
கைவல்யோபநிஷத் — நங்கநல்லூர் J K SIVAN
அச்சு இயந்திரம், புத்தகங்கள் செய்வது நமக்கு ரொம்ப லேட்டாக தான் தெரியும். ஆயிரம் ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு ரிஷிகள் ஒரு அற்புதமான முறையை கையாண்டு அச்சுக்கும் புத்தகத்துக்கும் அவசியம் இல்லாமல் பண்ணி இருக்கிறார்கள்.
ரிஷிகள் அருந்தவம் இருந்து விண்வெளியில், மந்த்ரங்களைக் கற்றார்கள். அதெல்லா வற்றையும் அடிக்கடி தமது சிஷ்யர்களோடு சேர்ந்து அவர்களும் திரும்ப திரும்ப சொல்லி மனதில் அது பாடமாகிவிட்டது. ஒவ்வொரு சிஷ்யனும் பிரகாலத்தில் குருவாகி அவனது சிஷ்யர்களுக்கு இப்படி உபதேசித்து மந்திரங்கள் சிந்தாமல் சிதறாமல் முழுமையாக, தப்பில்லாமல், சரியான உச்சரிப்போடு பல தலைமுறைகளுக்கு கிடைத்தது. இது தான் கர்ண பரம்பரை. கர்ணம் என்றால் காது.காதால் நன்றாக கேட்டு அறிந்தது. சிலர் இதையெல்லாம் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்தார்கள். காலப்போக்கில் பின்னர் அச்சு இயந்திரம் புத்தகங்களில் இதை அளிக்க வெள்ளைக்காரர்கள் உதவினார்கள். அவர்களே சமஸ்க்ரிதம் கற்று நமது வேதநூல்களுக்கும், உபநிஷதங்களுக்கும் விளக்கம் எழுதினார்கள். உபநிஷத்துகளை வெள்ளைக்காரர்கள் மொழிபெயர்த்து நாம் அறிவது ஒருவகை. நமது ரிஷிகள் எழுதியதை சமஸ்க்ரிதம் மிக நன்றாக அறிந்த ஹிந்து பண்டிதர்கள் விளக்குவது வேறு வகை.
தனக்கு சம்பந்தமில்லாத ஸமஸ்க்ரித மொழியை ஓரளவு கற்று ஹிந்து ஸநாதன தர்மம் முற்றிலும் அறியாதவர்கள் எழுதும் விளக்கத்தை விட நமது ஹிந்து பண்டிதர்கள் சொல்வது பொருத்தம் என்பதை ரொம்ப லேட்டாக உணர்ந்து வருகிறோம். எல்லாம் ஆங்கிலத்தையே நம்பியதால் வந்த வினை. ஆங்கிலேயர்கள் போய் பல வருஷங்கள் ஆனாலும் ஆங்கிலம் இன்னும் நம்மை விட்டு எங்கேயும் போகவில்லை.
அர்த்தம் அனர்த்தம் ஆகும் கதை தான் சனாதன தர்மம் அறியாத மற்றவர்கள் நமக்கு நமது வேத நூல்களை, உபநிஷதங்களை விளக்குவது.
வெள்ளைக்காரர் ஒருவர் சொன்னது: உப நி ஷத் என்றால் ‘’கிட்டே-கீழே-உட்கார்ந்து-கற்றது…
நமது பண்டிதர்கள் உரைப்பது: ஷத் என்றால் அழிப்பது. ஆகவே உபநிஷத் என்றால் எது நம் அறியாமையை ஞானத்தீயால் பொசுக்குகிறதோ அது. மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் உள்ள ஒற்றுமை தான் மேலே சொன்ன ரெண்டு விளக்கங்களும். ஆகவே புரியாத விஷயங்களை நன்றாக அறிந்த ஞானிகள், குருவிடம் கற்க வேண்டும் என்பது புரிகிறதா ?
280 உபநிஷதங்கள் நம்மிடம் இப்போது வெளியாகி இருக்கிறது. அதில் 110 பரிசீலனை செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. இன்னும் எத்தனையோ நமக்கு தெரியாதது இருக்கலாம். எந்த மஹானுபவன் அதையெல்லாம் கண்டு பிடிப்பானோ? எப்போதோ? இந்த 110 ல் சிலவற்றுக்கு ஆதி சங்கரர், ராமானுஜர் மத் வாச்சார்யர் ஆகியோர் உரை எழுதி இருக்கிறார்கள். அதில் 11 உபநிஷதங்கள் மிக முக்கியமானவை. உபநிஷதங்கள் நமது வாழ்கைக்கு வழி காட்டிகள். உயர்ந்த தத்துவங்கள், ஆத்ம ஞான ரஹஸ்யங்கள். அறிய முடியாத ஆத்மாவை அறியச் செய்பவை.
உப நிஷதங்கள் வேதங்களின் சாரம். சமீபத்தில் ‘’கைவல்யோபநிஷத்’’ படித்தேன் சுவாமி சின்மயானந்தா அற்புதமாக இதை விளக்கி இருக்கிறார். ரொம்ப பிடித்தது. அதை சுருக்கமாக அளிக்க எண்ணம். அதர்வண வேதத்தின் சாரம் அது.
எந்த வேதம், உபநிஷத் கற்பித்தாலும் குருவும் சிஷ்யர்களும் சேர்ந்து ஒன்றாகவே முதலில் தினமும் பகவானை பிரார்த் தனை பண்ணிக்கொண்டு குரு பாடம் சொல்ல, சிஷ்யர்கள் கேட்க ஆரம்பிப்பார்கள். எழுத்தில் எதுவும் கிடையாது மனதில் பதியவைத்துக் கொள்வது, மனனம் செய்வது தான் அக்கால முறை. எழுத்துப்பிழை, புத்தகம் காணாமல் போவது எல்லாம் இதில் கிடையாது. விடாமல் தினமும் சொல்வதால் சாகும் வரை நினைவில் இருப்பது. இப்போது பள்ளிக்கூடங்களில் மனப்பாடம் கிடையாதே.
குரு சிஷ்யர்கள் சேர்ந்து சொல்லும் பிரார்த்தனை
ॐ सहनाववतु । सह नौ भुनक्तु । सह वीर्यं करवावहै । तेजस्विनावधीतमस्तु । मा विद्विषावहै ॥ ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
Om Saha NaAvavatu | Saha Nau Bhunaktu | Saha Veeryam Karavaavahai |Tejasvi NaAvadheetam-Astu Maa Vidvishaavahai | Om Shaanti: Shaanti: Shaanti: ||
ஓம் சஹநானாவவது சஹநௌ புனக்து, ஸஹவீர்யம் கரவாவஹை தேஜஸ்வி நாவதீதம் அஸ்து மா வித் விஷாவஹை ஓம் சாந்தி சாந்தி சாந்தி
இதற்கு என்ன அர்த்தம்?
பரமாத்மா, குருவாகிய என்னையும் சிஷ்யர்களாகிய இவர்களையும் போஷித்து காப்பாற்று. நாங்கள் இருவருமே சேர்ந்து தான் ஞானம் பெறுகிறோம். விஷய ஞானம் பெறுவதில் எங்கள் எண்ணமும் செய்கைகளும் ஒன்றாகவே இருக்கட்டும் இருவருமே ஞான ஒளி பெறவேண்டும். ஒருவரை ஒருவர் வெறுக்கக்கூடவே கூடாது
ॐ सहनाववतु । सह नौ भुनक्तु । सह वीर्यं करवावहै । तेजस्विनावधीतमस्तु । मा विद्विषावहै ॥ ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
இது எல்லோரும் ஒரு முறையாவது கோவில்களில் வீட்டு விசேஷங்களில் வாத்யார் கோஷ்டிகள் உச்சரித்து காதால் கேட்டது தான். அநேக உபன்யாசங்களில், பிரசங்கங்களிலும் இது நம்மை அடைந்திருக்கிறது. எனக்கு தெரிந்து பல பள்ளிக் கூடங்களில் பிரார்த்தனை கூடங்களில் இதை குழந்தைகள் மனப்பாடம் பண்ணி கோரஸாக ஒன்று சேர்ந்து உச்சரித்து கேட்டு ஆனந்தம் அடைந்திருக்கிறேன்…ஆனால் அர்த்தம் தெரியுமா என்பது சந்தேகம் தான்.
ॐ सह नाववतु । सह नौ भुनक्तु । सह वीर्यं करवावहै । तेजस्वि नावधीतमस्तु मा विद्विषावहै । ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
Om Saha Naav[au]-Avatu | Saha Nau Bhunaktu | Saha Viiryam Karavaavahai | Tejasvi Naav[au]-Adhiitam-Astu Maa Vidvissaavahai |
Om Shaantih Shaantih Shaantih ||
ஓம் ! ஸஹநாவவது । ஸஹ நௌ புநக்து । ஸஹ வீர்யம் கரவாவஹை தேஜஸ்விநாவதீதமஸ்து மா வித்விஷாவஹை ॥ ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:
இந்த சின்ன மந்திரம் கைவல்யோபநிஷதத்தில் தான் முதலில் அறிந்து கொண்டேன். கைவல்யோபநிஷதத்தை விரிவாக பதிவிட உத்தேசம். அடுத்த பதிவிலிருந்து ஒருநாளைக்கு ஒரு ஸ்லோகம் சேர்ந்து பார்ப்போம்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



