RAMANA MAHARSHI J K SIVAN

மஹரிஷி ரமணானுபவம் – நங்கநல்லூர் J K sivan
துறவியின் சயனம்
அருணாசலத்தில், மஹரிஷி ரமணர் ஆஸ்ரமத்தில் எந்த கட்டுப்பாடும் கண்டிப்பும் கிடையாது. பகவான் எல்லோருடனும் பழகுவார், அவரும் சமையல் கட்டில் அப்பப்போ வந்து ஏதாவது காரியம் செய்வார். 1949ல் அழகம்மாள் தேஹ வியோகம் அடைந்து அவள் சமாதி ஒரு கோவிலாக, மாத்ரு பூதேஸ்வரர் சந்நிதியாக உருவாகிவிட்டது. அந்த கோவில் கும்பாபிஷேகம் ஏற்பாடுகளை ஆசிரமத்து பக்தர்களே ஏற்பாடு பண்ணிக்கொண்டிருந்த சமயம். கோவிலை ஒட்டி ஒரு விஸ்தாரமான மண்டபமும் உருவானது. பகவானை தரிசிக்க வரும் பக்தர்களை சந்திக்க ஆசி பெற அந்த மண்டபம் தேவைப்பட்டது.
வழவழவென கருங்கல்லில் ஒரு சாய்வு மேடை. அதில் மெத்து மெத்தென்று பட்டு மெத்தை தலையணைகள் போட்டு மஹரிஷி அமர்வதற்கு வசதி பண்ணி இருந்தார்கள். அவர் வலது கை ரணமாக இருந்தது. அதை வைத்துக் கொள்ள ஒரு தலையணை. முதுகு சாய்ந்துக்கொள்ள, காலுக்கு கீழே எங்கேயும் மெத்தைகள்.
அந்த மண்டபத்தில் ஒரு நாள் சூரி நாகம்மா நுழையும் போது மஹரிஷி யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்.
”இதோ பார் எத்தனை மெத்தை தலைகாணிகள், ஒண்ணு ஒண்ணும் சரிந்து சாய்ந்து விழுகிறது. ரொம்ப விலையுயர்ந்த மெத்தைகள் தலைகாணிகள் இருந்தால் தான் மஹரிஷிக்கு சௌகர்யம் என்று எல்லோரும் நினைத்துக் கொள்ளவா இந்த ஏற்பாடுகள்? இதில் உண்மையில் என்னால் சௌகர்யமாக உட்காரவே முடியாது. முன்பு நான் உட்கார்ந்திருந்த கல் மேடையே சுகமானது. அதுவே போதுமே. எதற்கு இதெல்லாம்? ஒரு ரிஷி இப்படித்தான் அவஸ்தைப்பட்டார். ”
”பகவான் அந்த ரிஷி கதை சொல்லவேணும்” என்று பக்தர்கள் கேட்டார்கள். மஹரிஷி சிரித்துக் கொண்டே தலையாட்டினார் ” சொல்கிறேன் கேளுங்கள்”
எல்லோரும் மதித்த ஒரு முனிவர் காட்டில் ஒரு மரத்தடியில் வாழ்ந்து வந்தார். அவரிடம் மூன்று பாறைக் கல்கள் இருந்தன. அது தான் படுக்கை சோபா எல்லாமே அவருக்கு. படுக்கும்போது ஒரு கல் தலைக்கு தலைகாணி மாதிரி. இடுப்புக்கு கீழே முதுகுக்கு ஒன்று. சாய்ந்து கொள்ள. மூன்றாவது கல் கால்களுக்கு கீழே தலைகாணிமாதிரி..
எனக்கும் அவரைப் போலவே மூன்று கற்பாறை துண்டுகள் கிடைத்தால் விருபாக்ஷ குகைக்கு எடுத்துச் சென்று சௌகர்யமாக நானும் அந்த ரிஷி போல அமர்வேன், படுப்பேன்.
அந்த துறவி மரத்தடியில் இந்த கல்கள் மேல் படுப்பார், மேல் வஸ்த்ரத்தால் உடம்பை மூடிக்கொள்வார். அது தான் போர்வை. மழை பெய்தால் அவர்மேல் ஜலம் பட்டு கீழே வழிந்து இந்த மூன்று கற்கள் இடைவெளியில் ஓடும். அவர் உடம்பு தான் அந்த மூன்று கற்கள் மேல் இருக்குமே .அதனால் கொட்டும் மழையிலும் அவர் தூக்கம் கலையாது. தரையில் உட்காரும்போது அந்த மூன்று கற்கள் மேல் ஒரு ஸ்டூல் மேல் உட்கார்வது போல் அமர்வதால் கீழே பாம்பு தேள் போன்ற ஜந்துக்கள் கவலையில்லாமல் தரையில் நடமாடும்.
யாராவது உணவு கொண்டு வந்து கொடுத்தால் தான் அவருக்கு சாப்பாடு. இல்லையேல் வெறும் நீர் தான் ஆகாரம்.
ஒருநாள் அந்த காட்டில் வேட்டையாடவந்த ராஜா இந்த ரிஷியைப் பார்த்து ரொம்ப வருத்தமடைந்தான். ”பாவம் இப்படி கல்லின் மேல் அமர்ந்து படுத்து கஷ்டப்படு கிறாரே என்று மந்திரி பிரதானிகளை அனுப்பி ரிஷியை எப்படியாவது அரணமனைக்கு அழைத்து வரும்படி அனுப்பினான். நீங்கள் அவரை அழைத்து வராவிட்டால் தக்க தண்டனை கிடைக்கும்”என்று வேறு கட்டளையிட்டதால் அவர்கள் எப்படி யோ வற்புறுத்தி, அந்த ரிஷியை அரண்மனைக்கு கொண்டு வந்தார்கள்.
அந்த ஆட்கள் மேல் பரிதாபத்தால் அவர்கள் தன்னால் வீணாக தண்டனை பெறவேண்டாமே என்ற தாராளா இறக்க மனசோடு தான் ரிஷி அவர்களோடு அரண் மனைக்கு வந்தார். அவர் தன்னுடன் கொண்டு சென்றது ஒரு கோவணம், போர்வை, மூன்று கற்கள்.
எல்லோரும் ”இது ஒரு பைத்தியம், ராஜா அரண்ம னைக்கு போகும்போது கூட எதற்கு கிழிசல் துணி, கற்கள் ? என்று சிரித்தனர். துறவியோ இந்த சாமான்களோடு பல்லக்கில் வந்து இறங்கினார்.
ராஜா ரிஷிக்கு ஒரு தனி அறை , சப்ர மஞ்ச கட்டில் , மெத்து மெத்து பட்டு மெத்தைகள் தலைகாணிகள் போட்டு தயாராக வைத்தருந்தான். அன்று இரவு ரிஷி அந்த கட்டில் மெத்தைமேல் தனது மூன்று கற்களையும் வைத்து படுத்துக்கொண்டு அந்த கிழிசல் துணியை போர்த்திக்கொண்டு தூங்கினார்.
மறுநாள் காலை ராஜா ரிஷியைப் பார்த்து வணங்கி கேட்டான்;
‘சுவாமி நேற்று இரவு உங்களுக்கு இங்கே வசதியாக இருந்ததா?
””ராஜா, எனக்கு ஒரு குறையும் இல்லை, எப்போதும் சந்தோஷம் தான்”
”இல்லை சுவாமி, தாங்கள் காட்டில் மழையிலும் வெயிலிலும் மரத்தடியில் வசதியில்லாமல் கல்லின் மேல் படுத்துக் கொண்டு இருப்பீர்களே, இங்கே கஷ்டப்படாமல் படுக்க சௌகர்யமாக இருந்ததா என்று கேட்டேன்”
”ராஜா, என் படுக்கையிலே எந்த வித்தியாசமும் இல்லை யே அப்பா. எனக்கு எப்போதும் சந்தோஷம் தானே”
ராஜா ஆச்சர்யப்பட்டு ரிஷியின் அறைக்குள் சென்று பார்த்தான்.
சப்ரமஞ்ச கட்டிலாக இருந்தும் பட்டு மெத்தைகள் அதன் மேல் இருந்தும், அவற்றுக்கு மேலே மூன்று கற்கள், ஒரு கிழிசல் துணி இருந்ததை பார்த்தான்.
”அடாடா, எவ்வளவு பெரிய மஹான் இவர். இவருடைய அருமை பெருமை தெரியாமல் நான் முட்டாள் தனமாக நடந்து கொண்டேனே என்று வருந்தினான்.
”சுவாமி என்னை மன்னித்து விடுங்கள்” என்று விழுந்து வணங்கினான். ரிஷி அவனை ஆசிர்வதித்து விட்டு தன்னுடைய கற்களோடு காட்டுக்கு புறப்பட்டார்.
இந்த கதையை சொல்லி விட்டு மகரிஷி ரமணர் ”பெரிய மாட மாளிகையில் இருந்தாலும் அது சிறை தான். அமைதியும் சந்தோஷமும் மனதில் தானே இருக்கிறது. உடம்பில் ஏது?” என்றார். அடுத்த நிமிஷமே ரமணாஸ்ரமத்தில் கல் சோபாவில் இருந்த பட்டு மெத்தைகள் தலையணைகள் எல்லாம் அப்புறப்படுத் தப்பட்டன .

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;