MANGAL SUTHRA J K SIVAN

மங்கள ஸூத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN
​பொதுவாக இது ஒரு பண்பாட்டு விஷயம். தற்கால நிலைமைக்கு எதிர்ப்பு என்று கொள்ளவேண்டாம். காலத்தின் கட்டாயத்துக்கு நானும் தலை பணிகிறவன் தானே.
எப்போதும் ஹிந்து பெண்ணுக்கு மிக உயர்ந்த நிலை. பத்னி,மனைவி, என்ற பதவி. ரிஷி பத்தினிகள், குருபத்னிகள் ​ஆசார்யன், ரிஷி, குருவைவிட அதிக மரியாதையுடன் மதிக்கப்பட்டவர்கள்.
தெய்வங்களுக்கும் பத்னி உண்டு. ”அம்பாள், தாயார்​, அம்மன், சந்நிதிகள் கோவில்களில் உள்ளதே… தேவி, தேவதை, என்று அவள் பெயரை முதலில் சொல்லி தான் …​” சமேத​”, உடனுறை, என்று ​தான் பிரதான தெய்வத் தின் பெயர் இன்றும் நம்மால் அடையாளம் காணப் படுகிறது. ​ தேவி மஹாத்மியம், ஸஹஸ்ரநாமம் , அஷ்டோத்ரம், அம்பாள், தாயார் பேரில் உள்ளது. திருப்பதியில் அன்றாடம் ஸ்ரீனிவாச கல்யாணம் உத்சவமாக நடக்கிறது. ஆண்டாள் கல்யாணம், சீதா கல்யாணம், ராதா கல்யாணம் என்று பல கொண்டாட் டங்கள் பக்தர்களால் ​விமரிசையாக நிகழ்த்தப் படுகி றது. சதி பதி என்று கணவன் மனைவி இருவரும் சமமாக பக்தியோடு​, மதித்து வணங்கப்​ படுகிறார்கள். சமூகத் தில் பெண்ணுக்கே முதலிடம். லேடீஸ் பஸ்ட் , ladi​es first . எந்த அழைப்பிதழி​லும் முதலில் MRS & MR , SMT & SRI போட்டு தான் பெயர் அச்சடிப்பதோ, எழுதுவதோ வழக்கம்.
மனித வாழ்க்கையில் கணவன் மனைவி உறவு கல்யாணத்தி​லிருந்து ஆரம்பிக்கிறது. கல்யாணத்தில் அதி முக்ய விசேஷ நிகழ்ச்சி தாலி கட்டுதல், மாங்கல்ய தாரணம். ஒரு சாதாரண மஞ்சள் கயிறு தான் அது என்றாலும் அதி உன்னத விசேஷ மதிப்பு கொண்டது. தங்கத்தினால், வைரத்தால் தாலி செய்து கட்டிக்கொண் டாலும் மஞ்சள் கயிற்றுக்கு தான் பிரதான ஸ்தானம். தாலியை அணிய, அணிவிக்க முஹூர்த்தம் எனும் நல்ல நேரத்தை தேர்ந்தெடுக்கிறோம்.
கல்யாணத்தில் அனைவரும் முக்கியமாக ​, சாட்சியாக, ஆசிர்வதிக்க, வணங்க, கூடுவது முகூர்த்தத்தில் தான். reception என்ற பிற்கால வழக்கம் ​ வெறுமே, பரிசு அளிக்க, டான்ஸ் ஆட, கல்யாணம் ஆவதற்கு முன்பே மாலை அணிந்து கொண்டு போட்டோ வீடியோவுக்கு நிற்க, எத்தனையோ ஐட்டங்களை இலையில் போட்டு பாதிக்கு மேல் வீணடிக்கும் வழக்கமாக இன்று தரம் குறைந்து விட்டது என்பது பலர் அபிப்ராயம். reception தான் ஒரு கல்யாணத்தில் அந்தஸ்தை பீற்றிக்கொள்ள,​ சமூக நிலையை காட்ட, என்ற வறட்டு கௌரவத்தால் ​ பணம் தான் வேஸ்ட்.. இனி எதிர்காலத்தில் என்னென்ன மாறுதல்கள் வருமோ​? . முன்பெல்லாம் ஜான் வாஸா என்று பெண்ணையும் பிள்ளையையும் தெருக்களில் ஊர்வலம் வரச்செய்யும் வழக்கம் இருந்து அது கொஞ் சம் கொஞ்சமாக மறைந்து விட்டது.​.அது பற்றி விவரமாக ஒருநாள் சொல்கிறேன்.
​இப்போது மஞ்சள் கயிறு விஷயத்துக்கு வருவோம். தாலி கட்டுவது ஒரு உன்னத ஸம்ஸ்காரம் . தாலி எனும் மஞ்சள் கயிறு, சரடு, மங்களஸூத்ரம் (மங்களம்; சுபம், ஐஸ்வர்யம், நன்மை தருவது, ஸூத்ரம் : கயிறு) என உயரிய மதிப்புக்கொண்டது. தான் மணக்கும் பெண்ணை அவளை மனைவியாக ஏற்கும் ஆண் மஹாலக்ஷ்மியாக, இல்லற தேவதையாக, இல்லாளாக, க்ரஹ லக்ஷ்மியாக மதித்து ஏற்பது. தாலி கட்டுவதற்கு முன்பு மந்திரங்கள் ஜபித்து, ஒரு தாம்பாளத்தில் புஷ்பங் களோடு தாலி சபையில் அனைவரிடமும் காட்டப்பட்டு அவர்கள் அதை தொட்டு வணங்கி பெரியவர்கள் ஆசிர்வ தித்து முகூர்த்த நேரத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் அணிவிக்கும் வழக்கம் இன்றும் உண்டு. சில வாத்தியார்கள் அதை மேடையிலிருந்தே காட்டிவிடுகி றார்கள் .
தாலிக்கயிறு மூன்று முடிச்சுகளோடு அணிவிக்கப்படும். மூன்று முடிச்சும் ப்ரம்மா, விஷ்ணு ​மஹேஸ்வர அம்ச அனுக்ரஹம். தாலி கட்டுவதற்கு வேறு எவரையும் விட முக்கிய சாக்ஷி அக்னி. மாங்கல்யம் அணிவிக்கும் போது சகல வாத்தியங்களும் ஒலிக்க (அபசகுன சப்தங்கள் காதில் விழாமல் இருக்க, அனைவர் கவனத்தையும் ஈர்க்க) மந்திரம் சொல்லப்படுகிறதே அது இது தான்.
माङ्गल्यं तन्तुनानेन मम जीवन हेतुना ।
कण्ठे बद्ध्नामि सुभगे त्वं जीव शरदां शतम् ॥
Maangalyam tantu naanena Mama jeevana hetunaa
Kante’ bandhaami subhage’ Twam jeeva sharadaam shatam
​இதற்கு அர்த்தம், மாப்பிள்ளை, ” ‘நான் இந்த இந்த மஞ்சள் கயிறான, மங்கள ஸூத்ரத்தை , என் வாழ்வின் ஜீவாதாரமான உனது கழுத்தில் அணிவிக்கிறேன். புண்யம் மிகுந்தவளே, நீ நூறு ஆண்டுகள் மஹாராஜி யாய்​ என் தர்ம பத்னியாக வாழ்வாயாக”. தாலி எனும் மங்கள சூத்ரம் நீண்ட ஆயுளை புருஷனுக்கு அருளும் பாதுகாப்பது, ரக்ஷை என்பது ஹிந்து நம்பிக்கை.
மாங்கல்யம் அணியும் அந்த பெண் அந்த கணம் முதல் ”சுமங்கலி”. சுபமான, மாங்கல்யத்தை அணிந்தவள்.
கிருஹ்ய சூத்திரங்கள், ஆகமங்களில் திருமணச் சடங்கி ல் “மாங்கல்ய தாரணம்” பற்றி சொல்கிறது. ​ ஒரு மண மான பெண்ணின் அடையாளம், நெற்றியில் வகிட்டில் குங்குமம், கால் விரலில் மெட்டி, கழுத்தில் தாலிச்சரடு ”.
தாலியின் வடிவம் வெவ்வேறு. தமிழ்நாட்டில்: ருத்ராட்சம், விஷ்ணு சங்கு-சக்கரம், சிவலிங்கம் வடிவம்.ஐயங்கார்/ஐயர் மரபு, கேரள“தாலி” (Minnu), கன்னடக்காரர்களின், வட இந்தியரின் கருப்பு மணிகளுடன் மங்கள சூத்திரம், அதெல்லாம் அவரவர் வழக்கம்.
திருமணம் பற்றிய வேத மந்திரம் ருக் வேதத்தில் வருகிறது.
सम्राज्ञी श्वशुरे भव सम्राज्ञी श्वश्र्वां भव ।ननान्दरि सम्राज्ञी भव सम्राज्ञी अधि देवरिषु ॥​ ரிக்வேதம் 10.85.46
​நீ புகுந்த வீட்டில் இனி மாமனார் மாமியார் , மச்சினிகள் , மைத்துனர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு, அன்போடு ஏற்கும் ராணியாக இருப்பாய் ”.​மனைவி வைத்ததுதான் சட்டம் எல்லா இல்லங்களிலும். இது அவள் அணியும் தாலி தரும் அந்தஸ்து.
​தாலியை பெண்கள் ஒரு போதும் கழுத்தை விட்டு கழற்றக்கூடாது. குளிக்கும் போது கூட பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும்.​
​இப்போது ‘தாலி’ என்றால் நார்த் இந்தியன் தாலியா, சவுத் இந்தியனா? என்று ஹோட்டல்களில் சாப்பாடை மட்டும் குறிக்கும் நிலை வந்துவிட்டது.
​
நகர வாழ்க் கை நாகரீக வளர்ச்சி பண்டைய பண் பாட்டை, ஸம்ப்ரதாயத்தை தின்று விட்டது. தாலி அணிந்து வெளியே வருவது, ஆபிஸ், உத்யோகம் செல்வது அநாகரீகம் என்று ஆகிவிட்டது. மெட்டி அணிவது மறந்து விட்டது. தாலி தெரியாத, அணியாத, மேற்கத்திய பண்பாடு ஏன் நமக்குள் ஊடுருவி விட்டது?
++
இன்றைய சமுதாயத்தில் தாலியின் நிலை பற்றி ஒரு கற்பனை சம்பாஷணை தருகிறேன்.
ஒரு பெரிய மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை செய்யும் சில பெண்கள் பேசுவதை நாம் கேற்கிறோம். எல்லாம் நுனி நாக்கு இங்கிலீஷில். நான் தமிழில் சுருக்கமாக சொல்கிறேன்.
”ஹை, ரோஷ் , உன் தாலி எங்கே? வித்துட்டியா, தங்கம் நல்ல விலைக்கு போறதே…
‘இல்லே லாக்கரில் வச்சிருக்கேன். எதுக்கு ரீமா கேக்கறே?”
”இல்லே, கமல் (கணவன் பெயர்) இன்னும் ஒன் அவர்லே வரேன்னான். அடையார் போகணுமாம் அவன் FREND வீட்டுலே ஒரு பங்ஷன். FUNCTION. கிழம் கட்டை நிறைய இருக்கு. தாலி மாட்டிண்டு போகணும்னு நினைச்சேன். நாயோடு விளையாடிட்டு கிளம்பின அவசரத்துல மறந்தே போச்சு..வீட்டிலே அலமாரிலே வச்சுட்டு வந்துட்டேன்.
”அதோ ரம்யா இருக்காளே கேள். அவளை தரச் சொல்லி வாங்கி போட்டுண்டு போயேன். இது ஒரு பெரிய பிரச்னையா?” …………
++
தாலி இந்த நிலைக்கு வரும்போது எதைப்பற்றி என்ன சொல்வது. எல்லாம் அவரவரர் விருப்பம், நம்பிக்கை யை பொறுத்தது. மற்றவர் கருத்துக்கு அங்கே இடமில் லை.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2565

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;