
ஒரு பிறந்த நாள் நினைவு. – நங்கநல்லூர் J K SIVAN
இன்று பெப்ரவரி 19. இப்படி ஒரு நாளில் 200 வருஷம் முந்தி நடந்ததை சொல்ல ஆரம்பிக்கிறேன். வேங்கட சுப்பையருக்கு சின்ன வயசிலேயே கல்யாணம் ஆனது. சங்கீதம் ஒன்று தான் படிப்பு.தமிழ் தெலுங்கு கன்னடம், ஸம்ஸ்க்ரிதம் பாஷை ,பேசவும் படிக்கவும் தெரியும். உடையார் பாளையம் ஜமீன்தார் ஆதரவில் அப்பா அம்மாவோடு, சகோதர சகோதரிகளோடு கூட்டு குடும்பம். குடும்ப சொத்து 12 மா புஞ்சை நிலம் கணபதி அக்ராஹாரத்தில் இருந்ததை போக்யம் எனப்படும் கடனுக்கு 500 ரூபாய்க்கு அப்பா வைத்த நிலத்தை மீட்க முடியவில்லை. தாத்தாவுக்கும் எல்லோ ருக்கும் இதில் வருத்தம். என்ன செய்வது? உடையார் பாளையம் ஜமீன்தாரிடம் ஊருக்கு கொஞ்சநாள் சென்று தங்கி விட்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டு வேங்கட சுப்பையர் உத்தமதானபுரத்துக்கு குடும்பத்தோடு சென்றார். ஊரில் அண்ணாதுரை அய்யங்கார் உதவி யோடு 500 ரூபாய் கடன் வாங்கி 12 மா நிலத்தையும் போக்யத்திலிருந்து மீட்டார். ஆறு மா நிலத்தை அண்ணாதுரை ஐயங்காரிடம் போக்யத்துக்கு விட்டு விட்டு மீதி ஆறு மா நிலத்தில் மூன்று மா சித்தப்பாவுக்கு சொந்தமாக்கினார். பாக்கி 3 மா நிலம் மிச்சம். அதில் காய்கறி விளைத்து வீட்டுக்கு உபயோகம் போக மீதியை விற்று வருமானம் போதவில்லை.
கபிஸ்தலம் எஸ்டேட்டில் டேவிட் பிள்ளை என்ற கிறிஸ்தவ மானேஜர். சங்கீதப்ரியர். அவர் கனம் கிருஷ்ணய்யர் நண்பர். வேங்கட சுப்பையர் கனம் கிருஷ்ணய்யரின் உறவினர், தவிர அவரிடம் சங்கீதம் பயின்ற மாணவர் என்பதால் வேங்கடசுப்பையரை கபிஸ்தலம் வரவழைத்து பாட வைத்து பண உதவி செய்தார். அதே போல அய்யம்பேட்டையிலிருந்த ஸௌராஷ்ர பணக்காரர்களும் வேங்கட சுப்பை யரை அழைத்து பாடவைத்து நிதி உதவி செய்தார்கள். குடும்பம் கஷ்டமில்லாமல் நடந்தது.
டேவிட் பிள்ளை கபிஸ்தலத்தை விட்டு வேறு ஒரு ஊருக்கு வேலையாக சென்றுவிட்டதால் அவர் உதவி நிற்கவே வேங்கடசுப்பையர் மீண்டும் உடையார் பாளை யம் திரும்பினார். வேங்கடசுப்பையர் மனைவி கர்ப்பம் ஆதரித்து சீமந்தம் உத்தமதானபுரத்தில் நடந்தது. வேங்கடசுப்பையர் அக்கால வழக்கப்படி கர்ப்ப தீக்ஷை வளர்த்து கருகருவென்று தாடி மீசை யோடு பார்ப்பதற்கு ஜோராக இருந்ததைப் பார்த்த உடையார் பாளைய ஜமீன்தார் ”வேங்கடசுப்பு, உன் தாடி மீசையைப் பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு. எனக்கும் இப்படி இருக்கணும்னு ஆசையா இருக்கு” என்று சிரித்தார்.
உடையார் பாளைய ஜமீன்தார் மாப்பிள்ளை அரியிலூர் ஜமீன்தார் வேங்கடசுப்பையர் சங்கீதத்தை கேட்டு அரியிலூருக்கு அழைக்க குடும்பம் அரியிலூர் சென்றது. அரியிலூர் ஆஸ்தான சங்கீத வித்வானாக, கல்யாண ரங்க உடையார் மற்றும் பலர் ஆதரவு கிடைத்தது. வேங்கடசுப்பையர் கனம் கிருஷ்ணய்யர் தவிர பெரிய திருக்குன்றம் சுப்பராமையர், ஸ்ரீகங்கம் ஸ்ரீனிவாசய்யர், பல்லவி கோபாலய்யர், பாபநாசம்முதலியார், ஆணை ஐயா சங்கீத வித்துவான் சகோதரர்கள் ஆகியோரின் கீர்த்தனைகள் பாடுவார்.அருணாசல கவிராயரின் ராம நாடக கீர்த்தனைகள் எல்லாம் அத்துப்படி. தவிர சின்ன சின்ன சங்கீத உபன்யாசங்கள் புராணங்கள் பிரசங்கம் மூலமும் கொஞ்சம் வருவாய் கிடைத்தது. மக்களின் ஆதரவும் பெருமை தந்தது.
அரியிலூர் ஜமீன்தார், தமது ஜமீனில் இருந்த இலந்தங் குழி கிராமத்தில் 10 காணி நிலம் சன்மானமாக வேங்கடசுப்பையருக்கு தந்தார். அந்த நிலம் மூலம் வருஷத்துக்கு காணிக்கு ஐந்து ரூபாய் வருமானம், மொத்தம் ஐம்பது ரூபாய் வந்தது. அரண்மனை உத் யோகஸ்தர்கள் ஆதரவும் வருமானம் தந்தது. அரியிலூர் சங்கீத வித்துவான், தமிழ் பண்டிதர் சடகோப ஐயங் காரின் நட்பு, அபிமானம், மற்றும் ஊரிலிருந்த கார் காத்த வேளாளர் குடும்பங்களின் அன்பும் அவரை ஆனந்தமாக வாழ செய்தது. கார்காத்த வேளாளர்கள் வேங்கடசுப்பையர் நிரந்தரமாக அரியிலூரிலேயே வாசிக்க பெருமாள் கோவில் சந்நிதி தெரு, வட சிறகு கீழ் கோடியில் ஒரு கூரை வீடு அமைத்து தந்தார்கள்.
வேங்கடசுப்பையர் மனைவி பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு, சூரியமூலை ஊருக்கு சென்றிருந்தாள் .அங்கே ஆனந்த வருஷம் மாசி மாதம் 9ம் தேதி (19.2.1855) அன்று உத்தமதானபுரம் வேங்கட சுப்பை யருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தை பிறந்து இன்றோடு 171 வருஷம் ஆகிவிட்டது. இன்று காலை காலண்டரில் என் சொந்தக்காரரான உ.வே. சா . (உத்தமதானபுரம், வேங்கடசுப்பையர் சாமிநாதையர்) எனும் தமிழ் தாத்தா பிறந்த நாள் இன்று.
எத்தனை தமிழர்கள் இதை நினைவில் வைத்து மரியா தை செலுத்துவார்களோ? மறந்துவிட்டார்களோ? தெரியாதையா.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



