BRAHMAPUREESWARAR TEMPLE THIRUPATTUR J K SIVAN

ப்ரம்ம புரீஸ்வரர் – திருப்பட்டூர்– நங்கநல்லூர் J K சிவன்
எல்லாம் கிருஷ்ணன் அருளால் தான் நடக்கிறது. யார் யாரோ வா என்று கூப்பிட்டு அழைத்துக் கொண்டு போகிறார்கள். போனேன், வந்தேன் என்று ஜடமாகவா இருக்க முடிகிறது? அதே கிருஷ்ணன் எனக்கு உணர்வுக ளையும் அல்லவோ கொடுத்திருக்கிறான். நன்றியை வெளிப்படுத்த மனதையும், நாக்கையும் அல்லவோ அளித்திருக்கிறான்.
நான் அதிருஷ்டக்காரன் என்பதில் எனக்கே சந்தேக மில்லை. இல்லையென்றால் இத்தனை கோவில்களுக்கு சௌகரியமாக யாராவது என்னை அழைத்துப் போவார்களா? போகுமிடத்தில் எல்லாம் அன்னம் ஆகாரம் தங்க சௌகரியமான இடம் வேறு. இதைத் தான் ”கொடுத்து வைத்தல்” என்பார்களோ ?
திருச்சியிலிருந்து 25 அல்லது 27 கி.மீ தூரத்தில் சென்னை மார்கத்தில் திருப்பட்டூர் என்கிற ஒரு ஊர் வரும். அதிலிருந்து 10 கிமீ. தூரத்தில் சமயபுரம் மாரி யம்மன் கோவில் இருக்கிறது.
தெருவிலிருந்தே அம்பாள் கோபுர தரிசனம் பெற்றேன். பெரிய சாலையிலிருந்து ஏழெட்டு கி.மீ. தூரம் ஊருக் குள் சென்றால் ஸ்ரீ ப்ரம்ம சம்பத்கௌரி சமேத பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். அம்பாளின் இன்னொரு பெயர் : ஸ்ரீ பிரம்மசம்பத் நாயகி, சௌந்தரநாயகி / சௌந்தராம்பிகை.
அமைதியான மிக புராதன, அழகான சிற்பங்கள் உள்ள ஒரு ஆலயம். ஒரு வயதான மகிழமரம் ஸ்தல வ்ருக்ஷம். தரையில் மகிழம்பூக்கள் பாவாடை விரித் திருந்தது. பெருக்கி ஓரமாக குவித்திருந்தார்கள். என்ன வாசனை!! சத்தியமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் இது. திருப்படையூர் திரிபடைந்து திருப்பட்டூர் ஆகிவிட்டதாம்.
பதினாறு பட்டைகள் (ஷோடச லிங்கம் ) கொண்ட பெரிய சிவலிங்கம் பிரம்மபுரீஸ்வரர். ப்ரம்மா வழிபட்ட கோவில். இந்தியாவில் பிரம்மாவை வழிபடும் மிக அரிய கோவில்களில் ஒன்று. தனது சாபம் தீர பிரம்மா 12 சிவலிங்கங்களை இங்கு பிரதிஷ்டை செய்ததால் அழகிய சிவலிங் கங்கள் இந்த வளாகத்தில் உள்ளன. தஞ்சாவூர் ப்ரஹதீஸ்வரரரை விட முந்தியவர் இவர். இந்த ஆலய நந்தியை தொட்டால் உயிருள்ள காளை யைத் தொடும் உணர்ச்சி தோன்றும். ஆலயத்தில் பூஜிக்கப்படும் விக்ரஹங்களை, சிலைகளை அர்ச்சகர் ஒருவரே தொட தகுதியானவர். பிரதோஷ காலத்தில் நிறைய பேர் நந்தியை தொடுவது வழக்கமாகிவிட்டது. அது தப்பு. இப்படித்தானே சப்தஸ்வரம் ஒலிக்கும் கல்தூண்களை கற்களால் அடித்து, உடைத்து விடுகிறார்கள். பக்திக்கும் ஒரு எல்லை உண்டு.
ஆலயத்தில் சரபேஸ்வரர் நரசிம்மனின் உக்கிரத்தை கட்டுப்படுத்தும் சிலை அழகாக உள்ளது. வழக்கமாக ப்ரம்மாவின் பெரிய முகம் பூரா மஞ்சள் பூசப்பட்டு அழகாக இருப்பார். வெள்ளியன்று நான் சென்றதால் அழகிய கருப்பு வர்ணத்தில் பிரம்மா முகத்தில் புன்முறுவல் காட்சி..அற்புத தரிசனம்.
எங்கு போனாலும் இரட்டையர்களான ரிஷிகள் பதஞ்சலியும் வியாக்ரபாதரும் (புலிக்கால் ரிஷி) சேர்ந்தே சென்று சிவனை உபாசிப்பது வழக்கம். இங்கேயும் வந்திருக்கிறார்கள். பதஞ்சலி சமாதி இந்த கோவிலில் உள்ளது. அவரது மார்பு விலா எலும்புகள் எக்ஸ்ரே போலவே கல்லில் வடித்து வைத்திருப்பது ஆச்சர்யம். அதே போல் வியாக்கிரபாதர் கங்கை நீரால் அபிஷேகம் செய்ய மேலே பறந்து சென்ற வெள்ளை யானை ஐராவதத்தை கேட்க, கங்கை நீர் எடுத்து சென்ற ஐராவதம் ”கிடையாது போய்யா” என்று சொல்ல, வியாக்கிர பாதர் தனது புலி நக கால்களால் தரையில் கீறி ஒரு குளம் செய்து அந்த நீரே கங்கைநீராக அபிஷேகம் செய்கிறார். இதற்குள் ஐராவதம் கொண்டு சென்ற கங்கைநீரால் சிவனை அபிஷேகம் செய்ய முற்பட ”நீ இதை வியாக்ரபாத
ருக் கு கொடு முதலில்” என்று சிவன் திருப்பி அனுப்ப, ஐராவதம் ரிஷியிடம் ”ஸாரி,ரிஷி, இந்தாருங்கள் கங்கை நீர் ”என்று கொடுக்க, ”too லேட், வேண்டாம் உன் கங்கை நீர். நானே தயாரித்து அபிஷே கம் பண்ணிவிட்டேன்” ரிஷி சொல்ல ஐராவதம் தானே அந்த கங்கைநீரால் பிறகு சிவனுக்கு அபிஷேகம் செய்தது என்று ஒரு ஐதீகம். வியாக்ராபாதரின் சமாதி இங்கே இருக்கிறது.
திருப்பட்டூர் ஆலயத்தின் பெரிய வளாகத்தில் ஒரு பழைய கைலாசநாதர் ஆலயமும் ஒரு அழகிய பெரிய நந்தியும் கண்கொள்ளாக் காட்சி. எந்தநேரமும் கைலாச நாதர் கோவில் இடிந்து விழும் நிலையில் இருப்ப தால் ரொம்ப ஜாக்கிரதை யாக நெருங்கி செல்லவேண்டும். காஞ்சி புரத்தில் கைலாசநாதர் கோயில் உள்ளே நிற்ப தைப் போல ஒரு பிரமை ஏற்படுகிறது. பல்லவர்கள் கைத்திறன் இது. பதஞ்சலி ஜீவசமாதியாக இருக்கிறார் என்பதால் இங்கிருந்து பலர் யோக சாஸ்திரங்களை த்யானம் செயது பயில்கிறார்கள்.
மஹா பெரியவா ஒரு தடவை என்ன சொன்னார் தெரியுமா?
வேதங்களை சிவன் அம்பிகையிடம் அளிக்க, அவள் அதை பிரம்மாவிடம் ஒப்படைக்க, ப்ரம்ம தேவன் அவற்றை ”இந்தா, நீ வைத்துக் கொள்” என்று நந்தியி டம் தந்து அவரிடமிருந்தே ரிஷிகள் பெற்றனராம். ஒருவேளை அது இந்த பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் நடந்ததோ? ஏனென்றால் சிவன் பிரம்மபுரீஸ்வரர், அம்பாள் ப்ரம்ம சம்பத் கௌரி, ப்ரம்மா, நந்தி, பதஞ்சலி ரிஷி, எல்லாருமே இங்கு இருக்கின்றார்களே. பாதாள லிங்கம் பிரம்மாண்டமாக தனி சந்நிதியில் இருப்பதை தவறாமல் அங்கே செல்லும்போது தரிசிக்கவேண்டும்.
மேலே சொன்ன பன்னிரண்டு லிங்கங்களும் இங்கே ஜோதிர் லிங்கங்கள்.
ஒரு வரியில் ஸ்தலபுராணம் சொல்கிறேன்;
‘பிரம்மாவுக்கு சம அந்தஸ்து கொடுத்து ஐந்து தலைக ளோடு படைக்கும் தொழிலைக் கொடுத்த சிவன், ப்ரம்மாவுக்கு கர்வம் தலைக்கேறியதால், அவனது ஐந்தாம் தலையைக்கொய்து, அவனது படைப்புத் தொழிலையும் பிடுங்கி, ப்ரம்மா மன்னிப்பு கேட்டு சாப விமோசனம் பெற 12 லிங்கங்களை கொண்டு இந்த திருப்பட்டூரில் வழிபட்டு, பதவியை மீண்டும் பெற்றா னே தவிர ஐந்தாவது தலை போனது போனது தான். மீண்டும் பெறவில்லை.
அர்ச்சகர் கம்பரசம்பேட்டையில் எனது நண்பர் முதிய வக்கீல் ஸ்ரீ ஜம்புநாதன் ராதாகிருஷ்ணன் வீட்டில் குடியிருப்பவர். கோவிலுக்கு என்னுடன் ராதாகிருஷ் ணனும் வந்திருந்ததால் அர்ச்சகருக்கு ராதாகிருஷ்ண னைப் பார்த்ததில் சந்தோஷம். அதனால் எனக்கும் மாலை மரியாதை. ப்ரம்மாவின் மேல் சாற்றிய வஸ்திரம், எங்கள் பேரில் அர்ச்சனை. மனதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. கருப்பு பிரம்மாவை போட்டோ எடுக்கவில்லை. கூடாது என்பதால்.
திருச்சி பக்கம் போகிறவர்கள் இந்த கோவிலை மறந்து விடாமல் சென்று பார்க்கலாம். என் அனுமதி தேவையில் லை.இந்த கோயிலில் அற்புதமான நந்தி சிலை உயிருள் ள ரிஷபம் போல் தோன்றுகிறது. எனது நண்பர் கோயில் ராஜு என நாங்கள் பெருமையுடன் அழைக்கப் படும் ஸ்ரீ ராஜேந்திரன், சிறந்த புகைப்பட வல்லுநர். போட்டோ சில்பி என்று சொல்லலாம். பல வருஷங் களுக்கு முன் அவர் எனக்கு அனுப்பிய நந்தி படங்களை இத்துடன் இணைத்திருக்கிறேன். நந்தி உட்கார்ந்து பார்க்கும் அழகை வர்ணிக்க எனக்கு வார்த்தை இல்லையே என்ன செய்வேன். நான் சொல்வதை எழுதுவதை விட ராஜேந்திரன் போட்டோக்கள் உயிரோவியமாக பேசுவதைப் பாருங்கள்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;