surdas j k sivan

ஸூர்தாஸ். நங்கநல்லுர் J.K. SIVAN
ஹே கோவிந்தா
சூர் தாசரை வடக்கத்திய ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் என்பதா, குருவாயூரப்பனை நேரில் கண்டு பேசிய மேல்பத்தூர் நாராயண பட்டாத்ரி என்பதா, அல்லது அவரும் ஒரு பில்வமங்களா, சைதன்யரா? ”
”ஆம்/ இல்லை” ரெண்டும் சரி. ஏனென்றால், மேலே சொன்னவர்களை போல இல்லை இந்த கண்ணற்ற சூர் தாஸ். கண்ணனை மனதால் கண்டவர். விழியில்லையே தவிர சிந்தையிலே அந்த சின்னக் கண்ணனை நிலை நிறுத்திக் கொள்ள வழி தெரிந்த அற்புத மஹான்.
அவரின் ஒரு பிரபல பாடலிலிருந்து சூர்தாசரை அனுபவிப்போம்
”அடே குட்டி கிருஷ்ணா, என் எதிரே உட்கார்ந்து இருக்கியா, நீ ஒண்ணு செய்யேன்”’ என்று ஸூர் தாஸ் சொல்ல,
”என்ன தாத்தா நான் என்ன செய்யணும்? என்று கேட்டான் கன்னத்தில் கை ஊன்றி அமர்ந்த குட்டி கிருஷ்ணன்.
”’என்னை எப்போவும் உன்கிட்டேயே வச்சுக்கிறீயா? நீ தானே என்னை ரக்ஷிக்கணும். உனக்கு தெரியாதா, நான் இதோ இப்பவோ, எப்பவோ, இன்னும் கொஞ்சநாளோ?” என் வாழ்க்கை முடியப்போறதே.
”ஓஹோ அது தான் உன் ஆசையா?​’
”அன்னிக்கு சிந்து நதிக்கரையில் என்ன நடந்ததுன்னு மறந்து போச்சா?
”என்ன நடந்தது, ஞாபகம் இல்லை, நீயே சொல்லு தாத்தா?”
”தாகத்திற்கு நீர் அருந்த கஜேந்திரன் எனும் யானை ஆற்றில் காலை வைத்து இறங்கினான். எதைச் சாப்பிட்டு இன்று பசியாறலாம் என்று ஒரு முதலையும் அப்போது அந்த நதியில் காத்திருந்ததே. ‘அடடா, நமக்கு கிடைச்ச லக்கி ப்ரைஸ்’ என்று யானையின் காலை பிடித்து கவ்வியது. உயிர் காத்துக் கொள்ள கஜேந்திரன் எதிர்த்தான். வந்த ஆகாரத்தை விடுவேனா என்று முதலையும் விடவில்லை. உயிரா, பசியா? எது வெல்லும்?. அதுவும் நீரில் முதலை பல யானைகளுக்கு சமம். பன்னிரண்டு மணி நேர போராட்டம். முதலையின் கை ஓங்கி யானையை இன்னும் ஆழத்திற்கு இழுத்துக்கொண்டு போகிறது.
யானைக்குத் தெரிந்து விட்டது. நம் சக்தி விரயமாகிக்கொண்டு வருகிறதே. இனி உதவி வெளியேயிருந்து தான் உதவி நமக்கு வரவேண்டும். யார் உதவுவார்கள்? சடாரென்று கஜேந்திரனுக்கு உன், (கிருஷ்ணன் ) ஞாபகம் வந்தது.
”கிருஷ்ணா, கிருஷ்ணா, துவாரகா நாதா’ ஆதி மூலா” …. யானையின் சோக ஒலி துவாரகை சென்று உன்னுடைய அரண்மனை கதவை படார் படார் என்று இடித்தது.
”கிருஷ்ணா, உனக்கு அவசரம் புரிந்து விட்டது. எங்கே கருடன்? என்று கூப்பிட்டாய். நொடியில் கருட வாகனனாக சங்கை ஒலித்துக் கொண்டு (”நான் வந்துவிட்டேன் ” என்று தைரியம் சொல்ல ) கதாயுதத்தோடு பறந்தாயே.
”கிருஷ்ணா , இதோபார், இதைக் கேள். ‘நான் உன்னை அண்டி வந்தவன். என்னைக் காத்திடுவாய் என்று கதறுகிறேன். முதலையை காத்ததுபோல் இந்த பவ சாகரத்திலிருந்து, உலக வாழ்க்கைக் கடலிலிருந்து என் ஐம்புலன்களாகிய முதலைகளின் பிடியிலிருந்து என்னை நீ மீட்பாயா. நந்த குமாரா?’
சூர்தாஸை அவரது பிரிஜ்பாசி மொழி தெரிந்து படித்தால் அவர் இன்னும் மணம் வீசுவார். நாம் கொடுத்து வைத்தது ஆங்கில மொழி பெயர்ப்பில். ஏதோ இதாவது கிடைத்ததே என்று திருப்தி அடைவோமா ?​ ஆச்சர்யம்​ மேலிட்டு​ சந்தோஷமாக​ இருப்பதை​ ”மூக்கின்​ மேல்​ விரலை​ வைத்து” என்று​ சொல்​வோமே. என்னை ஆட்கொண்ட​ மிகப் பெரிய​ ஆச்சர்யம் ஒரு​ ஓவியனின் கற்பனாசக்தி . கண்​ பார்வை​ அற்ற சூர்தாஸ் மூச்சுக்கு முன்னூறு அல்ல மூவாயிரம்​ கிருஷ்ண​ நாம​ ஜப​ம்​ செய்பவர். அதை​ அழகிய​ கவிகளால்​ வெளிப்படுத்துபவர். அதைக் கேட்கும்​ போது​ நம்மை​ எங்கோ​ தேவ​ லோகத்தில்​ கொண்டு​ செல்கிறது​ என்பது​ ஒருபக்கம்​ இருக்கட்டும்.​
குட்டியாக​ கிருஷ்ணனே​ நேரில்​ வந்து​ அவர்​ எதிரில்​ வந்து​ சப்பளாங்கால்​ கட்டிக்​ கொண்டு​ பதவிசாக​ அமர்ந்து​ கொண்டு​ இடது​ கன்னத்தில்​ கை​ வைத்து​ குனிந்து​ அவ​ ர்​ கவி​ பாடுவதை​ ரசித்துக்​ கொண்டிருக்கிற​ மாதிரி​ எப்படி​ அந்த​ ஓவியனுக்கு​ வரையத்​ தோன்றியது. கிருஷ்ணன்​ கண்களில்​ ஆச்சர்யம், புன்முறுவல்.
”ஹே​ ​ஸூர்தாஸ்​ தாத்தா, நான்​ செ​ய்தது​ பெரிதல்ல,​ நீ​ அதை​ ராகமாக​ செவியினிக்க​ பாடி​ நேரில்​ நடந்ததைப்​ பார்த்தாற்​ போல்​ பாடுவது​ தான்​ அபூர்வம்” என​ கிருஷ்ணன்​ சொல்வதைப்​ போல்​ ஓவியம்​ தீட்டிய​ நீ​ யார்அப்பா?​ ஆனால்​ நீ​ மிக​ உயர்ந்த​ கிருஷ்ண​ கடாக்ஷம்​ பெற்றவன்​ என்று​ மட்டும்​ நிச்சயமாக​ சொல்வேன்”
हे गोविन्द हे गोपाल अब तो जीवन हारे । अब तो जीवन हारे, प्रभु शरण हैं तिहारे ॥
हे गोविन्द हे गोपाल अब तो जीवन हारे… हे गोविंद ॥
​
नीर पिवन हेतु गयो सिन्धू के किनारे, सिन्धु बीच बसत ग्राह चरण धरि पछारे,
हे गोविन्द हे गोपाल अब तो जीवन हारे ॥
चार पहर युद्ध भयो ले गयो मझधारे, नाक कान डूबन लागे कृष्ण को पुकारे,
हे गोविन्द हे गोपाल अब तो जीवन हारे ॥
द्वारिका में शब्द गयो शोर भयो द्वारे, शंख चक्र गदा पद्म गरुड़ तजि सिधारे,
हे गोविन्द हे गोपाल अब तो जीवन हारे ॥
सूर कहे श्याम सुनो शरण हैं तिहारे, अबकी बेर पार करो नन्द के दुलारे,
हे गोविन्द हे गोपाल अब तो जीवन हारे ॥
Hey Govind hey Gopal Hey Govind rakho sharan Aab to jivan hari –(2)
Neer pivan heytu gayo Sindhu ke kinare Sindhu beech basat grah Charan dhari pachhare
Hey Govind hey Gopal
Chaar prahar yudha bhayo Ley gayo mazdhare Naak Kaan Dooban lagey
Krishna ko pukare Hey Govind Hey Gopal
Dwarika me Sabd gayo Shor bhayo bhare Shankh Chakra Gada Padma, Garud ley sidhare
Hey Govind hey Gopal
Sur kahe shyam suno sharan hai tihare Aab ki bar paar karo, Nand ke dulare
Hey Govin Hey Gopal

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;