
அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே!! – நங்கநல்லூர் J K SIVAN
நண்பர்களே, நாம் அனைவருமே நிச்சயம் 60-80 வட்டத்துக்குள் இருப்பவர்கள் என்பதால் நம்மில் .அநேகருக்கு தற்போது அப்பா அம்மா இருக்க வாய்ப்பில்லை, இருப்பவர்களுக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரம். நீங்கள் பாக்கியசாலிகள் என்பதில் சந்தேகமே இல்லை.
கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம், கழுத்தை அல்ல, கண்ணை மூடி, உள்நோக்கி , அதாவது நம் கடந்த வாழ்க்கைப் பாதையை.
அரைநிஜார், பாவாடை சட்டை போட்ட இளசுகள். பள்ளிக்கூடம் செருப்பில்லாமல் நடந்து போனவர்கள், ஒரு ஆனந்த உலகத்தில் மிதந்தவர்கள். நமக்கு பெரியவர்களிடம், பெற்றோரிடம், டீச்சர்களிடம், அன்பு, பக்தி, மரியாதை இருந்தது.மதித்தோம். புகழ்ந்தோம். அவர்கள் சொன்னதைக் கேட்போம், எதிர்த்து பேச தெரியாது. உள்ளூர பயம் உண்டு. கண் தான் பெரிதாக விழித்து அங்குமிங்கும் பார்க்கும், காது எல்லாவற்றையும் கேட்கும், ஆனால் வாய் பதில் பேசாது. வாத்யார் தண்டனை கொடுத்த போது கோபமடையா மல் நம் தவறுக்காக என்று உணர்ந்து அதை பெற்றுக் கொண்டோம். வீட்டில் போய் அதை சொன்னதில்லை. அப்பா அம்மா தான் நம் உலகம். tv ரேடியோ பேப்பர் ஒன்றுமே தெரியாமல் வளர்ந்தவர்கள். பள்ளிக்கூடத்தில் வாத்யார்களை தெய்வமாக பார்த்து வணங்கி, கீழ்ப்படிந்து நடந்தவர்கள். தினமும் காலையில் கடவுள் வாழ்த்து, பிரார்த்தனை கூட்டம் இருந்தது. சீருடை இல்லாமல் எளிய உடைகளில், அலுமினியம் டிபன் பாக்சில் மதிய சாப்பாட்டுடன், நெற்றிக்கு இட்டுக்கொண்டு, நமது நண்பர்கள், நண்பிகள் அனைவருமே நம்மைப் போன்றவர்களாகவே இருந்து படித்து வளர்ந்தோம். . மரத்தடியில் மண் தரையில் அமர்ந்து படித்தவர்கள், கதை கேட்டவர்கள். பாயில் பக்கத்தில் சகோதரர்கள், சகோதரிகளோடு, ஒரே தலையணையை பங்கு போட்டு, ஒரே போர்வைக்குள், படுத்து தூங்கியவர்கள்,. எதையும் எதிர்பார்க்கத் தெரியாதவர்கள். அப்பா அம்மா தான் உலகம் என்று வளர்ந்தவர்கள்.
உலகம் மாறிக்கொண்டே வரும்போது நாமும் அதோடு சேர்ந்து மாறிக்கொண்டே வந்து விட்டோம். இப்போது நாம் பழைய ”நாம் ‘ கள் இல்லை. EXPIRY DATE பார்த்து உணவையும் மருந்தையும் பொருள்களையும் உபயோ கிப்பவர்கள். நமது தேவைகள், வசதிகளை அடையாளம் காட்டி டெலிபோனில் ஆர்டர் பண்ணி வீட்டு வாசலில் டெலிவரி பெறுபவர்கள். ஓரணாவுக்கு அரைமணிநேரம் பேரம் பேசியவர்கள் என்ன கேட்டாலும் கொடுத்து உபயோகமற்ற பொருள்களை வாங்குகிறோம்.
இப்போது நாம் பெற்றோர்கள், நாம் தான் அப்பா அம்மாக்கள். வாத்தியார்கள், தாத்தா பாட்டிகள். நாம் வளர்ந்த படி நமது வாரிசுகளை வளர்க்க முடியாதவர்கள். அதிகாரம் செலுத்த, அடிக்க, திட்ட, அடக்க, முடியாதவர்கள். உணர்ச்சிகளை அடக்க வேண்டிய அவசியம் உணர்ந்தவர்கள். காது இருந்தும் கேளாதவர் களாக, கண்ணிருந்தும் பார்க்காதவர்களாக, வாய் இருந்தும் பேச முடியாதவர்களாக இருக்க கற்றுக் கொண்டுவிட்டோம். அப்போது தான் அமைதி வெளிப் புறத்திலாவது கொஞ்சம் கிடைக்குமா என்று தேடுபவர்கள். நாம் எல்லோருமே பொறுப்பு மிக்கவர்கள். குழந்தை, பேரன் பேத்தி என்பது குடும்ப சொத்து. எதிர்கால சேமிப்பு இல்லை. பெருமை பேர் புகழ் நமக்கு சேர்ப்பதற்காக இல்லை. அன்பை அளவு கடந்து கொடுக்கலாம், திரும்ப எதிர்ப்பார்க்க வழியில்லை. அது கூடாது. ஏமாந்து போவோம். அது தானாகவே பல மடங்கு அதிகமாக நாம் நடந்து கொள்ளும் விதத்தால் அது கிடைத்தால் உலகத்திலேயே நாம் தான் பெரிய அதிர்ஷ்டக்காரர்கள்.
இக்கால குழந்தைகள் நம்மைப் போல் வளரவில்லை, நம்மைபோல் வளர்க்கப் படாதவர்கள். அது இப்போ நடக்காது. காலத்தின் நிர்ப்பந்தம் அது. நாம் நமது பெற்றோரைக் காப்பி அடித்து வளர்ந்தது போல் நம்மைக் காப்பி யடித்து அவர்கள் வளர்கிறார்கள் என்பது ஞாபகமிருக்கட்டும். குழந்தைகள் பெற்றோரிடமிருந்து தான் பாடம் கற்கிறார்கள். நாம் நல்ல பெற்றோராக இருந்தால் நமது வாரிசுகள் நல்ல பெற்றோராக பின்னால் மாற வாய்ப்பு அதிகம்.
பயன், பலனை, எதிர்பாராமல் வளர்த்து, படிக்கவைத்து, சிந்திக்க வைத்து, பண்பாடு சொல்லிக்கொடுத்து, பயம் போக்கி, மரியாதை, ஒழுக்கம் மட்டுமே கொடுத்து, பக்தியை புகட்டி வளர்க்கப்பட்ட வாரிசுகள் தான் உண்மை யான சொத்து. செடிக்கு தண்ணீர் சூரிய வெளிச்சம் தேவை. அது போல் குழந்தைகளுக்கு அன்பு, பாசம், சுயநலமற்ற தியாகம் அனைத்தும் நாம் தரவேண்டும். இது பெற்றோர் கடமை.
நம் வாரிசுகள் பெரிய டாக்டர்கள், இன்ஜீனியர்கள், வக்கீல்களாக வேண்டும். நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று மட்டுமே வளர்த்தால் கத்தியைக் கூராகத் தீட்டி நம் கழுத்தையே வெட்டிக் கொள்வது ஆகும். எது தேடினோமோ, அது கிடைக்கும், நமக்கல்ல, அவர்களுக்கு, நமக்கு அவர்களும் கிடைக்க மாட்டார்கள்..இதைத் தானே சுற்றிலும் காண்கிறோம்.
எத்தனையோ பெற்றோர்கள் மிக கஷ்டப்பட்டு எதிர்பார்ப்புகளோடு வளர்த்து, படிக்க வைத்து வெளி நாடுக ளுக்கு அனுப்பிய வாரிசுகளை இழந்து முதியோர் இல்லங்களில் தனிமையில் வாழ்வது கண்கூடு.
பணம் பெரிதென்று நினைக்கும் இடத்தில் குணத்திற்கு வேலையோ, இடமோ இல்லை. நாம் நமது பெற்றோரை கடிந்து பேசி, மரியாதை இன்றி நடத்தினால், அதை கவனிக்கும் வாரிசுகள், நமக்கு அதையே திரும்ப தருகிறார்கள் நமது சுயநல காரியங்கள், பேச்சுக்கள், … நமக்கே சுவற்றில் அடித்த பந்து போல் திரும்பி நம்மிட மே வரும்… ஏன்? . அது நாம் நமது வாரிசுகளுக்கு கற்றுக்கொடுத்த பாடம் இல்லையா?
நான் எழுதிய ஒரு கதையில் இப்படி வளர்ந்த பணக்கார கர்வம் பிடித்த பையன் தனது மனைவியோடு மாளிகையில் வாழ்ந்து அப்பாவை தோட்டத்தில் ஒரு சிறு அறையில்,இல்லை,சிறையில், வசிக்க வைத்து, தினமும் வேலைக்காரர்கள் மூலம் அலுமி னியம் தட்டில் உணவு அளிப்பான். முதியவர் இறந்த வுடன் அவர் பொருள்களை வீசி எறியும்போது, கூடவே இருந்த அவணுடைய 8 வயது பிள்ளை, தாத்தா உபயோ கித்த அலுமினிய தட்டை மாளிகைக்குள் கொண்டு வருவதை பார்த்து விட்டு ”ஏண்டா இதை இங்கே கொண்டு வந்தாய்? என கேட்கும்போது அந்த பையன்
”அப்பா நான் பெரியவனாகி நீ தாத்தா மாதிரி ஆகும் போது உனக்கு நான் சாப்பாடு கொடுக்கவேண்டாமா. அப்போது வேணுமே. நீ தானே சொன்னே, தாத்தா எல்லாம் இதுலே தான் சாப்பிடுவா என்று ” என்கிறான். இது தான் நாம் வாரிசுகளுக்கு கற்றுக் கொடுக்கும் பாடம்.
தாய் தந்தை உறவு, பாசம், பக்தி பண்பு இதையெல்லாம் கதையாக
சொல்கிறதே, நமக்கே தெரியாதபோது அதை எப்படி நம் வாரிசுகள் அறியும்?, பயன் பெறும்? நான் நிறைய கதைகள், புத்தகங்கள் எழுதி இலவசமாக விநியோகிப்பது இதை புகட்டவே. இதில் நான் ஓரளவு வெற்றி கண்ட சந்தோஷம் பகவான் கிருஷ்ணன் அருள் என்று கருதுகி றேன். இதை தற்பெருமையாக நினைக்க வில்லை.
குழந்தைகளுக்கு ஆதாரமாக தேவையான பாசம், அன்பு, நட்பு, பாதுகாப்பு எதுவுமே இப்போது பெற்றோரி
டமிருந்து கிடைப்பதில்லை. காரணம். அவர்கள் பணத்தை தேடி, ஓட வேண்டிய சூழ்நிலை. இருவருமே உத்யோகஸ்தர்களாக ஒரே வீட்டில் பிரிந்தே வாழ்கிறார்கள். பெற்றோரை அணுகவே வாரிசுகள் பயப்படுகிறார்கள் காரணம். பெற்றோரின் கோபம், கண்டிப்பு, பொறுமையின்மை, அவசரம். வேகம்.
யாருக்குமே நேரம் கிடைப்பதில்லை சேர்ந்சொல்ல தோன்றியது, சொல்கிறேன்: நங்கநல்லூர் J K SIVAN
நண்பர்களே, நாம் அனைவருமே நிச்சயம் 60-80 வட்டத்துக்குள் இருப்பவர்கள் என்பதால் நம்மில் .அநேகருக்கு தற்போது அப்பா அம்மா இருக்க வாய்ப்பில்லை, இருப்பவர்களுக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரம். நீங்கள் பாக்கியசாலிகள் என்பதில் சந்தேகமே இல்லை.
கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம், கழுத்தை அல்ல, கண்ணை மூடி, உள்நோக்கி , அதாவது நம் கடந்த வாழ்க்கைப் பாதையை.
அரைநிஜார், பாவாடை சட்டை போட்ட இளசுகள். பள்ளிக்கூடம் செருப்பில்லாமல் நடந்து போனவர்கள், ஒரு ஆனந்த உலகத்தில் மிதந்தவர்கள். நமக்கு பெரியவர்களிடம், பெற்றோரிடம், டீச்சர்களிடம், அன்பு, பக்தி, மரியாதை இருந்தது.மதித்தோம். புகழ்ந்தோம். அவர்கள் சொன்னதைக் கேட்போம், எதிர்த்து பேச தெரியாது. உள்ளூர பயம் உண்டு. கண் தான் பெரிதாக விழித்து அங்குமிங்கும் பார்க்கும், காது எல்லாவற்றையும் கேட்கும், ஆனால் வாய் பதில் பேசாது. வாத்யார் தண்டனை கொடுத்த போது கோபமடையா மல் நம் தவறுக்காக என்று உணர்ந்து அதை பெற்றுக் கொண்டோம். வீட்டில் போய் அதை சொன்னதில்லை. அப்பா அம்மா தான் நம் உலகம். tv ரேடியோ பேப்பர் ஒன்றுமே தெரியாமல் வளர்ந்தவர்கள். பள்ளிக்கூடத்தில் வாத்யார்களை தெய்வமாக பார்த்து வணங்கி, கீழ்ப்படிந்து நடந்தவர்கள். தினமும் காலையில் கடவுள் வாழ்த்து, பிரார்த்தனை கூட்டம் இருந்தது. சீருடை இல்லாமல் எளிய உடைகளில், அலுமினியம் டிபன் பாக்சில் மதிய சாப்பாட்டுடன், நெற்றிக்கு இட்டுக்கொண்டு, நமது நண்பர்கள், நண்பிகள் அனைவருமே நம்மைப் போன்றவர்களாகவே இருந்து படித்து வளர்ந்தோம். . மரத்தடியில் மண் தரையில் அமர்ந்து படித்தவர்கள், கதை கேட்டவர்கள். பாயில் பக்கத்தில் சகோதரர்கள், சகோதரிகளோடு, ஒரே தலையணையை பங்கு போட்டு, ஒரே போர்வைக்குள், படுத்து தூங்கியவர்கள்,. எதையும் எதிர்பார்க்கத் தெரியாதவர்கள். அப்பா அம்மா தான் உலகம் என்று வளர்ந்தவர்கள்.
உலகம் மாறிக்கொண்டே வரும்போது நாமும் அதோடு சேர்ந்து மாறிக்கொண்டே வந்து விட்டோம். இப்போது நாம் பழைய ”நாம் ‘ கள் இல்லை. EXPIRY DATE பார்த்து உணவையும் மருந்தையும் பொருள்களையும் உபயோ கிப்பவர்கள். நமது தேவைகள், வசதிகளை அடையாளம் காட்டி டெலிபோனில் ஆர்டர் பண்ணி வீட்டு வாசலில் டெலிவரி பெறுபவர்கள். ஓரணாவுக்கு அரைமணிநேரம் பேரம் பேசியவர்கள் என்ன கேட்டாலும் கொடுத்து உபயோகமற்ற பொருள்களை வாங்குகிறோம்.
இப்போது நாம் பெற்றோர்கள், நாம் தான் அப்பா அம்மாக்கள். வாத்தியார்கள், தாத்தா பாட்டிகள். நாம் வளர்ந்த படி நமது வாரிசுகளை வளர்க்க முடியாதவர்கள். அதிகாரம் செலுத்த, அடிக்க, திட்ட, அடக்க, முடியாதவர்கள். உணர்ச்சிகளை அடக்க வேண்டிய அவசியம் உணர்ந்தவர்கள். காது இருந்தும் கேளாதவர் களாக, கண்ணிருந்தும் பார்க்காதவர்களாக, வாய் இருந்தும் பேச முடியாதவர்களாக இருக்க கற்றுக் கொண்டுவிட்டோம். அப்போது தான் அமைதி வெளிப் புறத்திலாவது கொஞ்சம் கிடைக்குமா என்று தேடுபவர்கள். நாம் எல்லோருமே பொறுப்பு மிக்கவர்கள். குழந்தை, பேரன் பேத்தி என்பது குடும்ப சொத்து. எதிர்கால சேமிப்பு இல்லை. பெருமை பேர் புகழ் நமக்கு சேர்ப்பதற்காக இல்லை. அன்பை அளவு கடந்து கொடுக்கலாம், திரும்ப எதிர்ப்பார்க்க வழியில்லை. அது கூடாது. ஏமாந்து போவோம். அது தானாகவே பல மடங்கு அதிகமாக நாம் நடந்து கொள்ளும் விதத்தால் அது கிடைத்தால் உலகத்திலேயே நாம் தான் பெரிய அதிர்ஷ்டக்காரர்கள்.
இக்கால குழந்தைகள் நம்மைப் போல் வளரவில்லை, நம்மைபோல் வளர்க்கப் படாதவர்கள். அது இப்போ நடக்காது. காலத்தின் நிர்ப்பந்தம் அது. நாம் நமது பெற்றோரைக் காப்பி அடித்து வளர்ந்தது போல் நம்மைக் காப்பி யடித்து அவர்கள் வளர்கிறார்கள் என்பது ஞாபகமிருக்கட்டும். குழந்தைகள் பெற்றோரிடமிருந்து தான் பாடம் கற்கிறார்கள். நாம் நல்ல பெற்றோராக இருந்தால் நமது வாரிசுகள் நல்ல பெற்றோராக பின்னால் மாற வாய்ப்பு அதிகம்.
பயன், பலனை, எதிர்பாராமல் வளர்த்து, படிக்கவைத்து, சிந்திக்க வைத்து, பண்பாடு சொல்லிக்கொடுத்து, பயம் போக்கி, மரியாதை, ஒழுக்கம் மட்டுமே கொடுத்து, பக்தியை புகட்டி வளர்க்கப்பட்ட வாரிசுகள் தான் உண்மை யான சொத்து. செடிக்கு தண்ணீர் சூரிய வெளிச்சம் தேவை. அது போல் குழந்தைகளுக்கு அன்பு, பாசம், சுயநலமற்ற தியாகம் அனைத்தும் நாம் தரவேண்டும். இது பெற்றோர் கடமை.
நம் வாரிசுகள் பெரிய டாக்டர்கள், இன்ஜீனியர்கள், வக்கீல்களாக வேண்டும். நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று மட்டுமே வளர்த்தால் கத்தியைக் கூராகத் தீட்டி நம் கழுத்தையே வெட்டிக் கொள்வது ஆகும். எது தேடினோமோ, அது கிடைக்கும், நமக்கல்ல, அவர்களுக்கு, நமக்கு அவர்களும் கிடைக்க மாட்டார்கள்..இதைத் தானே சுற்றிலும் காண்கிறோம்.
எத்தனையோ பெற்றோர்கள் மிக கஷ்டப்பட்டு எதிர்பார்ப்புகளோடு வளர்த்து, படிக்க வைத்து வெளி நாடுக ளுக்கு அனுப்பிய வாரிசுகளை இழந்து முதியோர் இல்லங்களில் தனிமையில் வாழ்வது கண்கூடு.
பணம் பெரிதென்று நினைக்கும் இடத்தில் குணத்திற்கு வேலையோ, இடமோ இல்லை. நாம் நமது பெற்றோரை கடிந்து பேசி, மரியாதை இன்றி நடத்தினால், அதை கவனிக்கும் வாரிசுகள், நமக்கு அதையே திரும்ப தருகிறார்கள் நமது சுயநல காரியங்கள், பேச்சுக்கள், … நமக்கே சுவற்றில் அடித்த பந்து போல் திரும்பி நம்மிட மே வரும்… ஏன்? . அது நாம் நமது வாரிசுகளுக்கு கற்றுக்கொடுத்த பாடம் இல்லையா?
நான் எழுதிய ஒரு கதையில் இப்படி வளர்ந்த பணக்கார கர்வம் பிடித்த பையன் தனது மனைவியோடு மாளிகையில் வாழ்ந்து அப்பாவை தோட்டத்தில் ஒரு சிறு அறையில்,இல்லை,சிறையில், வசிக்க வைத்து, தினமும் வேலைக்காரர்கள் மூலம் அலுமி னியம் தட்டில் உணவு அளிப்பான். முதியவர் இறந்த வுடன் அவர் பொருள்களை வீசி எறியும்போது, கூடவே இருந்த அவணுடைய 8 வயது பிள்ளை, தாத்தா உபயோ கித்த அலுமினிய தட்டை மாளிகைக்குள் கொண்டு வருவதை பார்த்து விட்டு ”ஏண்டா இதை இங்கே கொண்டு வந்தாய்? என கேட்கும்போது அந்த பையன்
”அப்பா நான் பெரியவனாகி நீ தாத்தா மாதிரி ஆகும் போது உனக்கு நான் சாப்பாடு கொடுக்கவேண்டாமா. அப்போது வேணுமே. நீ தானே சொன்னே, தாத்தா எல்லாம் இதுலே தான் சாப்பிடுவா என்று ” என்கிறான். இது தான் நாம் வாரிசுகளுக்கு கற்றுக் கொடுக்கும் பாடம்.
ராமாயணம் பாரதம் பாகவதம் எல்லாம் து இருக்க. நமது வாரிசுகள் இளம் வயதிலிருந்தே, காசுக்காக உழைப்பவர்களிடம் தான் வளர்கிறார்கள், பாடம் பெறுகிறார்கள். அவர்கள் உள, மன, உடல் ரீதியில் பிரிந்து வளர்ந்து, வெளியே இளம் வயதில் கற்றதைத் தான் நாம் அவர்களிடமிருந்து பின்னால் திரும்ப பெறமுடியும். இதில் அதிர்ச்சி எதற்கு? ஏமாற்றம் ஏன் ? வருந்துவதற்கு என்ன இருக்கிறது?
தைத்ரிய உபநிஷத் என்ன சொல்கிறது? “Matru Devo Bhava, Pitru Devo Bhava” அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று அவ்வையார் தமிழில் சொன்னதை தானே. நாம் பெற்றோர்களாக இருக்கும்போது தெய்வங்களாக நடந்து கொண்டோமா, கொள்கி றோமா? நமது தாத்தா பாட்டி, அம்மா அப்பாவை வணங்குகிறோமா, அப்போதுதான் நம்மை அடுத்த தலைமுறை வணங்கும். நாம் கோவிலுக்கு சென்றோ மா, செல்கிறோமா, அப்போது தான் பக்தி என்ன என்று அடுத்த தலைமுறை உணரும். நம்மை மதிக்கும். தேவ கடன், மனுஷ கடன் பித்ரு கடன் நமக்கு தெரிந்தால் தானே நமக்கு சேரவேண்டியதை பின்னால் நாம் வாரிசுகளிடமிருந்து பெறலாம். அது வரை ”பாபா ப்ளேக் ஷீப்” பாகவே நம்மை சுற்றி நம்மைப் போல் மற்றதும் வளரும்.
குடும்பத்தில் ஒற்றுமை என்பது அவசியம். கணவன் மனைவிக்குள் பாசத்தோடு, உரிமையோடு, விட்டுக் கொடுக்கும் தன்மையோடு , அகம்பாவம் இல்லாமல், கடவுள் பக்தி கொஞ்சம் இருந்தால் கான்க்ரீட் flat கூட நிச்சயம் கோவிலாகலாம். அதில் வளரும் குழந்தை கள் மனங்களில் நற் குணங்கள், சத்வ குணங்கள், வளரும்.
நான் சொல்வதை உபதேசமாக எடுத்துக் கொள்ளாமல் ஆங்காங்கே உங்களுக்கே தெரிந்து, நடப்பவைக ளின் தொகுப்பாகவே எடுத்துக்கொண்டு சிந்திக்கலா மல்லவா?
சமீபத்தில் ரெண்டு முதியோர் இல்லம் சென்று அவர்களுக்கு ஒரு நாள் பூரா காலை உணவிலிருந்து, மதிய உணவு, இரவு உணவு வரை அளித்து மகிழ்ந்தேன். அவர்களோடு பேசி, புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவர்களுக்கு புத்தகங்கள் கொடுத்தேன். அன்பு வெள்ளத்தில் நீந்தி ஆனந்தமாக நனைந்தேன்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




