
அப்பைய தீக்ஷிதர் – நங்கநல்லூர் J K SIVAN
இன்று வெள்ளிக்கிழமை அம்பாளை நினைத்து என்ன எழுதலாம் என்று உட்கார்ந்தபோது ரொம்ப நாளாகிவிட்டதே அப்பய்ய தீக்ஷிதரைப் பற்றியே இன்னும் சொல்லலாமே என்று தோன்றியது. என் கட்டுரையில் வரும் ரத்னகேட தீக்ஷிதரும் அப்பைய தீக்ஷிதரும் ஒருவரா? என்று சில நண்பர்கள் கேட்டபோது அதை விளக்கவேண்டும் என்றும் தோன்றியது. காமாக்ஷி, ஏகாம்பரேஸ்வரர் அருளால் காஞ்சிபுரத்தில் அப்பய்ய தீக்ஷிதருக்கு ரத்னகேட தீக்ஷிதர் மகளோடு நடந்த கல்யாணத்தைச் சொல்லலாமே என்றும் மனதில் தோன்றியது.
அந்த காலத்தில் பாரத தேசம் என்பதே பல தனி,சுதந்திர ராஜ்ஜியங்கள் கொண்டதாக இருந்தது. அதில் பூனா ஒரு ராஜ்யமாக இருந்த காலத்தில் அதன் பெயர் மைதிலோத்ரம் அதன் ராஜா சந்திரசேகர பூபாலன். அவனிடத்தில் ஆஸ்தான கவியாக விளங்கியவர் ரத்னகேட தீக்ஷிதர். அப்பைய தீக்ஷிதரின் பாண்டித்யம், பெருமை, பல ராஜ்யங்களில் பரவியதால் சந்திரசேகர பூபாலன் தனது ஆஸ்தான வித்வான் ரத்னகேட தீக்ஷிதரிடம்
ஒருநாள் கேட்டான்.
”அப்பய்ய தீக்ஷிதர் என்று ஒரு மிக பிரபல பண்டிதர் இருக்கிறாரமே. அவருடைய
பாண்டித்யத்தைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
“மஹாராஜா, நான் அப்பய்ய தீக்ஷிதரின் பால்யத்தில் அவரது அதிகூர்மையான புத்தியை அறிவேன். இப்பொழுது பதினான்கு ஆண்டுகள் ஆனதால் அவர் ஸகல வித்யைகளிலும் நிபுணராக ஆகியிருக்கலாம். சமயம் கிடைத்தால் அவருடன் வாதம் செய்யவும் ஆசையுடன் ஒரு வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கிறேன்’ என்று பதில் கூறினார் ரத்ன கேடர் .
“அப்படியானால் நீங்கள் காஞ்சிபுரம் சென்று அப்பைய தீக்ஷிதருடன் வாதம் செய்துவிட்டு அவரை வென்று வாருங்கள்” என ராஜா அனுப்பினான்.
ரத்னகேட தீக்ஷிதர் காஞ்சீபுரம் வந்தபோது நவராத்திரி சமயம். காமகோடி ஜகன்மாதாவை சிறப்பாகப் பூஜித்தார். ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் பிரத்யக்ஷமானாள். ”ரத்னகேடா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்” என்றாள்.
கண்களில் ஆனந்த பாஷ்யம் பெருக, தன்முன்னே பரம கருணையுடன் பிரத்யக்ஷமான தெய்வத்தை ரத்னகேட தீக்ஷிதர் பல முறை வணங்கினார். உள்ளம் உருக, நாத்தழதழக்க, உடல் புளகாங்கிதமாக அம்பாளை ஸ்தோத்திரங்களால் பிரார்த்திவிட்டு, பதில் சொன்னார்;
“அம்மா காமாக்ஷி, உன் பக்தர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுக்கும் தெய்வமே! அப்பைய தீக்ஷிதர் என்றொருவர் ஸகல வித்தைகளிலும் சிறந்தவர் என்று கேள்விப் படுகிறேன். எல்லா வித்யைகளும் அவரிடமே குடிகொண்டு அவரையே வணங்கி நிற்கின்றன என்றும் கேட்டறிகிறேன் தாயே! எனது கீர்த்தியும் உனதருளால் உலகம் அறியுமாதலால் நான் அப்பய்ய தீக்ஷிதரை வாதத்தில் ஜயிக்கவேண்டும், எனக்கு நீ ஜயத்தை அளிக்க வேண்டும்” என்று வேண்டினார்.
இதைக் கேட்டதும் காமாக்ஷி தேவி புன்னகைத்தாள்.
“ரத்னகேடா! நீயும் அப்பைய தீக்ஷிதரும் வாதம் செய்வது முறையல்ல. நீ அவரை ஒரு சாதாரண மனுஷன் என்று எண்ணாதே. அவர் சாக்ஷாத் பரமேஸ்வரன் அம்சம். நான் உனக்கு அளித்த அருள் மனிதர்களை வெல்வதற்கு மட்டும் தான். பரமேஸ்வரனும் நானும் ஒன்றே. ஒருவரில் இருவர். நீ என் பரம பக்தன். உபாசகன். உனக்கு அருளளித்த என்னையே நீ வெல்ல விரும்புவாயா? நானும் பரமேஸ்வரனும் அப்பய்ய தீக்ஷிதரும் ஒருவரே. நீ அவருக்கு இணையாக முடியாது. ஆகவே அப்பைய தீக்ஷிதருடன் வாதம் செய்யவேண்டும், அவரை வெல்லவேண்டும் என்ற என்ற எண்ணத்தையே விடு. ஒரு வழி கூறுகிறேன். அதன் படி செய். உனது பெண்ணான மங்களாம்பிகையை அந்த அப்பைய தீக்ஷிதர் என்ற மகானுக்கு கன்யாதானம் செய்து கொடுத்துவிடு. இம்முறையில் உனது மனோரதம் நிறைவேறும். உன்னுடைய பாண்டித்யத்தாலும், வயதாலும், எனது அனுக்கிரஹத்தாலும் அப்பைய தீக்ஷிதருக்குக் குருவாகவும், மாமனாராகவும் நீ ஆகக் கடவாய் ” என்றருள் பாலித்து காமாக்ஷி அம்பாள் மறைந்தாள்.
இன்னொரு அற்புதமும் நடந்தது. ரத்னகேட தீக்ஷிதர் காஞ்சியில் இருக்கும்போது ஸ்ரீ ஏகாம்பரநாதர் அப்பைய தீக்ஷிதரின் கனவில் தோன்றினார்.
“குழந்தாய் அப்பையா. காஞ்சிபுரத்துக்கு காமாக்ஷி உபாஸகர் ரத்னகேட தீக்ஷிதர் என்பவர்வடக்கே இருந்து வந்திருக்கிறார். அவர் தனது பெண்ணை உனக்குக் கன்னிகாதானம் செய்து தருவார். என் ஆசியுடன் சந்தோஷமாக இரு ” என்று அருளிச் செய்தார்.அப்பைய தீக்ஷிதர் ஆச்சர்யோத்தோடு விழித்தார்.
சிவனருள் பெற்ற மகிழ்ச்சியோடு காஞ்சீபுரம் சென்று ஏகாம்பரநாதருடைய சந்நிதியில் தகுதியான ஒரிடத்தில் வசித்தார். இந்த விவரம் அறிந்த ரத்னகேட தீக்ஷிதர் தனது பெண்ணை அழைத்துக் கொண்டு ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் இருக்குமிடம் வந்தார்.
அப்பைய தீக்ஷிதர் எழுந்து அவரை உபசரித்து நமஸ்கரித்தார்.
ரத்னகேட தீக்ஷிதர். “ஹே குழந்தாய்! மங்கள மூர்த்தி! இன்று பொழுது விடிந்தது ஒரு பாக்யம். காமாக்ஷியின் பதியான ஏகாம்பரநாதருடைய அனுக்ரஹத்திற்குப் பாத்திரமான உனது தர்சனம் எனக்குப் பரம சந்தோஷத்தைக் கொடுத்தது. என்னுடைய மங்கள வசனத்தை உன் செவிகளில் ஏற்றுக் கொள்வாய்.
विद्वन्मुखादनुपमां तव कीर्तिमारात् ,श्रुत्वा प्रसादपरितः समुपागतः अस्मि । विज्ञानतश्च वयसातपसा च युक्तः
प्राप्तोऽस्मि देव पदपङ्कजसेवनाय ॥ अव्याहतौद्धतवचाः प्रतितप्रभावः ।
यत्रास्ते शांभवी विद्या दद्यात् तस्मै शिरोऽम्बुभिः ।इति जानासि किं तन्मे वाणीमेकां शृणु स्वयं ॥
कच्चिद् विपच्चिदमृतायितमस्मदुक्तं नोल्लङ्घयेत् कुशलवान् अधुना अस्मि विद्वान् ।
तन्नः सुतां जटिति मङ्गलनायकीं त्वम् उद्वाह्य भूरि लभसे सुखकीर्तिशोभाम् ॥
vidvan-mukhād anupamāṁ tava kīrtim ārāt śrutvā prasāda-paritaḥ samupāgataḥ asmi |
vijñānataś ca vayasā tapasā ca yuktaḥ prāpto’smi deva pada-paṅkaja-sevanāya ||
avyāhatoddhatavacāḥ pratita-prabhāvaḥ |
yatrāste śāmbhavī vidyā dadyāt tasmai śiro-‘mbubhiḥ |
iti jānāsi kiṁ tan me vāṇīm ekāṁ śṛṇu svayam ||
kaccid vipaccid-amṛtāyitam asmad-uktaṁ
nollaṅghayet kuśalavān adhunā asmi vidvān |
tan naḥ sutāṁ jaṭiti maṅgala-nāyakīṁ tvam
udvāhya bhūri labhase sukha-kīrti-śobhām ||
அப்பையா, மஹா பண்டிதர்கள் வாயிலாக ஒப்புமையில்லாத உனது பாண்டித்யம் அறிந்து ஆனந்தித்து, உன்னை சந்திக்க ஓடோடி வந்தேன். பரமசிவன் அருளால் உனக்கு கிடைத்துள்ள தெய்வீக ஞானம் என்னை மகிழ்விக்கிறதப்பா. நான் விஞ்ஞானத்திலும், தவத்திலும், வயஸிலும் கிழவனானதால் உன்னிலும் பெரியவனல்லவா? நான் அறிந்த உண்மையை உன்னிடம் கூறுகின்றேன். எந்த இடத்தில் சிவசம்பந்தமான வித்தையும், சிவபக்தியும் இருக்கின்றதோ அங்கே அவர்களைத் தலையாலே போற்ற வேண்டும் என்று நீயும் அறிவாய். அதனால், என் வார்த்தையைக் கவனமாகக் கேள். எனது வார்த்தை அம்ருதத்திற்குச் சமமானது. இதை யாரும் தட்டவும் கூடாது. எனது குமாரியான மங்களநாயகி என்ற அற்புதமான கன்யா ரத்தினத்தை நீ மணந்து கொண்டு மேலும் கீர்த்தியையும், ஸுகத்தையும் அடைந்து சோபையுடன் பிரகாசிக்க வேண்டுகின்றேன்” என்று கூறினார்.
அப்பய்ய தீக்ஷிதரும் “ஓ பண்டித ரத்தினமே! தாங்கள் யோசிக்காமல் சொன்ன ஒரு சொல்லுக்காக ஒரு இரவில் காஞ்சி ஜகன்மாதாவின் திருவருளால் உலகம் பூராவும் அமாவாஸை பெளர்ணமி ஆனதை நானறிவேன். எனவே தங்களுடைய மஹிமையையும் அறிந்து, பரமேச்வரனுடைய ஆக்ஞையையும் உணர்ந்து தங்கள் புதல்வியை மணக்க சம்மதத்துடன் வந்துள்ளேன். நமது சம்பந்தமானது சந்திரசூடனான பரமேஸ்வரனுடைய ஆக்ஞையின் பேரில் ஏற்படுவதால் இருவருக்கும் சம்மதமே ஆகும். நான் ஸன்னத்தமாக இருக்கின்றேன். நல்லதொரு முஹூர்த்தத்தில் தங்களது புதல்வியை கன்னிகாதானம் செய்து கொடுங்கள்” என்று கூறினார்.
ரத்னகேட தீக்ஷிதர் பெருமகிழ்ச்சியோடு திருமணச் செய்தியை பந்துக்கள் அனைவருக்கும் அனுப்பி அனைவரையும் வரவழைத்தார். கல்யாணமண்டபத்தை நிர்மாணம் செய்து வாழைமரங்கள் கட்டி, தோரணங்களால் அலங்கரித்தார். நல்லதொரு முஹூர்த்தத்தில் கன்னிகையும் கனக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு ஸர்வாலங்கார பூஷிதையாகவும் ஸர்வ மங்கள சோபிதையாயும் திகழும் மங்களநாயகியை மணவறையில் வைத்து, ஸாக்ஷாத் பரமேச்வரனாகவே வரனை பாவித்து, வரவேற்று, வரபூஜை செய்து மங்களநாயகியை அப்பைய தீக்ஷிதருக்கு கன்னிகாதானம் செய்து கொடுத்தார். ஸ்ரீமத் தீக்ஷிதரும், மங்களநாயகியை பாணிக்கிரஹணம் செய்து கொண்டு, மாங்கல்யதாரணம் செய்து, அக்னி ப்ரதக்ஷிணாதிகள் செய்து, விதிப்படி அழகாக விவாஹம் நடந்தது. எல்லோருக்கும் அன்ன தானம் அளித்து பிராமணர்களுக்கு அபரிதமான ஸ்வர்ண தக்ஷிணையும் ரத்னகேட தீக்ஷிதர் சந்தோஷத்தோடு வழங்கினார்.
இந்த சமயம் ஒரு மஹாகவி ஒரு ச்லோகம் கூறினார்.
अप्पय्यदीक्षितयज्वन्यवनीसुराणाम् अन्नं सुवर्णं सरसं ददानः ।
अपर्णमासीत् कदलीतरूणांन केवलं बृन्दमपि द्विजानाम् ॥
appayyadīkṣita-yajvan-yavanī-surāṇām annaṁ suvarṇaṁ sarasaṁ dadānaḥ |
aparṇam āsīt kadalī-tarūṇām na kevalaṁ bṛndam api dvijānām ||
”அப்பைய ஜ்வன்யவநீஸுராணாம் அன்னம் ஸுவர்ணம் ஸரஸம் ததானே |அபர்ணமாஸீத்கதலீதரூணாம் ந கேவலம் ப்ருந்தமபி த்விஜானம் |
பல யாகங்கள் செய்த பெரிய மஹான் அப்பைய தீக்ஷிதர் அவர்களால், பூமியில் உள்ள தேவர்களுக்கு ஒப்பான பிராமணர்களுக்கு அமோகமாக அன்னமும், பொன்னும், சுவையான பலவகை உணவுகளும் அளவில்லாமல் தானமாக வழங்கப்பட்டன. அவரது அன்னதான கைங்கர்யம் காரணமாக, வாழைமரங்களின் இளம் குலைகளே இலைகளின்றி (அபர்ணம்) ஆகிவிட்டன; அதாவது அவற்றின் இலைகள் அனைத்தும் உணவுப் பரிமாற பயன்பட்டன. அது வாழைமரங்களின் கூட்டம் மட்டுமல்ல, பிராமணர்களின் (த்விஜர்) கூட்டமும் திருப்தியடைந்தது.
அப்பைய தீக்ஷிதரின் திருமணம் ஈஸ்வரன் காமாக்ஷி அம்பாள் ஆசியோடு கோலாகலமாக நிகழ்ந்தது.. (வடமொழியில் அபர்ணம்), வாழை மரங்கள் மட்டுமா இலை இல்லாமல் போயின? ஏழை ப்ராமணர்க ளுடைய ஸமுதாயத்திற்கும் அபர்ணமாயிற்று. இங்கு அபர்ணம் என்ற பதத்திற்குக் “கடன் ஒழிந்தது” என்று இன்னொரு அர்த்தம்.
ரத்னகேட தீக்ஷிதரும் காமாக்ஷியின் க்ருபையால் சந்தோஷம் அடைந்து அப்பைய தீக்ஷிதரோடு வாதம் செய்வதற்காக காஞ்சிபுரம் அனுப்பின சந்திரசேகர பூபாலனிடம் நடந்ததை எல்லாம் கூறினார் .
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


