SIVA THATHTHA STORIES J K SIVAN

சிவா  தாத்தா கதைகள்  –   நங்கநல்லூர்  J K  SIVAN
ஆபத் சகாயன்
குழந்தைகளே,  உங்களுக்கு  பஞ்ச பாண்டவர்களைப்  பற்றி நிறைய  சொல்லி இருக்கிறேன். திரௌபதி யார் என்று உங்களுக்குத்  தெரியும். பாண்டவர்கள் எப்படி சத்தியத்துக்கு கட்டுப்பட்டு  பன்னிரண்டு வருஷங்கள் வனவாசம் மேற்கொண்டு கஷ்டங்களை  எதிர் கொண்டார்கள் என்றும் தெரியும். அது சம்பந்தமாக ஒரு சின்ன கதை சொல்கிறேன்.
திரௌபதி பஞ்ச மகா கன்னிகைகளில் ஒருவள். அவளுக்கும்   கிருஷ்ணனுக்கும்  உண்டான  உறவு  பகவானுக்கும் ஒரு  பக்தைக்குமான பரிசுத்தமான ஒன்று ஆகும். அவள்   சாதாரணமாக நம்  போல் பிறந்தவள் அல்ல  யாகத்தீயில்  சகோதரன்  த்ருஷ்டத்யும்னனோடு அவதரித்தவள். துருபத ராஜா ,அவள்   கல்வி, கேள்விகளிலும் ஒழுக்கம், குடும்ப பாங்கு ஆகியவை அனைத்திலும்  தேர்ச்சி பெற உதவினான்.
த்ரோபதியின்  பக்தி பூரா  கிருஷ்ணனிடமே இருந்தது.  அவளை கிருஷ்ணனுக்கு  திருமணம் செய்து வைக்க துருபதனுக்கு எண்ணம்.  கிருஷ்ணன்  “திரௌபதி  என்றும் என்னுடைய  பிரியமான சகி. அவளை நான் மனைவியாக நினைத்துக்  கூட  பார்க்ககூட முடியாதே”  என்று  மறுத்து விட்டான்.

கிருஷ்ணனின் யோசனைப்படியே துருபதன் சுயம்வரம் நடத்தி அதில்  அர்ஜுனன் வெற்றிபெற்று  அவள் பாண்டவர்கள் மனைவியான விஷயம் பிற்பாடு ஒரு  கதை யாக எடுத்துகொள்ளலாம். திருதராஷ்ட்ரனுக்கு கண் இருந்தால்  ஒரு கண் வெண்ணை  ஒரு கண்  சுண்ணாம்பு  என்று சொல்லலாம்.
பாண்டவர்களுக்கு  என்று ராஜ்யத்தை   பிரித்தபோது  ஹஸ்தினாபுரத்தை துரியோதனனுக்கும்  ஒன்றுமே  விளையாத வறண்ட பூமியான காண்டவ ப்ரஸ்தத்தை பாண்டவர்களுக்கும் பிரித்து கொடுத்தான். கிருஷ்ணனுக்கு  துரியோதனனின்  பங்கு இதில் உண்டு என்று தெரியும்.    ஆகவே தேவ  சிற்பி  மயனை  அனுப்பி  காண்டவப்ரஸ்தத்தை அழகிய  சோலை வனம் மிக்க  பச்சை பசேலென்ற வளமிக்க  இந்திர பிரஸ்தமாக மாற்றி அமைத்தான். எல்லாம்  திரௌபதியின் மேல் இருந்த
பாசத்தால்  தான்.
ஒரு தடவை சுதர்சன சக்ரம் கிருஷ்ணனின்  ஒரு விரலை காயப்படுத்தி அதிலிருந்து  ரத்தம் வடிந்ததை கவனித்த திரௌபதி ஓடோடி வந்து  தன் புடவையைக்  கிழித்து கட்டு போட்டதாக கூட ஒரு சம்பவம் உண்டு. அதிலிருந்து தான் ராகி  எனும் சகோதர பாச நாள் உருவானது என்பார்கள். எதற்காக இதை  சொல்கிறேன் என்றால் அவளது பாசத்தையும் நேசத்தையும் விளக்கவே!!. 

பாண்டவர்களின் வளர்ச்சி புகழ் அனைத்தும் துரியோதனனை பொறாமை  தீயில் வாட்டியதன் காரணமாகத்தான் அவன் சகுனி மாமாவின் யோசனைப்படி பாண்டவர்களை சூதாட்டத்துக்கு அழைத்தது.  கிருஷ்ணனுக்கு சகுனியால் தான் கௌரவ வம்சமே அழியப்போவது  நன்றாக தெரியும்.  அவன்  மூலமே மகாபாரத போர் மூளப்போகிறது  என்பது மட்டுமல்ல. சகுனியின் தந்தையின்  கால் எலும்பினால்  செய்யப்பட்ட தாயக்கட்டை தான் அவன்  கேட்கும்  எண்களை தரப்போகிறது,   இதனால் தர்மன் தோல்வி நிச்சயம்  என்றும்  தெரியும். கவுரவர்  அழிவுக்கும் பாண்டவர் வெற்றிக்கும் முக்ய காரணம்  சகுனி  என்பதால்  கண்ணன் பொறுமையோடு  காத்திருந்தான்..
துரியோதன வெற்றியில்  மமதையோடு, வெறியாட்டத்தில் துச்சாதனனை அனுப்பி  தோல்வியுற்ற பாண்டவர்கள் மனைவி
திரௌபதியை  அலங்கோலமாக எல்லோரும் நிறைந்த  சபைக்கு  இழுத்து மானபங்கப்படுத்த செய்த  முயற்சி  தோற்றதற்கும் கிருஷ்ணனுக்கு திரௌபதி மேல் இருந்த  அளவற்ற  பாசத்தால் மட்டுமல்ல  அவளுக்கு கண்ணனிடம் இருந்த  பக்தியாலும் தான்.

அவளது பக்தியை  மெச்சிய திருதராஷ்ட்ரன்  “திரௌபதி, உனது பக்தியும் கணவன்மார் மீது  உள்ள பதிவ்ரதமும் எனக்கு  மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது உனக்கு இரண்டு வரம் தர வேண்டும்  என்று தோன்றுகிறது. கேளேன்!”  என்றான். என் கணவர்களது மேல் அங்கவஸ்தரத்தை  திருப்பிகொடு,  அவர்களது மகுடங்களை திருப்பிகொடு”  என்று  மட்டுமே கேட்டாள் த்ரௌபதி.  

வெந்த புண்ணில் வேலைப்  பாய்ச்சுவது  துரியோதனனிட மிருந்து வந்த வித்தை போல் இருக்கிறது. பாண்டவர்களிடம் அக்ஷய பாத்ரம் இருந்து அதன் மூலம் அன்றாடம் அவர்களும்  வனத்திலிருந்த அனைத்து மக்களுக்கும்  உணவு கிடைக்கிறது  என்று தெரிந்து, அனைவரும் உண்டு அந்த பாத்ரம் கழுவி வைக்கப்பட்டால் அவ்வளவு தான் அன்று உணவு என்றும் தெரிந்து,   கோபம் கொண்டு  சாபமிடும்  துர்வாசரை தன்னுடைய 60000 சிஷ்யர்களோடு பாண்டவர்களைப்  போய்  மதியத்துக்கு மேல் போஜனம் அளிக்குமாறு  கேட்க வைத்தான்.  அவனுடைய துரதிர்ஷ்டம் அன்று கிருஷ்ணனுடைய  பிறந்தநாள். கிருஷ்ணன் பாண்டவர்களை அன்று  சந்திப்பது வழக்கம். துர்வாசர் தனது 60000 சிஷ்யர்களோடு ஸ்நானம் செய்து போஜனம் அருந்த வருவதற்குள்  கிருஷ்ணன்  அக்ஷய பாத்ரத்தில் ஒட்டிகொண்டிருந்த ஒருதுண்டு கீரையின்  மூலம் தன் பசியாறி துர்வாசரும் அவர் சிஷ்யர்களும் பசியறியாதபடி  பண்ணினது   ஏற்கனவே சொன்ன கதை தான்.
இதெல்லாம் திரௌபதிக்காக கிருஷ்ணன் செய்த ஆபத்சகாயம் தானே!!      

 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;