AARDHRA DHARSAN J K SIVAN

”ஆஹா, ஆ ருத்ரா! – நங்கநல்லூர் J K SIVAN
ஆர்த்ரா தரிசனம் – களிக்க ஒரு களிக் கதை.
நாளை மிகச்சிறந்த புண்ய தினம். ஆர்த்ரா தரிசனம் – ‘ஆர்த்ரா’ என்பது சந்திரமண்டலத்தின் 27 நக்ஷத்ரங் களில் ஆறாவது நக்ஷத்ரம். இதன் தேவதை: சிவபெருமான்.“ஆர்த்ரா” என்ற ஸமஸ்க்ரித வார்த்தை ”ஈரமான”, கருணை நிறைந்த, என்ற அனுக்ரஹ அர்த்தம் கொண்டது. மார்கழி மாதம். ஆர்த்ரா நக்ஷத்ரம் வரும் நாளில், சிதம்பரம் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை பக்தர்கள் தரிசிக்கும் நாள் ஆர்த்ரா தரிசனம்.
தாருகா வன ரிஷிகள் தங்களது தவ சக்தியைப் பற்றி ஒரு சமயம் அகந்தை கொண்டனர். ஒரு மார்கழி திருவாதிரை அன்று அவர்கள் வளர்த்த யாகத்தில் வெகுண்டெழுந்த ஒரு மதயானை, கஜாசுரன்,முயலகன், உடுக்கை, மான் தீப்பிழம்பு ஆகியவற்றை சிவன் மீது திசை திருப்ப, சிவனால் கஜன் சொல்லப்பட்டு அவனது சருமத்தை ஆடையாக அணிகிறார். உடுக்கையும் , மானும், தீப்பிழம்பும் அவர் கரங்களில் ஐக்கியமாகி, முயலகன் (அபஸ்மாரன்) மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடியது தான் ஆருத்ரா தரிசனம்.. சிவன் அவர்களை தக்க சமயத்தில் தவறை உணரவைத்து திருத்தி, தனது ஆனந்த தாண்டவம் மூலம் அவர்களுக்கு ஞானமூட்டினார். அந்த சம்பவம் தான் ஆர்த்ரா தரிசன வைபவம். ஆனந்த தாண்டவத் தில் சிவனின் கையில் உள்ள அக்னி ஸ்ருஷ்டி, லய சக்தியையும், ஸர்ப்பம் காலத்தை வென்ற ஞானமும், பாதத்தின் அடியில் உள்ள முயலகன் அகந்தை நாசத் தை யும், தூக்கிய இடது பாதம் மோக்ஷம் தருவதையும், கையில் ஒலிக்கும் டமருகம், ப்ரம்ம ஞான நாதத்தை யும், மேலே கூரையின்றி காணும் திறந்த வெளி, ஆகாசம், சிதம்பர ரஹஸ்யம் எனவும் அறியப்படுகிறது.
பஞ்ச பூத ஸ்தலங்களில் சிதம்பரம் ஆகாச ஸ்தலம். உருவமற்ற நிர்மலம் தான் எங்கும் உள்ள, ஆனால் காணமுடியாத, உணரமுடிந்த, சிதம்பர ரஹஸ்யம்.
சிவன் அபிஷேக ப்ரியன்.. பால், தயிர்,நெய், தேன், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி, இளநீர் அபிஷேகங்கள் காணக் கொடுத்து வைத்திருக்கவேண்டும். நடராஜா வுக்கு ராஜ அலங்காரம், வைர ஆபரணங்கள், வெள்ளி அம்பலம், தங்க சபை அலங்காரம்
இன்று திருவாதிரை களி எல்லோர் வீட்டிலும் நைவேத் தி யம் செய்யப்பட்டு பிரசாதமாக கிடைக்கும். திருவாதிரைக் களிக்கு, அரிசி,வெல்லம், உளுந்து ,இஞ்சி,மிளகு சேர்க்கும் வழக்கம் உண்டு. மார்கழி குளிருக்கு தேக ஆரோக்யம் தரும் பாதுகாப்பும் சத்வ குண வளர்ச்சியும்,மன அமைதியும் தரும் என்ற நம்பிக்கை , திருவாதிரைக்கு ஒருவாய் களி என்று சொல்வார்கள்.
‘மார்கழி மாதம் திரு வாதிரை நாள் வரப்போகுது ஐயே…” என்ற அற்புத பாடல், அந்த அதிசயப்பாடகன் SG கிட்டப்பாவின் குரல் வழியாக என் செவிகளில் ஒலித்திருக்கிறது. என்ன ரம்யம், எதிர்பார்ப்பு, பிருகா….
கிட்டத்தட்ட நூறு வருஷங்களுக்கு முன்பு S G கிட்டப்பா உச்சாணி குரலில் ,ஒலிபெருக்கி இல்லாமல் ஒன்ஸ்மோர் ONCE MORE என கூட்டம் கத்த திரும்ப திரும்ப பாடிய நந்தனார் சரித்திர பாடலாக, ” மார்கழி மாதம் திருவாதிரை நாள் வரப்போகுது ஐயே” என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. இன்னும் அப்படிப்பாட ஒரு பாடகன் உருவாக வில்லை. https://youtu.be/EOLC3FqLxPk?si=NMei_Ob5pUDWtGzT
தூய வெண்ணீறு பூசி, ருத்ராக்ஷம் உடலில் மின்ன, மனம் மகிழ்ந்து ”ஓம் நமசிவாய, சிவசிவ” என்று பஞ்சாக்ஷரம் ஜபிக்கும் பரமேஸ்வர பக்தர்களை எங்கும் காணும் நாள்.
பனி படர்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்க சீரிஷம் எனும் மார்கழி மாதத்தில், ஆர்த்ரா நட்சத்திரம் இணையும் போது “கர்மா தான் பிரதானமே தவிர பகவான் பெரியது இல்லை” என்று கூறிய சாங்கிய யோகிகளின் அஞ்ஞா னத்தை போக்க, ஈஸ்வரன் முடிவெடுத்தான். தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையைக் கொன்று அதன் தோலை தன் ஆடையாக்கி, உடுக்கு, அக்னி , அரவம் முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள் இது. சிதம்பரத்தில் நடராஜர் வ்யாகரபாத முனிவருக்கு நடன தரிசனம் அருளிய நாள். ஹா ஹா ‘ஆ ருத்ரா’ என வியக்க வைப்பதால் ‘ஆருத்ரா”வோ? இடது பக்கம் உமைய வள். அவள் கால் நோகக்கூடாது என்று ”இடது பதம் தூக்கி ஆளும்” நடராஜன் அடி பணிவோம்.
”பரமேஸ்வரா, என் மகன் மார்கண்டேயனுக்கு இன்றோடு பதினாறு முடிகிறதே.. வாழ்க்கையின் கடைசி நாள் இன்று அவனுக்கு. போடா மகனே உனக்கு சிவனே துணை” என மார்க்கண்டேயன் சிவனை கட்டி தழுவுகிறான். இதோ யமன் வந்து விட்டானே. யமன் வீசிய பாசக்கயிறு சிவன் மேல் விழ ருத்ராகாரமாக லிங்கத்திலிருந்து பொங்கி எழுந்த சிவன் மறலியை காலால் எட்டி உதைக்கிறான்.
திருவடி சரணம் அடைந்த யமன் புத்துயிர் பெற்று, மார்க்கண்டேயன் சிரஞ்சீவி ஆகிறான். சிவனருள் அளித்த களிப்பு தான் திருவாதிரை களியாகியதோ.
உத்தர கோச மங்கையில் ஆருத்ரா அன்று ஒரு நாள் தான் அழகு ததும்பும் மரகத நடராஜனை சந்தன கவசம் இல்லாமல் தரிசிக்கலாம். வருஷத்தில் ஒருநாள் பெறும் அற்புத தரிசனம்.
ஆனந்தமாக இருக்கும் போது தான் நாம் வீட்டில் தையா தக்கா என்று குளியலறையில் ஆடுகிறோம் அல்லவா. பகவான் எப்போதும் ஆனந்த ஸ்வரூபம் என்பதால் ஆனந்த நடேசன். சதா சிவன், சதானந்த, சச்சிதானந் தன். கனக சபேசன். மொத்த 108 நடனங்களில் 48 நடனங்கள், சிவன் தனியாக ஆடியது என புராணங்கள் சொல்கிறது. இன்று எல்லா சிவாலயங்களிலும் உலகமுழுதும், பக்தர்கள் ஆருத்ரா தரிசனம் காண் பார்கள். ”கபாலி என்பவனைக் காணக் கண் கோடி வேண்டும்” என்று அற்புத பாடல் நினைவுக்கு வருகிறது.
திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட நாராயணனுக்கு ஒருநாள் அளவற்ற மகிழ்ச்சி. முகம் முழு நிலவானது. ஆதிசேஷனுக்கு என்ன காரணம் திடீரென்று நாராயணனுக்கு இவ்வளவு சந்தோஷம் என்று புரியவில்லை.
”ஹரி, எனக்கு சொல்லுங்களேன் இன்று ஏன் இவ்வளவு உற்சாகம்.” என்கிறார் ஆதி சேஷன்.
”சேஷா, அங்கே பார் சிதம்பரத்தில் ஈசன் நடராஜராக இன்று திருவாதிரை நாளில் ஆடும் திருத் தாண்டவத்தை” என்றதும் ஆதிசேஷன் ஓடுகிறார். ஆதிசேஷன் பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் மாறி, பதஞ்சலி முனிவர் ஆகி தவமிருந்து நடராஜரின் திருநடனத்தை காண வேண்டி, ஈசனை நோக்கி தவம் புரிந்தார்.
‘பதஞ்சலி’ – மெதுவாக ஒரு குரல் கேட்டதும் கண் திறக்க, எதிரே சாந்தஸ்வரூபனாக சர்வேஸ்வரன். பதஞ்சலியின் கைகள் தொழுதன .
‘பதஞ்சலி! உன்னைப் போலவே, வியாக்ர பாதர் என்பவரும் எனது நடனம் காண தவம் செய்கிறார். எனவே உங்கள் இருவருக்குமே சிதம்பரத்தில் காட்சி தருகிறேன்” என்கிறார் தில்லை சபேசன்.
திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர்.
சேந்தனார் என்பவர் காட்டிற்கு சென்று விறகு வெட்டி, விற்று ஜீவனம் செய்பவர். சிதம்பரம் அருகேயுள்ள ஓர் கிராம வாசி. சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியா ருக்கு உணவளித்துப் பின் தான் உணவருந்துவார்.
சோதனையாக ஒரு நாள் விடாமல் மழைபெய்து விறகுகள் ஈரமாகி விற்பனையாக வில்லை. வருமானம் இல்லதாதால் வீட்டில் சமைக்க அரிசி வாங்க காசு இல்லை. வேறு வழி இல்லாமல், வீட்டில் இருந்த கேழ் வரகில் களி செய்து அதிதியாக யாராவது ஒரு சிவனடி யாரை எதிர்பார்த்திருந்தார். நேரம் ஓடிக் கொண்டிருந் ததே தவிர யாரும் தென்படவில்லை. ஏமாற்றத்தாலும் பசியாலும் சேந்தனார் வாட தில்லை நடேசன் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் வருகிறார். ”வாருங்கள்” என்று முகமும் அகமும் மகிழ கேழ்வரகு களியை சிவனடியாருக்குப் படைத்தார். வந்தவரும் களியை ”ஆஹா பிரமாதம் என்று உண்டு மீதி இருந்ததையும் ”அடுத்த வேலை சாப்பிட இது வேண்டும் ” என்று எடுத்துச் சென்றுவிட்டார். சேந்தனார் கம்பல்சரியாக (COMPULSORY) முழு உபவாசம் ! .
சிதம்பரம் ஆலயத்தில் அடுத்தநாள் காலையில் வழக்கம் போல் திலைவாழ் அந்தணர்கள் கர்ப கிரஹத்தை திறக்க, ”இது என்ன அதிசயம்; நடராஜப் பெருமானைச் சுற்றி எங்கு பார்த்தாலும் கேழ்வரகு களி சிந்தி கிடக்கிறது. யாருடைய வேலை இது? ” விஷயம் ராஜா காதுக்கு எட்டியது . ராஜாவுக்கு ஏற்கனவே கனவில் ஒரு சேதி வந்து ஆச்சர்யத்தில் இருந்தான்
”எனக்கு திருவாதிரை அன்று சேந்தன் வீட்டில் அருமையான கேழ்வரகு களி கிடைத்தது ” என்று நடராஜர் கனவில் ராஜாவிடம் சொல்லிஇருந்தாரே. சிதம்பரம் நடராஜப் பெருமான் தேர்த்திருவிழாவில் ராஜா மும்முரமாக இருந்ததால் சேந்தனைத் தேட இன்னும் ஆள் அனுப்பவில்லை. ஆனால் அந்த தேர்த் திரு விழாவிற்கு சேந்தனாரும் வந்திருந்தார்.
சிவனைத் தேரில் ஏற்றியாகிவிட்டது. ராஜாவும் மற்றவர்களும் தேர் வடம் இழுக்கிறார்கள். மழையினால் சேற்றில் தேர் சக்கரம் அழுந்தி நகரவில்லை. ராஜா வருந்தினான்.
அசரீரி ஒன்று அப்போது எல்லோருக்கும் கேட்டது “சேந்தா நீ பல்லாண்டு பாடு” என்று.
”நானோ ஒரு விறகுவெட்டி, ஒன்றுமே தெரியாதே, எப்படி சிவனுக்கு பல்லாண்டு பாடுவேன்” என துடித்து சிவனை வேண்டினார்.
அடுத்த கணமே தன்னை அறியாமல் சேந்தனார் கணீர் என்று உரக்க பாடினார். நமக்கு அதிர்ஷ்டம். நல்ல பாடல்கள் 13 கிடைத்திருக்கிறது.
“மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல” …………பல்லாண்டு கூறுதுமே” என்று முடிபவை.
ஒருநாள் இதை முடிந்தபோது எழுதவேண்டும்.
பாடி முடித்தார் சேந்தனார். தேர் நகர்ந்தது. அவர் கால்களில் அரசரும், தில்லை அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். ”ஐயா எனக்கு கனவில் சிவன் சொன்னார் ” என்று விஷயம் சொல்ல அனைவரும் மகிழ்ந்தார்கள். அன்றுமுதல் இன்றுவரை திருவாதிரை நாளில் நடராஜருக்கு களி நைவேத்தியம்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;