
சரஸ்வதி பூஜை – நங்கநல்லூர் J K SIVAN
நவராத்ரி ஒன்பது நாள் ஒவ்வொரு வீட்டிலும் கலைமகள், மலைமகள், அலைமகள் கொலுவிருந்து பத்தாவது நாள் விஜயதசமி என்று வெற்றிகரமாக தீமையை வென்ற நாள்.
நாளை 9ம் நாள். மஹா நவமி. கலைமகளுக்கு பூஜை . ஸரஸ்வதி பூஜை. கல்வி, அறிவு, கலை, இசை, இலக்கியம்– ஆய கலைகள் அறுபத்து நான்குக்கும் ஆதார தெய்வம் ஸரஸ்வதி. இதற்கு ஆயுத பூஜை என்றும் பெயர். ஒவ்வொரு வீட்டிலும் புத்தகங்கள், பேனா, பென்சில், ஸ்லேட். நோட், எல்லாம் பூஜையில் இருக்கும். இவற்றை தயாரிக்கும் இயந்திரங்களுக்கும் பூஜை. சைக்கிள், கார், லாரி, ட்ரக் எல்லாவற்றிற்கும் சந்தனம் குங்குமம், மாலை.ஓம் சரஸ்வத்யை நம:,
நிறைய வீடுகளில் தேவி மஹாத்ம்யம், லலிதா சஹஸ்ரநாமம், ”யா குந்தேந்து துஷார ஹார தவளா … பாட்டெல்லாம் ஒலிக்கும்.
சரஸ்வதி பூஜை அன்று மஹா பெரியவா காஞ்சியில் இருந்த போது கூட்டம் அலைமோதும். ஒரு தம்பதி தங்கள் ஐந்து வயதுக் குழந்தையோடு டில்லியிலிருந்து வந்தவர்கள். காத்திருந்து மஹா பெரியவா அருகே சென்றார்கள். நமஸ்காரம் பண்ணினார்கள்.
“பெரியவா, இந்த கொழந்தைக்கு விஜயதஸமி யன்னிக்கி அக்ஷராப்யாஸம் பண்ணணும்… நவராத்ரி டைம்-ங்கறதால ஆத்தை விட்டு வரது கொஞ்சம் கஷ்டம்… கொழந்தை நன்னா படிச்சு, நன்னா வரணும்…. அதுக்கு பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்…”
பெரியவா எதிரே பார்த்தார். அந்த குழந்தை அதன் அப்பா, அம்மாவைப் போலவே கை கூப்பிக் கொண்டு, அம்மாவையும், தன்னையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நிற்பதை கவனித்தார். …
“பெரியவாளோட திருவாக்கால, கொழந்தைக்கு எதாவுது வார்த்தை சொல்லித் தரணும்….”
“இங்க வா……” காமாக்ஷி அம்பாளே குழந்தையை வாக்தேவி ஸரஸ்வதி யாக அழைத்தாள் பெரியவா ரூபத்தில்.
குழந்தை மெதுவாக அருகில் வந்தது.
“நா…..சொல்றதை நீ திருப்பி சொல்றியா?…”
“சொல்றேன்..உம்மாச்சி தாத்தா!…”
“சொல்லு….வாக்குண்டாம்!…..”
“வாகுந்தாம்…..”
“நல்ல மனமுண்டாம்”
“நல்ல மனமுந்தாம்”
“மாமலராள் ….”
“மாமலரால் ..”
“நோக்குண்டாம்….”
“நோக்குந்தாம்..”
“மேனி…”
“மேனி..”
“நுடங்காது….”
“நுங்காது…”
“பூக்கொண்டு…”
“பூக்கொந்து…”
“துப்பார்….”
“துப்பார்….”
“திருமேனி……”
“தியுமேனி….”
“தும்பிக்கையான் பாதம்”
“தும்பிக்கியான் பாதம்”
“தப்பாமல்…”
“தப்பாமல்”
“சார்வார் தமக்கு….”
“சார்வார் தமக்கு….”
குழந்தைக்கு கொள்ளை ஸந்தோஷம்! உம்மாச்சித் தாத்தா சொன்னதை, தான் அப்படியே ‘கரெக்டாக’ சொல்லிய பெருமை!
“வாக்குண்டாம், நல்ல மனமுண்டாம், மாமலராள் நோக்குண்டாம், மேனி நுடங்காது….பூக்கொண்டு துப்பார் திருமேனி
தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு!…..”
“….ஒனக்கு ஔவைப்பாட்டின்னா தெரியுமா?…”
“தெரியும் தாத்தா!… அப்பா சொல்லி இருக்கா.”
“இது….ஔவைப்பாட்டி பாடினது….தெரியுமோ? தெனோமும் சொல்லு….நன்னா படிப்பே!…”
“செரி…தாத்தா!…”
அதிர்ஷ்ட குழந்தை. வாக் தேவி சந்த்ரசேகரேந்திர ஸரஸ்வதி இடமிருந்து வாய்க்கு கல்கண்டும், அறிவுக்கு , புத்திக்கு ஞானக் கல்கண்டும் கிடைத்ததே.
அங்கே கூடியிருந்த பண்டிதர்களுக்கு, பெரியவா, ஸமஸ்க்ருதத்தை மட்டுந்தான் போஷிப்பார்; ஆதரிப்பார்; என்ற தவறான கருத்து அப்போது பரவியிருந்ததால், இந்த தம்பதி வந்து அக்ஷராப்யாஸம் செய்து வைக்க வேண்டிய போது “வாக்குண்டாம்…..” என்று பெரியவா ஆரம்பித்ததும், அவர்களுக்கு ஆஸ்சர்யம்! ஸந்தோஷம்!
“பெரியவா கொழந்தைக்கு மட்டும் உபதேஸிக்கல……எங்க எல்லாருக்குந்தான் இந்த அருமையான உபதேஸம்! இனிமே எங்க வீடுகள்ளயும், வாக்குண்டாம்-தான் மொதல் பாடம் !…” என்று மஹா பெரியவாளிடம் கை கூப்பி சொன்னார்கள்.
என்ன செய்வது. இக்கால பள்ளிக்கூட புத்தகத்தில் ஒளவையாரைக் காணோமே. “வாக்குண்டாம்……” ஸ்தோத்ரத்தில் சொல்லிய ஏதாவது ஒன்றையாவது குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பள்ளிக்கூடம் தந்திருக்கிறதா? என்று மூளையை குடைந்து குடைந்து யோஜித்தாலும், “இல்லை” என்றுதான் ஸத்யமான பதிலாக வரும். இது பெரியவா நம் அத்தனை பேருக்குமே அனுக்ரஹித்த அக்ஷராப்யாஸம்!
இந்த சரஸ்வதி பூஜை தினத்திலாவது நாம் நல்ல, உயர்ந்த ஸத்யமான வார்த்தைகள், நல்ல தர்மங்களை எடுத்துக் கொண்டு கடைப்பிடிக்கும் தாராள மனது, இந்த ரெண்டையும் அனுக்ரஹிக்க “ஜகத்குரு” காட்டிய விக்னேஶ்வர மூர்த்தியின் பாதங்களை பணிவோம். குழந்தைகள் இதை தினமும் சொல்லி வந்தாலே, மனஸும் ஶுத்தமாகும், அதனால் வாக்கும் ஶுத்தமாகும், தெளிந்த நல்லறிவும் உண்டாகும் என்பதில் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

