
கைவல்யோபநிஷத் – நங்கநல்லூர் J K SIVAN
வேதங்களின் முடிவு, அந்தம், தான் வேதாந்தம், அது தான் உபநிஷதம். எல்லாம் வெவ்வேறு ரிஷிகள் பல காலம் தவம் இருந்து சிந்தித்து, உணர்ந்து நமக்கு அறிவித்த உயர்ந்த விஷயங்கள். மந்திரங்களாக ஸ்தோத்ரங்களாக குட்டி குட்டி வாக்கியங்களாக நமக்கு அளிக்கப்பட்டவை. படித்து தெரிந்து புரிந்துகொண்டு நாம் பயன் பெறுவது நமது சௌகர்யம்.
கைவலியோபநிஷதத்தில் முதலில் வழக்கம் போலவே குருவும் சிஷ்யனும் சேர்ந்து பிரம்மாவை வேண்டுகிறார்கள்.:
”நாங்கள் இருவரும் ஒன்றாக கூடி வேதங்கள் வேதாந்தங்களை கற்றுக் கொள்வோம். கற்றுக்கொள்வதில் ஆசிரியர் மாணவன் வித்தியாசமில்லை. இதை அறிந்து ரெண்டு பேருமே மகிழ்வோம். யாக யஞங்களை சேர்ந்தே புரிவோம். மனதை செலுத்தி ஒரே சிந்தனையாக தொழுவோம். இவ்வாறு நாங்கள் அற்புதமான விஷயங்களை அறிந்து நன்றாக் புரிந்து கொள்வோம். சிந்திப்போம், இந்த முறையில் எங்களிடையே எந்த வெறுப்புணர்ச்சியோ, வித்யாசமோ, குறையோ நெஞ்சில் தோன்றாது. எங்கும் பேரமைதி நிலவுக பேரமைதி நிலவுக பேரமைதி நிலவுக. ”
உலக இன்பம் என்பது வாழ்க்கையின் லக்ஷியம் இல்லை. ஞானம் ஒன்று தான். பள்ளி, கல்லூரி படிப்பு ஞானம் ஆகாது. . ஆத்மா எனும் பிரம்மத்தை அறிவது ஒன்றே ஞானம். எல்லையற்றது, முடிவற்றது. எதிலும் எங்கும் இறைவனோடு இணைப்பது. சாஸ்வதமானது. ஆனந்தமானது.
1. ॐ अथाश्वलायनो भगवन्तं परमेष्ठिनमुपसमेत्योवाच । अधीहि भगवन्ब्रह्मविद्यां वरिष्ठां सदा सद्भिः सेव्यमानां निगूढाम् । ययाऽचिरात्सर्वपापं व्यपोह्य परात्परं पुरुषं याति विद्वान् ॥ १॥ (यथाऽचिरात्)
oṃ athāśvalāyano bhagavantaṃ parameṣṭhinamupasametyovāca .adhīhi bhagavanbrahmavidyāṃ variṣṭhāṃ sadā sadbhiḥ sevyamānāṃ nigūḍhām .yayā’cirātsarvapāpaṃ vyapohya parātparaṃ puruṣaṃ yāti vidvān ..1.
இப்படி சீடர்களோடு த்யானம் பண்ணும் ஆஸ்வலாயன ரிஷி பிரம்மாவிடம் வேண்டுகிறார்;
”பகவானே, சத்யம் எனும் ஞானத்தை எங்களுக்கு உபதேசியுங்கள். அதைத்தானே ஞானிகள் அரும்பாடு பட்டு பெற்றவர்கள். எளிதில் மனிதனுக்கு கிடைக்குமா அது, மறைந்திருக்கும் ரஹஸ்ய புதையல் அல்லவா அது? அதை அறிந்தால் பாபங்களிலிருந்து விடுபட முடியுமே. அதன் மூலம் புருஷன் என்ற பேருக்கு தகுதியான பிரம்மத்தை அடையலாமே .ஐக்யமாகலாமே. ”
2. तस्मै स होवाच पितामहश्च श्रद्धाभक्तिध्यानयोगादवैहि ॥ २॥
tasmai sa hovāca pitāmahaśca śraddhābhaktidhyānayogādavaihi .. 2..
ப்ரம்மா பதில் சொல்கிறார். ”ஆஸ்வலாலயனரே, பிரம்மத்தை பெற அயராத நம்பிக்கை, பக்தி, தியானம் முக்யம்.”
3.न कर्मणा न प्रजया धनेन त्यागेनैके अमृतत्वमानशुः । परेण नाकं निहितं गुहायां विभ्राजते यद्यतयो विशन्ति ॥ ३॥
na karmaṇā na prajayā dhanena tyāgenaike amṛtatvamānaśuḥ .pareṇa nākaṃ nihitaṃ guhāyāṃ vibhrājate yadyatayo viśanti .. 3..
விவேகானந்தர் அடிக்கடி சொல்லும் மந்திரம் இனி வருகிறது. எல்லோரும் மனப்பாடம் பண்ண வேண்டிய சின்ன மந்திரம் இது. ந கர்மணா, ந ப்ரஜயா, தனேனா , த்யாகேனைகே, அம்ருதத்வமானசு; ” அப்பனே, இந்த இறப்பை வென்ற பிரம்மஞானத்தை எவனும் ஏதேனும் காரியம் கர்மம் செய்தோ ,மக்கள் மூலமாகவோ, செல்வத்தினாலோ, பெற வாய்ப்பில்லை. விண்ணை மிஞ்சியது அது. புத்தி அறிவுக்கெட்டாத மறைந்த ஹ்ருதய ரஹஸ்ய குகையில் உறைவது.ஒளிவீசுவது. அதை விடாப்பிடியாக சகலத்தையும் துறந்த ஞானிகள் தியானத்தின் மூலம் மட்டுமே அடையமுடியம். ,
4. वेदान्तविज्ञानसुनिश्र्चितार्थाः संन्यासयोगाद्यतयः शुद्धसत्त्वाः । ते ब्रह्मलोकेषु परान्तकाले परामृताः परिमुच्यन्ति सर्वे ॥ ४॥
vedāntavijñānasuniśrcitārthāḥ saṃnyāsayogādyatayaḥ śuddhasattvāḥ .te brahmalokeṣu parāntakāle parāmṛtāḥ parimucyanti sarve .. 4..
பற்றுகளற்ற சித்தன் சகல பந்தங்களையும் துறந்து தியாகியாக, தியானம் செய்வதன் மூலம் ஞானத்தின் மஹிமையை அறிகிறான். அதுவே உபநிஷதங்கள் சொல்லும் விஷயம். பிரம்ம லோகத்துக்கு வழிகாட்டி. முக்தி தருவது. சாகாவரம் தருவது. என்றும் சதானந்தத்தில் திளைக்க வைப்பது.
5. विविक्तदेशे च सुखासनस्थः शुचिः समग्रीवशिरःशरीरः । अत्याश्रमस्थः सकलेन्द्रियाणि निरुध्य भक्त्या स्वगुरुं प्रणम्य ॥ ५॥ (अन्त्याश्रमस्थः)
viviktadeśe ca sukhāsanasthaḥ śuciḥ samagrīvaśiraḥśarīraḥ .atyāśramasthaḥ sakalendriyāṇi nirudhya bhaktyā svaguruṃ praṇamya.
அமைதியான, எந்த இடையூறும் இன்றி, பரிசுத்தமான இடத்தில், அசையாமல், சௌகர்யமான் விதத்தில் அமர்ந்து தலை முதுகு, உடம்பும் எல்லாம் நேர்கோணத்தில் இருக்க நிமிர்ந்து அமர்ந்து சந்நியாசியாக புலன்கள் வசப்படாமல், குருவை பக்தியோடு வணங்கி ஹ்ருதய கமலத்தில் பிரம்மத்தை இருத்தி தியானம் செய்யவேண்டும்.
அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்.அதற்கு முன் ஒரு வார்த்தை. மேலே சொன்னதெல்லாம் நம்மால் முடியுமா என்றால் ஆம் முடியும் என்பேன். ஒரே நாளில் MA , MBA ஆகமுடியாது. அ, ஆ கற்றுக்கொண்டு படிப்படியாக பல வருஷங்கள் படித்து கற்று பிரயாசைப்பட்டு தானே மேலே சொன்ன பட்டங்கள் பெறுகிறோம். அதற்கே இப்படி என்றால் ப்ரம்ம ஞானத்தை நான் எழுதி அதனால் நானோ நீங்களோ ப்ரம்ம ஞானியாக ஆகிவிடமுடியுமா. முயற்சி திருவினையாக்கும். நிச்சயம் நாம் அனைவருமே ப்ரம்ம ஞானியாக முடியும். சித்தம் அதற்கு தயாராகி, புலன்களை கொஞ்சம் கொஞ்சமாக வென்று பற்றுகளை துறந்து உலா ஈர்ப்புகளுக்கு இடம் கொடுக்காமல் முன்னேறினால் ப்ரம்மம் பாதி வழி தானாகவே வந்து நம்மை கை நீட்டி அழைத்துக் கொள்ளும். அப்படி தான் சாதாரண மனிதன் ஸ்வாமிநாதனாக இருந்தவர் பரமாச்சார்யராக நமக்கு தெய்வமாகியவர் . ரமணரும் அப்படித்தான். ராமக்ரிஷ்ணரும் அப்படித்தான். தவயோகிகள் அனைவருமே அந்த வழியில் வந்து ப்ரம்மஞானி பட்டம் பெற்றவர்கள்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



