
பரிஹாரம் — நங்கநல்லூர் J K SIVAN
நான் திருப்பதி வேங்கடேசனைப் பற்றி ஏன் சிலநாட்களாக எழுதவில்லை என்று எனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டேன். ஒரு காரணமும் இல்லை. அவனைப் பற்றி நினைக்காததால் என்று சொல்லவே முடியாது. ஒவ்வொருநாளும் அவன் நாமம் சொல்லாத வேளையே இல்லையே.
இப்படி தனிமையில் சிந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் வாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்டு வெளியே சென்று பார்த்தேன். மொட்டைத் தலை யோடு ஒரு நண்பர். சிரித்துக்கொண்டே கையில் இருந்த ஒரு பையை என்னிடம் நீட்டினார்.
”திருப்பதி போயிருந்தேன். இந்தாங்கோ பிரசாதம்”
பையில் லட்டு, ஸ்ரீ பாத ரேணு. வடை, முறுக்கு, மனோக ரம் என்று பக்ஷணங்கள். திருப்பதிவேங்கடேசன் ஆலயத்
தில் பிரத்யேகமாக கிடைப்பவை.
‘ வெங்கடேசா. என்னே உன் கருணை”. என் மனம் திருப்தி அடைந்தது. கம்பியூட்டர் முன் அமர்ந்தேன்.
அவனைப் பற்றி சில வார்த்தைகள் எழுத கை முனைந்தது.
ஸ்ரீவேங்கடேசனின் அருள் கடாட்சத்தை தெரிந்து கொள்ளாத, புரிந்து கொள்ளாத பக்தர்கள் கிடையவே கிடையாது. எப்படியாவது பக்தர்கள் வாழ்க்கையில் எப்போது தேவையோ அப்போது தானே அவர்களுக்கு உணர்த்தி அவர்ளுக்கு உதவும் கலியுக வரதன் அல்லவா அவன் ?
ஹிந்துக்களுக்கு மட்டும் அல்ல, இதரர்களுக்கும் அருள் புரிபவன் அவன். நான் ஏற்கனவே எழுதி இருந்த ஒரு சம்பவத்தை மீண்டும் நினைவூட்டுகிறேன்.
சென்னையில் தீவுத் திடலில் island ground பகுதில் குதிரை மேல் அமர்ந்த மன்றோ சிலை பார்த்திருக் கிறீர்களா? பார்க்காதவர்கள் உடனே சென்று தரிசியுங் கள். சிறந்த வேங்கடேச பக்தனை பார்ப்பது வெங்கடேச னையே பார்ப்பது போல் அல்லவா?
சார் தாமஸ் மன்றோ ஒரு வெள்ளைக்கார கலெக்டர். அவர் கலெக்டராக இருந்தபோது சென்னை மாகாணத் தில் சித்தூர் மாவட்டம் அடக்கம். சித்தூர் மாவட்டத் தில் தான் திருப்பதி திருமலை இருக்கிறது. வெள்ளைக் கார அரசாங்கத்தில் அப்போதெல்லாம் கலெக்டர்கள் தான் ராஜா. சர்வ அதிகாரம் படைத்தவர்கள்.
மன்றோ ஒரு சரியான கெடுபிடி அதிகாரி. அலுவல் ரீதியாக திருமலை-திருப்பதிக்கு அடிக்கடி அவர் போய் வர நேர்ந்தது. திருப்பதி திருமலை பற்றி வேங்கடேசன் பெருமை, மஹிமையைப் பற்றி ஏற்கனவே அவருக்கு பலர் சொல்லி இருந்தார்கள். அதை இந்த காதில் வாங்கி, அந்தக் காதில் விட்டுவிடுவார். மன்றோவின் ஒரே குறி ‘திருப்பதியில் தினம்தோறும் நிறைய பேர் பணம் செலுத்துகிறார்களே . எவ்வளவு வசூல் தினமும் ஆகிறது? வெள்ளைகார அரசாங்கத்துக்கு அங்கிருந்து எவ்வளவு பணம் திரட்டி அனுப்ப லாம்?’ என்பது மட்டுமே லக்ஷியம்.
திருமலைக்குப் போகும்போதெல்லாம் பெருமாள் சன்னிதி பக்கம் எட்டிக்கூடப் பார்க்காமல், உண்டியல் கலெக்ஷனிலும், ஆலய அலுவலகத்தில் வசூலாகி இருக் கும் தொகையிலும் கவனமாக இருப்பார் மன்றோ. அர்ச்சகர்களை, அதிகாரிகளை கண்டபடி திட்டி அவம திப்பார். ‘கோயில் அதிகாரிகள் பணத்தைச் சுருட்டி விடுகிறார்களோ?’ என்று சந்தேகம். ஆகவே கோயில் பணியாளர்களையும், அர்ச்சகர்களையும் தாறுமாறாகத் திட்டித் தீர்ப்பார். அவர்கள் வருந்துவார்கள். துரையின் பேச்சை எவர் எதிர்க்க முடியும்?. கலெக்டர் பேச்சை எவர் தான் எதிர்க்க முடியும், பதில் சொல்ல முடியும்? வேறு வழி தெரியாமல் தலையைக் குனிந்தவாறு இதயம் உடைந்து கண்ணீர் உகுப்பார்கள்., அதிகாரி களும் அர்ச்சகர்களும் கண்ணீர் விட்டு ”வேங்கடேசா, நாங்கள் படும் பாட்டை நீ அறியமாட் டாயா? நீ தான் இதற்கு ஒரு வழி பண்ண வேண்டும்’ என்று கதறி பெருமாளிடமே முறையிட்டுக் கண்ணீர் சிந்துவார்கள்.
ஏழு மலையானுக்குத் தலைமுடி காணிக்கையாகக் கொடுக்க வருகிற பக்தர்களைப் பார்த்து, மன்றோ சிரிப்பார்.
”உள்ளூர்லயே செய்ய வேண்டிய க்ஷவரத்தை ஏனையா இந்த மலையில் வந்து செய்கிறீர்கள்?” என்று கிண்டல் செய்வார்.
முடி காணிக்கை கொடுத்து விட்டு, மொட்டைத் தலை யுடன் செல்லும் இரு நபர்களைப் பிடித்து, ஒருவர் தலையுடன் இன்னொருவரின் தலையை மோத விட்டுப் பார்ப்பார். குரூரமான இந்தச் செயலைக் காண நேரிடும் அர்ச்சகர்களும், கோயில் பணியாளர்களும் ‘அபசாரம்… அபசாரம்’ என்று வாயைப் பொத்திக்கொண்டு நகர்ந்து விடுவார்கள். யார் கலெக்டரை எதிர்த்து தட்டிக் கேட்க முடியும்? ஒரு வார்த்தை பேசினால் உடம்பில் உயிர் இருக்காதே.
ஆனால் வேங்கடேசன் இதெல்லாம் பார்த்துக்கொண்டு ரொம்ப நாள் சும்மாவா இருப்பான்? பொறுமைக்கும் ஒரு லிமிட், எல்லை உண்டல்லவா?
மன்றோவின் அட்டகாசங்களுக்கு ஒரு முடிவு கட்டி, அவரை மன்னித்து, தன் பக்தன் ஆக்கிக்கொள்ள வேண் டும் என்று வேங்கடேசன் முடிவெடுத்தான். மன்றோ பாக்யசாலி. அவனுக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரம்.
ஒரு சமயம் வழக்கம் போலவே திருப்பதி கோவில் வசூல் விவரங்களைப் பார்வையிட, உண்டியல் கலெ க்ஷன் பணம், எல்லாம் கணக்கு பார்த்து, கொண்டு போக, படையுடன் திருமலைக்கு வந்தார் மன்றோ. உண்டியல் வசூல், வழிபாடுகள் மூலம் சேர்ந்த தொகை, காணிக்கையாக வந்தது, கையிருப்பில் இருக்கும் தொகை, அனைத்துக்கும் கணக்கைத் தயாராக வைத்துக் கொண்டு, மன்றோவின் வருகையை எதிர்பார்த்திருந்தனர் அதிகாரிகள்.
ஆலயத்துக்குள் நுழைந்த மன்றோ, வசூலைப் பார்வை யிடுவதற்கு முன்னதாக, ஆலயத்தை மிடுக்குடன் வலம் வந்தார். புனிதம் நிரம்பிய அந்தப் ப்ராஹாரத்தை, மேற்பார்வை இட்டுக்கொண்டு அதிகார தொனியில் அவர் பவனி வந்ததைக் கண்ட பலரும் சங்கடத்தில் நெளிந்தனர்.
ஒரு மூலையில் பக்தர்கள் சிலர் அமர்ந்து பெருமாளின் பிரசாதமான வெண் பொங்கலை, சாப்பிட்டுக் கொண்டி ருந்தனர். தரையில் ஒரு இலையில் வைத்துக் கொண்டு, அவர்கள் பிரசாதம் சாப்பிடுவதைப் பார்த்த மன்றோ, முகம் சுளித்தார்; அருவருப்படைந்தார். சாப்பிட்டுக் கொண்டிருந்த பக்தர்களைப் பார்த்து, ”சே…சே என்ன உணவு உணர்கிறீர்கள். மனிதர்களா நீங்கள்? இது… பாக்கவே ஒரு மாதிரியாய் இருக்கே, அருவருப்பாக இருக்கிறதே,… இதைச் சாப்பிட்டால் என்னென்ன வியாதிகள் வருமோ? எல்லாரும் முதல்ல வாயிலிருந்து அதைத் துப்புங்கள் ” என்று முகத்தை அஷ்ட கோண லாக்கிக் கொண்டு, கண்டிப்பான குரலில் உரக்க கத்தினார் மன்றோ. பக்தர்கள் பதறிப் போனார்கள். துரைக்குப் பயந்து துப்பியவர்களும் உண்டு; பெருமாளுக்கு பயந்து விழுங்கியவர்களும் உண்டு.
அடுத்த கணம் ஒரு ஆச்சர்யம் அங்கே நடந்தது. அது தான் இந்த கட்டுரை நான் எழுத முக்கியமான விஷயம். மன்றோ மேலே சொன்னபடி பக்தர்கள் மனதை புண் படுத்தி கடின வார்த்தைகளை சொல்லிவிட்டு ப்ராஹாரத்தில் ஒரு சில அடிகள் தான் எடுத்து வைத்தார். அடுத்த சில வினாடிகளில் மன்றோ திடீரென்று உரக்க இங்கிலீஷில் கத்தினார்.
”ஐயோ என் வயிறு வலிக்கிறதே ஈட்டியால் குத்து கிறதே என்னன்னு தெரியாம குடையுதே. ஐயோ எனக்கு வலி தாங்க முடியலியே ”.
ப்ரஹாரத்திலேயே அடி வயிற்றைப் பிடித்துக்கொண்டு அலறிக் கொண்டு கீழே சுருண்டு விழுந்தார் கலெக்டர் மன்றோ. கூடவே வந்த அதிகாரிகளும், கோயில் ஊழி யர்களும் பதறிப் போனார்கள். நடக்கவே முடியாமல் இருந்த கலெக்டர் மன்றோவை கைத் தாங்கலாகப் பிடித்து, அவரது பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர். வலி நிற்கவே இல்லை வயிற்றில் சுருக்கென்று ஈட்டி விடாமல் குத்தியது. வெள்ளைக்கார டாக்டர்கள் வந்து வைத்தியம் செய்தனர். அவர்களால் , வயிற்று வலிக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. எந்த மருந்து கொடுத்த்தும் வைத்தியத்தால் வலி குறை யவே இல்லை.மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள் போட்டும் ஹுஹும், எந்த நிவாரணமும் இல்லை. இரவும் பகலும் வயிற்றில் குத்து வலி. நாட்கள் ஓடின. ஆரோக்யமான மன்றோ கிழிந்த நாராகி விட்டார். படுத்த படுக்கை. மரணம் நெருங்கிக் கொண்டே இருந்தது. விடாமல் அழுதார்.
ஒரு சனிக்கிழமை திருப்பதியில் இருந்து, அலுவல் விஷய மாக மன்றோவைச் சந்திக்க கோவில் அர்ச்சகர் வந்தார். மன்றோ இப்போது பழை திமிர் பிடித்த ஆசாமி இல்லை. துவண்டு போன சாதாரண மனிதன். தனது உடல் நிலை நிலை அவஸ்தை யை அர்ச்சகரிடம் கூறி புலம்பினார் மன்றோ. அர்ச்சகர் ஒரு கணம் கண்ணை மூடி வேங்கடேசனை மனமார வேண்டியவாறு பேசினார்.
”மன்றோ துரைஅவர்களே, நான் ஒன்று சொன்னால் நீங்கள் கோவிக்க மாட்டீர்களே. உத்தரவாதம் கொடுத் தால் நான் சொல்லலாமா? என்று மெள்ள ஆரம்பித்தார் அந்த அர்ச்சகர்.
”அர்ச்சகரே, தாராளமாக சொல்லுங்கள்…எனக்கு கோபமே வராது. எனக்கு எப்படியாவது இந்த வயிற்று வலி தீர வேண்டும். கடைசியாக நான் கோயிலுக்குள் வந்த போது திடீரென்று தொடங்கிய இந்த வயிற்று ஒரு மருந்திலும் இன்னும் குணமாகவில்லை. பல நாட் களாக தூக்கம், ஆகாரம் இன்றி வலி இன்னமும் நீங்கிய பாடில்லாமல் துடிக்கிறேன். நீங்கள் ஏதாவது சொல்லுங் கள், எனக்கு ஏதாவது உதவி செய்யமுடியுமா?’
அர்ச்சகர் வெங்கடாசலபதி மேல் பாரத்தைப் போட்டு விட்டு, தைரியமாகப் பேசினார்.
”துரை , அன்னிக்கு நீங்கள் பெருமாளோட பிரசாதத் தை மரியாதைக் குறைவாய் பேசின அபச்சாரத்தாலே தான் இப்படி ஒரு நிலைமை உங்களுக்கு உண்டாகி இருக்கும்னு எனக்கு மனசிலே படுகிறது. நீங்க பண் ணினது பெரிய தெய்வ குற்றம். இதுக்கு ஒரே ஒரு பரிகாரம்தான் இருக்கு”
மன்றோ மெதுவாக படுக்கையில் எழுந்து உட்கார்ந் தார். கண்களில் நீர். எலும்பும் தோலுமாக இருந்தவர் அர்ச்சகர் கையை பிடித்துக் கொண்டார்.
”அர்ச்சகரே ப்ளீஸ், எனக்கு சொல்லுங்க.. உடனே சொல்லுக்கு ப்ளீஸ். என்ன பரிகாரம்? எதுவாக இருந்தாலும் உடனே மறுவார்த்தை சொல்லாமல் திருப்தியாக செய்யத் தயாராய் இருக்கிறேன்”. மண்டி யிட்டார் துரை. அர்ச்சகர் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.
” துரை, இப்போ இங்கே வரும்போது கூட நான் பெருமாளோட வெண்பொங்கல் பிரசாதம் கொண்டு வந்திருக்கேன். பெருமாளை மனசுக்குள்ள தியானம் பண்ணிண்டு, இதை கொஞ்சம் சாப்டுங்கோ. தானாக வந்த வலி தானாக போயிடும்”
மன்றோவின் முகம் பிரகாசமானது. மறுவார்த்தை பேசாமல், வேங்கடேசனின் பிரசாதமான வெண் பொங்கலை கையில் வாங்கிக் கொண்டு கண்ணில் ஒற்றியவாறு ஒரு வாய் வெண்பொங்கலை கண்களை மூடி பெருமாளை தியானித்து, உண்டார்.
தவறை ஒப்புக்கொண்டால், மன்னிப்பது வெங்கடாசலபதிக்கு வழக்கம் தானே.!
ஒவ்வொரு கவளமாக வெண் பொங்கலை மன்றோ சாப்பிடச் சாப்பிட , அதுவரை இருந்த வயிற்று வலியும், குத்தல் வலியும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. பிரசாதம் முழுக்கத் தீர்வதற்கும், வயிற்று வலி முற்றிலு மாகத் தீர்வதற்கும் சரியாக இருந்தது. ஆச்சரியப்பட்டார் மன்றோ. எங்கள் தேசத்து மருத்துவர் கள் எத்தனையோ வைத்தியம் செய்தும் தீராத இந்த வயிற்று வலி, உங்கள் பெருமாள் பொங்கல் பிரசாதத் தால் தீர்ந்தது என்றால், அது வேங்கடவனின் அருளாசி தான்” என்று நெகிழ்ந்து போனார். இதோடு நிற்கவில்லை; தன்னைக் குணமாக்கிய இந்த வெண்பொங்கல் பிரசாதம், காலா காலத் துக்கும் பெரு மாளுக்கு இனிமேல் விடாமல் நடக்க வேண்டும், பக்தர் களுக்கு கிடைக்க வேண்டும் என்று வயல்பாடு தாலுகா வில் உள்ள ‘கோடபாயல்’ என்ற கிராமத்தின் வருமானம் முழுவதையும் திருப்பதி பெருமாளுக்கே எழுதி வைத்து உத்தரவு போட்டார்.
இது தவிர உடல் நலமாகி பழையபடி ஆரோக்யத் தோடு மன்றோ துரை ஒரு வேங்கடேச பக்தனாக மாறி திருப்பதிக்கு போய் பிரம்மோத்ஸவம், சகஸ்ர கலசாபிஷேகம் போன்றவற்றை நடத்தி, பெருமாளை வணங்கிப் பேறு பெற்றார்.
கோடபாயல் கிராமத்தின் வருவாயில் இருந்து எழுதி வைக்கப்பட்ட அந்த வெண் பொங்கல் பிரசாதம், இன்றைக்கும் திருப்பதி ஆலயத்தில் நண்பகல் வழி பாட்டுக்குப் பிறகு நடந்து வருகிறது ‘மன்றோ பிரபு கங்காளம்’ என்று அதற்கு பெயர்.
கலெக்டர் பதவியிலிருந்து 1820-ல் சென்னை மாகாண ஆளுநராக பதவி உயர்வும் கிடைத்தது. எல்லாம் வேங்கடேச பிரசாதம்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


