
விமர்சனம் – நங்கநல்லூர் J K SIVAN
இந்த உலகத்தில் எல்லோரையும் திருப்தி படுத்துவது என்பது நாய் வாலை நிமிர்த்தும் முயற்சி. எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதையைச் சொல்லி ஆரம்பிக்கிறேன்.
ஒரு வயதான அப்பா ஒரு சின்ன பையன் ஒரு கழுதை. மூவரும் நடந்து போகிறார்கள். பார்ப்பவர்களில் சிலர் ”இப்படி முட்டாள்களை எங்காவது பார்க்க முடியுமா?. நல்ல கழுதை இருக்கும்போது இருவரும் நடந்து போகிறார்களே. அதன் மீது ஏறி செல்லலாமே? இது கூடவா தெரியாது?” என்று சிரித்தார்கள். ஆகவே ரெண்டு பேரும் கழுதை மேல் ஏறிக்கொண்டு சென்றார்கள். வழியில் இதைப் பார்த்த சிலர் ‘சே என்ன க்ராதக இரக்கமுள்ள பாவிகள். பாவம் அந்த வாயில்லா பிராணி மேல் ரெண்டு பேரும் ஏறி செல்வதை விட ஒருவர் இறங்கி நடக்கலாமே அதற்கும்கொஞ்சம் மூச்சு விட சௌகர்யமாக
இருக்கும்” என்று ஏசினார்கள்.
சரி என்று இருவரும் அந்த கழுதையை சுமந்து கொண்டு போனார்கள்.
தெருவில் இதைப் பார்த்தவர்கள் சிரித்தார்கள். எவ்வளவு முட்டாள்கள் இந்த ரெண்டு பேரும் , ”ஒரு நல்ல கழுதை இருக்கும்போது அதன் மேல் உட்கார்ந்து போகாமல் அதை இவர்கள் சுமந்து போகிறார்களே ” என்று சொன்னார்கள்.
ஆகவே அப்பா இறங்கி நடந்தான்.பையன் கழுதைமேல். ப்ரயாணம்தொடர்ந்தது. இதைப் பார்த்த சிலர் ”சே அந்த பையன் எவ்வளவு சுயநலமி, மஹா பாபி. வயதான கிழவனை நடக்க விட்டு ஜம்மென்று கழுதை மேல் சவாரி ஒரு கேடா அவனுக்கு?”என்று பையனை திட்டினார்கள். ஆகவே பையன் கீழே இறங்கி விட்டு கிழவனை கழுதையின் மேல் உட்கார்த்தி வைத்து விட்டு அவன் கூடவே நடந்தான். வெயில் சுள்ளென்று உரைத்தது.களைப்பு. அதோடு அவர்கள் பிரயாணம் தொடர்ந்தது.இதைப் பார்த்த சிலர் ”அடேடே இது என்ன அக்கிரமம். இந்த சாகப்போகிற கிழவனுக்கு உல்லாசம் அவசியமோ? அந்த இளைஞனை நடக்க விட்டு இவனுக்கு என்ன கழுதை சவாரி?” கிழவன் குமரன் இருவரும் கழுதையோடு நடந்தார்கள்.ஒரு ஆற்றின் மேல் பாலத்தில் செல்லும்போது இருவருக்கும் ஒரு யோசனை. ‘சே இந்த கழுதையால் அல்லவோ நம் இருவருக்கும் இப்படி அபவாத பேச்சுகள்’ என்று கழுதையை உருட்டி ஆற்றில் தள்ளி விட்டார்கள்…
உலகத்தில் எவரையும் திருப்திப்படுத்த முடியவே முடியாது. பிறரது அபிப்ராயங்களை கேளுங்கள் அதை உள்வாங்கி யோசியுங்கள். அப்படியே சத்யா பிரமாணமாக எடுத்துக்கொண்டு பின் பற்றவேண்டாம். ஒருமனிதன் சற்று குண்டாக இருந்தால் அவன் வியாதி பற்றி தெரியாமல் அதிகமாக நன்றாக சாப்பிட்டு கொழுத்தவன் என்பார்கள். ஒல்லியாக இருத்தால் பாவம் வியாதிக்காரன் என்ற பெயர்..நன்றாக ஆடை உடுத்தால், படாடோபம், டம்பம் பீற்றிக்கொள்கிறான் என பெயர். படாடோபம் ஆடம்பரம் இல்லாம சாதாரண உடை அணிந்தால் பாவம் பணமில்லை, நல்ல ஆடை வாங்க கூட வசதியில்லை போலிருக்கிறது என்பார்கள். மனம் திறந்து பேசினால், என்ன கர்வம் பார், மனதை உடைக்கிற மாதிரி தூக்கியெறிந்து பேசுகிறது.. அகம்பாவம். அதிகம் வாயை திறக்காமல் பேசாமல் இருந்தால் பயந்தான்கொள்ளி, பேசக் கூட பயப்படுகிறது. நாம் நமது செயலில் வெற்றி பெற்றதை சொன்னால், திமிர், தனக்கு தான் எல்லாம் முடியும் என்று தலைக்கனம். சுய தம்பட்டம். நமது முயற்சிகள் தோல்வி அடைந்தால் இது ஒரு தோசி, சோம்பேறி உருப்படாதவன் எதை தொட்டாலும் விளங்காது. சத்தியமாக உண்மையாக நடந்து கொண்டால் ‘அப்பாவி, பிழைக்க தெரியாதவன்” பட்டம்.
நாம் எதைச் செய்தாலும், சொன்னாலும், நாலு வார்த்தை அதைப் பற்றி விமர்சிக்க என்றும் சிலர் இருக்கிறார்கள். ஆகவே தான் திருப்ப சொல்கிறேன். நமது மனசாட்சிக்கு விரோதமில்லாமல் எது சரி என்று மனதில் படுகிறதோ, எது நமக்கு சந்தோஷம் தருமோ, அதை தைரியமாக சொல்வோம்,செய்வோம். நமது கனவை நினைவாக்குவோம். மற்றவர் அபிப்ராயத்தை லக்ஷியமே பண்ண வேண்டாம். பகவான் மேல் நம்பிக்கையோடு நல்லதையே நினைத்து நல்லதையே செய்வோம்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



