JEALOUSY J K SIVAN

‘பொறாமை வேண்டாம்” – நங்கநல்லூர் J K SIVAN
தந்தைக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்தவன். தாய்க்காக தம்பி வம்சத்தை கடைசி வரை காப்பாற்றுவேன் என்று கொடுத்த வாக்குக்காக தப்பான கூட்டத்தை வளர்த்தவன். காத்தவன் அந்த பீஷ்மன் இனி இல்லை.
தனது மரணத்தை தான் வேண்டிய நேரத்தில் அடையும் வரம் பெற்ற பீஷ்மன் இனி இல்லை.
எவராலும் வெல்ல முடியாத மஹா அதிரதன் பீஷ்மன் இனி இல்லை.
ஒரு பெண் தன் செலுத்திய அம்புகளை தடுக்கக் கூட விரும்பாத மஹா வீரன் பீஷ்மன் ரத்தம் சொட்ட சொட்ட தன் மீது செலுத்தப்பட் ட அஸ்திரங்களில் எவை யெல்லாம் தனது செல்லப் பேரன் அர்ஜுனன் செலுத்தியது என அடையாளம் கண்டு, அவற்றால் தான் தனது மரணம் நிகழ வேண்டும் என தீர்மானித்த பீஷ்மன் இனி இல்லை.
அவன் மறையும் முன்பு கிருஷ்ண பரமாத்மா அறிவுரைப்படி யுதிஷ்டிரன் பீஷ்மரிடம் உபதேசம் பெற்றான். அவற்றில் முக்கியமானது விஷ்ணு சஹஸ்ரநாமம். அது நமக்கும் பீஷ்மன் வழங்கிய பரிசு.
தில தர்ப்பணம் எல்லாம் முடிந்து பீஷ்மன் உடலுக்கான காரியங்கள் குருக்ஷேத்ரத்திலேயே நிறைவேறிவிட்டது.
பீஷ்மரின் சகோதரனான வியாசர் யுதிஷ்டிரனைத் தேற்றுகிறார். பொறாமையால் தான் துரியோதனன் வம்சம் அழிந்தது. பீஷ்மர் அவனை காப்பாற்ற தப்பான முடிவெடுத்தார். மறைந்தார். ஆகவே இது ஒரு பாடம். பொறாமை பற்றி ஒரு கதை சொல்கிறார் வியாசர். எப்படி தேவர்களின் குருவான பிரஹஸ்பதியின் வாழ்விலும் பொறாமை விளையாடியது என்பதை சொல்கிறார்.
தேவர்களுக்கும் மனிதர்களைப்போல சில குணங்கள் உண்டு. இந்திரன் செய்யாத தவறுகளா?
ப்ரஹஸ்பதிக்கு ஒரு தம்பி. சம்வர்த்தன் என்று பெயர். சிறந்த கல்விமான். எல்லோராலும் விரும்பப்பட்டவன். ரொம்ப ரொம்ப நல்லவன் என்று பேரும் புகழும், பெருமையும் கொண்டவன் என்பதால் ப்ரஹஸ்பதிக்கு தம்பி மேல் பொறாமை வளர்ந்தது. அண்ணா ப்ரஹஸ்பதி மேல் சம்வர்த்தனுக்கு ரொம்ப பக்தி, மதிப்பு. ஆனால் ப்ரஹஸ்பதியோ பொறாமையால் அவனை அதிகம் கொடுமைப்படுத்தினார். அது அதிகமாகவே பொறுக்கமுடியாமல், தாங்கமுடியாமல் ஒருநாள் சம்வர்த்தன் வீட்டை, நாட்டை விட்டு வெளியேறி தேசாந்திரியாக சுற்றினான்.
இக்ஷ்வாகு வம்ச ராஜா மருதன் ஹிமாசலத்தில் தவம் செய்து பரமேஸ்வரன் அவனுக்கு ஒரு தங்க சுரங்கம் தந்தார். அந்த செல்வத்தை உபயோகித்து ராஜா ஒரு பெரிய யாகம் செய்ய விரும்பினான். தேவ குரு ப்ரஹஸ்பதியிடம் போனான்.
”குருவே நீங்கள் முன் நின்று இந்த யாகத்தை நடத்தி தரவேண்டும்” என பணிந்தான். இந்த யாகம் நிறைவேறினால் மருதன் மிகப் பெரிய சக்திமானாகி, இந்திரன் காணாமல் போவான் என ப்ரஹஸ்பதிக்கு தெரியும். ஆகவே ‘என்னால் முடியாது’ என்று மறுத்து விட்டார்.
மருதன் சம்வர்த்தனைத் தேடித் போனான். முதலில் அவனும் மறுத்து விட்டு கடைசியில் யாகத்தை நடத்தித்தர ஒப்புக் கொண்டான். விஷயம் கேள்விப்பட்டதும் ப்ரஹஸ்பதிக்கு மேலும் தனது தம்பி சம்வர்த்தன் மேல் பொறாமை அதிகரித்தது. இதனால் ப்ரஹஸ்பதியின் உடல்நலமும் குன்றியது. இரவும் பகலும் இதே நினைவால் உடல் இளைத்து துரும்பாகிவிட்டார் பிரஹஸ்பதி. இந்திரன் இதை கவனித்து அதிர்ச்சி அடைந்தான்.
”குருவே, என்னாச்சு உங்களுக்கு? யார் தீங்கு செய்தவர்கள்? சொல்லுங்கள் என்னிடம் நான் உதவுகிறேன்’ என்று கேட்டான்.
‘என் தம்பி சம்வர்த்தன் ஒரு பெரிய யாகம் ராஜா மருதனுக்காக செய்யப்போகிறான். அந்த எண்ணம் ஒன்றே என்னை வாட்டுகிறது.”
”குருவே, அந்த யாகத்தை நினைத்து ஏன் வாடுகிறீர்கள். அவனால் என்ன தீங்கு உங்களுக்கு செய்து விட முடியும்? உங்களை விட அவன் எப்படி உயர்வு அடையமுடியும்? கவலைப்படாதீர்கள் . அவன் மேல் பொறாமை வேண்டாம் ”
” இந்திரா உன்ன கேட்கிறேன் சொல்? உன் எதிரியின் சக்தி வளர்வதை நீ சந்தோஷத்தோடு பார்த்துக் கொண்டிருப்பாயா?’ என் நிலையில் நீ இருந்தால் என யோசித்து பதில் சொல்? சம்வர்த்தனின் சக்தி பெருமையை வளரவிடக்கூடாது”
இந்திரன் அக்னியை அழைத்து ”நீ போய் மருதன் யாகத்தை எப்படியாவது அழித்துவிட்டு வா” என அனுப்பினான்.
ராஜா மருதன் அக்னியை வரவேற்று உபசரித்தபோது தான் வந்த நோக்கத்தை அக்னி தெரிவித்தான்.”ஹே ராஜா, சம்வர்த்தன் இந்த யாகத்தை நடத்தாமல் நிறுத்து. வேண்டுமானால் ப்ரஹஸ்பதியையே இந்த யாகம் நடத்த ஏற்பாடு செயகிறேன்” என்றான்.
மருதனுக்கு கோபம் வந்தது. நான் பிரம்மச்சாரி. என் தபோபலம் உன் உஷ்ணத்தைவிட அதிகமானது.கொடுத்த வாக்கை மீற மாட்டேன். வீண் பேச்சு பேசாமல் போ. ”
தலை குனிந்து அக்னி இந்திரனிடம் சென்று நடந்ததை சொன்னான்.” தேவேந்திரா, ப்ரம்மச்சாரியின் தபோ பலம் என் சக்தியை விட மேலானது என உனக்கே தெரியும்” என்றான்.
இந்திரன் யோசித்து ஒரு கந்தர்வனை அழைத்து ” நீ உடனே மருதனிடம் போய் பேசு. இந்த யாகத்தை தொடர்ந்தால் என் சீற்றத்துக்கு ஆளாகி நாசம் விளையும் என எடுத்துச் சொல் ”என்றான். கந்தர்வனும் அப்படியே செய்தான்.
”ஹே கந்தர்வா, பிரஹஸ்பதி என் வேண்டுகோளை மறுத்தார். சம்வர்த்தனும் மறுத்தார் . நான் தான் எப்படியோ கெஞ்சி அவரை இந்த யாகம் நடத்த சம்மதிக்க வைத்தேன். அப்படிப்பட்ட ஒரு நல்ல நண்பனுக்கு நான் கொடுத்த வாக்கை மீறவே மாட்டேன். சம்வர்த்தனை யாகம் செய்யாமல் நிறுத்த மாட்டேன்.”
”மருதா நன்றாக யோசி. இந்திரனின் வஜ்ராயுதத்தை எதிர்கொள்ளும் சக்தி உனக்கு உண்டா? ஏன் அழிவை நாடுகிறாய்?”
மருதன் சம்வர்த்தனிடம் சென்று நடந்ததை சொன்னான்.”நீங்கள் தான் என்னை காப்பாற்றவேண்டும்” என்று சொன்னான்.
”அரசே, என் தவத்தின் பலம் உன்னை காக்கும். நீ உன் விருப்பத்தை நிறைவேற்று” என்கிறான் சம்வர்த்தன். இந்திரனின் பலம் சக்தி எதுவும் சம்வர்த்தனின் தபோபலம் முன்பு எடுபடவில்லை. யாகத்தில் பங்கேற்று ஆசீர்வாதம் பெற்று திருப்தியோடு திரும்புகிறான்.
இந்த கதை என்ன சொல்கிறது? பொறாமை என்றும் தீமையைத்தான் விளைவிக்கும். நிம்மதி குலையும். தேவர்களானாலும் அதன் சக்தியில் தோல்வி தான் அடைவார்கள். பொறாமையை மனதிலிருந்து முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். இந்த கதை எழுதும்போது வள்ளுவர் நினைவில் வருகிறார்.
”அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.”அழுக்காறு தான் பொறாமை, அது, மற்றும், பேராசை, கோபம், கடுமையான சொல் இது இல்லாமல் வாழ வேண்டும். அதற்கு இடம் கொடுத்தால் இப்போதும் எப்போதும் நமக்கு வாழ்க்கை நரகம் தான். இது நமக்கும் நல்ல பாடமாகட்டும்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2569

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;