A SOLILOQUI

ஒரு மெல்லிய குரல்….. நங்கநல்லூர் J K SIVAN

சென்னையில் அவசர மனிதர்கள், அவசர வாகனங்கள். கிடுகிடு வியாபாரிகள். எல்லோரும் எதற்கோ எங்கோ அவசரமாக போகிறார்கள், வருகிறார்கள். நான் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு திருவல்லிக்கேணியில் பெரிய தெருவில் ஒரு வீட்டு வாசல் வெராண்டாவில் ஒரு இரும்பு மடக்கு நாற்காலியில் அமர்ந்து வாசலையே வெறித்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு ஒரு வேலையுமில்லை… இது எனக்கு சொந்த மான எத்தனையோ சொத்துக்களில் இப்போதுள்ள ஒரு சிறிய பழைய ஒட்டு வீடு. இதை வாங்கி இடித்துக் கட்ட எத்தனையோ பேர் அடிக்கடி தொந்தரவு பண்ணியும் எனக்கு இருக்க நிழல் கொடுக்கும் ஒரே இடம் என்பதால் நான் ஒப்புக்கொள்ளவில்லை. இதுவும் எனக்குப் பின்னால் பாச்சுவுக்கு தான் போகப்போகிறது. யார் பாச்சுவா?
ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி தான். என்னை சுற்றிலும் இப்போது அமைதி. ஆரவாரம் நிறைய 87 வருஷங் களில் பார்த்தாகிவிட்டது. நான் யாரென்று எனக்கே தெரியாமல் நான் வாழ்ந்த வருஷங்கள் அவைகளில் அதிகமானவை. ஐம்பதுக்கு மேலே என்று வைத்துக் கொள்ளலாம். இப்போ?

ரமணர் படிச்சு நான் யார் என்று தெரிந்து கொண்ட தில் ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

எத்தனையோ பங்களாக்கள் பல ஊர்களில் வாங்கி யவன் நான். தோட்டம், பண்ணை, வயல், என்னென்ன வோ. இப்போ?
இந்த சின்ன நாலுசுவர் தான் என் பங்களா. சிறை என்று கூட சொல்வேன்.

ஆரம்பத்தில் ராலே பச்சை கலர் சைக்கிள், அப்புறம் பாண்டாபுலூஸ் என்ற மோட்டார் மொபெட்,, ராஜ் தூத்
மோட்டார் சைக்கிளில் புர்ர்ரென்று பறப்பேன் . மாரிஸ் மைனர் கார், அப்புறம் செவர்லே, போர்ட் கார்கள்.
இப்போ?

ஒரு மூங்கில் வாக்கிங் ஸ்டிக் . சுவத்தோரமா மெதுவாக பார்த்தசாரதியை பார்க்க வாரம் ஒரு தடவை போய் வருவதே கஷ்டமா இருக்கு? என் உலகம் சுருங்கி இந்த சிறைச்சாலையாய்ட்டுது.

சுற்று முற்றும் பார்க்கிறேன். இயற்கை சிரிக்கிறது…. என்னடா நண்பா எப்படி இருக்கே?” என்கிறது
”ஏதோ இருக்கேன்”
பல ஊர்களுக்கு கார், ரயில், கப்பல், ஏரோபிளேன் என்று போனவன் நான்? போன இடத்திலேயெல்லாம் மரியாதை, புகழாரம். போட்டோ… இப்போ?

மெதுவா சமையல் கட்டுலேருந்து வாசல்லே இந்த க்ராதி கம்பி போட்ட வராண்டா வரை தான் பயணம். அதுக்கே நடக்க பத்து நிமிஷம் ஆகிறதே. என்னோட
வாழ்க்கையில் தான் எத்தனை பேர்!! எண்ணிச் சொல்ல முடியாது. நண்பர்கள், விசிறிகள் ,உறவுகள், மனைவிகள், சொந்த பந்தங்கள், ஊர்க்காரர்கள்…லக்ஷ லக்ஷமா ரசிகர்கள்…. இப்போ?

எனக்கு நானே தான் எல்லாமே.எனக்கு பிறந்தநாள் கொண்டாட்ட ங்கள், விழாக்கள், வரவேற்புகள், உபசாரங்கள் எத்தனையோ பார்த்துட்டேன். இப்போ?

அதெல்லாம் நினைச்சா அதெல்லாம் நானா ? நானேவா? எனக்கே சந்தேகமா இருக்கே. கல்யாண நாள், பிறந்தநாள், வரவேற்பு நாள், விருந்துக்குஅழைப்பு, சிறப்பு. இப்போ ஒரே நாள் தான் எல்லாமே. பசிச்சா நானே எதையாவது பொங்கி விழுங்கறேன்.அப்போ பட்டு உடுத்தி, பன்னீர்லே குளிச்சு, பங்கா போட்டு பஞ்சு மெத்தைலே படுத்தா உடம்பு பிடிச்சு விட நாலு பேர்.. இப்போ?.

அந்த நீல, சிகப்பு,கலர் ஜமுக்காளம் மாதிரி கலர்லே கான்வாஸ் போட்ட சாய்வு நாற்காலிலே எதிரே ஸ்டூல் மேலே காலை நீட்டிண்டு படுக்கை. தூக்கம் கண்ணை சொக்கும்போது போய் தொப் புனு அதுலே விழுவேன். தூக்கம் வரும்.

என்கிட்டே வைர மோதிரம், தங்க சங்கிலிகள் முத்து மாலைகள், பீரோக்கள், அதுலே லாக்கர்லே நிறைய ஆபரணங்கள் ரூபா நோட்டுகள் வைத்திருந்தேன்.. இப்போ?
அந்த பீரோவே இப்போ இல்லை. நான் தான் படம் எடுத்து பாதிலே அழிஞ்சேன். இருக்கறதெல்லாம்
அழிச்சேன். குடிச்சேன், தாகம் தீரலை அப்போ. எல்லாத் தையும் கரைச்சு குடிச்சேன். இப்போ?
மிளகு ஜீரக வெந்நீர் ரொம்ப பாந்தமா இருக்கு.

கோட்டு சூட்டு டை கட்டியவன் தான் நானும். இப்போ?
கதர் நாலு முழ வேஷ்டி, அதுவும் காவிக் கலர்.
வெள்ளை வேஷ்டி கட்டி பதினோரு வருஷம் ஆயிட் டுது.மேலே காலரில்லாத கதர் அரைக்கை சொக்கா. பட்டன் கிடையாது. மூணு சொக்கா இருக்கு. ஒரு காலத்திலே இங்கிலிஷ் ஹிந்தி தெலுங்கு, கன்னடம், மலையாளம் எல்லாம் பேசுவேன். என் வேலைக்கு அதெல்லாம் அவசியமா இருந்ததே. இப்போ?

என் தாய் மொழி தமிழிலே தேவைப்பட்டா யாரோடா வது ரெண்டு வார்த்தை மட்டும் பேசறேன்.

ராவும் பகலும் பிசி, பிசி, பிசிடா நான் அப்போ, எனக்கு மீனலோசனி,(பிரபல பாடகி, நடிகை, ஏழிசை வல்லபி மனைவி, ராஜலோச்சனா ன்னு ஒரு தெலுங்கு மனைவி. ரெண்டுமே போயாச்சு. அதனதன் உறவுகள் எல்லாத் தையும் எடுத்துண்டு போனதை, தாராளமா எடுத்துண்டு போகட்டும்னு கொடுத்துட்டேனே . அது ரெண்டும் என்னென்னவோ வியாபாரம் பண்ணித்து. புடவை கடை, ஹோட்டல், தியேட்டர் னு கட்டி சொந்தம் பந்தம் எல்லாம் என் பணத்தை சாப்பிட்டு இருக்கிற இடம் தெரியாம எல்லாமே போனாலும் நான் சிரிச்சுண் டே தலையாட்டினேன். என் பேர் பட்டி தொட்டியிலேல்
லாம் பிரபலம். என் படம் எங்கே பார்த்தாலும் சுவத் திலே போஸ்டர் ஒட்டி இருந்த காலம். எல்லா ஊர்லே யும் அதை பார்த்து பெருமை பட்டிருக்கேன். இப்போ?

இந்த சிறைச்சாலைக்கு அடுத்த சுவற்றில் இருக்கிறது
யார்னு கூட எனக்கு தெரியாது. அங்கிருக்கிறவனுக்கும் என்னைப்பத்தி ஒரு கவலையும் இல்லை. டோடல் ஸ்ட்ரேஞ்சர்ஸ்.

படிச்சிருக்கேனான்னு கேட்கறியா?நான் திருச்சி நேஷனல் காலேஜ் B A டா. ஷேக்ஸ்பியர் ஒப்பிப்பேன். wodehouse, dickens, sherlockஹோம்ஸ் எல்லாம் படிச்சவன் தான். தமிழிலே கல்கி,தேவன், வலுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு. கோ.,, ராஜம் அய்யர் எல்லாம் கரைச்சு குடிச்சவன். இப்போ ?

ராஜாஜி பஜகோவிந்தத்தை, இந்த சிவன் பயல் எழுதி இருக்கிறதை திரும்ப திரும்ப படிக்கிறேன். மனசை தடவிக்கொடுக்கிறது. மிருதுவா தொடரது . திருச்சி லோகநாதன் என் நண்பர்.. அடிக்கடி அவர் எனக்கு ஆசையே அலைபோல் பாடிக்காட்டுவார். ரொம்ப ரசிப்பேன். இப்போ அனுபவிக்கிறேன். ஆமாம், ஆசை என்பது வாழ்க்கை சமுத்திரத்தில் அலை போல தான். அது மேல தான் நான் இன்னும் முழுகாம ஆடிண்டு
இருக்கேன்.
அடிக்கடி ஒரு சின்ன குரல் எனக்குளளே ஞாபக மூட்டுகிறது. ”ரெடியா இருக்கியா?’
”ஆமாம் எப்போதுமே ரெடி. லக்கேஜ் எதுவும் இல்லை. கைத் தடியை இங்கேயே போட்டுட்டு கிளம்பிடுவேன்’

”பாச்சா, இந்த சந்திர காந்துக்கு இன்னொரு சான்ஸ் கொடுடா, பணம் பண்ற மெஷினா வாழ்ந்துட் டேன்.
அது போதும் டா, எனக்குன்னு சொத்து சேர்த்தேன், அகம்பாவத்திலே இருந்தேன்.எல்லோரையும் துச்சமா நினைச்சு தூக்கி அடிச்சு பேசினேன், மனசெல்லாம் ஓடைச்சேன், அது தப்புடா… அடுத்த சான்ஸ் நீ கொடுத் தா, நிறைய உழைக்கணும் டா, ஊருக்கு பொதுக் கிணறு மாதிரி வாரி கொடுக்கணும் னு தோண்றது டா. ராவும் பகலும் நல்லதே நினைச்சு நல்லதே செய்ய ணும்டா. நல்லதே பேசணும் டா. பணம் நிறைய வர ணும். ஆனா, அது அத்தனையும் பொது காரியங்க ளுக்கு, ஏழைகள், இல்லாதவர்களுக்கு போகணும் டா.

என் காலத்திலேயே MGR னு ஒருத்தர் இருந்தார் அவரை இன்னும் மக்கள் , மறக்கலே . MKT மறந்து போச்சு, NSK மறக்கலே . சந்திரகாந்த் மறந்து போச்சு. எனக்கே அவன் மறந்து போய்ட்டான். தப்பளாம்
புலியூர் ராமசந்திரன் தான் அவன். கல்கத்தாலே அவனை தான் ஒருநாள் சத்யஜித் ரே சுபோத் முகேர்ஜீயோடு போனபோது ராமச்சந்திரனா இருந்த என்னை சந்திரா காந்த் னு பண்ணிட்டார்…அவன் தான் இவன். என்னை மறக்காதவர்கள் யாராவது இன்னும் இருந்தா ரெண்டு கையும் வழுக்கை தலைக்கு மேலே தூக்கி நமஸ்காரம் பண்றேன்..

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;