TODAY SATURDAY J K SIVAN

ஏடு கொண்டல வாடா.. –   நங்கநல்லூர்  J K  SIVAN .
ஹிந்துக்கள் மற்ற மதத்தினரைப் போல அல்ல.  கிருத்துவர்கள்  தவறாமல் ஞாயிற்றுக்கிழமை  தேவாலயம் போகிறவர்கள் . இஸ்லாமியர்கள் அதுபோல் வெள்ளிக்கிழமையை விடுவதில்லை. நமக்கு  வாரத்தில் ஒருநாள் என்ற நிர்பந்தம், கட்டாயம்  எதுவுமே கிடையாது. ஏன்?  நமக்கு  பக்தி போதாதா?இது காரணம் இல்லை. நமக்கு  எல்லாநாளுமே, ஏன், எல்லா நேரமும், உடலில் மூச்சு இருக்கும் வரை எந்நேரமுமே கடவுள் சிந்தனை தான் இன்பம் தந்து நம்மை  உய்விக்கிறது என்று புரியவேண்டும்.
இதை நினைவூட்ட  ஒவ்வொருநாளும் ஏதாவதொரு ஒரு பண்டிகை, நோன்பு, விரதம்,  அலங்கார, அர்ச்சனை, வீதி உலா  என்று ஏதாவது ஒரு விசேஷ நினைவூட்டல் இருந்து கொண்டே இருக்கிறது.
இன்று சனிக்கிழமை.  நமது மனம் நம்மை அறியாமல்  திருப்பதி வெங்கடாசலபதியிடம்  செல்கிறது. தேவர்களுக்கு கொடுத்த வாக்கின் காரணமாக  ஸ்ரீமன் நாராயணன்,  விஷ்ணு பகவான், பல அவதாரங்கள் எடுத்து  தீமையை,   தீயவரை,  அழித்து நமக்கு காக்கும் கடவுளாக இருக்கிறார் என்றாலும் துவாபர யுகத்தில்  வசுதேவர் தேவகி மகனாக பிறந்து  அதே சமயம்  நந்தகோபன்  யசோதை மகனாக  வளர்ந்தார்.  இரு பெற்றோர்களுக்கும்  மகிழ்ச்சி. அவரவர் முன்  ஜென்ம ஆசை நிறைவேறியது.
பிருகு முனிவரின் சாபத்தால்,  மஹா லக்ஷ்மி தேவி பூமியில் அவதரித்து, திருமலைக்கு வந்து ஸ்ரீனிவாசனை மணக்க வேண்டியிருந்தது. மேலும், விஷ்ணு பகவான், தனது பக்தர்களுக்கு நன்மை செய்வதற்காகவும், கலியுகத்தில் ஏற்படும் துன்பங்களைத் தீர்ப்பதற்காகவும், ஸ்ரீனிவாசனாக அவதரித்தார்  என்பது நமக்கு தெரியும்.
வகுளா  தேவி  யார்?  ஏன் ஸ்ரீனிவாசனின் தாயானார்?
கிருஸ்ணனின் வளர்ப்பு தாய்  யசோதை.ஆசையோடு பாசத்தோடு அவனை வளர்த்தும்  பத்து பதினைந்து வயதுக்குள் கிருஷ்ணன் பிருந்தாவனத்தை விட்டு மதுராவிற்கு சென்று விட்டான். பிறகு அவன் பிருந்தாவனம் திரும்பவில்லை.   அப்பா அம்மா வளர்த்து படிக்க வைத்து செலவு செய்து அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கே பனமோகத்தில்  பெர்மனெண்ட்டாக இருக்க  வழி செய்துகொண்டு   அப்பா அம்மாவை பார்க்க இந்தியா திரும்பி வராத பிள்ளைபோல இல்லை கிருஷ்ணன்.
 அவன் அவதார புருஷன். அவனது ஒவ்வொரு வினாடியும் கடமை.   யசோதைக்கு  ரொம்ப  ஆசைக் கனவுகள்.அதில் பிரதானமானது கிருஷ்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று.. அது முடியாததால் அவள் ஆசையை நிறைவேற்றினான் அவளது அடுத்த ஜென்மத்தில் கிருஷ்ணன்.
”யசோதாம்மா,  நீ அடுத்த பிறவியில் எனக்கு தாயாக இருந்து எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போகிறாய்”  என்று  அவளுக்கு மனச் சாந்தி அளித்து யசோதை  கலியுகத்தில்  வகுளாதேவி யாக பிறந்தாள். திருமலையில் வாழ்ந்தாள் . ஸ்ரீனிவாசனைக் கண்டு  அவன் மேல் அளவற்ற பிரியம் கொண்டு அவனுக்கு பொருத்தமாக  ஸ்ரீனிவாசன் என்ற பெயரையும் சூட்டினாள் .
ஸ்ரீனிவாசனுக்கு ஆகாச ராஜாவின் வளர்ப்பு மகளான பத்மாவதியை திருமணம் செய்து வைக்க, வகுளா  தேவி நடையாய்  நடந்தாள் . ஆசை நிறைவேறியது.
விஷ்ணு பகவான், கலியுகத்தில் மக்களுக்கு நன்மை செய்ய ஸ்ரீனிவாசராக அவதரித்தார். அவரைப் பொறுத்தவரை  ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். ஒன்று லோக க்ஷேமத்துக்காக  ஸ்ரீனிவாச அவதாரம். அதே சமயம் யசோதைக்கு கொடுத்த வாக்கு, அவள் ஆசையை நிறைவேற்ற சந்தர்ப்பம்.
ஸ்ரீனிவாசன், பத்மாவதி  தாயார்  கல்யாணம்  அன்றாடம்  திருமலையில்   நடைபெற்று எண்ணற்ற  வேங்கடேசன் பக்தர்களுக்கு  மன நிறைவை தருகிறது.   மாதக்கணக்கில்  வரிசையில்   பக்தர்கள் காத்திருக்கிறார் கள்.   பகவான் எப்படியெல்லாம் பக்தர்களின்  ஆசைகளை பூர்த்தி செய்கிறான் என்று நாம் உணரவேண்டும்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2567

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;