everyonefollowme ஆதி சங்கரர்- நங்கநல்லூர் J K SIVAN

ஓம் நமசிவாய; சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம்

என் தந்தை அடிக்கடி சொல்லும் ஸ்தோத்திரம் சிறுவயது முதல் என் செவிகளில் புகுந்து மனதில் இடம் பெற்று விட்டது. தவிர இந்த ஐந்து ஸ்லோகங்களை ஐந்து வித ராகங்களில் மனதுக்கு இதமாக, செவிக்கு இனிமையாக பாடிய MSS அம்மாவின் குரல் சங்கீதத் தில் ஒரு பிடிப்பு இதனால் உண்டானது.

அப்போதெலாம் அர்த்தம் புரியாமல், தெரியாமல் இசையில் மயங்கிய காலம் .பக்தி பூர்வமாக பாடப்பட்ட இந்த ஸ்தோத்ரம் என்னுள் பரமேஸ்வரன் மேல் ஒரு பக்தியை உருவாக்கியது. அடிக்கடி இதை கேட்க வேண்டும், மனப்பாடம் செய்ய வேண்டும் என்று ஒரு அதிர்வலை நெஞ்சில் தாகத்தை ஏற்படுத்தியது. ஏற்படும். அதே போல் கோவில்களில் சென்று பாட வேண்டும் என்ற ஆசை தோன்றியது. அப்படியே செய்தேன். அப்புறம் தான் வயது ஏற ஏற இந்த பசு மாடு நிழலில் அமர்ந்து விச்ராந்தியாக அசை போட்டது. இது வரை புரியாதது தெளிவாக புரிந்தது. ஆனந்தம் தந்தது.

அடேயப்பா, எத்தனை கைகள் இருந்தாலும் போதாது. ஆதி சங்கரரை வணங்க. 32 வயதில் இத்தனை பக்தி ஸ்லோகங்களா. கடவுளே மனிதனாக தோன்றினதால் தான் இது சாத்தியமோ? நம்மால் ”மனிதனென்பவன் தெய்வமாகலாம்” பாட்டு மட்டும் தான் பாட முடிகிறது. அப்படி ஆவதற்கு பல ஜென்மங்கள் தேவை போல் தோன்றுகிறது.”

நமது தேகம் ஐந்து பூதங்களால் உண்டானது. இந்த பஞ்சாக்ஷர மந்திரத்தின் ஐந்து அக்ஷரங்களும் அதை நினைவு படுத்துவன . ந: மண் எனும் நிலம். ம: நீர். சி: அக்னி; வா: வாயு: ய: ஆகாசம். இந்த ஐந்தும் தான் மஹாதேவன்.

ஓம் நமசிவாய என்பது பஞ்சாக்ஷரம் எனும் ஐந்தெழுத் து மந்திரம். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு ஸ்லோகம் பாடுகிறார் சங்கரர்.

முதலில் ந:
1.नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय । नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै न_काराय नमः शिवाय ॥१॥
நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாய பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய நித்யாய சுத்தாய திகம்பராய தஸ்மை நகாராய நமசிவாய

என்னப்பனே, பரமேஸ்வரா, உன்னுடைய விசித்திர ஆபரணங்களை எவனும் கொள்ளை அடிக்கமாட்டான் . அறுத்துக் கொண்டு ஓடமாட்டான். அருகில் வந்தால் நாலுபேருடன் தான் வரவேண்டும். அப்போது தான் அவனை தூக்கிச் செல்ல முடியும். விஷம் கக்கும் நாகங்களை ஆபரணமாக பூண்டவனே, கழுத்தில் மாலை, தலையில் ப்ரோச். கையில் வாகு வளையம், கங்கணம், பூணலாக கூட மெல்லிய பாம்பு. முக் கண் ணா , மூன்றாவது கண்ணை நீ திறந்தால் அவ்வ ளவு தான். அதன் பார்வை பட்ட அனைத்தும் சாம்பல்.. உன் பவழம் போல் மேனியில் பால் வெண் ணீறு . ஆதி அந்தமில்லா அநாதி நாதா, பரிசுத் தத்தின் உருவமே , சாஸ்வதனே, நான்கு திசைகள் தான் உன் ஆடைகளா? சிவனே, பரமேஸ்வரனே, ‘ந’ என்ற எழுத்தில் மிளிர் பவனே. உன்னை வணங்குகிறேன்.

2. मन्दाकिनीसलिलचन्दनचर्चिताय नन्दीश्वरप्रमथनाथमहेश्वराय । मन्दारपुष्पबहुपुष्पसुपूजिताय तस्मै म_काराय नमः शिवाय ॥२॥

மந்தாகினி சலில சந்தன சர்சிதாய நந்தீச்வர பிரமதநாத மகேஸ்வராய மந்தார முக்ய பஹுபுஷ்ப சுபூஜிதாய தஸ்மை மகாராய நமசிவாய

”ம” ரெண்டாவது எழுதது. வடக்கே ஓடும் புண்ய நதிகளில் ஒன்று மந்தாகினி. அதன் நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். வாசமிகு சந்தனம் ஏன் அவன் உடலெங்கும் பூசிக்கொள்கிறான்? அவன் அக்னி ஸ்வரூபம் இல்லையா?. எப்போதும் உஷ்ணம். உள்ளே ஹாலஹால விஷம் பாய்லர் வெந்நீர் போல் கொதிக்கிறது. ஆத்ம ஞானாக்னியின் உஷ்ணம் வேறு. ருத்ரன் என்பதால் எப்போதும் ரௌத்ரம். கேட்க வேண் டுமா உஷ்ணத்தின் அளவுக்கு? ஆகவே அவனை குளிர்ச்சிப்படுத்த தலையின் மேல் சில் என்று பனி உருகிய கங்கை, சில்லென்று வாழைத்தண்டு போல் நாகம், உஷ்ணத்தை குறைக்கும் ருத்ராக்ஷம். குளிர்ந்த பால் போல் வெள்ளையான சந்திரன், உஷ்ணத்தை உறியும் விபூதி. சாம்பல். குளிர்ந்த பனி மலை வாசம், உடலெங்கும் சந்தனம். சதா அபிஷேகம். சிவன் நந்தி வாஹனன். பைசாசங்களும் சிவகணங்களும் அவன் உதவியாளர்கள். ஸம்ஹார மூர்த்தி அல்லவா? மந்தார புஷ்பம், தும்பை கொன்றை பாரிஜாதம் போன்ற மலர்களால் வில்வ இதழ்களால் பூஜிக்கும்போது மகிழ்ந்து அருள்பவன். கேட்டதை யோசிக்காமல் வாரி அள்ளி வீசுபவன். பரமேஸ்வரா பஞ்சாக்ஷரத்தில் ரெண்டாம் அக்ஷரம் ” ம” எனும் எழுத்தால் உன்னை வணங்குகிறேன் பரமேஸ்வரா அருள் புரிவாய்.

3. शिवाय गौरीवदनाब्जवृन्द_ सूर्याय दक्षाध्वरनाशकाय । श्रीनीलकण्ठाय वृषध्वजायतस्मै शि_काराय नमः शिवाय ॥३॥

சிவாய கௌரி வதநாப்ஜ வ்ருந்த சூர்யாய தக்ஷாத்வர நாசகாய ஸ்ரீ நீலகண்டாய வ்ருஷத்வஜாய தஸ்மை சிகாராய நமசிவாய.

சி. மூன்றாவது எழுதது. ஆதி சிவன் மங்களகரன் . கௌரி எனும் தாமரை முகத்தாளின் வதனத்தை மலரச்செய்யும் சூர்யன். சிவை இல்லாவிட்டால் சிவன் இல்லை. காலாக்னி போல் கோபம் கொண்டு தக்ஷ பிரஜாபதியின் யாகத்தை கலைத்து அவனைக் கொன்றவன். திருப்பாற்கடலில் அமிர்தம் வரும் முன்பு வாசுகியால் வெளியேற்றப்பட்ட ஹாலஹால விஷம் நிரம்பிவிட்டது. அதை என்ன செய்வது என்று தேவர்கள் கலங்கியபோது ஒரு மடக்கில் அப்படியே விழுங்கி யதால் பார்வதி தேவி அது உள்ளே இறங்காமல் கழுத்தில் பிடித்து நிறுத்தி விட்டதால் நீல கண்டன் என பெயர் பெற்றவன்.
ரிஷபாரூடன். பரம சிவா உன்னை பஞ்சாக்ஷர மூன் றாம் அக்ஷரமான ”சி” என்ற எழுத்தை நினைக்கும் போது தரிசிக் கிறேன். வணங்குகிறேன்.

4. वशिष्ठकुम्भोद्भवगौतमार्य_ मूनीन्द्रदेवार्चितशेखराय । चन्द्रार्कवैश्वानरलोचनाय तस्मै व_काराय नमः शिवाय ॥४॥

வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய முனீந்தர தேவார்சித்த சேகராய சந்த்ரார்க்க வைச்வானர லோச்சனாய தஸ்மை வகாராய நமசிவாய.

நாலாவது அக்ஷரம் வ. தேவலோக ரிஷிகளில் முதன் மையான வசிஷ்டர், கும்பமுனி எனும் அகஸ் தியர், கௌதமர் போன்ற மஹரிஷிகள் சூழ்ந்து கொண்டு உன்னை வணங்கி பூஜிக்கிறார்கள். அவர்களுக்கு பின் எண்ணற்ற தேவர்கள் இதர ரிஷிகள், முனிகள், கந்தர்வர்கள், கின்னரர்கள், போன்றோர் துதிக்க, நடுநாயகமாக பிறைச்சந்திரனை தலையில் அழகாக கொண்ட பிறை சூடி, சூர்ய சந்திரர்களை கண்களாக கொண்டவன். த்ரிநேத்ரன், பரமேஸ்வரா, உன்னை பஞ்சாக்ஷரத்தின் நாலாவது அக்ஷரமான ”வ ‘ எனும் எழுத்தாக வணங்குகிறேன்.

5. यज्ञस्वरूपाय {यक्षस्वरूपाय} जटाधराय पिनाकहस्ताय सनातनाय । दिव्याय देवाय दिगम्बराय तस्मै य_काराय नमः शिवाय ॥५॥

யஞ ஸ்வரூபாய ஜடாதராய பினாகஹஸ்தாய சனா தனாய திவ்யாய தேவாய திகம்பராய….!!! தஸ்மை யகாராய நமசிவாய.

5வது எழுதது ய. பரமேஸ்வரன் யாக யஞங்களின் ஸ்வரூபன். பினாகம் எனப்படும் திரிசூல தாரி. சாஸ்வதன் . ஆதி முதல் வன். நாற் திசையும் ஆடை யானவன். அதாவது எங்கும் காணப்படுபவன். பரமேஸ்வரா, ஐந்தாவது பஞ்சாக்ஷரமான ”ய” எனும் எழுத்தானவனே. உன்னை சாஷ்டாங்கமாக வணங் குகிறேன்.

பலச்ருதி; ஸ்தோத்ர பாராயண பலன்.

पञ्चाक्षरमिदं पुण्यं यः पठेच्छिवसंनिधौ । शिवलोकमावाप्नोति शिवेन सह मोदते ॥६॥
பஞ்சாக்ஷரம் இதம் புண்யம் யப்படேஸ் சிவ சன்னிதெள சிவலோகம் அவாப்னோதி ஷிவேனா சக மோததே

சிவன் கோவில் சென்றால் இந்த பஞ்சாக்ஷர ஐந்து ஸ்லோகங்களை எவன் மனதார சொல்கிறானோ அவனுக்கு மோக்ஷம் நிச்சயம் என்று ஆதி சங்கரர் கடைசியாக பலஸ்ருதியில் காரண்டீ அளிக்கிறார்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2567

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;