RAMA LEAVES FOR FOREST J K SIVAN

”விடைபெறுதல்” –  நங்கநல்லூர்  J K  SIVAN 

ராமாயணம் என்றால் வால்மீகி எழுதியது, அல்லதை  அதை யொட்டி கம்பன் தமிழில் எழுதியது தான் நினைவுக்கு வரும். துளசிதாசர் எழுதிய ராமாயணம் வடக்கே  பிரபலம். ஆனால்  அநேகருக்கு வேத வியாசர்  எழுதிய ராமாயணம், ”அத்யாத்ம ராமாயணம்” அவ்வளவாக பரிச்சயமாக இருக்காது என தோன்றுகிறது. அதை தமிழில் ”ரமே ராமே  மனோரமே” என்ற புத்தகமாக வெளியிட்டேன். அநேக  அன்பர்கள் என்னிடமிருந்து பெற்றார்கள். வெளியே எங்கும் விற்பனைக்கல்ல. விலை இல்லை. அன்பளிப்பு டொனேஷன் மூலம் பெரும் நிதியை உபயோகித்து இது போன்ற இலவச புத்தகங்களை வெளியிடுகிறோம்.
அத்யாத்ம ராமாயணத்தில்  4வது  சர்கத்தில்  ஒரு காட்சி :                                 தசரதன் அரண்மனை வைரத்தால் தங்கத்தால், நவரத்தினங்களால் இழைத்து காட்டியது. மூன்று ராணிகளுக்கு தனித்தனி மாளிகை.  கௌசல்யா,  ராமனின் தாய்  மஹா விஷ்ணுவுக்கு பூஜை செய்து விட்டு த்யானத்தில் இருக்கிறாள். சாளரங்கள் திறந்திருக்கிறது. மாலை வேளை. மெல்லிய  குளிர்ந்த பூங்காற்று வீசுகிறது   மாளிகையைச் சுற்றி அநேக கனிவர்கங்களை அள்ளித்தரும் மரங்கள், புஷ்பச் செடி கொடிகள். மான்கள் குட்டிகளோடு விளையாடுகிறது.. எங்கும் நிசப்தம். பரமாத்மாவின் அழகை மனக்கண்ணில் ரசித்து ஸ்லோகங்கள் சொல்கிறாள். ராமன் அப்பாவைப் பார்க்க  கைகேயியின் அரண்மனைக்கு சென்றிருக்கிறான்.  யாரோ வரும் சப்தம் கேட்டு நிஷ்டை கலைந்தாள் கௌசல்யா. மனத்தில் ஏதோ ஒரு  கலக்கம் இன்று ஏன்? உணவில் நாட்டமில்லை. ஏன் இந்த மன சஞ்சலம்.
கண் திறந்தாள்  கோசலை. எதிரே  ராமன் மெதுவாக அவளை நோக்கி வருகிறான். அவனை ஆரக் கட்டித் தழுவி அருகில்  அமர்த்தினாள்
”பசிக்கிறதா  ராமா,  எதாவது தரட்டுமா சாப்பிடுகிறாயா?””இல்லை அம்மா. நான்  சொல்வதை நிதானமாக நீ கேட்கவேண்டும். என்ன ராமா புதிர் போடுகிறாய்? என்ன சொல்லப்போகிறாய் அப்படி?” அப்பா  கைகேயி  அம்மாவுக்கு  முன்பு எப்போதோ  வரம் கொடுத்தாராம். அதை இன்று  கைகேயி அம்மா அப்பாவிடம் ஞாபகப் படுத்தினாளாம். அப்பா கொடுத்த வாக்கை நிறைவேற்றவேண்டும் என்று என்னிடம் சொன்னாள்””ஓ அப்படியா, என்ன வரம்  நீ என்ன நிறைவேற்றவேண்டும்?’  ஆவலைத் தூண்டாதே  சீக்கிரம் சொல் ராமா”’ஒரு சந்தோஷ செய்தி அம்மா.   இனி  பரதன்  தான் இந்த  அயோத்திக்கு  பட்டத்து  இளவரசன்.
”ஆஹா  சந்தோஷமாக இருக்கிறது கேட்க. அவனுக்கு பரிசு கொடுக்கவேண்டும்.” அவ்வளவு தானே.நீ சொல்ல வந்தது.”இல்லை அம்மா இன்னொரு விஷயமும் இருக்கிறது.  நான்  இன்றுமுதல்  14 வருஷம்  காட்டுக்கு போகப் போகிறேன். இது அப்பாவின் கட்டளை. கைகேயி அம்மாவுக்கு கொடுத்த வாக்கு””அம்மா  நான் வனவாசம் போவதற்கு முன் உன்னிடம்  சொல்லிக்கொள்ள  தான் வந்தேன். வனவாசம் முடிந்து நிச்சயம்  வருவேன்.  14 வருஷம் என்பது கண் மூடி கண் திறப்பதற்குள் முடிந்து விடும். நீ வீணாக கவலைப்  படாதே.”திடீரெனெ வானம் சரிந்து தலைமேல் விழுந்தது போல் விழுந்தாள் கௌசல்யா.  இது தான் என் மனத்தில் இனம் புரியாமல் என்னை வாட்டிய  சஞ்சலமா?”தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. கோசலை துடித்தாள்.  கதறினாள் .  ‘ராமா, என்னையும்  உன்னோடு அழைத்துப்போ”  தாய்ப்பசு கன்றை விட்டு  அகலுமா?
”பரதன்  ஆளட்டுமே . அதற்கு  நீ  எதற்காக  காட்டுக்கு போகவேண்டும்? நீ  யாருக்கு  என்ன  தவறு செய்தாய்? எதற்கு இப்படி ஒரு வரம்  கைகேயி  கேட்டாள். எதற்கு தசரதர்  அதை  கொடுத்தார்? ”
இதைக்கேட்டு   அருகிலிருந்த லக்ஷ்மணன் கடுங்கோபம் கொண்டான்.’அண்ணா, இக்கணமே, தசரதரைக்  கயிற்றால்  பிணைத்து,  பரதன், அவன்  உறவினர்கள் அனைவரையும்  கொன்று விடப்போகிறேன். என் சக்தி என்ன என்பதை  புரிந்துகொள்ளட்டும் .  நீ  பட்டாபிஷேகத்துக்கு   தயாராகு.  தடுப்பவரை  எமனுலகு அனுப்புகிறேன். உலகையே அழித்து விடுகிறேன் ”
ராமன்  லக்ஷ்மணனை  அணைத்துக்கொண்டான். ”லக்ஷ்மணா, பதட்டப்படாதே,  நீ சுத்த வீரன். சொன்னதை செய்யக்கூடியவன். உலகில் காணும்  யாவும்  மாயை.  நிலையற்றவை. ஆத்மா நிரந்தரமானது.  லோகாயத இன்பங்களை அது நெருங்க விடாது. அனுபவிக்காது.   நாம் காணும் சொந்த பந்த உறவெல்லாம்  சந்தையில் கூட்டம். மனிதர்கள்  காலையில்  தோன்றி  மாலையில் மறையும்  சூரியனைப் பார்த்தும்  அநித்தியத்தை  உணர்வதில்லை. நீ  எந்த  அடிப்படையில்  உலகை  அழிக்க  முயல்கிறாய்? உலகப்பற்று கொண்டவர்களிடம்  தான்  குறைகள் தோன்றும். கோபத்துக்கு  அடிமையானவன் நண்பர்  உறவினரைக்கூட  மாய்த்து விடுவான். கோபம்  மனிதனின்  எதிரி.  அமைதியாயிரு.  இயல்பாகவே தூய  உள்ளங்கொண்ட உன்னை கர்மம் ஒட்டாது. ”
 கோசலையை ஆஸ்வாசப்படுத்திய  ராமன்  அமைதியோடு,  ”அம்மா,  இதுவரை  நான்  சொன்னதை  நீயும்  கவனத்தில் வைத்துக்கொள். நான்  திரும்பிவரும்  நாளை  மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுங்கள். 14 வருஷம்  அரை நொடியில்  ஓடிப்போய்விடும். துயரத்தை  ஒதுக்கிவிட்டு,  எனக்கு விடை கொடுங்கள்.  நேரமாகிறது. உங்கள்  அனுமதி  ஆசியோடு  நான்  காட்டில் இன்பமாக  பொழுதைக்  கழிப்பேன்.  அப்பாவின் வாக்கை நிறைவேற்ற அரைநொடியும் நான்  தாமதிக் கக்கூடாது.”  தாயின் பாதங்களில்  ராமன்  விழுந்து வணங்கினான்.  கௌசல்யா  பொங்கிவரும் கண்ணீரை துடைத்துக்கொண்டாள். ராமனை இறுக்கி அனைத்து உச்சி முகர்ந்தாள் . அவனுடைய மனோ தைர்யத்தை மெச்சினாள் .”ராமா,  சகல  தேவர்களும்  பிரம்மா விஷ்ணு  சிவன்  அனைவரும்  உன்னைக் காக்கட்டும்”  லக்ஷ்மணன்  ராமனை  ஆலிங்கனம் செய்துகொண்டு   அண்ணா  என்  உள்ளம்  அமைதியுற்றது இப்போது.  நானும்  தங்களுடன் வர  அனுமதிக்க வேண்டும். ”ராமன் தடுத்தும் லக்ஷ்மணன் கேட்கவில்லை. கடைசியில் புன்னகைத்து  ராமன் ”சரி  லக்ஷ்மணா நீயும்   என்னோடு புறப்படு ”என்றான்.
ராமன்  சீதை இருக்குமிடம் சென்றான். ”நாதா, தாங்கள்  ஏன்  இன்னும்   அபிஷேகத்துக்கு  தயாராகவில்லை. தனியாக வந்திருக்கிறீர்கள். ”
”சீதா  நான்  என் தந்தை ஆக்னைப்படி இப்போது  காடு  செல்கிறேன். 14 வருஷம் கழித்து மீண்டு வருவேன். அதுவரை  நீ  இங்கிருந்து என் தாய்  தந்தையருக்கு  பணிவிடை செய்வாயாக. ”  சீதை திடுக்கிட்டாள். ”நாடாள  வேண்டிய நீங்கள்  எதற்கு காடாள வேண்டும் என்ற கட்டளை?”
”சீதா, இது  தந்தை  கைகேயி அன்னைக்கு  கொடுத்த  வாக்கு.  பரதனுக்கு  நாடு,  எனக்கு  காடு.  நான்  மீறமாட்டேன். என்னைத்  தடுக்காதே”
‘நாதா,   நான்  யார்  தடுக்க,  எதற்கு  தடுக்கவேண்டும்.  நான்  தான்  உங்களுக்கு  முன்னால்  காட்டுக்கு  நடக்கப் போகிறேனே. நீங்கள் என்  பின்னே தான்  வரப்போகிறீர்கள்” என்று உற்சாகமாக தயாரானாள்.

சீதா  காட்டில்  மிகக் கொடிய  விலங்குகள்  உண்டு.  அரக்கர்கள் ராக்ஷசர்களும்  உலவுவார்களே.  உன்னை  எப்படி அழைத்துப் போவது?  காய்  கனி, கிழங்கு, இலைகள்  இவற்றை மட்டுமே உண்டு  ஜீவிக்கவேண்டும்.  உனக்கு  ஒத்து வராது. நீ  இங்கேயே இருப்பது தான் புத்திசாலித்தனம்.  உசிதம்.”

”இல்லை.  நான்  அக்னி சாட்சியாக  உங்களை கைப்பிடித்த  பதிவ்ரதை.  நான்  உங்கள்  நிழல்.  நீங்கள்  அருகே இருக்க எனக்கு  எந்த பயமும்  தேவையில்லை.  ஒரு ஆபத்தும்  அணுக முடியாது. நீங்கள்  புசிக்கும்  கிழங்கு, காய் கனி  எனக்கும் போதும். உங்களுக்கு  உறுதுணையாக  இருப்பேன்.   உங்களுக்கு  ஒரு விஷயம் சொல்லட்டுமா.  என்  ஜாதகத்தை பார்த்த  ஒருவர்  என்னிடம்  ”நீ   கொடிய  கானகத்தில்  உன் கணவருடன்  வாழப்போகிறாய்”  என்று  ஒரு தடவை சொல்லியி ருக்கிறார். அது  நிஜமாகிவிட்டது” சீதையில்லாமல்  ராமன் காட்டுக்கு  போனதாக  ராமாயணம்  கிடையாது.
”சீதை  நீ  தைரியசாலி.  சரி நீ என்னோடு  காட்டுக்கு வா.  விரைவில்  புறப்படு”
 சகல  சம்பத்துகளையும்  ராமனும்  சீதையும்   மற்றோருக்கு தானம் செய்துவிட்டு கிளம்பினர்.  இதற்கிடையே  சுமித்ரா தேவியிடம்  விஷயம் சொல்லி  அவளைத்  தேற்றி, அவள் ஆசியோடு விடைபெற்று,  லக்ஷ்மணனும் வில்லெடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.  ராமன், லக்ஷ்மணன் சீதை மூவரும்  தசரதர்  இருந்த இடம் சென்றார்கள்.  வழியெல்லாம்  எண்ணற்ற  நாட்டு மக்கள்  ஆர்வத்தோடு  ராம பட்டாபிஷேக  வைபவங்களைக் கண்டு  களிக்க திரள் திரளாக கூடியிருப்பதைப்  பார்த்துக்கொண்டே தசரதர்  மாளிகை  அடைந்தனர்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;