
ஸூர்தாஸ் – நங்கநல்லூர் J K SIVAN
பவ சாகர படகோட்டி
ஸூர்தாசருக்கு ஒரு சௌகர்யம். சுற்றியுள்ள மனிதர்களோ, உலகமோ கண்ணில் பட்டு தொந்தரவு செய்யாது. தியானத்தை, மனத்தை கலைக்காது.இருண்ட வெளியுலகு என்றாலும் வெளிச்சமான உள்ளுலகம். அங்கு எல்லாமே
கண்ணைப் பறிக்கும் எழில், வளமை . அங்கே எதுவும் எல்லாமுமே பிருந்தாவனமாக காட்சி அளிக்கிறது. அங்கே விளையாடிக் கொண்டு அந்த கண்ணன் பயல் வேறு இருக்கிறானே! வேறு என்ன சுகம் வேண்டும்.? இப்படி ஊனக்கண்ணின்றி ஞானக்கண்ணோடு ஆனந்தமாக வாழ்ந்த ஸூர்தாஸரின் ஒரு பாடலை இன்று ரசிப்போம்.
”கிருஷ்ணா,உன்னிடம் ஒரே ஒரு வேண்டுகோள். நான் சுத்தமானவன் இல்லை. என் மனதில் எத்தனையோ கோணல் மாணல் எண்ணங்கள். விபரீதங்கள் உள்ளன. நான் எவ்வளவோ தடுக்க முயற்சித்தும் எப்படியோ அவை உள்ளே புகுந்து என்னை குடை கின்றன. உன்னிடம் அதை மறைக்க முடியாதே. நீ தான் எதிலும் எங்கும் எப்போதும் நிறைந்தவனாயிற்றே. எதுவும் என்னுள்ளேயே இருப்பவனாச்சே. ஆகவே தான் உன்னை கெஞ்சிக் கேட்கிறேன். தயவு செய்து அதை எல்லாம் லக்ஷியம் பண்ணாதே.
உன்னை சமதர்ஸி என்பார்களே. நல்லது கெட்டது எல்லாம் ஒன்றே தானே உனக்கு. அப்படியே என்னையும் பார்த்துவிடு.
சாக்கடை கங்கை நீர் எல்லாமே ஒன்றாக கடலில் கலந்த பின் கங்கை எது, கழிவு நீர் எது? எல்லாம் சாகரம். நீ அப்படிப்பட்ட கருணா சாகரமல்லவா? நீ குடி புகுந்த பின் என் மனத்தில் கெட்டது எது? எல்லாமே நீயான பின் எல்லாம் நல்லதாக மட்டுமே தானே இருக்க முடியும்!.
இரும்பு எல்லாமே ஒன்று தான். ஒன்று நம் வீட்டில் பூஜை அறையில் தொங்கும் விளக்கு சங்கிலி. இன்னொன்று ஆடு மாடு களை வெட்டும் கத்தி. ரெண்டையும் கொண்டு வந்து தங்கமாக்கும் மந்திரக் கல்லில் தேய்த்தால் ரெண்டுமே தங்கமாகி விடுகிறது அல்லவா?. அதே போல் தான் அப்பா , என் மனதில் உள்ள அநேக தீய எண்ணங்களும் ஒரு சில நல்ல எண்ணங்களும். நீ வந்து குடி புகுந்த பின் எல்லாமே தங்க மயம். எல்லாமே உயர்ந்த உன் மீதான எண்ணம் ஆகிடுமே..
ஆகவே என் குறைகளை மன்னித்து என்னை உன் திருவடி நிழலில் எந்நேரமும் இருக்க அருள்புரிவாய். இன்னொன்றும் கட்டாயம் உன்னைக் கேட்டு தான் ஆகவேண்டும். அது நிறைவேறும் வரை நான் உன்னை விடமாட்டேன்.
இதோ பார் என் ஆணவத்தால் என்னால் இந்த சம்சார சாகரத்தை கடக்க இயலாது. இந்த பவ சாகரத்தை நீல மேக சியாமளா நீ தான் நான் கடக்க உதவ வேண்டும். உன்னைத் தவிர வேறு படகோட்டி யாரப்பா? நீ தேரையும் ஓட்டுவாய் பாரையும் ஓட்டுவாய். படகு மட்டும் ஓட்டமாட்டாயா என்ன?. நான் தான் கேள்விப் பட்டேனே கண்டசாலா பாடி. ”ஆஹா இன்ப நிலாவினிலே…”. எத்தனை அழகாக படகோட்டினவனல்லவா நீ!
அந்த அற்புத சூர் தாஸ் பாடல் இது தான்:
प्रभु मेरे अवगुण चित ना धरो |
समदर्शी प्रभु नाम तिहारो, चाहो तो पार करो ||
एक लोहा पूजा मे राखत, एक घर बधिक परो |
सो दुविधा पारस नहीं देखत, कंचन करत खरो ||
एक नदिया एक नाल कहावत, मैलो नीर भरो |
जब मिलिके दोऊ एक बरन भये, सुरसरी नाम परो ||
एक माया एक ब्रह्म कहावत, सुर श्याम झगरो |
अबकी बेर मोही पार उतारो, नहि पन जात तरो |
Prabhu more avagun chit na dharo
samdarshi hai naam tiharo chahe to paar karo
ek nadiya ek naar kahave mailo neer bharo
jab dou mil ke ek baran bhaye sursari naam paryo
ek loha pooja mein raakhat ek ghar badhik paryo
paaras gun avagun nahi chitvat Kanchan karat kharo
ek maya ek brahma kahave Sur Shyam jhagaro
abki ber mohi paar utaaro nahi pan jaat taryo
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


