
ஸ்ரீ நடேச பஞ்சரத்னம் – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர் அருளிச்செய்தது
ஐந்தே ஐந்து ஸ்லோகங்கள் கொண்ட நடேச பஞ்சரத்ன ஸ்தோத்ரம் ஆதிசங்கரரால் நமக்கு அளிக்கப்பட ஒரு வரப்பிரசாதம். அநேக நண்பர்கள் இதைப் பற்றி அறியாமல் இருக்கலாம் என்பதற்காக இதை எழுத தோன்றியதும் சிவன் அருளே.
1. वामे भूधरजा पुरश्च वृषराट् पश्चान्मुननजैनमननिः । श्री मद्-व्यास पतञ्जलीत्युभयतिः वाय्वानदकोणेषु च ॥ श्रीमनिल्लवनैकवानसमखिनिः ब्रह्मानदवृन्दारकािः मध्ये स्वणण सभापनतनवणजयते हृत्पुण्ठरीके पुरे ॥ श्रीमखिदम्बरनटनात् नटराजराजात् नवद्यानधपात् नवनवधमङ्गलदानशौण्ठात् । पूणेन्दु सुन्दर मुिात् निजराजचूडात् भर्ाणत्परं नकमनप तत्त्वमहं न जाने ॥
vAme bhUdharajA purashcha vRRiSharAT pashchAnmunirjaiminiH |shrI mad-vyAsa pata~njalItyubhayataH vAyvAdikoNeShu cha ||shrImattillavanaikavAsimakhinaH brahmAdivRRindArakAH madhye svarNa sabhApatirvijayate hRRitpuNDarIke pure ||
shrImachchidambaranaTanAt naTarAjarAjAt vidyAdhipAt vividhama~NgaladAnashauNDAt |
pUrNendu sundara mukhAt dvijarAjachUDAt bhargAtparaM kimapi tattvamahaM na jAne || 1||
வாமே பூ⁴த⁴ரஜா புரஶ்ச வ்ரு’ஷராட் பஶ்சாந்முநிர்ஜைமிநி: ஶ்ரீ மத்³-வ்யாஸ பதஞ்ஜலீத்யுப⁴யத: வாய்வாதி³கோணேஷு ச । ஶ்ரீமத்தில்லவநைகவாஸிமகி²ந: ப்³ரஹ்மாதி³வ்ரு’ந்தா³ரகா: மத்⁴யே ஸ்வர்ண ஸபா⁴பதிர்விஜயதே ஹ்ரு’த்புண்ட³ரீகே புரே ॥ ஸ்ரீமாசிதம்பரண தநாத் நடராஜாத் நனவாதமங்கள தான சௌந்தாத் பூர்ணேந்து சுந்தர முகாத் த த்வி ஜராச் தூதாத் பர்காத்பராம் கிமபி தத்வமஹாம் ன ஜானே.
சைவர்களுக்கு சிதம்பரம் ஒரு இணையில்லாத பஞ்சபூத ஆகாச க்ஷேத்ரம். தில்லை, வியாக்ரபுரம் , புண்டரீகபுரம் என்று பல பெயர்கள் கொண்டது. அதில் ஹ்ருதய தாமரை தான் புண்டரீகபுரம். தாமரை தண்ணீரில் இருந்தாலும் அதோடு ஒட்டாதது போல் உலக வாழ்க்கையில் வாழ்வில் உலகத்தோடு ஒட்டாமல் வாழ வைராக்கியம் வேண்டும் என போதிக்கும் பக்தி ஸ்தலம். ஆனந்த தாண்டவ நடன சபாபதி இருக்கும் பொற்கோவில் க்ஷேத்ரம். அருகில் சிவகாமி, எதிரே நந்தி, ஜைமினி ரிஷி பின்னால், வியாசர் பதஞ்சலி ஆகிய ரிஷிகள் வடமேற்கில் நிற்கிறார்கள். சுற்றிலும் தீக்ஷிதர்கள், தில்லைவன தேவதைகள் தேவதைகள் ப்ரம்மா போன்றோர் அருளாசி பெற நிற்கிறார்கள், நடேசா என் இதய தாமரையில் குடிகொண்ட உனக்கு சாஷ்டாங்க நமஸ்காரம்.
2. ढक्कानवभूनषतकरात् नवषनीलकात् । फुल्लारनवन्दनयनात् फनणराजवन्द्यात् । व्याघ्ांनघ् पूज्यचरणात् नशवकुनिताङ््घ्ेिः शम्ोिः परं नकमनप तत्त्वमहं न जाने ॥ १॥
DakkAvibhUshitakarAt viShanIlakaNTAt |phullAravindanayanAt phaNirAjavandyAt | vyAghrAMghri pUjyacharaNAt shivaku~nchitA~NghreH shambhoH paraM kimapi tattvamahaM na jAne || 2||
ட³க்காவிபூ⁴ஶிதகராத் விஷநீலகண்டாத் பு²ல்லாரவிந்த³நயநாத் ப²ணிராஜவந்த்³யாத் । வ்யாக்⁴ராங்க்⁴ரி பூஜ்யசரணாத் ஶிவகுஞ்சிதாங்க்⁴ரே: ஶம்போ:⁴ பரம் கிமபி தத்த்வமஹம் ந ஜாநே ॥ 2॥
பிரபஞ்சமே அசைவில் தான் இயங்குகிறது. சர்வ சக்தி சிவனிடமிருந்து, நடராஜ தாண்டவத்திலிருந்து வெளிப்ப டுகிறது. சிதம்பர நடராஜ தாண்டவம் உன்னத அர்த்தம் கொண்டது. வெட்டவெளி, திறந்தவெளி என்பது ஏதோ காலியான இடம் என்று அர்த்தம் கிடையாது. ஆத்மா பரவியுள்ள இடம். சந்திரனின் ஒளி பொருந்திய முகம் கொண்ட நடராஜா அருவம் உருவம் இரண்டின் வெளிப்பாடு. சகல வித்யைகளுக்கும் பூரண ஆதாரம். சித் எனும் ஆத்ம ஞானம் நிறைந்த ஸ்தலம். சித்+ அம்பரம். பஞ்சகிரியா எனப்படும் ஐந்து கார்யங்கள் அந்த நடனத்தில் அடங்கியது.
கையில் உள்ள உடுக்கை, டமருகம், ஸ்ரிஷ்டி , அதாவது எண்ணத்தின் தோற்றம், காலத்தின் உதயம், நாதம், ஓம் எனும் ப்ரணவ ஓசையின் உற்பத்தியை உணர்த்துகிறது.
ஒரு கையில் தங்கியுள்ள அக்னி ஸம்ஹாரத்தை குறிக்கும். அகம்பாவத்தை அழிப்பது. அஞ்ஞானத்தை வில க்குவது
தூக்கிய பாதம் அனுக்ரஹத்தை குறிக்கிறது. மோக்ஷம் தருவது. வலது ஆதாரமாக நிற்கும் திருப்பாதம் திரோபாவத்தை குறிக்கும். காலின் கீழ் உள்ள முயலகன், (அபஸ்மாரம்) மாயையை வெல்வது, அடக்குவது. கொள்ளாமல் கட்டுப்பாட்டில் வைப்பது ஆகும். ஆடல், அசைவு பிரபஞ்ச இயக்கம். மானாட, மழுவாட, மங்கை சிவகாமியாட………l
அபய முத்ரை ; யாமிருக்க பயமேன் எனும் தைர்யம் தருவது .தேகமும் அகம்பாவமும் தான் பயத்தை உண்டாக்குகிறது. அதை விளக்கி சித்தத்தை சிவன் பால் வைப்பது மோக்ஷ மார்க்கம். நடனம் சுதந்திரமாக மகிழ்ச்சியோடு இறைவனை அணுகுவது.
சிதம்பர ரஹஸ்யம், அருவம் எங்கும் நிறைந்து ஆளுகின்ற சத்யம். பேருண்மை. நமது இதயத்துடிப்பு, நடித்த துடிப்பு தான் சிவனின் நடனம். நம்முள் நடைபெறுவதை தான் அமபலத்தில் உணர்கிறோம்.
இதைத்தான் இந்த ஸ்லோகத்தில் ஆதிசங்கரர் பாடுகிறார்; ”சம்போ, மகாதேவா, உன்னையன்றி வேறு ஒரு பேருண்மையை நான் அறியேன். உனது கையில் ஒலிக்கும் உடுக்கை, ஆலஹால விஷம் தங்கிய நீலகண்டம், அன்றலர்ந்த தாமரை போன்ற குளிர்ந்த நயனம், ஆதிசேஷன் அம்சமான பதஞ்சலி மகரிஷியால் தொழப்படும் பரமேஸ்வரா, வியாக்ராபாதரால் பூஜிக்கப்படும் திருப்பாதங்கள், உனது குஞ்சிதபாதம் அனைத்தும் என்னை பரவசமடையச் செயகிறது. உனக்கு சாஷ்டாங்க நமஸ்காரங்கள் நடேசா.
(3) श्रीनाथमृग्यचरणात् नवनधमृग्यचूडात् श्रीपुण्ठरीक ननलयात् नश्रतदुिःिनाशात् । श्रीमद्र्ुहस्य जनकात् सुिनृत्यराजात् श्रीशात्परं नकमनप तत्त्वमहं न जाने ॥ ३॥
shrInAthamRRigyacharaNAt vidhimRRigyachUDAt shrIpuNDarIka nilayAt shritaduHkhanAshAt | shrImadguhasya janakAt sukhaTattarAjAt shrIshAtparaM kimapi tattvamahaM na jAne || 3||
ஶ்ரீநாத²ம்ரு’க்³யசரணாத் விதி⁴ம்ரு’க்³யசூடா³த் ஶ்ரீபுண்ட³ரீக நிலயாத் ஶ்ரிதது:³க²நாஶாத் । ஶ்ரீமத்³கு³ஹஸ்ய ஜநகாத் ஸுக²டத்தராஜாத் ஶ்ரீஶாத்பரம் கிமபி தத்த்வமஹம் ந ஜாநே ॥ 3॥
உன்னைப் போற்றுதலை விட உயர்ந்த பெருமை எதுவுமில்லை. மஹாலக்ஷ்மியை மார்பில் தாங்கும் மகாவிஷ்ணுவே பணியும் திருப்பாதங்கள், அடிமுடி காணமுடியாத எல்லையற்ற சிகரமே, புண்டரீகபுரம் எனப்பெயர் கொண்ட சிதம்பரநாதா, அண்டிய அடியார் துயர் போக்கும் பரமா, ஷண்முக ஓங்கார நாத குஹனின் தந்தையே, ஆடலரசே உனைப் பணிகிறேன்.
(4) श्रीमद्गणेशजनकात् मखिवृन्दपूज्यात् नतल्लीटवीसुननलयात् निपुराखम्बकेशात् । व्याघ्ानजनाम्बरधरात् उरुरोर्नाशात् रुद्रात्परं नकमनप तत्त्वमहं न जाने ॥ ४॥
shrImadgaNeshajanakAt makhivRRindapUjyAt tillITavIsunilayAt tripurAmbikeshAt | vyaagraajinaambharadharaath urooroga naasaath rudhraathparam kimapi thathvamaham na jaane;
ஶ்ரீமத்³க³ணேஶஜநகாத் மகி²வ்ரு’ந்த³பூஜ்யாத் தில்லீடவீஸுநிலயாத் த்ரிபுராம்பி³கேஶாத் ।வ்யாக்⁴ராஜிநாம்ப³ரத⁴ராத் உரூரோக³நாஶாத் ருத்³ராத்பரம் கிமபி தத்த்வமஹம் ந ஜாநே ॥ 4॥
ருத்ரா, உன்னை விட உயர்ந்த உபநிஷத மந்த்ரம் இல்லை, விக்னேஸ்வரரின் பிதாவே, தில்லை வாழ் அந்தணர் தீட்சிதர்கள் பணிந்திடும் நடேசா, தில்லை வன வாசியே, திரி புராம்பிகை மணாளா, புலித்தோலை அணிந்த பொன்னார் மேனியனே, ஸம்ஸார துக்க விநாச காரணா, உனக்கு ஸாஷ்டாங்க நமஸ்காரம்.
(5) श्रीमद्-व्याघ्पुरेश्वरात् फनणराजभूषात् संसार रोर्नभषजिः ननखिलाण्ठपालात् । श्रीमद्धेमसभेश्वरात् लनलताखम्बकेशात् स्थाणोिः परं नकमनप तत्त्वमहं न जाने ॥ ५॥
srimath vyaagrapurescharath bhaniraajabooshaath samsaara roga bishaja; nikilaaanda baalath; srimath dhemasabeswaraath lalithambikesaash sthaano; param kimapi thathvamaham na jaane;
ஶ்ரீமத்³-வ்யாக்⁴ரபுரேஶ்சராத் ப²ணிராஜபூ⁴ஷாத் ஸம்ஸார ரோக³பி⁴ஷஜ: நிகி²லாண்ட³பாலாத் । ஶ்ரீமத்³தே⁴மஸபே⁴ஶ்வராத் லலிதாம்பி³கேஶாத் ஸ்தா²ணோ: பரம் கிமபி தத்த்வமஹம் ந ஜாநே ॥5॥ ॥
ஆடுகின்ற, அசைகின்றா நீ அசையாத ஸ்தம்பமாக ஞானஒளியாக உள்ள பேருண்மையை அறிந்தபிறகு வேறென்ன உயர்வான உண்மை இருக்கிறது நான் அறிந்து கொள்ள. வியாக்ரபுரி எனும் பெயர் கொண்ட சிதம்பர க்ஷேத்ரத்தில் உறையும் சிதம்பரேசா, சித் சபேசா ஆதிசேஷனை, நாகத்தை அபாரணமாக பூண்டவன், ஸம்ஸார பிணியை, பிறப்பு இறப்பு நோயகற்றும் மஹா வைத்யநாதா, அகிலாண்ட கோடி பிராம்மாண்டா நாயகா, நர்த்தன சபாபதி, லலிதாம்பிகா சமேத லோகநாதா உனக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரம்.
॥ अथ फलश्रुनतिः ॥ पिरत्नं नटेशस्य सोमशेिरयज्वनभिः । संस्तुतं यिः पठेनित्यं शाश्वतं तस्य मङ्गलम् ॥ ॥इनत श्री नटेश पिरत्नम् सम्पूणणम् ॥
atha palasruthi; pancharathnam natesasya somasekarayajvabi; samsthutham ya; paten nithyam saaswatham thasya mangalam. ithi sri natesa pancharathnam sampoornam;
அத² ப²லஶ்ருதி: ॥ பஞ்சரத்நம் நடேஶஸ்ய ஸோமஶேக²ரயஜ்வபி:⁴ । ஸம்ஸ்துதம் ய: படே²ந்நித்யம் ஶாஶ்வதம் தஸ்ய மங்க³ளம் ॥ ॥ இதி ஶ்ரீ நடேஶ பஞ்சரத்நம் ஸம்பூர்ணம் ॥
மேலே கண்ட ஐந்து சிறு ஸ்லோகங்களுடன் ஆதி சங்கரர் அருளிச்செய்த ஸ்ரீ நடேச பஞ்சரத்னம் நிறைவுபெறுகிறது. எந்த ஸ்லோகத்தையும், ஸ்தோத்ரத்தையும் சிரத்தையோடு பக்தியோடு நம்பிக்கையோடு பாராயணம் செய்தஅமானால் கைமேல் பகவான் அனுக்கிரஹம் கிடைக்கும் என்பது நமது முன்னோர்கள் நமக்கு உபதேசித்த அனுபவ பூர்வ உண்மை. ஆகவே அசதி சங்கரரின் இந்த நடேச பஞ்சரத்ன ஸ்லோகங்களை அன்றாடம் பக்தியோடு, சிரத்தையோடு எவர் தினமும் பாராயணம் செய்கிறாரோ அவருக்கு சர்வ மங்களமும் சித்திக்கும் என்று பலஸ்ருதியோடு இந்த ஸ்தோத்ரம் நிறைவு பெறுகிறது.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



