
@followers வேதாளம் விக்ரமாதித்தன் கதை. நங்கநல்லூர் J K SIVAN
யார் கணவன்?
வேதாளத்தை பிண உருவில் தோளில் போட்டுக் கொண்டு விக்ரமாதித்தன் நடப்பதும், வேதாளம் கதை சொல்வதும், கடைசியில் கஷ்டமான கேள்வி கேட்பதும், விக்ரமாதித்தன் சரியான விடை சொன்னதும், அதைக் கேட்டு வேதாளம் மீண்டும் பறந்து போய் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்வதும் வழக்கமான நிகழ்வுகள்.
இதோ மறுபடியும் வழக்கம்போல் விக்ரமாதித்தன் வேதாளத்தை பிடித்து தோளில் போட்டுக்கொண்டு நடக்க, வேதாளம் இன்னொரு கதை சொல்கிறது. கேட்போம்.
”விக்ரமாதித்த ராஜனே, இந்த கதையைக் கேள்.
சிவபுரம் என்ற ஊருக்கு யாகஸேது என்பவன் ராஜா. அவனுடைய அழகான பெண் பெயர் சசிப்ரபா . ஒரு நாள் அவள் தோழிகளுடன் கோவிலுக்கு சென்றபோது அங்கே மானசாமி என்கிற வாலிபனைப் பார்த்து கண்டதும் காதல் அங்கே உருவாகிறது. அந்த சமயம் ஒரு மதம் பிடித்த யானை வேகமாக சசிபிரபாவை நோக்கி ஓடிவர, மானஸ்வாமி சரியான நேரத்தில் சசிசுப்ரபாவை அலாக்காக தூக்கிச் சென்று காப்பாற் றுகிறான்.சசிப்ரபா அரண்மனை திரும்பி விட்டாள். மானஸ்வாமியால் சசிப்ரபாவை மறக்க முடியவில்லை. மூலதேவன் என்கிற மந்திரவாதியைப் பார்க்கிறான். மாயாஜால மந்திரவாதி ரெண்டு மாத்திரைகளை எடுத்து ஒன்றை தான் விழுங்கி கிழவனாகிறான். இன்னொன்றை மானஸ்வாமிக்கு கொடுக்க அவன் அழகிய பெண்ணாகிறான்.
கிழவனும் பெண்ணும் ராஜாவிடம் சென்று, மந்திரவாதி ராஜாவிடம்
”ராஜா இவள் என் மகனைக் கல்யாணம் பண்ணிக்
கொள்ளப்போகும் மருமகள். என் மகனைக் காணோம். முதலில் நான் அவனைத் தேடிக்கண்டு பிடிக்க வேண் டும். அதுவரை இந்த பெண்ணை உங்கள் அரண்மனை யில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவேண்டும் ” என்கிறான்
ராஜா மகளை அழைத்து ”சசி, இந்த பெண்ணை உன்னோடு தோழியாக வைத்துக் கொள்” என்று மானஸ்வாமியை பெண்ணோடு அனுப்புகிறான்.
ஒரு நாள் சசிபிரபா, பெண்ணாக இருக்கும் மான ஸ்வாமியிடம் தனக்கு மான ஸ்வாமி என்பவன் மேல் கொண்ட காதலைக் கூற, மானஸ்வாமி தனது நிஜ உருவத்தைக் காட்ட இருவருக்கும் அங்கேயே காந்தர்வ விவாகமாகிறது. இருவரும் சந்தோஷமாக வாழ்கிறார் கள்.
மந்திரியின் பிள்ளைக்கு கல்யாணம் ஆகிறது. சசி
ப்ரபா தோழியாக மானஸ்வாமி யோடு செல்கிறாள். கல்யாண மாப்பிள்ளை மந்திரி குமாரன் மானஸ்வாமி
யின் பெண்ணுருவில் மயங்கி மந்திரியிடம் ”அப்பா, எனக்கு இந்த பெண்ணும் வேண்டும். இவளையும் கல்யாணம் பண்ணிக் கொள்ளாவிட்டால் என் உயிரை மாய்த்துக் கொள்வேன்” என பிடிவாதம் பிடிக்கிறான்.
மந்திரி ராஜாவிடம் போய் கெஞ்சுகிறான்.
” அரசே, நமது ராஜகுமாரியோடு ஒரு தோழி புதிதாக வந்திருக்கிறாளே அவளை என் மகனுக்கு கல்யாணம் பண்ணிக்கொள்ள அனுமதிக்கவேண்டும் ”
”இல்லை மந்திரி, அது முடியாது. இந்த பெண் ஒருவ னால் என்னிடம் ஜாக்கிரதையாக பாதுகாக்க ஒப்படைக்கப்பட்டவள். இன்னொருவனுக்கு அவளைக் கல்யாணம் பண்ண ஏற்கனவே முடிவாகியுள்ளது”
ராஜாங்க அமைச்சர்கள் ராஜாவுக்கு ஆலோசனை கூறினார்கள்;
”அரசே, நமது மந்திரி உங்கள் முடிவால் மனமுடைந்து நாட்டை விட்டு போய்விட்டால் அது ஆபத்தானது. நாட்டு ரஹஸ்யங்கள் தெரிந்தவர். அனுபவ சாலி அவர். ஆகவே எப்படியாவது ராஜகுமாரியின் தோழியை அவர் மகனுக்கு மணம் முடித்துவிடுங்கள்”
ராஜா பெண்ணுருவில் உள்ள மானஸ்வாமியை அழைத்து
” பெண்ணே, நீ எங்கள் மந்திரிகுமாரனை கல்யாணம் செய்து கொள்ளவேண்டும். மறுக்காதே’ என்று சொல்கிறான். மானஸ்வாமி பதில் சொல்கிறான்.
”அரசே, உங்கள் வேண்டுகோளுக்கு சம்மதிக்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை.
”கல்யாணம் ஆன மறுகணமே மந்திரி குமாரன் ஆறு மாதம் தீர்த்த யாத்திரை போகவேண்டும். இதற்கு சம்மதமானால் கல்யாணம் நடக்கும்.” என்கிறான்.
மந்திரி குமாரன் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டு அவனுக்கும் மானஸ்வாமிக்கும் கல்யாணம் நடந்து உடனே மந்திரிகுமாரன் ஆறுமாத தீர்த்த யாத்திரைக்கு புறப்பட்டான். மானஸ்வாமி மந்திரிகுமாரனின் முதல் மனைவியோடு அவன் வீட்டில் இருக்கிறான்.
இந்த விஷயம் மந்திரவாதி மூலதேவனுக்கு தெரிய
வந்ததும் நேராக தனது மகனோடு ராஜாவிடம் வந்து ”அரசே உங்களிடம் ஒப்படைத்திருந்த என் மருமகளைத் திரும்ப கொடுங்கள் ” என்கிறான். ராஜா நடந்ததை சொன்னதும் மந்திரிவாதிக்கு கோபம் வருகிறது.
”ராஜா என் மருமகளைத் திரும்ப கொடுக்காவிட்டால் சாபம் இடுவேன். எனது மந்திர சக்தியால் நீ, உன் நாடு, உன் மக்கள் எல்லோரும் அழிந்து போவார்கள் ஜாக்ரதை” என்கிறான் மூலதேவன். ராஜா வேறு வழி தெரியாமல் தனது பெண் சசிபிரபாவை மூலதேவன் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறான். மூலதேவன் சமாதானம் அடைகிறான். அப்போது மானஸ்வாமி அங்கே வந்து தனது பெண் உருவத்தை கலைத்துவிட்டு ராஜாவிடம் சொல்கிறான்;
”ராஜா, உங்கள் மகள் சசிப்ரபாவுக்கும் எனக்கும்
ஏற்கனவே காந்தர்வ விவாகம் ஆகிவிட்டது. அவள் ஏற்கனவே என் மனைவி. அவள் மூலதேவன் மகனுக்கு மனைவியாக முடியாது’ என்கிறான்.
இந்த சிக்கலான இடத்தில் கதையை நிறுத்தி வேதாளம் கேட்கிறது.
”விக்ரமாதித்யா, நீ ரொம்ப ரொம்ப கெட்டிக்காரனா
யிற்றே, எங்கே, சரியான விடையை சொல் பார்க்கலாம். சசிப்ரபாவின் நியாயான கணவன் யார்? சரியான விடையை சொல்லாவிட்டால் ஏற்கனவே உனக்கு சொன்னபடி உன் தலை ஆயிரம் சுக்கல். ஞாபகமி ருக்கட்டும்”
”வேதாளமே, மானஸ்வாமி செய்த காரியம் திருடு, ஏமாற்றியது, துரோகம் செய்வது, போன்ற தவறுகள். எல்லாமே தப்பானவை. ராஜா தனது பெண்ணை மூலதேவன் மகனுக்கு சாஸ்த்ர ஸம்ப்ரதாயங்களோடு கல்யாணம் பண்ணி வைத்ததால் மூல தேவன் மகன் தான் சசிப்ரபாவின் உண்மையான நியாயமான கணவன். திருடனுக்கு அவளைக் கேட்க உரிமையில்லை”
”விக்ரமாதித்யா, சரியான விடையை சொன்னாய், ஆனால் நீ வாய் திறந்து பேசி உன் மௌனம் கலைந் ததால் நான் உன்னை விட்டு போகிறேன்” என்று வேதாளம் பறந்து மீண்டும் முருங்கை மரத்தில் உச்சியில் தொத்திக்கொண்டது. அதை இனி அடுத்த கதையில் தான் நாம் பார்க்க முடியும். என்ன செய்வது?
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



