KAIVALYOPANISHAD SLOKAS 11 -20 J K SIVAN

கைவல்யோபநிஷத் – நங்கநல்லூர் J K SIVAN
உபநிஷதங்களில் பெரிசும் இருக்கிறது குட்டியும் இருக்கிறது. சின்னதுகளில் ஒன்று தான் இந்த கைவல்ய உபநிஷதம். உருவம் தான் சிறிசே தவிர விஷயம் பெரிசு. ஆதி சங்கரர் பாஷ்யம் எழுதியவற்றை பெரிசு எனலாம். அவ்வளவவு தான் வித்யாசம். கைவல்யம் என்ற வார்த்தை ” கேவலம்” அதாவது ”ஒன்றே” என பொருள்படும். தர்மார்த்த காம மோக்ஷ புருஷார்த் தங்களை விளக்குவது.
ஸ்லோகங்கள் 11-20
11. आत्मानमरणिं कृत्वा प्रणवं चोत्तरारणिम् ।ज्ञाननिर्मथनाभ्यासात्पाशं दहति पण्डितः ॥ ११॥
ātmānamaraṇiṃ kṛtvā praṇavaṃ cottarāraṇim .jñānanirmathanābhyāsātpāśaṃ dahati paṇḍitaḥ .. 11..
பண்டைக்காலத்தில் காட்டில் முனிவர்கள் ரிஷிகள் அக்னி மூட்டுவதற்கு அரணிக்கட்டைகள் என்று என்று ரெண்டு மரத்துண்டுகளை வைத்திருப்பார்கள்.. கீழே ஒன்று மேலே ஒன்று என்று கயிற்றை கட்டி மத்தில் தயிர் கடைவது போல் வேகமாக அந்த அரணிக்கட்டைகளை தேய்த்தால் உஷ்ணம் ஏற்பட்டு தீப்பொறி கிளம்பும். அதால் யாகத்தீ வளர்த்தார்கள். இதை எதற்காக சொல்கிறார் ரிஷி என்றால் ego எனப்படும் அஹம்பாவம் ஓம் என்ற ப்ரணவத்தோடு வேகமாக இணைந்தபோது தான் ஞானத்தீ பிறக்கும் என உணர்த்துவதற்காக. திருப்பி திருப்பி நமது எண்ணங்களை ஞானத்தை தேடும் வேளையில் ஈடுபடுத்தினால் தான் ஆத்மாவை உணரமுடியும். இதை தான் ஞான நிர்மதன அப்பியாசம் என்பார்கள். உங்க பந்தத்தை அறுக்க உதவுவது.
12. स एव मायापरिमोहितात्मा शरीरमास्थाय करोति सर्वम् । स्त्र्यन्नपानादिविचित्रभोगैः स एव जाग्रत्परितृप्तिमेति ॥ १२॥
sa eva māyāparimohitātmā śarīramāsthāya karoti sarvam .stryannapānādivicitrabhogaiḥ sa eva jāgratparitṛptimeti .. 12..
12. ஆத்மா, மாயையால் மறைக்கப்பட்டு மூடப்பட்ட நிலையில் ஜீவன் உடம்போடு சேர்ந்து மனத்தின் ஆக்கிரமிப்பில் சகல காரியங்களிலும் ஈடுபட்டு உணர்ச்சிகள், சுக துக்கங்கள் ஐம்புலனால் அனுபவிக்கிறான். அவன் எண்ணங்கள் அவனைத் தின்றுவிடுகிறது. மது, மாது, உணவு சுகமாக தென்படுகிறது. கடைசியில் துக்கம் ஒன்றே அவன் பெறுவது.
13. स्वप्ने स जीवः सुखदुःखभोक्ता स्वमायया कल्पितजीवलोके । सुषुप्तिकाले सकले विलीने तमोऽभिभूतः सुखरूपमेति ॥ १३॥
svapne sa jīvaḥ sukhaduḥkhabhoktā svamāyayā kalpitajīvaloke . suṣuptikāle sakale vilīne tamo’bhibhūtaḥ sukharūpameti .. 13..
13. இந்த ஜீவன் தான் மேற்சொன்ன விழிப்பு நிலையில் அனுபவித்ததை கனவு நிலையிலும் தொடர்ந்து அனுபவிக்கிறது. .மலையிலிருந்து விழுகிறான். பெண்ணோடு ஊர் சுற்றுகிறான். பணத்தில் மிதக்கிறான். எல்லாம் கனவு. மாயலோகம். அதனால் என்ன பயன்? வெறும் துக்கம் ஒன்றே கடைசியில் மிச்சம். ஆழ்ந்த உறக்க நிலையில் உலகமும் இல்லை, உள்ளமும் இல்லை. உள்ளது ஒன்றே. ஆத்மானுபவம். அதனால் தான் ஆனந்தமாக தூங்கினேன் என்கிறான்.
14. पुनश्च जन्मान्तरकर्मयोगात्स एव जीवः स्वपिति प्रबुद्धः । पुरत्रये क्रीडति यश्च जीवस्ततस्तु जातं सकलं विचित्रम् । आधारमानन्दमखण्डबोधं यस्मिँल्लयं याति पुरत्रयं च ॥ १४॥
punaśca janmāntarakarmayogātsa eva jīvaḥ svapiti prabuddhaḥ .puratraye krīḍati yaśca jīvastatastu jātaṃ sakalaṃ vicitram .
ādhāramānandamakhaṇḍabodhaṃ yasmim̐llayaṃ yāti puratrayaṃ ca .. 14..
14. பூர்வ ஜென்மங்களில் புரிந்த கர்மாக்களின் பலன் இவ்வாறு தான் கனவிலும் நினைவிலும் அவனை துரத்துகிறது. . அவனுள்ளே இன்னும் ஒன்று இருக்கிறதே, ஆத்மா அதை அறியாமல் கஷ்டப்படுகிறான். தேகம் உலகம் தான் உண்மை சாஸ்வதம் சுகம் என விட்டில் பூச்சியாக அதிலே மயங்கி விழுந்து மாய்கிறான்.
15. एतस्माज्जायते प्राणो मनः सर्वेन्द्रियाणि च । खं वायुर्ज्योतिरापश्च पृथ्वी विश्वस्य धारिणी ॥ १५॥
etasmājjāyate prāṇo manaḥ sarvendriyāṇi ca .khaṃ vāyurjyotirāpaśca pṛthvī viśvasya dhāriṇī .. 15..
15. பகவானிடமிருந்து தான் சகலமும் உருவாகிறது. ப்ராணன் எனும் உயிர்கள். மனம் எனும் அந்தக்கரணம், இந்திரியங்கள் எனும் ஐம்புலன்கள், ஆகாசம், வாயு, அக்னி, ஜலம், பூமி எனும் ப்ரித்வி எல்லாம் தோன்றுகிறது. அதையெல்லாம் பார்க்கும்போது இவை வெறும் கருவிகள், இவற்றை இயக்குபவன்,காரண கர்த்தா ப்ரம்ம் எனும் பரமாத்மா என்பது மறந்து போகிறது.
16.यत्परं ब्रह्म सर्वात्मा विश्वस्यायतनं महत् । सूक्ष्मात्सूक्ष्मतरं नित्यं तत्त्वमेव त्वमेव तत् ॥ १६॥
yatparaṃ brahma sarvātmā viśvasyāyatanaṃ mahat . sūkṣmātsūkṣmataraṃ nityaṃ tattvameva tvameva tat .. 16..
16. எதை பரமம், ப்ரம்மம் என்கிறோம். எது உன்னதமானதோ, உயர்ந்ததோ அதை. பிரபஞ்சத்தின் உயிர்நாடி அது. பெரிது என்றால் மிக மிக பெரிதானது. துக்குணியூண்டு என்று கருதினால் கண்ணுக்கே தெரியாதது. ஸாஸ்வதமானது . பகவானே, பிரம்மமே, பரமாத்மாவே நீ தான் அது.
17.जाग्रत्स्वप्नसुषुप्त्यादिप्रपञ्चं यत्प्रकाशते । तद्ब्रह्माहमिति ज्ञात्वा सर्वबन्धैः प्रमुच्यते ॥ १७॥
jāgratsvapnasuṣuptyādiprapañcaṃ yatprakāśate .tadbrahmāhamiti jñātvā sarvabandhaiḥ pramucyate .. 17..
நமக்கு மூன்று உணர்வுகளில் வாழ்க்கை கழிகிறது. விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம். இதை தான் ஜாக்ரதா, ஸ்வப்ன, சுஷுப்தி, எனும் மூவுலக நிலை என்கிறோம். இந்த மூன்றுக்குமே ஒளி கொடுப்பது ப்ரம்மம் எனும் உள் நின்று ஒளிரும் ஆத்மா தான். வெறும் சாட்சிபூதமாக செயல்படுவது. ஜாக்ரதா, ஸ்வப்னா இரண்டிலும் மனமும் உலகமும் உள்ளது. ஆழ்ந்த உறக்க நிலையில் ஆத்மா ஒன்றே உள்ளது. அதனால் தான் நன்றாக மரக்கட்டை போல் தூங்கினேன், ஆனந்தமாக தூங்கினேன் சுகமான தூக்கம் என்கிறோம்.
மனம், உலகம், ரெண்டும் இல்லாத போது தான் பேரானந்தம் கிட்டும் என்பதற்கு இதுவே சாக்ஷி. இந்த மூன்றும் கடந்த நிலை தான் துரீயம்.
18.त्रिषु धामसु यद्भोग्यं भोक्ता भोगश्च यद्भवेत् । तेभ्यो विलक्षणः साक्षी चिन्मात्रोऽहं सदाशिवः ॥ १८॥
triṣu dhāmasu yadbhogyaṃ bhoktā bhogaśca yadbhavet .tebhyo vilakṣaṇaḥ sākṣī cinmātro’haṃ sadāśivaḥ .. 18.
ஸமஸ்க்ரிதத்தில் த்ரிபுடி என்று ஒரு வார்த்தை. ஒன்றே மூன்றும் என்ற அமைப்பு. உதாரணமாக பாடுபவன், பாடும் செயல், பாட்டு மூன்றும் ஒன்று. காண்பவன், காணும் செயல், காட்சி மூன்றும் ஒன்று. ஒன்று இல்லையானால் மற்றொன்று இல்லை. ஒன்றே மூன்றாக காணப்படுவது. மூன்றும் ஒன்றே. வெவ்வேறு நிலையாக தோன்றுகிறது. ஆகவே ப்ரம்மம், அதை அனுபவிக்கும் ப்ரம்ம ஞானி, பிரம்மத்தை துய்க்கும் செயல் மூன்றும் ஒன்றே.
19..मय्येव सकलं जातं मयि सर्वं प्रतिष्ठितम् । मयि सर्वं लयं याति तद्ब्रह्माद्वयमस्म्यहम् ॥ १९॥
mayyeva sakalaṃ jātaṃ mayi sarvaṃ pratiṣṭhitam .mayi sarvaṃ layaṃ yāti tadbrahmādvayamasmyaham ..
நாம் எதை இந்த உலகம், ப்ரபஞ்சம் என்று காண்கிறோமோ, நம்புகிறோமோ, அது வெறும் மாயை. இல்லாதது இருப்பது போல் தோன்றுவது. அதை தான் நாம் நமது மூன்று நிலைகளில் ஜாக்ரதா, ஸ்வப்னா, சுஷுப்தி, வெவ்வேறு காட்சிகளாக மனம் போனபடி காண்கிறோம். அனுபவிக்கிறோம். சுக துக்கங்கள் நேரிடுகிறது . பற்று வலுக்கிறது. இதை எவ்வளவு அழகாக கிருஷ்ணன் கீதையில் சொல்கிறார் பாருங்கள்; ” அடே, அர்ஜுனா, எதெல்லாம் நீ பார்க்கிறாயா, அதெல்லாமே நான் தானடா. என்னுள்ளே உருவாகிறவை யாவுமே. வேறாக உன் கண்ணில் படுவது. என்னுள்ளே எல்லாம் கறைந்து விடுகிறது. நான் ஒருவனே, ஒன்றே, எல்லாம்.
20. अणोरणीयानहमेव तद्वन्महानहं विश्वमहं विचित्रम् । पुरातनोऽहं पुरुषोऽहमीशो हिरण्मयोऽहं शिवरूपमस्मि ॥ २०॥
aṇoraṇīyānahameva tadvanmahānahaṃ viśvamahaṃ vicitram .purātano’haṃ puruṣo’hamīśo hiraṇmayo’haṃ śivarūpamasmi .. 20..
ப்ரம்மம் என்பது சின்னதில் ரொம்ப சின்னதாகவும், பெரியதில் மிக மிகப் பெரியாதாகவும் தோற்றமளிப்பது. நாம் எப்படி அதை ஏற்கிறோமோ அப்படி நம து மனத்துக்கு த்ருப்தியளிப்பது. ப்ரம்மம் ஆதி அந்தமில்லாதது. புராதனமானது. புருஷன் எனப்படுவது. ஞான ஒளி வீசுவது.புனிதமானது. அது துய்ப்பவன், துய்யப்படும் செயல், துய்யப்படுவது என்ற மூன்றாக அறிகிறோம்

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;