா க இருந்தபோதிலிருந்து மிருதங்கத்தின் மேல் ஆர்வம். பயிற்சி. ( குரு; ஸ்ரீ M S . திலீப்குமார், ஸ்ரீ ஸ்ரீகாந்த் கே. புலிக்கன், ஸ்ரீ N C. பரத்வாஜ்)
வயலின்; மங்கணம் (கோட்டயம்), ஸ்ரீ ஆகாஷ் கிருஷ் ணன். இளைஞர். வளரும் கலைஞர். இவரும் ஆறுவயது முதல் வாசிப்பவர். (குரு; கலாக்ஷேத்ரம் ஸ்ரீ மாத்யூ, மற்றும் ஸ்ரீ கும்மணம் உபேந்திரநாத், கலைமாமணி பத்மஸ்ரீ குமாரி A கன்யாகுமாரி)
கச்சேரிக்கு மைக் சவுண்டு ஒலிபெருக்கி, சிஸ்டம் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தது. ஒரு நல்ல chamber music அந்த சாயந்திர வேளையில் அனுபவித்ததில் பிரயாண களைப்பு முற்றிலும் அகன்று விட்டது. கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரத்துக்கு மேல் அமைதியாக கந்தர்வ கானம். சிறந்த பக்க வாத்தியத்தோடு இணைந்திருந் தது.
கச்சேரிக்கு எடுத்துக் கொண்ட உருப்படிகள் அற்புதமா ன வை; ஜனரஞ்சகமான கிருதிகள்.;
முதலில் சாவேரி வர்ணம்.
“சரசுதாநின்னே” சாவேரி (15வது மேள ஜன்ய ராகம்) கொத்தவாசல் வெங்கட்ராமய்யர் க்ரிதி. ஆரோஹண அவரோஹண ஸ்வர ப்ரஸ்தாரம், கல்பனா ஸ்வரம், ராக ஆலாபனம், எல்லாமே பஹு சுகம். சங்கீத தேவதைகளின் நர்த்தனம் குரலில் காட்டப்பட்டது.
அடுத்தது ‘கஜவதன மாம்பாஹி, ‘ ஹம்சத்வனி ராகத்தில் மாமேதை ஸ்ரீ M .D ராமநாதன் சாஹித்யம்.
அடுத்து ‘ஸ்ரீ பார்கவி , சங்கீத த்ரிமூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் க்ரிதி. மங்கள கைசிகி ராகத்தில் காலப்ரமாணத்தோடு நிரவல் அற்புதமாக இருந்தது. வயலின் வித்துவான் இசையோடு இழைந்து கைதட்டல் பெற்றார்.
நாலாவதாக ” ப்ரோசெவரெவரெ ” என்ற ஸ்ரீ தியாகராஜ சுவாமி க்ரிதி. ஸ்ரீரஞ்சனி ராகத்தை பிழிந்து ரசமாக கொடுத் து அற்புதமான ஆலாபனம். கங்காதரன் முன் ஜென்மத்தில் தேனாபிஷேகம் எல்லா சிவாலயத்திலும் செய்தவர் என்று புரிந்தது. ஸ்வரப்ரஸ்தாரம் அருமை யாக பிசிறில்லாமல் காற்றில் கலந்து செவியில் கரைந் தது. கமகம் கலக்கியது. இதற்கு தயிர் சாதத்துக்கு வடு மாங்காய் போல சொகு சுகா மிருதங்க தாளம் ..சபாஷ் பாலாஜி சுப்ரமண்யா.
ஐந்தாவதாக சாமா சாஸ்த்ரிகள் வந்து விட்டார். அவரது பிரசித்தமான ”ராவே ஹிமகிரி(ஸ்வர ஜாதி) தோடி எனக்கு பிடித்த ராகம். எந்த அவசரமுமின்றி, குழந்தை கள் பெரியவர்கள் குறுக்கும் நெடுக்கும் அலைந்தாலும் கவனம் கலையாதபடி கண்ணை மூடியவாறு தோடி யின் வியூகத்தில் வெற்றிகரமாக நுழைந்து கரக்கம்பம், சிரக்கம்பத்தோடு கங்காதரன் வெளிப்பட்டது மறக்க முடியாத ஒரு ரசார்ணவ அனுபவம்.
கச்சேரி சூடு பிடிக்கும் நேரம் தியாகராஜ ஸ்வாமி களின் ”சோபில்லு சப்தஸ்வர”…. க்ரிதி. எல்லோருக்கும் பிடித்த ஜகன்மோகினி ராகம். ரூபக தாளத்தில் சவுக்க காலத்தில் ஆனந்தமாக கேட்டேன். அர்ஜுனனின் ப்ரம்மாஸ்திரமாக அனைவரையும் கட்டிப் போட்டது.
ஸ்வாமிகளை தொடர்ந்து தீக்ஷிதர் மீண்டும் ‘ .சபையை அலங்கரித்தார். ”பாரதி மதிசன’ ஸமஸ்க்ரித சாஹித் யம். தேவமனோஹரி ராகம். கொஞ்சம் விஸ்தாரமா கவே கங்காதரன் இதில் சஞ்சாரம் செய்து செவிக்கின் பம் சேர்த்தார். குழந்தைகளும் தலையாட்டி ரசிக்கும் ராகம் தேவமனோஹரி. நிறைய சினிமா பாடல்கள் அதனால் தான் இந்த ராகத்தில் பிரபலம்.
அப்புறம் கொஞ்சம் வித்யாசமாக ஒரு போனஸாக, கரஹரப்ரியா தொடர்ந்தது. இது டாக்டர் கைப்பிள்ளி கேசவன் நம்பூதிரியின் சொந்த சாஹித்யம் , ”அப்பன் அவதரித்த கதாம்ருதம்” இந்த பாடலை நம்பூதிரி தனது சிஷ்யர்களுடன் சேர்ந்து பாடுவதை முன்பே யு ட்யூபில் நான் கேட்டு ரசித்ததால் மீண்டும் கங்காதரன் குரலில் கேட்கும்போது ஆனந்த பரவசமாக இருந்தது. ம்ரிதங்கம் இந்த ஸ்லோகத்துக்கு ”பக்கா’ வாத்திய
மாக அமைந்தது. தேங்க்ஸ் பாலாஜி.
தொடர்ந்து ‘எவருமதுகுதுரா’ – தியாகராஜ ஸ்வாமிகளி ன் கல்யாணி ராக க்ரிதி . ”ஆஹா ஸ்ரீமன் கங்கா தரா, உங்கள் இசையால் எனக்கு முற்காலத்து கல்யா ணி ராக சக்ரவத்தி ஸ்ரீ G N B யையே என் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்களே! அற்புதமான ஆலாபனை. ஸ்வர சுத்த ப்ரஸ்தாரம். ஒரு குட்டி ராக ” சர்க்கஸ் ‘but quite successful. congrats .
”கேலதி மம ஹ்ரிதயே ராமா.” அவதூதர் ப்ரம்ம ஞானி சதாசிவ ப்ரம்மேந்த்ரரின் இந்த கீர்த்தனையை பலர் பல ராகங்களில் பாடினாலும் அடாணாவில் பாடுவது தான் சம்ப்ரதாயம். ராமாயணத்தில் ராமனின் லீலை களை விவரிக்கும் அற்புத க்ரிதி, சீதா கல்யாணம், சமுத்திர பந்தனம், ராவண ஸம்ஹாரம் எல்லாம் பக்தி பூர்வமாக கேட்கும்போது தெய்வீக உணர்வை
தந்தது.
திடீரென்று ஆச்சர்யமான மனிதர் ஒருவர் இந்த கச்சேரியில் பிரசன்னமாகி விட்டார். நான் அவரை எதிர்பார்க்கவே இல்லை. ஒருவேளை சந்திரசேகரன் அவரையும் அழைத்திருப்பாரோ? ஆம். கான கலாதர
ஸ்ரீ மதுரை மணி அய்யர் அல்லவா அவர். அவருடைய படத்தை அற்புதமாக வரைந்து வீட்டில் வைத்திருந்த
திலிருந்தே தெரிந்து விட்டது. அவரும் ”சொந்தக்காரர்” என்று. அதனால் தான் ”ஸரஸ ஸாமதானா ” காபி நாராயணி ராகத்தில் கங்காதரன் குரலில் கலந்து மணி ஐயர் மீண்டும் ஒலித்தார். அடாடா ஸ்வரப்ரஸ்தாரம் அபூர்வம். துரித கதியில் சங்கதிகள். விருந்து. அப்பா!! எத்தனை நாள் ஆச்சு இந்த குரல் கேட்டு…
நேரம் போனதே தெரியவில்லை. கச்சேரி முடியும் நேரம் வந்துவிட்டது. வெளியே மேசைகள் நகரும் சப்தம். எல்லோருக்கும் இரவு உணவுக்கு இலைகள், டம்பளர் வைத்து ஓசை எழுப்ப உள்ளே இங்கே கச்சேரியில் என் உள்ளங்கவர்ந்த பழைய காலஞ் சென்ற வித்வானின் ஸ்பெஷல் ” எந்நேரமும் உந்தன் சந்நிதியில்”….. பாடலை ஆரம்பித்தார் கங்காதரன். ஆஹா, அமெரிக்க
ராக இருந்தாலும் ஜான் ஹிக்கின்ஸ் இந்த பாடலைப் பாடும் போது அதில் எத்தனை ராக சஞ்சாரம், மனோதர்ம சங்கதிகள், பிடிகள், ஒரு தனி குழைவு, தேவகாந்தாரி யின் பிரத்யேக காந்த சக்தி நம் இதயத்தை அப்படியே விழுங்கி கவர்ந்துவிடும். கோபால க்ருஷ்ண பாரதிகள் தந்த நந்தனார் கீத்தனை பாடல்களில் ஒரு முத்து இது .
துக்கடாவாக கச்சேரியின் இறுதியில் ஒரு ”லோக்கல்” க்ரிதி. லோக்கலா?ஆம். கேரளாவில் பெரும்பா வூரில் கங்காதரன் என்ற கேரள பாகவதர் கச்சேரி பண்ணும்போது அந்த ஊர் ராஜா ஸ்வாதி திருநாளின் கீர்த்தனை ஒன்றையாவது பாடவேண்டாமா?
”போகீந்த்ர சாயினம் ”…என்ற குந்தலவராளி ராக குட்டி பாடல் கனகச்சிதமாக அமைந்து பாலாஜியின் ஒரு குட்டி தனி ஆவர்த்தனமும் பூர்த்தியாகிவிட்டது.
மங்களம் பாட வழக்கமான மத்யமாவதியை விட்டு விட்டு அற்புதமாக சௌராஷ்ட்ரம் ராகத்தைத் தேர்ந்தெடுத்தது சிறந்த உத்தி.
நன்றாக களை கட்டிய கச்சேரி இனிது நிறைவேறி எல்லோரும் வெளியே சாப்பிட சென்றோம்.
செவிக்குணவு க்கு பிறகு வயிற்றுக்குணவு காத்திருந்
தது. இது போன்ற ஒரு நல்ல சம்பிரதாய கர்நாடக சங்கீத இசை கச்சேரியை மீண்டும் என்று கேட்பேனோ?!

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;