
108ன் மஹாத்மியம். – நங்கநல்லூர் J K SIVAN
ஆஹா, ஹிந்துக்களாகிய நமக்கு ‘108’ வெறும் எண் மட்டுமல்ல. இந்த அண்ட பகிரண்டத்தில் அது மேன்மை வாய்ந்த மந்த்ர சக்தி கொண்டது. மனித வாழ்விலும் பிரபஞ்சத்திலும் அதன் மஹிமை அளவிடமுடியாதது.
இகத்துக்கும் பரத்திற்கும் இடையேயான ஒரு பாலம். 108 ஒரு முழுமை பெற்ற அடையாளம். மற்ற மதத்தினர் உதாரணமாக பௌத்த, ஜைன மதத்திலும், , யோக, தந்த்ர சாஸ்திர நூல்களில் 108 முக்ய ஸ்தானம்
பெறுகிறது.
108 என்ற எண்ணில் 1 என்பது ஒன்றேயான எங்கும் நிறைந்த பகவானையும், 0 என்பது வெறுமையையும், 8 என்பது சாஸ்வத, எதிலும் காணப்படும் முழுமையை குறிக்கிறது. வேறொரு விதத்தில் சொல்லும்போது 1= ஜீவாத்மா 0=மாயை ,8= பரமாத்மா. 108 எவ்வளவு புனிதமானது! இறைவனோடு ஐக்யமாவதை அல்லவா குறிக்கிறது.
அஷ்டோத்ரம் என்று கடவுளை வழிபடும்போது 108 நாமங்களை சொல்கிறோம்.
உபநிஷதுகள் 108. புராணங்கள் 108.
ஜபம் பண்ண ஜப மாலையில் 108 மணிகள், ருத்ரா
க்ஷங்கள்.
மனித வாழ்க்கையில் 12 ராசி x 9 கிரஹங்கள் =108 முக்ய பங்கேற்கிறது.
மனித உடம்பில் 108 நாடிகள்.
ஆயுர்வேதம், தந்த்ர சாஸ்திரத்தில் 108 மர்ம ஸ்தானங்
கள், உடம்பு, மனம், பிராணன் ஆகியவற்றோடு சக்ரத்தில் பிணைந்துள்ளது.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே இடைவெளி சூரியனின் விட்ட அளவு 108 மடங்கு.
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே தூரம் சந்திர னின் விட்டத்தை போல் 108 மடங்கு.
சூரியனின் விட்ட அளவு பூமியின் விட்டத்தை போல் 108 மடங்கு.
இதெல்லாம் எப்படி நமது ரிஷிகள் எந்த வித டெலஸ்கோப், நவீன விஞ்ஞான கருவிகள் எதுவுமே
இல்லாமல் மரத்தடியில் கண்ணை மூடி அமர்ந்து த்யானத்தில் துல்லியமாக கண்டுபிடித்தார்கள் என்பது ஆச்சர்யம்.
யோகப் பயிற்சியில் சூர்ய நமஸ்காரம் 108 தடவை
காயத்த்ரி மந்திரம் குறைந்தது 108 முறை உச்சரிக்கி
றோம்.
பரத நாட்யத்தில் 108 கரணங்கள் (அங்க, கை, கால் அசைவுகள்) உள்ளது.
யந்த்ர சாஸ்திரத்தில் சக்ரங்கள் அமைக்கும்போது 108 மூலைகள், முனைகள் சக்தி வாய்ந்தவையாக உபாசிக்
கப்படுகிறது. 54 ஆண் 54 பெண் அம்சம் சேர்ந்தது.
நக்ஷத்திரங்கள் 27 X 4 பாதங்கள் (108) சேர்ந்து தான் நமது வாழ்க்கைக் கணக்கை, ஜாதகம் படம் பிடித்து காட்டுகிறது
மனதில் 108 கிலேசங்கள் (ஆசா பாசங்கள்) நம்மை ஆட்டி வைக்கிறது
.கோவில்களில் 108 முறை மணி அடிப்பது வழக்கம். ஜப்பானில் 108 முறை மணி அடிக்கிறார்கள்.
பண்டைக்கால சீனாவில் 108 நக்ஷத்திரங்கள் கணக்கு இருந்தது.
கிரேக்க கணிதத்தில் 108 சூத்திரங்கள், விகிதங்கள் உண்டு.
ஐங்கரத்தில் முக்கோணங்கள் 180டிக்ரீ. ரெண்டு உண்டு
.வைணவ சம்பிரதாயத்தில் திவ்ய தேசங்கள் 108,
சக்தி உபாசனையில் 108 சக்தி பீடங்கள் உள்ளன.
நாம் ஸ்வாசிக்கிறோமே அது 21600 முறை ஒவ்வொரு
நாளும். பாதி 10,800 சூரியசக்தியால், 10,800 சந்திர சக்தியால்.
ஸமஸ்க்ரிதத்தில் 54 அக்ஷரங்கள் ஆண் , 54 பெண் தன்மை கொண்டவை .
பொய் சொல்வதில் கூட 108 விதங்கள் உள்ளதாம்
.அஞ்ஞானம், மாயை கூட 108 வகை என்கிறார்கள்.
நமது உணர்ச்சிகள் கூட 36 கடந்தகாலத்தில், 36 நிகழ்காலத்தில், 36 எதிர்காலத்தை சேர்ந்தவை. (மொத்தம் 108).
கங்கை நதி அளவு உலகப்படத்தில், 12 டிக்ரீ அக்ஷ ரேகை(79-91) x 9 டிகிரி (22-31) தீர்க்க ரேகைகளில்
அடக்கம்.
கிருஷ்ணன் காலத்தில் அவனோடு பழகியவர்கள் 108 கோபியர்.
வெள்ளியின் எடை 108 அணு.
அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் வண்டி கூப்பிட நம்பர் 108.
நாம் கோபத்தில் திட்டும்போது கூட ”108 தடவை சொல்லியும் உனக்கு புத்தியில் ஏறலையா?” என்கிறோம்.
.இதற்கு மேல் 108 மஹாத்ம்யயம் எப்படி சொல்வது? ஒன்று நிச்சயம். நமது முன்னோர்கள் கெட்டிக்காரர்க ளா இல்லையா?
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



