
பகவத் கீதை – 2- நங்கநல்லூர் J K SIVAN
நேற்று புரட்டாசி மகம், எனது ஜென்ம நக்ஷத்ரத்தை எப்படிக் கொண்டாடினேன் தெரியுமோ? காலை நாலு மணிக்கு எழுந்து அமைதியாக உட்கார்ந்து கொண்டு எதிரே இருக்கும் மஹா பெரியவா படத்தை பார்த்து தியானம் பண்ணினேன். வெளியே மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது, காலம் தவறாமல் மழை தனது கடமையை பலன் எதிர் பாராமல் ஆற்றுகிறதே என்று வியந்தேன். மனதில் பகவான் கிருஷ்ணன் உபதேசம் செய்த கீதை ஞாபகத்துக்கு வந்தது அதை உங்களுக்கு எழுதினேன். கர்மயோகம் பற்றி ஒரு ஸ்லோகத்தோடு முடித்திருந்தேன்.
ஒரு சின்ன பழைய நினைவுக் கீற்று. என்னிடம் கீதை பற்றி ஒரு பழைய நண்பர் பத்மநாபய்யர் கேட்ட கேள்வி —
”கீதை என்றால் என்ன?”
பத்மநாபன் வெகுளி. அப்பாவி. மனசில் கல்மஷம் இல்லாதவர். உண்மையாகவே அவருக்கு கீதை என்ற பெயர் தெரியும். கிருஷ்ணன் உபதேசம் என்றும் தெரியும். புத்தகம் வைத்திருந்தும் படித்து புரிந்து கொள்ளும் திறமை இல்லையோ, முயற்சிக்க வில்லையோ, தெரியாது. பளிச்சென்று கேட்டுவிட்டார். நான் அவருக்கு புரியவைத்தது இப்படி தான்.
”உங்களுக்கு நம்ம பிள்ளையார் கோவில் சாமாவை எப்படி தெரியும்?
”போஸ்ட் மாஸ்டர் கிட்டா தான் இண்ட்ரோடியுஸ் பண்ணி வச்சார். அவர் மூலமா தான் தெரியும்”.
”எனக்கும் இப்படி தான் கிருஷ்ணனைப் பற்றி நிறைய படித்து, கேட்டு, தெரிந்து கொள்ளும்போது கிருஷ்ணன் உபதேசித்த கீதை பரிச்சயமாயிற்று.
கீதை மாதிரி மனதுக்கு உத்ஸாகம் கொடுக்க வேறு எதுவும் இல்லை என்று சொல்லலாம். என்னமா யோசித்து
அழகாக அந்த கிருஷ்ண பரமாத்மா நமக்கு ஒவ்வொண்ணையும் சொல்கிறார். உள்ளத்தில் உத்ஸாகம் ஏற்பட்டுவிட்டால்
அப்புறம் என்ன, உடம்பு சந்தோஷமாக அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும். நாம் உடலளவில் வளர தாய்ப்பால்
எப்படி உபயோகமோ அப்படி உள்ளம் மூலமாக வளர கீதை தான் தாய்ப்பால்.
ஆசார்யா வினோபா பாவே ”நான் கீதையை அனுபவிக்கும்போது ஆத்ம வானில் பறக்கிறேன், அம்ருத கடலில் நீந்துகிறேன். அது தான் என் உயிர் மூச்சு” என்று சொல்வார். வினோபா பாவே எரவாடா ஜெயிலில் இருக்கும்போது எழுதிய ”கீதைப் பேருரைகள்” புஸ்தகம் ஒரு ரூபாய்க்கு கிடைத்து வாங்கி ரெண்டு மூணு தடவை படித்திருக்கிறேன்.
ரத்தம், வலி, கத்தல் , சண்டை, எனும் யுத்தக்கடலான மஹா பாரதத்தில் தனியாக ஒரு கலங்கரை விளக்கம் தான் கீதை.
ராமாயணம் மஹா பாரதம் ரெண்டுமே நம் இரு கண்கள். என்றும் அழியாத இதிஹாச காவியங்கள். இதிஹாசம் என்றால் ”இப்படி தான் யா நடந்தது” என்ற உண்மை கோர்வை. இதிலெல்லாம் வரும் பாத்திரங்கள் என்றும் நமக்கு படிப்பினை. நல்லது கெட்டது எது, அதால் என்ன விளையும் என்று அனுபவித்தவர் களைப் பற்றி சொல்வது. எண்ணற்ற நீதி வாக்கியங்கள், அறிவுரைகள், சித்தாந்தங்கள், வேதாந்த மணிகள், வழிகாட்டிகள் உள்ளவை இந்த ரெண்டு இதிகாசங்களும். உங்களோடு சேர்ந்து இன்னொரு தடவை வால்மீகிக்கும் வியாஸருக்கும் சாஷ்டாங்க நமஸ்காரம். கீதையில் கிருஷ்ணன் சர்வ வேதாந்தங்களை, உபநிஷதங்களை எல்லாம் கசக்கி பிழிந்து வடிகட்டி சாரமாக, ஜூஸ்
மாதிரி நமக்கு கொடுத்திருக் கிறார்.. கீதையே ஒரு உபநிஷத் சிகரம் என்பார்கள்.
எதிரிகளைக் கொல்ல , வெல்ல யுத்த களத்தில் அர்ஜுனன் தயாராக தேரில் நின்றான். எண்ணற்ற கௌரவ சேனையின்
அளவை கண்டு கலங்கவில்லை, பயமரியாதவன், தோல்வியறியாதவன் அர்ஜுனன். உயிருக்கு அஞ்சாத க்ஷத்ரியன்.
”எவன் தைர்யமாக என்னோடு மோத வந்திருக்கிறான் என்று பார்க்க வேண்டும், கிருஷ்ணா, தேரை யுத்த களத்தில்
ரெண்டு பக்க சேனைகளுக்கும் மத்தியில் கொண்டு போய் நிறுத்து அவர்கள் முகங்களை எல்லாம் பார்க்கிறேன்” என்று வீராவேசமாக சொன்னவன் அர்ஜுனன். அங்கிருந்து தான் கீதை ஆரம்பிக்கிறது. தேர் அங்கே போய் நின்றது. அர்ஜு
னன் யார் முகங்களைப் பார்த்தான்?
நாலு தலைமுறை ,சந்ததி உறவுகள், தாத்தா, மாமா, பெரியப்பா, சித்தப்பா, அத்தான் , தம்பி அண்ணன் , இப்படி அநேக
உறவுகள் தான் தெரிந்தது. பயத்தால் அல்ல, பாசத்தால், நேத்தால், அன்பால், பண்பால், அவன் உடல் வியர்த்தது,
நடுங்கியது, காண்டீபம் கை நழுவி தரையில் விழுந்தது. அவன் வீரம் கோபம், தைரியம் எங்கே போயிற்று? அவனை நம்பி ஒரு சேனை, எத்தனை உயிர்கள் பின்னால் நிற்கிறது.
”கிருஷ்ணா நான் இவர்களைத் தொடமாட்டேன், கொல்லமாட்டேன் , அந்த பாபம் எனக்கு வேண்டாம். அவர்கள் என்னைக் கொல்லட்டும் சந்தோஷமாக ஏற்கிறேன். அவர்களை ரக்ஷிக்க வேண்டியவன் உயிர்விட காரணமாகமாட்டேன். அவர்கள் இல்லாமல் நான் இல்லை.” என்று உள்ட்டா அடித்த அர்ஜுனனை கிருஷ்ணன் சமாதானம் செய்து, அவன் கடமை, க்ஷத்ரிய தர்மம் எல்லாம் போதித்து, அவனைப் போரிட வைத்து, மஹா பாரத யுத்தத்தை அவன் வெல்ல காரணமாக இருந்தது கிருஷ்ணனின் கீதை உபதேசம்.
அர்ஜுனன்என்பது காரணம். உதாரணம். அவன் நம்மைப் போன்றவன் . ஆசா பாசங்கள் கொண்டவன். ஆகவே அவனுக் காக உபதேசம் செய்த கீதை உண்மையில் நமக்காக கிருஷ்ணன் உபதேசித்தது. ஜனன மரணம்,தர்மம், கடமை, கர்மா, பக்தி, ஞானம் எல்லாம் அற்புதமாக விளக்கப்பட்டுள்ளது கீதையில்.
”பக்தியோகம் என்றால் என்ன?
பகவான் மேல் ப்ரேமை, பாசம் வைப்பது தான். சுயநலம் இல்லாமல் எதையும் வேண்டாமல், கேட்காமல் அவனை ரசித்து .ருசிப்பது தான் பக்தி. அவனைச் சரணடைவது ஒன்றே நோக்கம்.
பக்தர்களில் நாலு வகை அர்த்தார்த்தி, ஜிஞாஸு, ஞானி. தனக்கு ஏதாவது கஷ்டம் துன்பம் வந்தால் மட்டுமே அதை போக்கிக் கொள்ள பகவான் மேல் பக்தி கொள்பவன் அர்த்தா.(திரௌபதி, பிரஹலாதன், சக்குபாய் ) அவன் பக்தியை மதித்து பகவான் அவனுக்கு கஷ்டங்களை நிவர்த்தி செயகிறார். அர்த்தார்த்தி யார் என்றால், பகவானே, எனக்கு பணம், பதவி, சுபிக்ஷம், அந்தஸ்து எல்லாம் கொடு என பக்தி செய்பவன். (துருவன், குசேலர் )அவனுக்கும் அருள் புரிகிறார் . பகவானே எனக்கு ஆத்ம ஞானம் தா என்று பக்தி செய்பவன் ஜிஞாஸு (உத்தவன்) அவனுக்கு ஒரு குருவை அணுக வழி காட்டுகிறார் பகவான். ஞானியின் பக்தி தனி. எல்லோரிலும் எல்லாவற்றிலும் தெய்வீகத்தை காண்பவன்.(சுக ப்ரம்மம்).
மொத்தத்தில் உண்மையான பக்தன் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துபவன். இரக்கம் கருணை ஸ்வபாவம் கொண்டவன். சுக துக்கங்களை சரி சமமாக ஏற்பவன்.
ஞானி என்றால் சுருக்கமாக ஆத்ம விசாரம் பண்ணுபவன், ”நான் யார்? எங்கிருந்து வந்தவன்? எங்கே போகிறேன்?பற்றுகளை ‘இது இல்லை இது இல்லை’ என ஒவ்வொன்றாக விட்டுத் தள்ளுபவன். நம்பிக்கை, ஸ்ரத்தை உள்ளவன், புலன்களை அடக்க முடிந்தவன், விடாப்பிடி, வைராக்கியம் உள்ளவன் ஞானம் பெற தகுதியானவன்.
ராஜ யோகம் மனதையும் உடலையும் கட்டுப்பாட்டில் வைத்து த்யானம் பண்ணுவது. யோகப்பயிற்சிகள் மூலம் உடலை உள்ளம் போகிற வழியில் இணைப்பது.
ஞானிகள் என சொல்லும்போது மனதில் தோன்றுபவர்கள் ஜனக மஹாராஜா, (கர்மயோகி), நாமதேவர் (பக்தி யோகி), ஞானதேவர் (ஞானயோகி)
கர்மா என்பது ஒரு புஷ்பம் மாதிரி. பக்தி என்பது பழுக்காத பழம், காய் , ஞானம் என்பது பழுத்த பழம். மூன்றுமே ஒன்றிலிருந்து ஒன்று உயர்ந்து, வளர்ந்து தொடர்பவை.
இன்னும் சொல்லட்டுமா?
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

