whither we go? j k sivan

எங்கே போகிறோம்? —  நங்கநல்லூர்  J K  SIVAN 

இதில்  சொல்லப்பட்ட கருத்துகளை ஏற்பதும், நிராகரிப்பதும் கூட  உங்களின் தனி உரிமை.எவரும் அதை தவறு என்று சொல்லமுடியாதே.  நான்  உங்கள் முன் தற்போது கண் முன் தோன்றும்  சில  நிலைப்பாடுகளை மட்டும் முன் வைக்கிறேன்.  இதெல்லாம் நாம் எல்லோரும் அன்றாடம் காணும்  விஷயங்கள். ஆகவே எதையும் நீங்களே  சிந்தித்து, அலசி,  ஏற்றுக் கொள்வதும், தள்ளுவதும் உங்கள் முடிவு. தனிமரம் தோப்பாகாது, தனி மனித சுதந்திரம் சமூக வலிமையானது. சமுதாய ஒற்றுமையை வளர்க்க வேண்டும்.
எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் எதிரும் புதிருமாக  இரு தரப்புகள், அபிப்ராயங்கள் இருக்கிறது. இது தான் உலகம். என்றுமே ரெட்டை மயமானது. இரவு பகல், பொய் , நிஜம், உஷ்ணம் குளிர்,  ஜனனம், மரணம்,  நீர்  நிலம்… இன்னும் எத்தனையோ..
என்னை சுற்றி ரெண்டு பேர். சுப்ரமணிய தேசிகர்.  நமது பாரம்பரியம், பண்பாடு, வழக்கம், முறை, பக்தி வழிபாடு இவற்றை அப்படியே  பின்பற்றி  வாழ்பவர்.  அவரது வலுவான எண்ணம்  கல்யாணம். அவசியம். அதில் பதி, பத்னி  பண்டைக்காலத்தில் இருந்தது போல் இருக்கவேண்டும் .
 இன்னொரு பக்கம், அறிவுச்  செழியன்,  வெள்ளை சட்டை, நெற்றியில் சும்மா  அழகுக்கு, பக்தியற்ற குங்கும கீற்று.  பாக்கெட்டில் வேறு யாரோ ஒருவர் படம், ரெண்டு கலர் கரை வேட்டி,  சிகரெட் நாற்றம். கையில் ஏதோ ஒரு கொடி உருவம்  பச்சை குத்திக்கொண்டு  நான்காம் வகுப்பு மூன்று முறை படித்து ‘ சீ, இதனால் என்ன பயன்?’  என்று துறந்து விட்டு  சுவரொட்டிகளில்,கை கூப்பி கள்ளமாக சிரிப்பவர்கள் படம் ஒட்டிக் கொண்டிருப் பவன். கூட்டம் ஒன்று அவனோடு இருப்பதால் கட்டப் பஞ்சாயத்தில் நல்ல வருமானம்.தேசிகர்;”தாலி அவசியம் சார். தாலி தான் வேலி . தாலி இல்லாத கல்யாணம், சேர்த்திகையே இல்லை.’
”ஓ. அப்படியா. தாலிலே  பல விதம் இருக்கே”
”ஆமாம்  அச்சுத்தாலி, ஆமைத்தாலி, இருக்கு.  பொட்டுத்தாலி ,
 அச்சுத்தாலி  என்றால் என்ன?
‘ நீங்க  பார்த்திருப்பேளே. தாலி தகட்டில் சிவலிங்கம், அம்மன், விஷ்ணு  உருவம் ஏதாவது எது தேவையோ அதை  அச்சிட்டிருக்கும். எந்த சைஸ், என்ன உருவம், வெயிட் எவ்வளவுலே வேணுமோ அதை,  வட்டமா, ஓவல் வடிவத்திலே எல்லாம் கிடைக்கும்.  தாலிக்கு “திருமங்கல்யம்” னு பேர்.  ஒழுங்கான சமச்சீரான வடிவம்
தமிழ் பிராமண குடும்பம், சில  வைணவ, சைவ  குடும்பங்களில் உபயோகிப்பது.  அச்சு என்றால் ஸ்திரமாக, ஒழுங்காக இருக்க என்று அர்த்தம்.

ஆமைத்தாலி என்பது ஆமை வடிவ தாலி. வட்டமா, மேலே புடைப்போடு, ஓடு மாதிரி இருக்கும். இந்த மாதிரி தலையை தமிழ் குடும்பங்கள் சிலவற்றில், செட்டியார், நாடார் குடும்பங்கள் உபயோகிக்கிறது. ஆமை  நீண்ட
 ஆயுள் கொண்டது,   பொறுமை,  நிதானம்,  அதன் சிறப்பான குணம். அது பெண்ணுக்கு அவசியம் என்று ஐதீகம்.   தாலி  ஆபரணமோ, நகையோ அல்ல. புனிதமான  ஆன்மீக சின்னம். பெண்ணுக்கு உயிரைவிட மேலானது என்பார்கள்.   சமூகத்தில் உயரிய அந்தஸ்தை பெண்களுக்கு அளிப்பது.

பாட்டை தாலி (Paattai Thaali)   நீளமான தட்டு போன்ற வடிவம் சைவ  மரபு சம்பந்தமுள்ளது.
பொட்டு தாலி  சிறிய வட்ட வடிவ மானது.   சில குடும்பங்களில்  ராமர்-சீதா தாலி, ராமர் சீதா  உருவம் பதித்தது , உபயோகிப் பார்கள்.
மதுரை ராமநாதபுரம் பகுதிகளில் சில குடும்பங்களில்  மீனாக்ஷி -சுந்தரேஸ்வரர் தாலி  பாரம்பரியமாக  அணிவார்கள். சைவ குடும்பங்களில் என்று சொல்லவேண்டியதில்லை.
நாக தாலி என்பது  பாம்பு வடிவம் கொண்ட தாலி.  குடும்ப பாதுகாப்பு, சக்தி இவற்றை குறிப்பது.
குடும்ப பாதுகாப்பு, சக்தி குறிக்கும்
செட்டியார் தாலி  என்பது பெரிதாக இருக்கும். அலங்காரமானது. பெரிய, அலங்காரமான வடிவம் கொண்ட அமைப்பு.  தாலிகள்  எல்லாமே  தங்கத்தால்  ஆனவையே.  நல்ல நாளில் (முஹூர்த்தம்)அன்று செய்ய ஆர்டர் கொடுப்பார்கள்,  அல்லது கடைகளில் வாங்குவார்கள்.வீட்டில் அல்லது கோவிலில் வைத்து  பூஜை செய்யும்  குடும்பங்கள் அநேகம்.  என்னதான் தங்க சங்கிலியில் தாலி இணைத்த்திருந்தாலும் அதன் மதிப்பு மஞ்சள் கயிற்றினால் தான்.  பழைய காலங்களில்  பசு மஞ்சள் தோய்த்த, பூசிய,  கயிற்றில் மஞ்சள் கிழங்கு கட்டிய தாலி தான் விசேஷம்.. கல்யாணங்களில்  முகூர்த்த நேரத்தில்  மணமகன்  தாலியை எடுத்துக் கொண்டு
மந்திரங்கள் சொல்லி மணப்பெண் கழுத்தில் கட்டி, மூன்று முடிச்சுகள் போடுவது தான் தாலி கட்டுவது. “மாங்கல்யம் தந்து னாதினாம்…”மந்திர ஒலி பலத்த தாள மேள வாத்யங்களுக்கிடையே கேட்பது தான் திருமண விழாவின் முக்கிய கட்டம். மலர் தூவி, மஞ்சள் அக்ஷதை தூவி, மணமக்களை எல்லோரும் ஆசிர்வதிக்கும் நேரம்.   மூன்று முடிச்சு மனம் வாக்கு காயம் மூன்றினாலும்  இணைந்த பிணைப்பு, கணவன் மனைவி  உறவு.ஆத்ம பந்தம்.
 கல்யாணம் என்றாலே  அதை ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்வோம்.
 கலியாணமான பெண் கழுத்தில் இருந்து தாலி கடைசிவரை கழற்றப்படாத ஒரு  மங்கல  நாண் .
அறிவுச் செழியன்  ஆதாரம் எதுவும்  காட்ட தேவையில்லை என்பவன். அவன் ஒரே கருத்து.  ‘கல்யாணமாவது கத்தரிக்காயாவது?”  ஐயா  சொல்லற கல்யாணம் எல்லாம்  தேவையில்லீங்க. அவசியமில்லை
நமது கேள்விகள்;   கல்யாணம் உண்மையிலேயே  அர்த்தமில்லாததா? அவசியமில்லாததா?கல்யாணம் அவசியமே இல்லை என்ற ஒரு கருத்து எப்படி நமது சமுதாயத்தில் தலையை நீட்டியது?
மாறிக்கொண்டே வரும் சமுதாய வாழ்க்கை முறையா? பொருளாதார, நவீன வழக்கமா, பழக்கமா ?
வம்சம் வாழையடி வாழையாக வளர கல்யாணம் அவசியம் என்பது நமது பண்பாடு என்பது மூட நம்பிக்கையா?குடும்பம் நடத்துவது என்பது ஒரு முக்கியமான வாழ்க்கை நிலைப்பாடு க்ரஹஸ்தாஸ்ரமம் என்று அதற்கு பெயர் ஆயிற்றே. இப்போது அது செல்லாக்காசா?
தனிமனித சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் என்பவை குறுக்கிட்டு இந்த பாரம்பரியத்தை சிதைப்பது  காலத்தின் கோலமா, ஏற்றுக்கொள்ளவேண்டியதா? பழசு குப்பைக்கூடைக்கா?
கல்யாணம்  பெண்களின் பாதுகாப்பாக இருந்தது போய் கல்யாணமாகாமல் இருப்பது சௌகர்யம் என்ற நினைப்பு, சுய நம்பிக்கை  சமூகத்தில்  வளர்கிறதா? வரவேற்க வேண்டியதா?
கல்யாணம் இல்லாமலேயே சேர்ந்து வாழும் எண்ணம் சில மனங்களில் குடி கொண்டு விட்டது சரியா? இல்லையா? பின்னே என்ன சார் வேறே வழி?தனியாக வாழமுடியும் என்ற நம்பிக்கை வளர்கிறது.  விவாக ரத்து போன்றவைகளால் சட்ட ரீதியான குளறுபடிகள் பொருளாதார  நஷ்டங்கள், மனக்கிலேசம், கஷ்டம், வேண்டாமே என்ற எண்ணம் ஆமோதிக்க தக்கதா?  இதற்கெல்லாம் காரணம், பெண்களின்  கல்வி, படிப்பு,  உத்யோக நிலைப்பாடு, எங்கும், எப்போதும், பிறர் துணை, உதவி தேவையின்றி தனித்து உலகமுழுதும்  பயணம் செய்யும் உரிமை, துணிச்சல். தன்னம்பிக்கை.  வாழ்க்கை என்பதைப் பற்றிய  தனித்துவமான நோக்கம். வாஸ்தவமா?பாரம்பரிய பண்பாடுகள்  மேல் அவநம்பிக்கை என்பது  காலத்தின் கட்டாயமா?. இதை தவறு என்று சொல்வது தவறா? எந்த கோர்ட்டாவது ஒப்புக்கொள்ளுமா?
அவரவர்  மனதுக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் உரிமை சட்ட ரீதி,இல்லையா? பழைய பஞ்சாங்கம் எதற்கு.உபதேசம் ஏன் ? இதற்கு  ஆதரவு பெருகுகிறதா?
உலகெங்கும் இந்த மனோநிலை வளர்ந்து வருகிறது.   சம்சாரம்,  ஸம்ஸ்காரம்  என்பதைப்  பற்றி எதற்கு நினைக்கவேண்டும்?. காலத்திற்கேற்ப கருத்து மாறுபாடும் வளருமல்லவா? எது கடமை, எது கட்டுப்பாடு?
எது ஸ்த்ரீ தர்மம்? எது ஸம்ப்ரதாயம்? என்றோ எவரோ சொன்னது இன்று என்னை கட்டுப்படுத்தவேண்டுமா?என்ற எண்ணம் தான் சுதந்திரமா?
மணமான பிறகு தான் ஒருவன்  தனது மூன்று முக்கிய கடன்களை தீர்க்க உரிமை பெறுகிறான். தேவ ருணம். கடவுளுக்கு கடன், ரிஷி ருணம், ரிஷிகளுக்கு அர்ப்பணிக்கவேண்டிய  கடன், பித்ரு ருணம்  முன்னோர்களுக்கு செய்யவேண்டிய கடன், கடமை.  பித்ருக்கடன் மூன்று தலைமுறைக்கும் விடாமல் செய்வது நின்றுவிடுமே .
ஹிந்து சமுதாயத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக இருப்பது க்ரஹஸ்தாச்ரமம். இல்லறம்.  திருமண வாழ்க்கை அடிப்படை சாமான்ய தர்மம் மட்டுமல்ல விசேஷ தர்மமாகவும் கருதப்படுவது. பெற்றோர், முன்னோர், அடுத்த தலைமுறை வாரிசுகளுக்கு ஒவ்வொருவரும் புரியவேண்டிய கடமை. திருமணம்  என்பது  சுயநலம் இன்மை, பகிர்வது,  பொறுப்பு, விட்டுக்கொடுப்பது, தியாகம், பொறுமை, சமுதாய நலன்  போன்ற குணங்களை வளர்ப்பது. மனைவி என்பவள்  “Sahadharmacharini” ஸஹ தர்ம சாரிணி,   கணவனோடு கூடி  சமூக தர்மங்களை வாழ்வில், வாழ்க்கைப்பாதையில் கடமைகளை சரியாக, சமமாக,  நிறைவேற்றுபவள்
என்று தான் சொல்வார்கள்.  தாயில்லாமல் எவருமில்லை. கல்யாணமில்லாமல் தாய்கள்  உருவாவது தான் பாரம்பரியமாகிவிடுமா? முதியோர்கள் சிறியோர்களுக்கு  காப்பகம் இருக்கிறதே போதாதா? குடும்ப வாழ்க்கையில் மற்றொரு ஜீவனோடு எதற்கு சேர்ந்து வாழ்ந்து கட்டுப்படவேண்டும், சுதந்திரம் பறிபோகலாமா?

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2563

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;